Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதன் 13-09-2006 17:54 மணி தமிழீழம் [செந்தமிழ்] இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் தலைவர் லான்ஸ் சொஹான் சொல்பேக் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று கிளிநொச்சிக்கு செல்லவுள்ளார். இதன் போது அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். போர் நிறுத்தக்கண்காணிப்பு பணிகளுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் நேரடியான சந்திப்புக்கு உட்படுத்துவது என்ற நிலையின் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eelampress.com/index.php?subact...t_from=&ucat=1&

    • 0 replies
    • 1.1k views
  2. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆனையிறவை விட்டுக் கொடுத்தால் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படாது. என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். முகமாலையில் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை கைப்பற்றியுள்ள இராணுவத்தினர் அவ்விடத்தில் பாதுகாப்பாக நிலை கொள்வதற்கு முடியாவிட்டால் அடுத்த கட்ட முன்னோக்கிய நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொ…

    • 0 replies
    • 1.3k views
  3. முகமாலைப் பகுதியில் தொடரும் தாக்குதல்கள். 150 இராணுவம் பலி நேற்றிரவு முதல் முகமாலை முன்னரங்கினூடாக கடும் தாக்குதல் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினரின் இவ்வலிந்த தாக்குதல்களையும் நகர்வையும் தடுக்கும் முகமாக விடுதலைப்புலிகள் நடாத்தும் எதிர்ப்பு தாக்குதல்களில் இதுவரையும் சுமார் 150 படையினர் பலியாகியுள்ளனர். 200 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும் இறந்த இராணுவத்தினரது உடல்களை அவ்விடங்களிலேயே எரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://sankathi.org/news/index.php?option=...id=431&Itemid=1

  4. இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகவியலாளர்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை அளித்த நேர்காணலில் ஈழப் பிரச்சனை தொடர்பில் அவர் கூறியதாவது: கேள்வி: விடுதலைப் புலிகளை நீங்கள் எதிர்க்கிறீர்களா? பதில்: இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால் பயங்கரவாதம், தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றை அ.தி.மு.க. எதிர்க்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம். அதை இப்போதும் நாங்கள் எதிர்க்க…

    • 2 replies
    • 1.2k views
  5. ஆனையிறவிலிருந்து விடுதலைப்புலிகளை விலகிச் செல்லுமாறு அரசாங்கம் அறிவிப்பு. இல்லையேல் பாரிய அழிவை சந்திக்க வேண்டிவரும் என எச்சரிக்கை.திருகோணமலை சம்பூர் பிரதேசத்தைவிட்டு விலகிக்கொண்தைப் போல முகாமாலையிலிருந்து ஆனையிறவு வரையிலான பகுதியைவிட்டு விடுதலைப் புலிகள் தமது நிலைகளை விலக்கிக்கொண்டால் பாரிய அழிவை தவிர்த்துக் கொள்ளமுடியும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தகவல் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரச பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான அமைச்சர் கேஹேலிய ரம்புக்வெல இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். சம்பூரைவிட்டு விலகிக்கொண்ட விடுதலைப் புலிகள் ஆணையிறவு வரையிலான பகுதியிலிருந்தும் விலகிக்கொள்வதே அவர்களுக்கு நல்லது என்று தெரிவித்த அமைச்சர் கே…

  6. துரோகிகள் எரிக்கப்பட வேண்டும்: எல்லாவெல மேதானந்த தேரர் சிறிலங்கா அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு துரோகிகளாக உள்ளோர் எரிக்கப்பட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: இந்த நாட்டினது நிதியை சார்ந்துள்ள சிலர், அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு துரோகிகளாக உள்ளனர். அத்தகைய துரோகிகள் எரிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் படுகொலைக்கும் புரட்சிக்கும் பிக்குகள் காரணம் என்று பயங்கரவாதிகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர். ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன்தான் படுகொலை நிறைந்த பயங்கரமான போரை நிகழ்த்துகிறார். சிங்களவர் இப்போது தாக்குதல் நடத்துவது தற்காப்புக்கான…

  7. முல்லைத்தீவு படுகொலைக்கு இணைத் தலைமை நாடுகள் கண்டனம் முல்லைத்தீவு செஞ்சோலைப் படுகொலை உள்ளிட்ட அனைத்து வன்முறைகளுக்கும் இணைத் தலைமை நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பெல்ஜியத்தின் பிரசெல்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இணைத் தலைமை நாடுகளின் கூட்ட முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: - டோக்கியா உதவி வழங்கும் மாநாட்டின் இணைத் தலைமை நாடுகளான நோர்வேஇ ஐரோப்பிய ஒன்றியம்இ அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை பிரசெல்சில் செப்ரெம்பர் 12 ஆம் நாள் கூடின. - சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நிபந்தனையற்ற பேச்சுக்கு நோர்வே அனுசரணையாளர்களிடம் இணக்கம் தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம். அனைத்து வன்முறைகளையும் இருதரப்பினரும் உடனே கைவிட வ…

  8. கடல்வழிப் போக்குவரத்து: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு புலிகள் பதில் கடல்வழிப் போக்குவரத்து தொடர்பிலான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கடிதத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் அளித்துள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வதிவிடப் பிரதிநிதி ரூன் வாண்டென்ஹொவ்வுக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அனுப்பியுள்ள கடிதம்: கடந்த ஒரு மாத காலமாக யாழ்ப்பாண குடாநாட்டில் 5 இலட்சம் மக்கள் முடக்கப்பட்டுள்ளமையை நீங்கள் அறிவீர்கள். அங்குள்ள நெருக்கடியான நிலைமை குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், யாழ். அரச அதிபர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இது தொடர்பிலான எமது கவலையையும் விளக்கி கடந்த ஓகஸ்ட் 31 ஆம் நாள் தங்கள…

  9. Continue offensives against LTTE - JHU The Jathika Hela Urumaya (JHU) yesterday urged President Mahinda Rajapkse and defence authorities that control of Elephant Pass and Poonaryn was essential for the security of the Jaffna peninsula The government should not give in to pressure by certain sections of the international community and ease its counter attacks on the LTTE. `We praise the soldiers who fought bravely to capture Sampur to ensure the security of Trincomalee and we appreciate President Rajapakse, Defence Secretary and commanders of the three forces who never departed from the main aim and did not give into pressure from the peace merchants and thei…

  10. தமிழர் பகுதிக்குச் செல்வதை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தடுக்கிறது: உலக உணவுத் திட்டம் குற்றச்சாட்டு [செவ்வாய்க்கிழமை, 12 செப்ரெம்பர் 2006, 20:10 ஈழம்] [ம.சேரமான்] தமிழர் பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்வதை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தடுக்கிறது என்று உலக உணவுத் திட்ட அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஜெனீவாவில் ஊடகவியலாளர்களிடம் உலக உணவுத் திட்டப் பேச்சாளர் கிறிஸ்டினெ பெர்தியம் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் தரைவழிப் போக்குவரத்தின் ஊடாக நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதாக கூறுகின்றனர். கடல்வழிப் பயணத்துக்கான பாதுகாப்பு உத்திரவாதத்தை அளிப்பது சாத்தியமில்லை என்றும் கூறிவிட்டனர். ஒருபக்கம் தமிழர் தரப்பினர் கடல்வழிப் போக்குவரத்…

    • 0 replies
    • 941 views
  11. சம்பூரை இராணுவத்தினர் மீட்ட வெற்றியை `கேக்' வெட்டி கொண்டாடிய ஜனாதிபதி சம்பூரை இராணுவத்தினர் கைப்பற்றிய வெற்றியை மகிந்த ராஜபக்ஷ கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றின் பாதுகாப்பு விவகார ஆய்வாளரின் கட்டுரையில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது ஹில்டன் ஹோட்டலில் இருந்து 4 கிலோ எடையுள்ள கேக்கை ஜனாதிபதி வாங்கியுள்ளார். எனினும் அந்தக் கேக்கை சாதாரணமாக பரிமாற அவர் அனுமதிக்கவில்லை. இக் கேக்கை இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை அழைத்து வெட்டச் சொல்லியுள்ளார். அதன்பின்னர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவையும் அவரைத் தொடர்ந்து விமானப்படைத் தளபத…

    • 8 replies
    • 3.1k views
  12. ஐ.தே.கவுடன் சேர்ந்து அமைக்கும் தேசிய அரசில் ஜே.வி.பியையும் உள்வாங்க ஜனாதிபதி விருப்பம் மிலிந்த மொறகொடவிடம் அவரே நேரில் வெளியிட்ட தகவல் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றி ணைந்து தேசிய அரசாங்கமொன்று அமையுமானால் அதில் ஜே.வி.பி யின ரையும் உள்வாங்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத் தேசித்திருக்கிறாரென நம்பகரமாக அறியமுடிகிறது. கடந்த வார இறுதியில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் மிலிந்த மொறகொடவைச் சந் தித்த போது ஜனாதிபதி இவ்வாறான அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கி றாரெனத் தெரியவருகிறது. தேசிய அரசு ஒன்றிற்குள் ஜே.பி.பியினருக்கு இடமளிக்காமல் அவர்களைத் தனியே விட்டால் வெளியில் இருந்து கொண்டு அவர்கள் அரசுக்குத் தொல்லைதரலாம் என்பதால் ஜனாதி பதி இவ்வாறான விரு…

    • 2 replies
    • 1.1k views
  13. நிபந்தனையற்ற பேச்சா?: சிறிலங்கா அரசாங்கம் நிரகரிப்பு Puthinam.com தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் தெரிவித்திருப்பதை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது குறித்து அசோசியேற்றட் பிரஸ் எனும் சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: நாம் எமது நிபந்தனைகளை தெரிவிக்க உள்ளோம். பேச்சுக்கான நாள் மற்றும் இடம் குறித்து எம்மிடம் நோர்வே அனுசரணையாளர்கள் ஆலோசிக்கவில்லை. எதுவித பேச்சுக்கள் குறித்தும் அரசாங்கத்துடன் ஆலோசனை நடத்தப்படவில்லை. நோர்வேயோ இதர தரப்பினரோ பேச்சுக்கான நாளையோ இடத்தையோ அறிவிக்க இயலாது. நாம் ஒரு இறைமையுள்ள அரசாங்கம். …

  14. சம்பூரைக் கைப்பற்றியதைப் பட்டாசு வெடிக்காத குறையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது இலங்கை ராணுவம். 'விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். அவர்களை வீழ்த்துவதற்குத் தேவையான மனோபலமும் படைபலமும் எங்களிடம் உண்டு. இனி யாரும் அவர்களைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்!’ _ பெருமை பொங்க இப்படி அறிவித்திருக்கிறார் மகிந்த ராஜபக்சே. புலிகளை எதிர்த்து இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது எப்படி என்பதையும் அவர் விலாவாரியாக விவரித்துள்ளார். 'சரியான ஆட்களைச் சரியான பதவியில் அமர வைத்தால், எல்லாம் நல்லபடியாக நடக்கும். அதாவது, இலங்கை ராணுவத்தில் இருக்கும் ஒவ்வொரு வீரனும் அதிகாரியும் இப்படித் தேர்வு செய்யப்பட்டவர்கள்தாம். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதால்தான், தீவிரவாதிகளை (அ…

  15. EU did not condemn its own fault and has close Singhalese relations to Sri Lanka, sitting in their parliament! In the European Union’s last report regarding the situation in Sri Lanka, they did not make any concessions of their accessory leading to the increased violence in Sri Lanka. This has caused hundreds of killings, displaced more than 200.000 people from their homes, affected the water and food supply to more than 500 000 civilians in the Jaffna Peninsula, and has stopped all rebuild projects that were started after the Tsunami. It also took the British 58 years to admit that they are to blame for the conflict on Sri Lanka today, and that the rights of the mi…

  16. விடுதலைப்புலிகளுடனான பேச்சுக்களுக்கு அரசு தயார். இன்று மாலை அறிவிப்பு. நிபந்தனைகளற்ற பேச்சு வார்த்தைகளுக்கு தாம் தயாரென ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. இது குறித்து எமக்கு கருத்து தெரிவித்துள்ள அரசாங்க பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெலஇ விடுதலைப்புலிகள் படையினர் மீது தாக்குதல் நடத்தினால் தேசிய நலன் கருதி பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். பேச்சு வார்த்தைகளுக்கு தயாரென தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப தமிழ்ச் செல்வன் இன்று ராய்ட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்விக்கு அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்கும்போதே அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்தார்.இந்த செய்தி நோர்வே தரப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டு…

  17. விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை உறுதியாக மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், நேரடியாக தொடர்புடையவர்களை நாடு கடத்தவும் உத்தரவு :roll: :roll: :roll: ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவில் சேர்த்துக் கொள்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதி மறுத்துள்ள தருணத்தில், உறுப்பு நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையை உறுதியாக மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிம், தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ததை அடுத்து அவர்கள் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவில் இடம்பெறும் பட்சத்தில், பக்கசார்பற்ற முறையில் க…

    • 13 replies
    • 4.5k views
  18. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் நோர்டிக் அல்லாத பிற நாடுகள் இடம்பெற சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இதர நாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எந்த நாடு உறுப்பினர்களை அனுப்புகிறது என்பது குறித்து கவலைப்படவில்லை. நோர்டிக் நாடுகளைச் சேராத உறுப்பினர்களை கண்காணிப்புக் குழுவில் இடம்பெறச் செய்வதற்கு 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை திருத்த வேண்டும். இதற்கு அரசாங்கம் ஒப்புக் கொள்கிறது. இந்த மாற்றத்தை ஏற்பதாக விடுதலைப் புலிகளும் தெரிவித்துள்ளனர் என்றார் கேகலிய ரம்புக்வெல. ப…

  19. அரசுடன் பேச்சுக்களை நடத்த விடுதலைப்புலிகள் தயார்.சுப தமிழ்ச்செல்வன் தெரிவிப்பு. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்ற சமரை நிறுத்துவதற்கு சமாதான பேச்சு வார்த்தைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு விடுதலைப்புலிகள் தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப தமிழ்ச்செல்வன் இன்று ரொய்ட்டர் செய்தி சேவைக்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் செவ்வியில் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த பேச்சு வார்த்தை ஸ்ரீலங்கா படையினர் தங்களது தாக்குதல்களை நிறுத்துவதன் மூலமாக மட்டுமே உடனடியாக சாத்தியமாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

  20. கடந்த டிசெம்பர் மாதம் முதல் யாழில் 419 பேரை காணவில்லை எனப் புகார்! மனித உரிமைகள் ஆணைக்குழு அதிர்ச்சித் தகவல் கடந்த வருடம் டிசெம்பர் முதல் இது வரை யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணாமற் போனவர்கள் தொடர்பில் 419 முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் ஆணையாளர் தர்மசிறி ஜயவிக்கிரம தெரிவித்திருக்கிறார். பி.பி.ஸியின் சிங்கள சேவையான "சந்தேசிய'விற்கு அளித்த பேட்டியொன்றில் மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது: "யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணாமற் போனவர்கள் குறித்தான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காணமற் போனமை குறித்தான 60 முறைப்பாடுகளில் படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுவரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்க…

  21. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நேரடிச் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பு இரண்டு மணிநேரம் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூர்ய மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் உடனிருந்தனர். இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில இருதரப்பும் ஒருங்கிணைந்து செயற்பட இப்பேச்சுவார்த்தை ஏதுவாக இருக்கும் என்றார். இச்சந்திப்பைத் தொடர்ந்து இருதரப்பு ஒருங்கிணைந்த நடவடிக்கைக்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தரப்பில் ஐவர் குழு…

  22. சிறிலங்கா அரசியலில் தலையிடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் விளக்கம் அளித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: அப்பல்லோ மருத்துவமனை விவகாரத்தைப் பொறுத்த வரையில் எமது இந்திய முதலீட்டாளர் நலன்களைப் பாதுகாப்பதற்காக தலையிட்டோம். இது விடயத்தில் உரிய வழிமுறையில்தான் தலையிடப்பட்டது. தனது நாட்டு வர்த்தக நலன்களை மேம்படுத்துவதில் தூதுவருக்கும் கடமை உண்டு. இலங்கை தொழிலாளர் காங்கிரசைப் பொறுத்த வரையில் அக்கட்சி சொந்த முடிவின் படியே அரசாங்கத்தில் இணைந்துள்ளது. முன்னர் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எமது இந்தியா இல்லத்துக்கு வருகை தந்தது விதிமுறைகளுக்கு அப்பாலானது அல்ல. இத…

  23. விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் தோற்கடிக்க முடியாதென்ற `மாயை'யை சம்பூரில் புலிகளை தோற்கடித்ததன் மூலம் படையினர் முற்று முழுதாக தகர்த்தொழித்திருப்பதாக தெரிவித்திருக்கும் ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ச, இந்த வெற்றியை உண்மையான வெற்றியாக நிலைநிறுத்த அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விமல் வீரவன்ச இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை, சம்பூர் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை முற்றாக தோற்கடித்து, அப்பிரதேசத்தை படையினர் கைப்பற்றியுள்ளனர். சம்பூரின் முக்கியத்துவத்தின் காரணமாக போர் நிறுத்த உடன்படிக்கைய…

  24. யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரனின் வெளிக்கள செயல்பாடுகளுக்கு நீதிசேவைகள் ஆணைக்குழுவினால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக இடம் பெற்று வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் செயலபாட்டில் இவர் பொலிசார் மற்றும் கிராம அலுவலாகளுடன் இணைந்து சிறந்த தொரு சேவையை யாழ்ப்பாணத்து மக்களுக்கு இலங்கை சட்டத்திற்கு உட்பட்டு செய்துவந்தார். இத்துடன் யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாதவர்கள் மேற்கொண்டு வரும் வீதிக்கு வீதியான படுகொலைகளில் அகப்பட்டவர்களின் சடலங்களை உடனுக்குடன் நேர காலம் இன்றி குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்டு சடலங்களை யாழ்ப்பாணம் போதனாவையித்திய சாலையில் ஒப்படைப்பதற்கு வேண்டிய நடவடிக்கையையும் சட்டத்…

  25. யாழ்ப்பாணத்தில் வெள்ளை வான் குழுவினரால் 5 வெவ்வேறு சம்பவங்களில் 8 பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீடுகளிலிருந்த 2 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர் சுசீந்திரராஜா தெரிவித்தார். கொக்குவிலில் துப்பாக்கி முனையில் பெற்றோர்கள் முன்னிலையில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர். மேலும் மானிப்பாயில் துப்பாக்கி முனையில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கடத்தப்பட்ட இளைஞர்களது பெயர்களை உயிராபத்து அச்சம் காரணமாக ஊடகவியலாளர்களிடம் அப்பெற்றோர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். வடரமாட்சி, கோப்பாய், சு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.