ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142424 topics in this forum
-
நாடாளுமன்றம் கூட்டத்தொடரில் தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட இணக்கம். தற்போதைய அரசியல் சூழ் நிலை குறித்து ஆராயும் முகமாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் மேலக மக்கள் முன்னணியும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தின. நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், உப தலைவர் ந குமரகுருபரன், தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழத்தலைவர் சம்பந்தன், உட்பட்ட குழுவினர் பங்கேற்றனர். இதன் போது வடக்குகிழக்கில் தமிழ்ர்களுக்கு எதிராக பாரிய வன்முறைகள் இடம்பெற்றுள்ளமை அடுத்து முதன்முறையாக நாடாளுமன்றம் கூடவுள்ளமையால் அதில் ஒன்றுபட்டு செயற்படுவது குறித்தும். தமிழர்களுக்கு எதிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டு. மாவட்டத்தில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு! மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம், பெருமாள்வெளி, இலுக்கு, பெரியவட்டவான், குருகனாமடு போன்ற வயல் வெளிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பாடசாலை, கோயில்கள் போன்ற பொதுக் கட்டடங்களில் இடம் பெயர்ந்துள்ளார்கள். அத்துடன் நகர்ப்பகுதிக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சித்தாண்டி நான்காம் குறிச்சியும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்ததில் உள்ளது. மேலும் வந்தாறுமூலை, கொம்மாதுறை, மாவடிவேம்பு போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள…
-
- 4 replies
- 1.3k views
-
-
நாட்டில் இருவாரம் விடுமுறை வழங்கி புலிகளின் அடாவடித்தனங்களுக்கு யுத்தம் மூலம் தீர்வு காண்க இனப்பற்றுக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு கோரிக்கை நாட்டில் இருவார கால கட்டாய விடுமுறையை அமுல்படுத்தி புலிகளின் அடாவடித்தனத்திற்கு யுத்தத்தின் மூலம் முடிவு கட்டுங்கள் என்று இனப்பற்றுக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.மேற்கத்தேய ஊடகங்களும் சமாதான வியாபாரிகளும் எவ்வளவுதான் ஊதிப் பெரிதுபடுத்தினாலும் பிரபாகரன் தோற்கடிக்க முடியாத அசகாய சூரனல்ல. எனவே நாம் அனைவரும் தமிழ் இனவாதத்தை யுத்த ரீதியில் தோற்கடிக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அந்த கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. புலிகளின் அடாவடித்தன…
-
- 0 replies
- 964 views
-
-
ஞாயிறு 15-01-2006 20:32 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] கருணாவின் மறைவிடத்தை படையினர் அடையாளம் காட்டியுள்ளனர் – கண்காணிப்புக் குழு. கருணாவின் ஆயுததாரிகளை நிராயுதபாணிகளாக்குவதற்கு இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எவற்றையும் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளாததால் கண்காணிப்புக் குழு நடவடிக்கைகள் நெருக்கடிக்குள் உள்ளாகி இருப்பதாக கண்காணிப்புக் குழு குற்றம் சுமத்தியுள்ளது. தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் செய்தி ஏட்டுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் குற்றச்சாட்டை கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒல்ப்ஸ்டோட்டியர் முன்வைத்துள்ளார். கருணாவின் ஆயுததாரிகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் நேரடியாக ஆதரவையோ அன்றிப் பாதுகாப்பையோ வழங்கி வருவதை உறுதி செய்வதற்கான…
-
- 3 replies
- 1.7k views
-
-
உண்மையா அது? :shock: குருவாயூரப்பன் கோவிலுக்குள் 'கதலிக்' மதத்தவர்களுக்கு அனுமதி இல்லையாம். ஆனால் மகிந்த தன் மனைவி 'சிராந்தி'யை கொண்டு போய் இருக்கிறார். இதனால் பெரிய அமளி துமளியே நடக்கிறதாமே? கோயிலே 3 கிழமைகள் பூட்டி, நல்லா தேச்சு கழுவோணுமாம். அதோட அன்றைக்கு செய்த பூஜை ஒன்றும் செல்லுபடியாகாதாம். கோயில் மகிந்தவை 'sue' பண்ண போதாமே? :shock: ஆங்கில பத்திரிகையாசிரியர் ஒருவர் இது பற்றி பத்த வைக்க கோபம் கொண்ட மகிந்த "அடோ, என்னை பத்தி எழுதின விட்டுவைச்சன்...என்ர மனிசிய பத்தி எழுதிட்ட, உன்ன கொல்றனா இல்லயா எண்டு பார்" எண்டு பாய, பத்திரிகையாளர் அதற்காக தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சிங்கள காவல்துறைய நாட....மேலும் பத்திரிகைகள் கன்னா பின்னா எண்டு நாக்க புடிங்கிறமாரி கே…
-
- 18 replies
- 3k views
-
-
செஞ்சோலையின் புதிய வளாகம் தேசியத் தலைவர் அவர்களால் திறந்து வைப்பு செஞ்சோலையின் புதிய இல்லவளாகத்தைத் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன்போது பொதுச்சுடரினை ஏற்றிவைத்த தேசியத் தலைவர் அவர்கள் வளாகத்தின் பெயர் பலகையினைத் திரை நீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து செஞ்சோலை மாணவர்களின் கண்காட்சியும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்தை வேரோடு சாய்க சிறீலங்கா அரசும், சிங்கள பேரினவாத சக்திகளும் சமாதானத்திற்கா போர் எனக் கூறிக்கொண்டு இருவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் இனிவரும் காலத்தில் பயங்கவாதத்திற்கான ஒழிப்புப் போர் என்ற தலைப்பில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கு சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளை மீது யுத்தம் ஒன்றை வலிந்து முன்னெடுக்க ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக ஜேபிவி கட்சியின் பொறுப்பு வாய்ந்த நபர் கொழும்பு ஊடகவிலாளர் ஒருவருடன் உரையாடியுள்ளார். குறித்த நபர் ஊடகவியாளருக்கு மேலும் தெரிவிக்கையில்… ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச பட…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஞாயிறு 15-01-2006 19:44 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] ஊர்காவற்துறையில் ஈ.பி.டி.பி யினால் இளைஞர் படுகொலை. ஊர்சாவற்துறையில் இன்று அதிகாலையில் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஈ.பி.டி.பி மற்றும் கடற்படையினரால் இனைந்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதி காலை 12.30 மணியளவில் நண்பர் வீட்டில் இருக்கும் போது இவரை கடற்படையினரும் மற்றும் ஈ.பி.டி.பி யினரும் ஆகாயத்ததை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு இவரைப் பிடித்துச் சென்றுள்ளார்கள். இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலையில் காலையில் வீட்டார் நண்பரின் வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறைப் பொலிசில் முறைப்பாட்டைச் செய்துள்ளார்கள் …
-
- 0 replies
- 1k views
-
-
ஞாயிறு 15-01-2006 20:31 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] பயங்கவாதத்திற்கான ஒழிப்புப் போர் என்ற தலைப்பில் போரை முன்னெடுக்க மகிந்தராஜபக்ச திட்டம். தமிழர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்தை வேரோடு சாய்க சிறீலங்கா அரசும், சிங்கள பேரினவாத சக்திகளும் சமாதானத்திற்கா போர் எனக் கூறிக்கொண்டு இருவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் இனிவரும் காலத்தில் பயங்கவாதத்திற்கான ஒழிப்புப் போர் என்ற தலைப்பில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கு சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே சர்சதேச நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளை மீது யுத்தம் ஒன்றை வலிந்து முன்னெடுக்க ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக ஜேபிவி கட்சியின் பொறு…
-
- 0 replies
- 1.2k views
-
-
மகளுடன் மனம்விட்டு பேசத்துடிக்கும் நளினி! அரித்திராவுக்கு சீ.பி.ஐ. விடுத்துள்ள எச்சரிக்கை! * ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் நளினி, முருகன் தமது மகளை நீண்ட நாட்களின் பின் சந்தித்தனர் -எஸ்.ஜே.எம்.- இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆயுள்தண்டனைக் கைதியான நளினி, மரணதண்டனைக் கைதியான முருகன் தம்பதியின் மகள் அரித்திரா, போராட்டங்களின் பின் தனது பெற்றோரை கடந்த செவ்வாய்க்கிழமை வேலூர் சிறையில் சந்தித்தார். 14 வயதுடைய அரித்திரா தனது பெற்றோரை கடைசியாக 2002 ஆம் ஆண்டில் சந்தித்திருந்தார். நீண்ட நாட்களின் பின் பெற்றோரை பார்க்க விரும்பிய அரித்திரா, தமிழ் நாடு செல்ல இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்துக்கு விண்ணப்பித்தார். `விசா' அனுமதியை தூதரகம்…
-
- 6 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளின் விசேட பயிற்சிக் கல்லூரியில் தைத்திருநாள் விழா (படங்கள் உள்ளே) உழவர் திருநாளாம் தைத்திரு நாளை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல படைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்காண போராளிகள் ஒன்றுகூடி தைத்திருநாளை மகிழ்ச்சிகரமாக கொண்டாடினார்கள். சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த மித்திரன் தலைமையில், மாதிரியாக வடிவமைக்கப்பட்ட தமிழீழத்தின் மாவட்டங்களின் பிரதேசங்களில் பல பொங்கல் பானைகளை வைத்து பொங்கி தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையில் எற்றப்பட்ட தேசியக் கொடியின் முன்னால் பொங்கலைப் படைத்த தைத்திருநாள் நடைபெற்றது. தமிழீழ தேசியக் கொடியினை படைப்பயிற்சி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பாளர் லெப். கேணல் வீரப்பன் ஏற…
-
- 7 replies
- 1.8k views
-
-
மலையகத்தில் புலிகளின் ஊடுருவல்? * சிங்கள ஊடகங்கள் கிளப்பும் புரளி சந்தேகத்துடன் பார்க்கும் பொலிஸார் எஸ்.நயனகணேசன் இன்று இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களும் புலிகளாவார்கள். தென்னிலங்கையில் வாழும் மக்கள் பொலிஸாரால் தாக்குதலுக்கிலக்காகும் பொழுது பொலிஸார் குண்டர்களாவார்கள். அதேவேளை வடக்கு, கிழக்கு மக்கள் தாக்கப்படும் பொழுது அப்பொலிஸார் தேசாபிமானிகளாவார்கள். தெற்கில் மக்கள் கொல்லப்படும் பொழுது அம் மக்கள் சாதாரண பொதுமக்களாவார்கள். வடக்கில் கொல்லப்படும் பொழுது அம் மக்கள் புலிகளாவார்கள். இதுதான் இன்றைய சிங்கள நாளேடுகளின் ஊடக ஒழுக்கநெறியாக அமைந்துள்ளது. கடந்த 2 ஆம் திகதி திங்கட்கிழமை திருகோணமலை பீச் ரோட்டில் இடம்பெற்ற படுகொலையின்போது கொல்லப்பட்ட ஐந்து மாணவர்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
சொல்ஹெய்மின் வருகை யுத்தத்தை தடுக்குமா? * தினமும் நடைபெறும் சம்பவங்களானது முழு அளவிலான போரை நோக்கியே செல்கின்றது நாட்டில் முழு அளவிலான போர் இதுவரை வெடிக்காத போதிலும், பாரிய மோதலைத் தோன்றுவிப்பதற்கான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தினமும் நடைபெறும் சம்பவங்கள் முழு அளவிலான போரை நோக்கியே செல்கின்றன. புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷவும், புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவும் பதவியேற்றது முதல் நிலைமை தலைகீழாகிவிட்டது. நிழல் யுத்தம் உச்சமடைந்து நிஜயுத்தமாகிக் கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்க நோர்வே அமைச்சரும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான எரிக் சொல்ஹெய்மின் வருகை உதவுமா என்பதுதான் மிகப்பெரும் கேள்வியாகும். தற்போதைய சூழ்நிலையில் தினமும் …
-
- 1 reply
- 1.2k views
-
-
வடபோர்முனை போராளிகளுக்கு இடையில் சூட்டுப் போட்டி [ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2006, 04:40 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] தைத் திருநாளான நேற்று சனிக்கிழமை வடபோர்முனை முன்னரங்க நிலைகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு இடையிலான சூட்டுப் போட்டியும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடபோர் முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் சூட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தார். நிகழ்வில் களமுனைத் தளபதிகளும் , போராளிகளும் பங்குபற்றினர். Puthinam
-
- 0 replies
- 1.1k views
-
-
பாதுகாப்பில் விழிப்புடன் இருக்குமாறு விடுதலைப் புலிகள் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதையடுத்து தமிழ் மக்களையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரையும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், எந்நிலையிலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தோன்றியிருப்பதால் பாதுகாப்பில் கவனம் செலுத்தும்படியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோரியுள்ளனர். பளையிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட நிர்வாக சேவை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு இராணுவத்தை அனுப்ப இந்திய பிரதமர் விரும்பவில்லை குமுதம் ரிப்போட்டரில் இந்திய இராணுவத்தை ஈழத்து மண்ணில் இறங்க வைப்பதற்கு இலங்கை அரசு பெரும் பாடுபடுகிறது. அதற்காக கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்று கூறுகிறது. நியாயமாக நடந்து கொள்ளும் நோர்வேயை புறந்தள்ளிவிட்டு இந்தியாவை மோதவிடப் பார்க்கிறது. இலங்கையின் இந்த யோசனைகளை இந்திய பிரதமர் மன் மோகன்சிங் புறந்தள்ளியிருக்கிறார். இதனை ஈழத்த தமிழர்களோடு இரத்த உறவுள்ள இந்தியாவில் உள்ள தமிழர்களும் வரவேற்கிறார்கள், பாராட்டுகிறார்கள்'' என இந்தியாவிலிருந்து வெளிவரும் "குமுதம் ரிப்போட்டரில்' சோலை எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ இந்தியத் தலைநகருக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரே ஒரு மிக் விமானத் தாக்குதலில் புலிகளின் இரணைமடு விமானத் தளத்தை அழிக்க முடியும் ஷ்ரீலங்கா பாதுகாப்புப் படையினர் மீது விமானத் தாக்குதல் நடத்த முடியுமென அண்மையில் புலிகள் இயக்க முன்னணித் தலைவர் பானு விடுத்த அச்சுறுத்தலையிட்டு ஷ்ரீலங்கா விமானப் படைத்தரப்பு தெரிவிக்கும் தகவல்களுக்கேற்ப எந்தவொரு தாக்குதலுக்கும் விமானப்படை தயாராக இருப்பதாக விமானப்படை உயரதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஷ்ரீலங்கா விமானப்படையினர் ஷ்ரீலங்காவின் வெவ்வேறு பிரதேசங்களிலும் நான்கு இடங்களில் ராடர் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நிலையங்களை அமைத்துள்ளதாகவும் அந்த நிலையங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாரத் ராடர் கருவிகள் தாக்குதல் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் …
-
- 3 replies
- 2.2k views
-
-
திருமலையில் விடுதலைப் புலிகளின் மினி முகாம் மீது படையினர் தாக்குதல் - நான்கு போராளிகளைக் காணவில்லை Written by Paandiyan Friday, 13 January 2006 இன்று வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை மாவட்டம், பாலம்போட்டாறிற்கு அருகில் உள்ள கதவணைக்குளம் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் மினிமுகாம் ஒன்றின் மீது ஸ்ரீலங்கா படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் இந்த முகாமுடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐந்து முதல் பத்துவரையான போராளிகள் இருந்த இந்த முகாம் மீதே படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்காத போதும், நான்கு போராளிகள் வரை காணாமல்…
-
- 3 replies
- 1.7k views
-
-
சனி 14-01-2006 14:41 மணி தமிழீழம் [நிருபர் மகான்] மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படாவிடின் சிறிய முகாம்கள் தாக்கப்படும்: பொங்கி எழும் மக்கள் படை அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகள் மற்றும் தாக்குதல்களை நிறுத்தாவிடின் சிறிலங்காப் படையினர் காவலரண் மற்றும் சிறிய முகாம்களை தாக்கப் போவதாக பொங்கி எழும் மக்கள் படை எச்சரிக்கைகள் விடுத்துள்ளது. இது தொடர்பாக பொங்கிஎழும் மக்கள் படை சிறிலங்கா இராணுவத்திற்கு பொங்கி எழும் மக்கள் படை எச்சரிக்கை என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழ் மக்கள் எமது போராட்ட வரலாற்றில் எமக்கெதிராக சூளுரைத்த பல சிங்களத் தலைவர்களையும் வீறாப்புப் பேசி போர் முரசு கொட்டிய இராணுவத்தளபதிகளையும் கண்டவர்கள் ஜே.ஆர்…
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ். தீவகத்தில் குண்டுவெடிப்பு: ஒரு படையினன் பலி: மூவர் படுகாயம் Written by Paandiyan Saturday, 14 January 2006 யாழ். தீவகத்தில் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒரு கடற் படையினன் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அப்பகுதியில் சுற்றுக் காவல் நடவடிக்கையில் கடற்படையினர் கடற்படையினர் ஈடுபட்டபோது வீதியாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. இதனால் ஒரு கடற்படையினன் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த மூன்று கடற்படையினரும் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு இடம்பெற்றதையடுத்து, அப்பகுதியில் மேலதிக கடற்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல்க…
-
- 0 replies
- 1.6k views
-
-
சிங்களக் காடையர்களால், ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் தாக்குதல்! [சனிக்கிழமை, 14 சனவரி 2006, 02:13 ஈழம்] [காவலூர் கவிதன்] திருகோணமலை புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள அபயபுர கிராமத்தில், ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த விஜேசேகர, வழிமறிக்கப்பட்டு, இவரது வாகனம் தாக்கப்பட்டதுடன், இவர்மீதும் தாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த சிறீலங்கா பொலிசார், ஆத்திரத்துடன் தாக்குதல் நடாத்திய சிங்கள மக்களைக் கலைத்து, விஜேசேகரவைக் காப்பாற்றியுள்ளனர். சிங்கள விமுக்தி முன்னணி (எஸ்.வி.எஃப்) என்ற அமைப்பினால் நான்கு நாட்களுக்கான கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டு, இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமையன்றும் ஹர்த்தால் தொடர்கிறது. இந…
-
- 2 replies
- 1.4k views
-
-
""எந்தவிதமான ஆத்திரமூட்டல் நடவடிக் கைகளாலும் தடம்புரளாத நாம், சமாதானம் மற்றும் ஐக்கியத்தை நோக்கிப் பயணிப்பதற் கான திடசங்கற்பத்தை இந்தத் தைப்பொங்கல் தினத்தில் எடுத்துக் கொள்வோம்.'' இவ்வாறு தமது தைப்பொங்கல் செய்தி யில் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவர் தைப்பொங்கலை ஒட்டி விடுத்த செய்தி வருமாறு : நான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் உதயமாகும் முதலாவது தைப்பொங்கலின் போது உங்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற முது மொழிக்கமைய இந்தத் தை மாதத்தை ஒரு அதிஷ்ட மாதமாக நீங்கள் கருதுகின்றீர்கள். உண்மையிலேயே இந்தத் தை மாதத்துடன் ஆரம்பிக்கின்ற வருடம் உங்களுக்கு நன்மை தரும் அதிஷ்ட வருடமாக அமையக்கூடிய …
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழர் தரப்பை தப்புக்கணக்கு போடுகிறார் சரத் பொன்சேகா: பொங்கியெழும் மக்கள் படை சிங்களத்தின் இன்னுமொரு சப்புமல் குமரவாக தன்னை நிலைநிறுத்த முயலும் சரத் பொன்சேகாஇ தமிழர் தரப்பைப்பற்றி தப்புக்கணக்கு போடுவதுதான் வேடிக்கை என்று யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை நேற்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் மக்கள்இ தமது போராட்ட வரலாற்றில் தமக்கு எதிராக சூழுரைத்த பல சிங்களத் தலைவர்களையும் வீராப்பு பேசி போர் முரசு கொட்டிய இராணுவ தளபதிகளையும் கண்டவர்கள். ஜே.ஆர். ஜெயவர்த்தனா முதல் பிரேமதாசாஇ டி.பி. விஜயதுங்கஇ சமாதானப் புறா சந்திரிகா வரை எல்லோரும் எமது இனத்தை அழிப்பதற்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை ராணுவம் வெறிச்செயல் இதுவரை 28 பெண்கள் பாலியல் வல்லுறவு தப்பி வந்த அகதிப்பெண் கண்ணீர் ராமேசுவரம், ஜன. 12- இலங்கை ராணுவம் கடந்த ஒரு மாதத்திற்குள் 28 தமிழ்பெண்களை கற்பழித்துள்ளதாகவும், சோதனை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்படும் ஆண்களின் கதி பற்றி தெரியவில்லை என்றும் தனுஷ்கோடி வந்த இலங்கை அகதிப்பெண் கண்ணீருடன் கூறினார். இலங்கை புதிய அதிபராக மகிந்தா ராஜபக்சே பொறுப்பேற்றப் பிறகு விடுதலைப்புலிகளுடன் மோதல் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி வருகின்றனர். தமிழ் ஆதரவு எம்.பி., கடந்தமாதம் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு போர் அபாயம் மேலும் அதிகாpத்துள்ளது. இலங்கை ராணுவத்துக்குச் சொந்தமான கப்பலை சமீபத்தில் புலிகள் நடுக்கடல…
-
- 3 replies
- 1.6k views
-
-
முதல் சுற்றுப்பேச்சை நோர்வேயில் ஆரம்பிக்க ஜனாதிபதி இணக்கம்? சொல்ஹெய்ம் வந்ததும் இறுதி முடிவு புலிகளுடனான சமரசப்பேச்சுவார்த்தையை கூடிய விரைவில் ஆரம்பிக்க ஜனாதிபதி அக்கறை கொண்டுள்ளதன் காரணமாக புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க முதற்சுற்றுபேச்சை நோர்வேயில் ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக அவருடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இலங்கை வரவிருக்கும் நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான விசேட சமாதான தூதுவருமான எரிக்சொல்ஹெய்ம் எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கை வந்ததும் பேச்சுவார்த்தைக்கான இடம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படுமென தெரியவருகின்றது. நேற்று முன்தினமிரவு மஹிந்த ராஜபக்ஷ தனது சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரை அழைத்து சுதந்திரக்கட்சியின்…
-
- 1 reply
- 1.2k views
-