ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
சென்னையில் வைகோ தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பாரிய கண்டனப் பேரணி [சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 07:41 ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுலமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டனப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ம.தி.மு.க.சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சென்னை மன்றோ சிலையில் இருந்து இந்த பேரணி புறப்பட்டது. பேரணிக்கு தலைமை தாங்கி ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ நடந்தே சென்றார். அவரை தொடர்ந்து ம.தி.மு.க.தொண்டர்கள் கையில் கொடியுடன் அணிவகுத்து சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கறுப்புச் சேலை அணிந்த பட…
-
- 4 replies
- 1.2k views
-
-
வெள்ளைவத்தையில் தமிழ் யுவதி ஒருவர் வெள்ளை வான் கும்பலாம் கடத்தப்பட்டுள்ளார். கடத்தபட்டவர் கிரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மகாராஜா கூட்டு நிறுவனத்தின் கணனி பிரிவில் பணிபுரியும் யுவதியே கடத்தப்பட்டராவார். இன்று முற்பகல் வெள்ளைவத்தை விவேகானந்தா வீதியிலிருந்து காலி வீதியில் சென்று கொண்டிருக்கையில் இவர் வெள்ளை வான் கும்பலாம் கடத்தபட்டுள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 17 replies
- 2.1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க இந்திய பிரதமமந்திரி மன்மோகன் சிங் இணக்கம் வெளியிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளதாக இந்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலர் வை கோபாலசாமி நேற்று முன்தினம் மன்மோகன் சிங்கை சந்தித்தபோதே இந்த உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்மை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குவதற்காக கடிதத்தை அனுப்பவேண்டும் என மன்மோகன் சிங் கேட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 4 replies
- 1.1k views
-
-
மூதூரில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேரை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது தொடர்பிலான முதல் கட்ட விசாரணை அறிக்கை பிரான்சில் எதிர்வரும் வாரம் வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பில் பிரான்ஸ் நிறுவனமான அக்சன் பார்ம் வெளியிட்டுள்ள அறிக்கை: மூதூரில் எமது நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறித்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது கருத்துகளை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். இப்படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையிலான அறிக்கையை எதிர்பார்த்திருக்கிறோம். மூதூர் படுகொலை தொடர்பிலான எமது முதல் கட்ட விசாரணை அறிக்கையை எதிர்வரும் புதன்கிழமை பிரான்சில் ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட உள்ளோம் என்…
-
- 0 replies
- 918 views
-
-
நிவாரணப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடந்தால் பணிகள் இடைநிறுத்தம்: செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை இலங்கையில் நிவாரணப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பணிகள் இடைநிறுத்தப்படும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி மெஸ்டெர் இது இதனை நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். இலங்கை நிலைமைகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் ஜெனீவா திரும்பிய அவர் இதனைத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்துடன் செஞ்சிலுவைச் சங்கம் தொடர்பில் உள்ளதாகக் கூறிய அவர், வன்முறைகளின் முற்றுகையில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றவும் அகதிகளாகிவிட்ட மக்களுக்கான அவசரகால உதவிகளை மேற்கொள்ளவும் இரு…
-
- 0 replies
- 566 views
-
-
முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை அரசாங்கம் நிறைவேற்றினால் அமைச்சுப் பொறுப்பு இல்லமாலேயே அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் கே.ஏ.பாய்ஸ் இது குறித்து கூறியதாவது: முஸ்லிம் மக்களின் அபிலாசைகளில் குறிப்பாக அமைதி முயற்சிகள் தொடர்பிலானவற்றை அரசாங்கம் நிறைவேற்றுமானால் அரசாங்கத்தில் இணைவோம். அமைச்சுப் பொறுப்புகள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. இது தொடர்பாக ரவூப் ஹக்கீமும் மகிந்தவின் ஆலோசகர் பசில் ராஜபக்சவும் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். இருப்பினும் அரசாங்கத்தில் உள்ள இனவாத சக்திகள்தான் அமைதி முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. பேச்சுக்கள் மூலம் அமைதி உருவாக்கப்பட வேண்டும் என…
-
- 1 reply
- 984 views
-
-
"விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியது சரியா? தவறா? என்ற தலைப்பில்" குமுதம் (06.09.06) இதழில் (பக் 20-24) வரை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் இந்திய அமைச்சருமான ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சியின் ஆலோசகர் க.சுப்பு ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. மேலும் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழக மக்களின் கருத்தாக குமுதம் இதழ் வாசகர்களின் படங்களுடன் பதிவு செய்துள்ளவற்றின் தொகுப்பு: சித்ரா: சார், தவறுன்னு பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. ஈழத் தமிழர்கள் பட்ட கஷ்டத்தைப் பார்க்க வேதனையாக இருக்கு! பாட்சா: வைகோ இப்படிப் பேசுவது ஒன்றும் புதிதல்ல. அவர் அன்று சொன்னதைத்தான் இன்றும் சொல்லியிருக்கிறார். …
-
- 0 replies
- 878 views
-
-
தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இணைவது அரசியல் ஆதாயம் கருதிய செயல்பாடு என ஜாதிக ஹல உறுமய குற்றஞ் சுமத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே அரசியல் ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், மேலும் பலர் அரசாங்கத்தில் இணைவதை தடுக்கும் முகமாகவே ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாங்கம் தொடர்பில் அக்கறை கொண்டிருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர், தெரிவித்துள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்தின மறுத்துள்ளார். தேசிய அரசாங்கம் ஒன்று அமையுமானால், அது ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகளை அரசியல் ரீதியாக ஒதுக்கும் நடவடிக்கையாக அமைந்துவிடும். …
-
- 0 replies
- 677 views
-
-
தமிழர் வரலாற்றில் நெருக்கடி மிகுந்த காலகட்டம் பிறந்துள்ளது. சர்வதேசச் சமுதாயத்தின் வேண்டுகோளை ஏற்று மூன்றாண்டு காலத்திற்கு மேலாக அமைதிகாத்து மறுபடியும் மறுபடியும் பேச்சுவார்த்தைக்குச் சென்ற புலிகள் வஞ்சிக்கப்பட்டனர். சிங்களப் பேரினவாத வல்லரக்கரின் வஞ்சனை செஞ்சோலைச் சிறார்களின் பிணக்குவியலில் வெளிப்பட்டுள்ளது. மனிதநேயம் கொண்ட அனைவரும் பதறித்துடிக்கின்றனர். உலகத்தமிழர்களின் கோபமும் கொதிப்பும் பலவடிவங்களில் வெளியாகிக் கொண்டுள்ளது. தமிழகம் ஓருருவாய் பேருருவாய் கிளர்ந்தெழுந்துள்ளது. சிற்றூர்கள் முதல் பெருநகரங்கள் வரை மக்கள் போராட்டங்கள் வெடிந்தெழுந்துள்ளன. உலகநாடுகளில் வாழும் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன. தாயகமண்ணில் பெரும்பகுதியை மீட்டுவிட்ட விடுதலைப்புலி…
-
- 0 replies
- 830 views
-
-
யாழ். பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இன்று வெள்ளிக்கிழமை மாலை மோதல் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. தமிழ்நெட் செய்தி விவரம்: வடமராட்சி கிழக்குப் பகுதிகளை நோக்கி பருத்தித்துறை கடற்கரையோரம் மற்றும் மணற்காட்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனையடுத்து பருத்தித்துறை பகுதியில் மோதல் வெடித்துள்ளது. இதனால் அப்பகுதியிலிருந்து தற்போது மக்கள் வெளியேறி வருகின்றனர் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 5 replies
- 1.8k views
-
-
ஆக்கிரமித்து அழித்தொழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது சிறிலங்கா அரசாங்கம்: இ.இளந்திரையன் [வெள்ளிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2006, 21:28 ஈழம்] [ம.சேரமான்] தமிழர் கிராமங்களை ஆக்கிரமித்து அழித்தொழிக்கும் நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்கிறது என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: திருகோணமலை மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் தமிழ்க் கிராமங்களை திட்டமிட்டு அழிக்கும் நோக்கத்துடன் வலிந்த தாக்குதல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் முன்னெடுத்துள்ளது. கட்டைப்பறிச்சான், சேனையூர், கணேசபுரம் மற்றும் அம்பலநகர் தமிழ்க் கிராமங்களை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து நிர்ம…
-
- 0 replies
- 1k views
-
-
சம்பூரில் தொடர்ந்தும் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடையினருக்கு இடையில் உக்கிர சண்டைகள் நடைபெற்று வருகிறது திருகோணமலை மூதூர் கிழக்கு புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் தமிழிழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடையினருக்கு இடையில் உக்கிர சண்டைகள் நடைபெற்று வருகிறது . இருதரப்பினரும் பரஸ்பரம் ஷெல் தாக்குதல் மோட்டார் எறிகணை தாக்குதலில் ஈடுபட்டும் வருகின்றனர் . அரச படையினருக்கு ஆதரவாக திருமலை கடற்பரப்பில் பீரங்கிகள் பிரங்கி குண்டுகள் மற்றும் விமானப்படையினரின் விமான குண்டுவீச்சுகல் தொடந்தும் நடைபெற்று வருகிறது அம்பூரை சிலதினங்களுக்குள் கைப்பற்றியே தீருவேம் என்று நிலையில் அரச படையினரின் தாக்குதல் நடைபெற்றுகொண்டிருக்கும் அதேவேளை தமிழீழ விடுதலைப்புலி…
-
- 0 replies
- 969 views
-
-
தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்து விட்டால் எந்தப் பிரதேசத்துக்குள்ளும் தாக்குதல் நடத்த முடியும்: சரத் பொன்சேகாவுக்கு எழிலன் எச்சரிக்கை [வெள்ளிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2006, 20:59 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா இராணுவத்தின் இலக்குகள் அழிக்கப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தீர்மானிப்பவர்களாக இருந்தால் அது எந்த பிரதேசத்துக்குள்ளும் இருந்தாலும் அந்த இலக்கை அழிக்கக்கூடிய நடவடிக்கையை மேற்கொள்ளும் தாக்குதல் திறன் எப்போதும் விடுதலைப் புலிகளிடம் இருக்கிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் எச்சரித்துள்ளார். திருகோணமலை கடற்படைத் தளத்தைப் பாதுகாக்கவே சம்பூரைக் கைப்பற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்…
-
- 1 reply
- 1k views
-
-
நான் படித்த பிடித்த படைப்புக்களில் ஒன்றின் பிரதியை இணைக்கின்றேன் இங்கே ஒரு பார்வைAugust 19, 2006 புலியை எதிர்க்கும் இந்தியனுக்கு Filed under: India, Tamil Nadu, Tamil Eelam War, LTTE — CAPitalZ @ 3:59 pm பிரபாகரன் இந்தியாவிடம் சரணடைய வேண்டும். இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து தமிழர்களுக்கு சுதந்திரம் வாங்கித் தருவார்கள் [1]. தமிழ் மொழி அரச கரும மொழியாக நடைமுறையில் வர இந்தியா வாக்குறுதி கொடுக்கும். தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் சிங்களவர்களை விட அதிக புள்ளி எடுத்து பல்கலைக்கழகம் செல்லத் தேவையில்லை. இலங்கையில் எல்லோருக்கும் ஒரே புள்ளிதான் கணக்கிலெடுக்கப்படும் [4]. இவ்வளவு நாளும் இறந்த பொதுமக்களுக்கு தமிழர்கள் என்றும் பார்க்காமல் …
-
- 0 replies
- 1k views
-
-
கரவெட்டி கிளைமோரில் சிறிலங்கா இராணுவ கோப்ரல் பலி- 5 இராணுவத்தினர் படுகாயம் [வெள்ளிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2006, 11:52 ஈழம்] [ம.சேரமான்] யாழ். கரவெட்டியில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் கோப்ரல் தரத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இராணுவத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். வடமராட்சி கரவெட்டி பிரதேச சபை அலுவலகம் அருகே இன்று வெள்ளிக்கிழமை காலை 7.45 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. கரவெட்டியில் யாழ்.- பருத்தித்துறை வீதியில் வீதி சுற்றுக்காவல் பணியில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த போது இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் லான்ஸ் கோப்ரல் ரட்ணநாயக்க கொல்லப்பட்டார். லெப். தர்சன் (வயது 2…
-
- 0 replies
- 775 views
-
-
யாழ்.குடாநாட்டில் அண்மையில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக கைதடி, கோப்பாய் வீதி படையினரால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு உரியமுறையில் சென்றடையாத காரணத்தால் அவ்வழியால் பயணிப்போர் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர். வலிகாமப் பிரதேசத்துக்கு வந்துசெல்வோர் நீண்டதுரம் அவ் வீதியால் வந்தபின் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். http://sankathi.org/news/index.php?option=...id=296&Itemid=1
-
- 0 replies
- 829 views
-
-
பிரித்தானியாவில் நடந்த தொடர் ஆர்பாட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - தமிழர் தாயக கோட்பாட்டை வேல்ஸ் ஆதரிப்பதாக அறிவிப்பு. பிரித்தானியாவில் 2006ம் ஆண்டு தயா இடைக்காடரால் ஆரம்பித்து வைக்கபட்ட உண்ணாவிரதப் போராட்டமும் அதனை தொடர்ந்து நடைபெற்ற தொடர்ச்சியான எழுச்சி ஆர்பாட்டங்களும் பிரித்தானிய அரசியல் மட்டத்தில் பாரிய திடீர் திருப்பத்தை எற்படுத்தி உள்ளது. தமிழர் தாயக கோட்பாட்டையும் தமிழர் உரிமைகளையும் வேல்ஸ் அங்கீகரிப்பதாக பகிரங்கமாக அறிவித்தள்ளது. இது தொடர்பாக வேல்ஸ் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில் வேல்ஸ் தமிழர் தாயகத்தை ஏற்றுக்கொள்வதாகவும் பிரித்தானியாவில் தொடரும் தமிழர்களின் ஆர்பாட்டங்களில் வேல்ஸ் பிரதிநிதிகள் தொடர்ந்து கலந்து கொள்ளவுள்ளார்கள் என்றும் …
-
- 1 reply
- 1.6k views
-
-
அரசு இணங்கும் பட்சத்தில் ஒரே நாளில் யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை (ஏ9) திறக்க தாங்கள் தயாராயிருப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ( ஐ.சி.ஆர்.சி.) இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை அனுப்பிய கடிதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது மூடப்பட்டுள்ள (ஏ9) வீதியை திறப்பதற்கு விடுதலைப்புலிகள் தயாராயுள்ளதாகவும் ஐ.சி.ஆர்.சி. இது குறித்து அரசுடன் பேசி இணக்கமொன்று காணப்பட்டால் ஒரு நாளிலேயே இந்தப் பாதையை திறக்க தாங்கள் தயாராயிருப்பதாகவும் இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் யாழ்.குடாநாட்டுக்கு சரக்கு…
-
- 0 replies
- 850 views
-
-
வவுனியா நகரில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது நூற்றுக்கு அதிகமானோர் இராணுவத்தினராலும காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் இவர்கள் நேற்று வவுனியா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் சுமார் 80 மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு அவர்களின் கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டதன் பின்னர் ஒருவரின் பினையுடன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 749 views
-
-
சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாளராக செயற்பட வந்த நோர்வே இலங்கையின் உள்விவகாரங்களில அத்துமீறி தலையீடு செய்யத் தலைப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தியிருக்கும் அரசாங்கம் நோர்வேயின் செயற்பாடுகள் குறித்து மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் எச்சரித்துள்ளது. விலகிச் செல்லும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் வூல்ப் ஹென்றிக்சன், நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌர் ஆகியோர் தமது பணிகளை மறந்து அரசாங்கத்தின்மீது ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்…
-
- 0 replies
- 633 views
-
-
வவுனியா கோமரசங்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் இன்று சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினுடாக விடுதலைப்புலிகளிடம் இன்று மாலை கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 29ம் நாள் சிறிலங்காப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களில் 6பேரின் உடல்கள் இன்று விடுதலைப்புலிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. புளியங்குளத்திலுள்ள அரசியல் துறைச் செயலகத்தில் வைத்து வவுனியா மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு ஞானம் அவர்கள் இவ் உடல்களைப் பெற்றுக்கொண்டார். http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&
-
- 2 replies
- 1.3k views
-
-
மஹிந்த ராஜபக்ச நேற்று பிரித்தானிய பிரதம மந்திரி டொனி பிளயரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். லண்டனின் வடமேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள பிளயரின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பானது தனிப்பட்ட சந்திப்பாக அமைந்திருந்ததாக பிளயரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக பேசப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். வட அயர்லாந்தின் சமாதான முனைப்புகள் தொடர்பாக இதன்போது இரண்டு தலைவர்களும் கருத்துக்களை பறிமாறிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது வெளிநாட்டு அமைச்சர் மங்கல சமரவீரவும் பங்கேற்றுள்ளார். http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=2&
-
- 2 replies
- 1.2k views
-
-
கண்காணிப்புக்குழு இலங்கை அரசபடைகள் தான் 17 தன்னார்வ தொடர்களை கொலை செய்ததாக குற்றம்சாட்டிய நிலையில் கொலை செய்தவர்கள் பொறுப்பேற்காத நிலையில் தமது பணிகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று நேற்று இரவு நியுயோர்க்கில் ஜநாவின் அவசர மனிதாபிமான பணிகளிற்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் எகர்லாண்ட் தெரிவித்துள்ளார். http://news.yahoo.com/s/nm/20060831/wl_nm/...m/srilanka_dc_8
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கையில் உள்ள இந்திய ஒயில் நிறுவனம் இன்றிரவு எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இதுவரை 98ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒருலீற்றர் பெற்றோலின் விலை 105 ரூபாவாக அதிகரிக்க வுள்ளது 66 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் டீசல் இன்று இரவு முதல் 71 ரூபாவாக அதிகரிக்க உள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரித்துள்ளதால் விலைகளை அதிகரிக்க நேர்ந்ததாக இந்தியாவின் ஒயில் நிறுவனமான ஐ.ஓ.சி குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 5 ரூபாவினால் எரிபொருள் விலையை அதிகரிக்க உள்ளது. இதனடிப்படையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு லீற்றர் பெற்றோல் 10…
-
- 0 replies
- 889 views
-
-
மகிந்த ராஜபக்சவின் இங்கிலாந்து பயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயருக்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகிந்தவின் இங்கிலாந்து பயணமானது இந்தியாவின் உதவியைப் பெறுவதற்கானது என்று ஜோன் ஹன்சன் பெயளர் கூறியதாக நோர்வே அரச வானொலி கருத்து தெரிவித்திருந்து. இது குறித்து சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: எமது அரச தலைவரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த பௌயருக்கு உரிமை இல்லை. அனுசரணையாளர்களுக்குரிய வரம்புகள் மீறப்படுகின்றன. இருநாட்டு தலைவர்களிடையே விவாதிக்கப்பட்ட விடயம் குறித்து எமக்கு எதுவும் தெரியாது என்றார் கேகலிய ரம்புக்வெல. ஊடக அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்…
-
- 0 replies
- 837 views
-