ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
195 கையடக்கத்தொலைப்பேசிகள், 4 தங்க சங்கிலிகள், 8 ஜோடி தங்க வலையல்களுடன் இருவர் கைது By DIGITAL DESK 5 12 NOV, 2022 | 12:23 PM நாட்டின் இருவேறு பகுதிகளில் பல்வேறுகொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கல்கிஸ்ஸ கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து 1426,500 ரூபா பணத்திணை கொள்ளைட்டு சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கல்கிஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 4 தங்க சங்கிலிகள், 8 ஜோடி தங்க வலையல்கள் மீட்கப்பட்டுள்ளன. …
-
- 4 replies
- 254 views
- 1 follower
-
-
ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த 18 வயதான பிரதான முகவர் கைது By DIGITAL DESK 5 12 NOV, 2022 | 12:34 PM ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த பிரதான முகவரான சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (11) இரவு மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை புகையிரத நிலைய வீதிக்கு அருகில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார். இவ்வாறு கைதான நபர் பிரைந்துறைச்சேனை பகுதியை சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர்…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
பொய்யான தகவல்களை வழங்கி பெறப்பட்ட கடவுச்சீட்டு ? – டயானா கமகே வெளிநாடு செல்லத் தடை நீதிமன்றத்தின் அனுமதியின்றி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நேற்று (வெள்ளிக்கிழமை) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இராஜாங்க அமைச்சரின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பொய்யான தகவல்களை வழங்கி பெறப்பட்டுள்ளதாக தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பல தவறுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப் படுவதாகவும் எனவே அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்த…
-
- 1 reply
- 176 views
-
-
இலங்கை மீது மேக்னிட்ஸ்க் பாணியில் பொருளாதாரத் தடைகளை விதிக்க பிரித்தானிய உறுப்பினர்கள் கோரிக்கை ! ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மேக்னிட்ஸ்க் பாணியில் பொருளாதாரத் தடைகளை விதித்து இலங்கை மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமைக்கான பிரித்தானியாவின் பதில் குறித்த பின்வரிசை வணிகக் குழு விவாதத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பவும். ஜி.எஸ்.பி. பிளஸ் பெறுவதற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இராணுவத்திற்கான அதிகப்…
-
- 0 replies
- 143 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. சகலரும் ஓரணியாகச் செயற்படுவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொதுவெளியில் முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவது தொடர்பாக, ஊடகம் ஒன்று வினவிய போதே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகக் கட்சி. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிட முழு உரிமை உண்டு. ஒரு சிலரின் கருத்துக்களை வைத்துக் கொண்டு கூட்டமைப்பு எம்பிக்களுக் கிடையி ல் முரண்பாடு, பிளவு என்று எடை போடக் கூடாது. உறுப்பினர்களுக் கிடையில் எந்த முரண்பாடும், …
-
- 5 replies
- 414 views
- 1 follower
-
-
யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் கோர விபத்து : மூவர் பலி, 16 பேர் காயம் 05 NOV, 2022 | 06:50 AM யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். இன்று சனிக்கிழமை (05) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நொச்சிமோட்டை பாலத்தில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன்போது பஸ் சாரதியான ரூபன் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், குறித்த பஸ்ஸில் பயணித்த 16 பேர் காயமடைந்…
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல் யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நேற்று இரவு யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்திற்கு முன்னால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று யாழ் இந்திய துணை தூதுவரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது யாழ். பொலிசார் மற்றும் தடவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1309907
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
அரசியல் கற்கை நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஒப் பொலிடிக்ஸ் நிறுவனம் வருடாந்தம் நடத்தும் விருது வழங்கும் நிகழ்வில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய துறைகள் சம்பந்தமாக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசியல்வாதிகள் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். இதனடிப்படையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வில் அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கையில் ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும் ஜனநாயகத்திற்கான தங்க விருது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது. வருடத்தின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி பிரேம்நாத் சீ தொ…
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த “அபிவிருத்திக்கான அதிகாரப் பகிர்வு” குறித்த செயலமர்வு! கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த “அபிவிருத்திக்கான அதிகாரப் பகிர்வு” குறித்த செயலமர்வு, நேற்றைய தினம் கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் சபை அறையில் நடை பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் ஆன M.A. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இவ் நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் அபிவிருத்தியும் அதிகாரபகிர்வு தொடர்பாக பல சந்தேகங்களுக்கான விளக்கங்களும் தெளிவூட்டல்களும் வழங்கப்…
-
- 5 replies
- 434 views
- 1 follower
-
-
75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எதிர்பார்ப்பு – ஜனாதிபதி 75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எதிர்பார்த்ததுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி, வெளியுலகத் தலையீடுகள் இன்றி சுமுகமான முறையில் அப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். மேலும் அது தொடர்பான விவாதத்தை அடுத்த வாரம் நடத்த தயார் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அனைத்து தமிழ் அரசியல் …
-
- 11 replies
- 480 views
- 1 follower
-
-
மாணவர்களுக்கு வழங்கப்படும் பகல் உணவை இரட்டிப்பாக்க நடவடிக்கை : கல்வி அமைச்சர் By DIGITAL DESK 2 11 NOV, 2022 | 02:08 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) நாட்டில் வறுமை நிலை அதிகரித்துள்ளதால் ஆகாரம் பெற்றுக்கொள்ளாத மாணவர்களின் வீதம் ஏனைய காலங்களைவிட அதிகரித்துள்ளது. அதனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் பகல் உணவை இரட்டிப்பாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவித்த கருத்து பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெர…
-
- 0 replies
- 491 views
- 1 follower
-
-
ஜனாதிபதி மாளிகை அறையிலிருந்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் By T. SARANYA 11 NOV, 2022 | 03:05 PM (எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக் காரர்கள் கண்டெடுத்த கோடிக்கணக்கான பணத் தொகையை மையப்படுத்திய விவகாரத்தில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகிய இருவரினதும் குறைப்பாடுகள் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டை நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (11) ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறியமை உளிட்ட கடந்த ஜூலை 9 ஆம் திகதி நடந்த சம்பவங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் குறித்த வழக்கு விசா…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
துரை ரட்ணசிங்கம் கல்வித்துறைக்கு ஆற்றிய சேவை நினைவுபடுத்தப்பட வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ By NANTHINI 11 NOV, 2022 | 04:00 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்) காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரை ரட்ணசிங்கம் கல்வித்துறைக்கு ஆற்றிய சேவை நினைவுபடுத்தப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (நவ 11) இடம்பெற்ற அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் துரை ரட்ணசிங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராள…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
யாழ். பருத்தியடைப்பு கடற் பகுதியில் இறந்த நிலையில் டொல்பின் மீட்பு By VISHNU 11 NOV, 2022 | 03:59 PM யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பருத்தியடைப்புப் பகுதியில் இன்று (11), இறந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் அதிகாரிகளுக்கு மக்களால் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அரச அதிகாரிகளும் பொலிஸாரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். மீனில் காயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139751
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது By DIGITAL DESK 2 11 NOV, 2022 | 01:29 PM நுகேகொட பிரதேசத்தில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றைச் சுற்றிவளைத்து மூன்று பெண்கனையும் முகாமையாளரையும் கைது செய்துள்ளதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த விடுதியில் விபசாரம் இடம்பெறுவதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உதய குமாரவுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், நிலைய பொறுப்பதிகாரிளின் பணிப்புரைக்கமைய பொலிஸ் பரிசோதகர் ஜனித குமார தலைமையிலானோர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். நுகேகொட நீதிவான் நீ…
-
- 2 replies
- 331 views
- 1 follower
-
-
வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரரின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் 27 OCT, 2022 | 09:16 PM (எம்.மனோசித்ரா) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகியோரின் உயிர் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பிற சிவில் அமைப்புக்களினால் கொழும்பு - நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு அருகில் இந்த ஆர்ப்பா…
-
- 2 replies
- 211 views
- 1 follower
-
-
புதிய தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர் By T. SARANYA 11 NOV, 2022 | 01:55 PM புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான ஏழு தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். அண்மையில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட இலங்கைக்கான மெக்சிக்கோ தூதுவர் Federico Salas Lotfe, இலங்கைக்கான பூட்டான் தூதுவர் Rinchen Kuentsyl, இலங்கைக்கான பரகுவே தூதுவர் Flemming Raul Duarte, இலங்கைக்கான லக்சம்பர்க் தூதுவர் Peggy Frantzen, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan Dzhagaryan, இலங்கைக்கான ஓமான் தூதுவர்…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
கடும் மழையால் நீரில் மூழ்கியது அம்பாறை மாவட்டம் By VISHNU 11 NOV, 2022 | 01:42 PM அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று நிந்தவூர் நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மழை வெள்ளத்தின் காரணமாக இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை பாண்டிருப்பு நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு காரைதீவு சம்மாந்துறை அக்கரைப்பற்று பகுதிகளில் இப்பிரதேசத்தில் பல குடும்பங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளநிலையில், மக்கள் வீடுகளிற்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகான் இன்மையே முக…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
பட்டப்பகலில் வீடுகளை உடைத்து கொள்ளை : இருவர் கைது - யாழில் சம்பவம் By NANTHINI 11 NOV, 2022 | 11:50 AM யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வீடுகளுக்குள் புகுந்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் இருவர் வியாழக்கிழமை (நவ 10) கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு அந்த சந்தேக நபர்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மேலும் இருவரும் கைதாகியுள்ளனர். இந்த சந்தேக நபர்களிடமிருந்து 60 பவுண் நகைகள் மற்றும் ஒருதொகை பணம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் நவம்…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக வேதநாயகன் நியமனம் By DIGITAL DESK 2 11 NOV, 2022 | 11:32 AM வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவின் தலைவராக யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் நவம்பர் 9ஆம் திகதியிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தின் பிரகாரம் இன்று வெள்ளிக்கிழமை (11) முதல் செயல்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவில் அங்கம் வகித்த ஐவரில் மூவரின் பதவிகள் வறிதான நிலையில் தற்போது புதிதாக மூவர் நியமிக்கப்பட்டு அதில் ஒருவரான வேதநாயகன் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், முல்ல…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
யாழில். வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு! By T. SARANYA 09 NOV, 2022 | 04:17 PM ஆலய நிர்வாகத்தின் பண மோசடி உள்ளிட்டவை தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு தீர்வொன்றினை பெற்று தர வேண்டும் என கோரிய வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றின் நிர்வாகத்தினர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அவுஸ்ரேலியாவில் இருந்து திரும்பிய அந்நாட்டு பிரஜை ஒருவர் வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட்டு இருந்தார். இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை அவரது வீட்டுக்குள் புகுந்த மூவர் அடங்கிய குழு அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென…
-
- 11 replies
- 980 views
- 1 follower
-
-
டயானா கமகேவின் கடவுச்சீட்டு விவகாரம் : அறிக்கை வேண்டுமென நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவு By DIGITAL DESK 5 28 OCT, 2022 | 10:26 AM (எம்.எப்.எம்.பஸீர்) பிரித்தானிய பிரஜையாக இருந்துகொண்டு, போலியான தகவல்களை சமர்ப்பித்து, இரு கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறி, ஐக்கிய மக்கள் சக்தி பாரளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிராக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், அவ்விசாரணையின் முன்னேற்றம் குறித்த பூரண அறிக்கையினை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று ( 27) உத்தரவிட்டது. சி.ஐ.டி.யின் பொறுப்பதிகாரிக்கு, க…
-
- 2 replies
- 234 views
- 1 follower
-
-
சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த இரு இளைஞர்கள் தப்பியோட்டம் : சிறுமி உயிரிழப்பு By T. SARANYA 11 NOV, 2022 | 01:07 PM இரு இளைஞர்களால் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 வயதான சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த இரு இளைஞர்களும் சிறிது நேரத்திலேயே வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த சிறுமியை இரு இளைஞர்கள் காரில் வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததாகவும் சிறுமியை உடனடியாக பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்துள்ளமையை உறுதிப்படுத்தியதாகவும் வைத்திய…
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
சீன கரிம உரக் கப்பலின் பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு அதிகாரி நியமனம்! சீன கரிம உரங்களை ஏற்றுமதி செய்தமை மற்றும் இலங்கை அரசாங்கம் செலுத்திய 6.7 மில்லியன் டொலர்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியிலான தீர்வை வெளிவிவகார அமைச்சு கோரவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதற்கு விசேட அதிகாரி ஒருவரை வெளிவிவகார அமைச்சு நியமித்துள்ளது. விவசாய அமைச்சின் அதிகாரிகள் அந்த அதிகாரிக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவார்கள் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் நேற்று (வியாழக…
-
- 0 replies
- 163 views
-
-
இன,மத அடையாளங்களுடன் செயற்படும் கட்சிகளை இல்லாமல்செய்யவேண்டும் – நிமல் ஜி புஞ்சிஹேவா இலங்கையில் இன,மத அடையாளங்களுடன் செயற்படும் கட்சிகளை எதிர்காலத்தில் இல்லாமல்செய்யவேண்டிய தேவையுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்ட உத்தேச தேர்தல் சட்ட மறு சீரமைப்பு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் மக்கள் மயப்படுத்துவதற்காகவும் தேர்தல் ஆணைக்குழுவினால் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்ட. மட்டக்களப்பு,நாவற்குடாவில் உள்ள தனியார் விடுதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலி…
-
- 0 replies
- 162 views
-