ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி விடுதலைப் புலிகளின் புதையல் இருக்கலாம் என்ற தகவலுக்கு அமைய தேவிபுரம் “அ” பகுதியில் உள்ள வீட்டு காணி ஒன்றில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த அகழ்வு பணியில் பொலிசார் விசேட அதிரடிப் படையினர் கிராம அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டுள்ளனர் https://athavannews.com/2022/1309720
-
- 0 replies
- 352 views
-
-
ஜப்பானிலிருந்து சொகுசு ஜீப் இறக்குமதி செய்து தருவதாகக் கூறி 80 இலட்சம் ரூபா மோசடி : ஒருவர் கைது! By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:34 AM ஜப்பானிலிருந்து பிராடோ ரக ஜீப் ஒன்றை இறக்குமதி செய்வதாகக் கூறி 80 இலட்சம் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அருட்தந்தை ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று (09) உத்தரவிட்டுள்ளார். நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, தனது சேவை பெறுநர் வேறொருவருக்கு இந்தப் பணத்தை …
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியமைக்கான காரணத்தை விளக்கினார் சரத் வீரசேகர By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:14 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) வெளிநாட்டு மற்றும் பொருளாதார கொள்கைகளை முறையாக பின்பற்ற தவறியதாலே கோத்தாபய ராஜபக்ஷ்வினால் பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அத்துடன் ரஷ்யாவிடம் இருந்த இரண்டு வருட கடன் திட்டத்தில் எரிபொருள்கொள்வனவு செய்திருந்தால் போராட்டங்கள் இடம்பெற்றிருக்காது என சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து த…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
கல்வி, சுகாதாரத்துறைகளை தனியார் மயமாக்குவதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதா ? - சஜித் அரசாங்கத்திடம் கேள்வி By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 09:56 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) அமைச்சுப்பதவிகளை காட்டி எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை பழி எடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. எந்த முயற்சி எடுத்தாலும் எமது கட்சியில் இருந்து ஒரு உறுப்பினரும் முட்டாள்தனமான அரசாங்கத்தில் இணையப்போவதில்லை. அத்துடன் இலவச சுகாதாரதுறை மற்றும் கல்வித்துறையை தனியார் மயப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உறுதியளித்துள்ளீர்களா? என கேட்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜி…
-
- 1 reply
- 145 views
- 1 follower
-
-
டெங்கினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 சத வீதத்தால் அதிகரிப்பு By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:49 AM இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 18 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் 1,114 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய வாரத்தில் 943 பேர் மட்டுமே பதிவாகியிருந்தனர். இதற்கமைவாக, நாட்டில் இவ்வருடம் 63,549 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெ…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
கடன் வழங்கியவர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுங்கள்- இலங்கைக்கு உலக வங்கி அறிவுரை By RAJEEBAN 10 NOV, 2022 | 10:52 AM கடன் மறுசீரமைப்பு குறித்து இலங்கையின் உத்தியோகபூர்வ இரு தரப்பு மற்றும் தனியார் கடன்வழங்குநர்கள் இணக்கப்பாட்டிற்கு வருவதை உறுதி செய்வதற்காக அவர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பெஸ் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதிக்கும் உலக வங்கி தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியும் உலகவங்கி தலைவரும் இலங்கையின் பொருளாதார …
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
அல்ஹைதாவுடன் தொடர்பு - இலங்கை வர்த்தகருக்கு எதிராக தடைகளை விதித்தது அமெரிக்கா By RAJEEBAN 10 NOV, 2022 | 10:31 AM அல்ஹைதாவுடன் தொடர்புவைத்திருந்த இலங்கையை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. முகமட் இர்சாத் முகமட் ஹரீஸ் நிசார் என்ற முஸ்லீம் வர்த்தகருக்கு எதிராகவே அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அல்ஹைதாவின் நிதி உதவியாளர் மற்றும் மற்றும் வெளிநாட்டு சதிதிட்டங்களில் ஈடுபட்டுள்ளவருடன் தொடர்புகளை பேணியமைக்காக அமெரிக்கா இலங்கை வர்த்தகருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. அஹமட் லுக்மான் தலிப் என்பவருடன் நிசார் தொடர்பிலிருந்தார் என அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்துக்க…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
நாடு வங்குரோத்தடைந்துள்ளமைக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு - பிரசன்ன ரணதுங்க By DIGITAL DESK 5 09 NOV, 2022 | 10:02 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.தற்போதைய பொருளாதார பாதிப்பை ஒரு அரசாங்கத்தின் மீது மாத்திரம் பொறுப்பாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் தரப்பின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, முறைமை மாற்றத்திற்காக பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை துரிதப்பட…
-
- 1 reply
- 205 views
- 1 follower
-
-
மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம் எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் நலிவடைந்த பிரிவினர் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கூட்டாக கொண்டு வந்த கவன ஈர்ப்பு பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இந்நாட்டில் நாம் 1…
-
- 5 replies
- 327 views
-
-
இறுதிப்போரில் புலிகள் சரணடையவில்லை என்கிறது இலங்கை இராணுவம்! இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பா.நிரோஸ் தகவலரியும் ஆணைக் குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு நேற்று (வியாழக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டும் “எங்களிடம் புலிகள் சரணடையவில்லை” என ஊடகவியலாளரின் தகவலறியும் விண்ணப்பத்தை இராணுவம் மறுத்திருந்ததது. இது தொடர்பான மேன்முறையீடு மூன்று வருடங்களுக்குப் பின்னர்…
-
- 5 replies
- 852 views
- 1 follower
-
-
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பிச்சென்ற 50 கைதிகளில் 35 பேர் சரண்! கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்ற 50 கைதிகளில் 35 பேர் சரணடைந்துள்ளனர். இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்தனர். இந்தநிலையில், அவர்களில் 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், தப்பிச்சென்றுள்ள ஏனையவர்களை க…
-
- 3 replies
- 312 views
- 1 follower
-
-
நீர் குழிக்குள் விழுந்து குழந்தை உயிரிழப்பு By T. SARANYA 09 NOV, 2022 | 04:52 PM (எம்.வை.எம்.சியாம்) அம்பாறை, உஹன பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலிருந்த நீர் நிரம்பியிருந்த குழி ஒன்றில் விழுந்து ஒரு வயதான குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. உஹன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மககண்டிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலிருந்த நீர் நிரம்பியிருந்த குழியொன்றுக்குள் வீழ்ந்து குழந்தையொன்று இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு வயதும் 2 மாதங்களுமான ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழியில் வீழ்ந்த குழந்தை …
-
- 0 replies
- 458 views
- 1 follower
-
-
ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி திட்டம்? முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட தற்போதைய ஆளுநர்களுக்குப் பதிலாக ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் அனுபவமுள்ளவர்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆளுநர்களாக நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் என்பது மாகாண சபை…
-
- 1 reply
- 187 views
-
-
அரசியல் தீர்வை வழங்காமல் புதிதாக வருகின்ற முதலீடுகளால் பயனில்லை - கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எடுத்துரைப்பு By T. Saranya 09 Nov, 2022 | 09:49 AM (நா.தனுஜா) நாட்டில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வின்றி புதிதாக வருகின்ற முதலீடுகளால் எவ்வித நன்மையும் கிட்டாது என்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ள கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்குப் பதிலளித்த…
-
- 10 replies
- 345 views
-
-
ரணில் எப்படி ஜனாதிபதியானார்? ராஜபக்சவின் ராஜயோகம் முடிந்ததா? ஜனவரிக்கு பிறகு நாட்டுக்கு என்ன நடக்கும்? அடுத்த ஜனாதிபதி யார் ? அலசுகிறார் மஹிந்தவின் முன்னாள் சோதிடர் ரணில் எப்படி ஜனாதிபதியானார்? ராஜபக்சவின் ராஜயோகம் முடிந்ததா? ஜனவரிக்கு பிறகு நாட்டுக்கு என்ன நடக்கும்? அடுத்த ஜனாதிபதி யார் ? சஜித்தா? அனுரவா ? நாமலா? ரணிலுக்கு மிக சக்திவாய்ந்த ஜாதகம் உள்ளதா? நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த அரச ஜோதிடர் வெளியே வந்து பலமான கணிப்புகளைச் சொல்கிறார்… ஜோதிடம் என்பது காலங்காலமாக நம் நாட்டு மக்களால் மதிக்கப்படும் ஒரு விடயம். எந்த ஒரு சுப காரியத்தையும் தொடங்கும் முன் நமது முன்னோர்கள் ஜோதிடத்தை பார்க்க மறக்கவில்லை. இன்றும் நம் நாட்டில் உண்ம…
-
- 0 replies
- 203 views
-
-
இந்நாட்டில் யாரும் காணாமல் போகவில்லையா? கடந்த அரசாங்கத்தின் இறுதி காலத்தில் நான்தான் இந்த விடயம் தொடர்பான அமைச்சர். ஆகவே எனக்கு, இந்த காணாமல் போனோர் காரியாலயம் பற்றி நன்கு தெரியும். இங்கே இதுபற்றி எம்பி சுமந்திரன் கூறியதை நான் ஏற்கிறேன். காணாமல் போனோர் தொடர்பான அலுவலக தவிசாளருக்கு பைத்தியமோ தெரியவில்லை. இந்நாட்டில் யாரும் காணாமல் போகவில்லை என்று கூறுகிறார். அப்படி பேச வேண்டாம் என்று அவருக்கு கூறுங்கள். முதலில் அவரை அந்த தவிசாளர் பதவியில் இருந்து விலக்குங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று இவ்விடயம் தொடர்பில் வாதப்பிரதிவாதம் நடைபெற்ற போது இதுபற்றி குறுக்கிட்டு பேசிய மனோ எம்பி மேலும் கூ…
-
- 0 replies
- 201 views
-
-
நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் அத்தியாயம் மீண்டும் ஆரம்பம் நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் அத்தியாயமொன்று இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாகவும், நாளுக்கு நாள் கூடி, விவாதங்களை நடத்தி, நாட்டை அலைக்கழித்து, கலைந்து செல்வதை தவிர நாட்டைக் கட்டியெழுப்பும் எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் யாது என வெளியிட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாடு வீழ்ந்துள்ள வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கும் எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் தெரிவித்தார். போசாக்கின்மையால், பட்டினியால் சிறுவர்கள் வாடி…
-
- 0 replies
- 155 views
-
-
பொலிஸார் மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவம் ; சித்திரவதைகளை எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்த தயாராக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது - அம்பிகா சற்குணநாதன் By Rajeeban 09 Nov, 2022 | 11:44 AM பொலிஸார் எங்களை தாக்கினார்கள். அவர்கள் எங்களை முழங்காலில் இருக்கவைத்தனர். அட்டைகளை எங்கள் மீது விட்டனர் மின்சார சித்திரவதை செய்தனர் .எங்கள் கைகளில் விலங்கிட்டு ஜீப்பிற்கு கொண்டு சென்ற அவர்கள் எங்களை ஜீப்பில் முழங்காலிடச்செய்து மின்சார சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள் மாணவர் ஒருவரின் தோல் உரிந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. ஆசிரியர்கள் மாணவர்களிற்கு உடல்ரீதியான தண்டனையை வழங்கிய பொலிஸார் மாணவர்களை தண்டி…
-
- 1 reply
- 227 views
-
-
குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் குறித்த முழுமையான விபரங்கள் எதிர்வரும் நாட்களில் By RAJEEBAN 04 NOV, 2022 | 10:44 AM குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் குறித்த முழுமையான விபரங்களை அடுத்த சில நாட்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன வெளியிடுவார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள அவர் நோயாளி குறித்த முழுமையான விபரங்கள் அடுத்த சில நாட்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்,குறிப்பிட்ட பகுதியில் சோதனையை மேற்கொண்…
-
- 1 reply
- 264 views
- 1 follower
-
-
வடக்கு மீனவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது – ஆரிய குளம் நாகவிகாரையின் விகாராதிபதி அறிவுரை வடக்கு மீனவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது அவ்வாறு ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் ஆரிய குளம் நாகவிகாரையின் விகாராதிபதி வடக்கு மீனவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஆரிய குளம் நாகவிகாரை விகாராதிபதியை வடக்கு மீனவர்கள் கடலட்டை விவகாரம் தொடர்பில் சந்தித்து கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். வடபகுதியில் போதை பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது ஆனால் அந்த போதை பொருள் இந்தியாவில் இருந்து இங்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது…
-
- 1 reply
- 240 views
-
-
சம்பந்தன் எம்.பிக்கு 3 மாதம் விடுமுறை 2022-11-09 10:36:32 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி.க்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதித்தது. பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி.க்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் அவரது கோரிக்கைக்கு அரசு தரப்பினரும் இணங்கிய நிலையில் இரா. சம்பந்தன் எம்.பி.க்கு 3 மாதங்கள் விடுமுறை வ…
-
- 2 replies
- 426 views
-
-
7 மில்லியன் இலங்கையர்களுக்கு உதவி தேவை: ஐநா அறிக்கை! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சுமார் 7 மில்லியன் பேருக்கு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. உணவுப் பாதுகாப்பின்மை, அச்சுறுத்தப்பட்ட வாழ்வாதாரங்கள், முக்கிய மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் பாதுகாப்புக் கவலைகள் ஆகியவற்றால் இணைந்த பல பரிமாண நெருக்கடியை இலங்கை தொடர்ந்து எதிர்கொள்கிறது என அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 199 views
-
-
கோட்டாவை போன்றே காணாமல்போனோர் அலுவலக தவிசாளரின் கருத்தும் உள்ளது – சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர், கோட்டாபய ராஜபக்ஷவை போன்று கருத்து வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல்போனமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும், காணாமல் போனோரில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் குறித்த அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த வெளியிட்ட இந்த கருத்து தொடர்பாக தாம் கரிசனையடைவதாகவும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. போரின்போது படையினரிடம் கையளித்த தமது உ…
-
- 1 reply
- 767 views
- 1 follower
-
-
காணாமல் போனவர்கள் யாரும் இல்லை என்றால் ஓ.எம்.பி. அலுவலகம் எதற்கு – மனோ கேள்வி காணாமல் போனவர்கள் யாரும் இல்லை என்றால் அது தொடர்பாக முறையிடுவதற்கு காரியாலயம் எதற்கு என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். ஆகவே காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராயும் காரியாலயத்தின் தலைவரை பதவிநீக்கம் செய்து, செயற்திறன் கொண்ட ஒருரை நியமிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு அன்று எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதை போல தாம் செயற்பட மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் 88, 89 காலப்பகுதியிலும் காணாமல் போனவர்களும் 2000ஆம் ஆண்டிற்கு பின்னர் காணாமல் போனவர்களும்…
-
- 0 replies
- 421 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த பிரசாரத்தை தவிர்க்குமாறு மாவீரர்தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு அறிவிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது அதன் உறுப்பினர்கள் மீதான எந்தவொரு பிரசாரத்தையும் தவிர்க்குமாறு பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் வடக்கில் மாவீரர்தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை மீறும் எந்தவொரு நபரையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். வடக்கில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26ஆம் திகதி மாவீரர் தினம் நினைவுகூரப்படுகிறது. வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற…
-
- 2 replies
- 420 views
-