Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்தாருக்கு நன்கொடை By T. SARANYA 15 NOV, 2022 | 12:51 PM பாராளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொன்னூரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின்போது கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மனைவியிடம் நேற்று (14) கையளித்தார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தின் பின்னர் இந்த பணத்தை ஜனாதிபதி கையளித்தார். பிரதி சபாநாயகர் அஜித் ர…

  2. யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை வருட இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை! இந்த வருட இறுதிக்குள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர், அவை விரைவில் சாத்தியமாக வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டதோடு அதிகாரிகளுடன் கலந்துரையாடினர் குறித்த விஜயத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும…

  3. கொரியாவுக்கு சென்ற இலங்கை மகளிர் றக்பி அணித்தலைவியை காணவில்லை By DIGITAL DESK 3 14 NOV, 2022 | 01:31 PM சர்வதேச றக்பி சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்காக தென் கொரியாவுக்குச் சென்றிருந்த இலங்கை மகளிர் றக்பி அணியின் தலைவி துலானி பல்லேன்கொந்தகே காணாமல் போயுள்ளார். 7 பேர் கொண்ட அணிகளுக்கிடையிலான ஏசியன் றக்பி செவன்ஸ் தொடரின் 2 ஆவது கட்டப் போட்டியில் பங்குபற்றுவற்காக இலங்கையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தென் கொரியாவுக்குச் சென்றிருந்தன. இப்போட்டிகளின் பின்னர் இலங்கை அணி தென்கொரியாவின் இன்சின் நகரிலிருந்து இன்று முற்பகல் இலங்கைக்குப் புறப்படவிருந்தது. இந்நிலையில் இலங்கை மகளிர் அணியின் தலைவி துலானி பல்லேகொந்…

  4. மே 9ஆம் திகதி கோட்டாபயவை கொல்வதற்கு திட்டம் தீட்டப்பட்டது – விமல் வீரவன்ச கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்தபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அத்தோடு, கோட்டை ஜனாதிபதி மாளிகை, மற்றும் அலரி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்து அவற்றை ஆக்கிரமித்திருந்தனர். இதன்போத…

  5. பருத்தித்துறையில் 13 இளைஞர்கள் கைது! சட்டவிரோதமாக கூட்டம் கூடியமை , சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 13 இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை , பாவனைகள் மற்றும் போதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் போன்ற அநாகரிக செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் , பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை முன்னெடுத்த போது , வீதிகளில் அநாவசியமாக கூட்டம் கூடி நின்றமை , சந்தேகத்திற்கு இடமா…

  6. அஞ்சலிக்காக நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்! யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நவம்பர் 21ஆம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள இக் கல்வெட்டுக்கள் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும். அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தமுடியும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டுமென யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கோரிக்கை விடுத்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த…

  7. யாழில். உயிரிழந்தவர்களின் பெயரில் போலி உறுதி முடிப்பு! சட்டத்தரணி கைது! யாழ்ப்பாணம் – அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது. அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்தி பொலிஸார், கடந்த மாதம்…

  8. கிழக்கில் எனது அரசியல் பயணத்தை முடக்க சுமந்திரன் சதி – பிள்ளையான் குற்றச்சாட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சபையில் கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் இனிமேல் அவர் தமக்கு சம்பந்தமில்லாத விடயங்களை சிறப்புரிமையாக சபையில் முன் வைக்க இடமளிக்கக் கூடாதென்றும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சபாநாயகரை கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், தான் கிழக்கில் முன்னெடுக்கும் அரசியல் பயணத்தை முடக்கும் முயற்சிகளில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளதாகவும் சபையில் குறிப்பிட்டார். அது தொடர…

  9. தரமுயரும் காங்கேசன்துறை துறைமுகம் : 35 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க அங்கீகாரம் ! By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 10:41 AM பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையே. இந்த திட்டம் EXIM வங்கியின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது, இதற்காக இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் திறைசேரிக்கும் இடையில் கடனுதவி ஒப்பந்தம் 2018 ஒக்டோபர் மாதம் கை…

  10. மின்னல் தாக்கி ஒருவர் பலி : இருவர் காயம் : நவகத்தேகம பகுதியில் சம்பவம் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 12:25 PM (எம்.வை.எம்.சியாம்) புத்தளம், நவகத்தேகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் மின்னல் தாக்கி மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நவகத்தேகம - கிரிமெட்டியாவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளது. இதன் போது காயமடைந்த மூவரும் அம்புலன்ஸ் மூலம் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார…

  11. தமிழ்க் கட்சிகள் வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் இணைய வேண்டும் – மஹிந்த தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக்கூடாது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதோடு, வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் உரையாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அன்றும் சரி, இன்றும் சரி தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தாம் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெர…

  12. இந்தியாவிலிருந்து வந்த பெண் உள்ளிட்ட மூவரிடம் கொள்ளை : உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர் பொலிஸில் சரண் By VISHNU 14 NOV, 2022 | 08:09 PM (எம்.எப்.எம்.பஸீர்) இந்தியாவுக்கு சென்று துணி மணிகளை கொள்வனவு செய்து எடுத்து வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போது, ஜா எல பகுதியில் வைத்து பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் பயணித்த வாகனத்தை மறித்து அவர்களைக் கைது செய்து, அவர்கள் உடமையிலிருந்த 40 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், களனி வலய குற்ற விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழு நீதிமன்றில் இன…

  13. நாட்டின் சனத் தொகை கணக்கெடுப்பை அடுத்தாண்டு ஆரம்பத்தில் முன்னெடுக்க திட்டம் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 04:13 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு அடுத்தாண்டு ஆரம்பத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகிறது. இதன் முதல் கட்ட வரைபட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பி.எம். பிரசாத் அநுர குமார குறிப்பிட்டார். அதன் இரண்டாம் கட்ட, பட்டியல் எடுப்பதற்காக அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் திட்டம், இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது என்றும் இதற்காக ஐக்கிய நாடுகளின் சனத்தொ…

  14. கஞ்சாவை பயிரிடுவது குறித்து ஆராய நிபுணர் குழு. ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1310497

  15. ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பொதுச்செயலாளர் ரவிகருணாநாயக்க By RAJEEBAN 14 NOV, 2022 | 05:44 PM ரவிகருணாநாயக்க ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரவிகருணாநாயக்கவை பொதுச்செயலாளராக நியமிக்கவேண்டும் என கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் விரும்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவும் இதனை விரும்புகின்றார் என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் இது குறித்து ரவிகருணாநாயக்கவுடன் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளன. ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார ஆளுநராக நியமிக…

  16. கிழக்கு ஆளுனர் மற்றும் வியட்நாம் தூதுவருக்கிடையில் சந்திப்பு By T. SARANYA 14 NOV, 2022 | 04:50 PM கிழக்கு மாகாணத்தின் வர்த்தகர்கள் மற்றும் வியட்நாம் இலங்கைத் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக் மற்றும் மாகாண ஆளுநர் அனுராதா யம்பத் ஆகியோர் தலைமையில் வியட்நாம்-இலங்கை வர்த்தக உச்சி மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் பாசிக்குடா அமயா பீச் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் வியட்நாம் வர்த்தகர்களுக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் வர்த்தகர்கள் வியட்நாமில் செய்யக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் குறித…

  17. ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு தட்டுப்பாடு : ஒரு ரிக்கெற்றை இரண்டாக வெட்டி வழங்க வேண்டியுள்ளதாம்! By T. SARANYA 14 NOV, 2022 | 04:10 PM பல முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார். சிலாபம் மற்றும் லுணுவில நிலையங்களில் 20 ரூபா பெறுமதியான பயணச்சீட்டுகள் இல்லாததால், 40 ரூபா பயணச்சீட்டுகளை இரண்டாக வெட்டி இரண்டு பயணிகளுக்கு வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை, மருதானை, கம்பஹா, மொரட்டுவை, பாணந்துறை, வெயங்கொடை, கம்பஹா ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் ப…

  18. நாட்டின் இருப்புக்கு பாதுகாப்புத் மூலோபாய திறன்கள் முக்கியமாகின்றது - ஜனாதிபதி By T. SARANYA 12 NOV, 2022 | 03:43 PM ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக உள்ளது. எனவே முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்களின் அவசியம் குறித்தும் அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். …

  19. சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றும் பொலிஸார் அதற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் - சாலிய பீரிஸ் By RAJEEBAN 10 OCT, 2022 | 11:20 AM சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றும் பொலிஸார் என்றோ ஒரு நாள் சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றியமைக்கான விளைவுகளை அனுபவிக்கவேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார் தங்கள் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காக மக்களின் உரிமைகளை மீறியவர்கள் தங்கள் தவறுகளிற்கான விலைகளை செலுத்தியதை நான் பார்த்திருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். சிலர் இழப்பீடுகளை செலுத்தினர்,தங…

  20. சிறுமியின் முகநூல் கணக்கை திருடி அதே சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய நபர் தொடர்பில் விசாரணை! By DIGITAL DESK 5 14 NOV, 2022 | 12:05 PM 17 வயது சிறுமியின் முகநூல் கணக்கை திருடி, அந்தக் கணக்கின் ஊடாக சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்தி சமூகமயப்படுத்தினார் எனக் கூறப்படும் தொலைபேசி பழுதுபார்ப்பவர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தொலைபேசி பழுதுபார்ப்பவரிடம் தனது தொலைபேசியை பழுதுபார்ப்பதற்குக் கொடுத்ததாகவும், சில மணித்தியாலங்களின் பின்னர் அதனைப் பழுதுபார்த்து தன்னிடம் கொடுத்ததாகவும் சிறுமி செய்த முறைப்பாட்டில் தெரிவிக்க…

  21. மின் கட்டணம் செலுத்தப்படாமையினால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் ஸ்ரீதர் தியேட்டர் கட்டிடத்தில் இயங்கி வருகின்ற ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகம் இருளில் மூழ்கியுள்ளது. இது தொடர்பான தகவல்களை வெளியிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை மினசார சபை ஊழியர் ஒருவர், 2014 ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அரசாங்கத்தில் மிக முக்கியமான சிரேஸ்ட அமைச்சராகவும், தற்போதைய அரசாங்கத்தினை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவராக விளங்கி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அதிகாரம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றை இதுவரை பயன்படுத்தாமல் இருப்பது …

  22. அனைவரும் ஒன்றிணைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது கடமை வா.கிருஸ்ணா வடக்கு, கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அரசியல் கட்சி வேறுபாடுகள் மறந்து அனைவரும் ஒன்றிணைந்து விளக்கேற்ற முன்வரவேண்டும் என்று தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அன்றைய தினம் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு தமிழ் மக்கள் சென்று அஞ்சலி செலுத்துவது கடமையெனவும் தெரிவித்தார். எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள், இன்று (13…

  23. 2 பிள்ளைகளின் தாய் கொலை : 7 மாதங்களின் பின் கைதான ஹோட்டல் உரிமையாளர்! By DIGITAL DESK 5 14 NOV, 2022 | 10:51 AM இரண்டு பிள்ளைகளின் தாயான துஷாரி தில்ஹானி என்பவர் 7 மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டு பாணந்துறை பின்வத்தை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் மலசலகூட குழியில் வீசப்பட்டிருந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கிரிஇப்பன்ஆர பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர் ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் என தெரிய வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்துக்குத் தப்பிச் சென்ற சந்தேகநபர் பொலிஸாரிடமிருந்து தப்…

  24. தேசிய அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்தல் : பொலிஸாரின் அறிவிப்பு By T. SARANYA 14 NOV, 2022 | 10:58 AM தலங்கம பொலிஸாரால் ஒருவர் சனிக்கிழமையன்று அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு தடுத்து வைத்தமை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அதிகாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை (12) இடம்பெற்ற இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, அது தொடர்பான விவரங்களை தெளிவுபடுத்தி பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். நாட்டில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான வழமையான சோதனை நடவடிக்கைகளின் போது, தலங்கம பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் சந்தே…

  25. யாழில் சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி By DIGITAL DESK 5 12 NOV, 2022 | 04:05 PM சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்பொழுது நீரிழிவு நோய் தொடர்பில் விழிப்புணர்வுகள் செயற் படுத்தப்படுகின்றன. அதனுடைய ஓர் அங்கமாக சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கள்கிழமை காலை 7.00 மணிக்கு வைத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.