ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க வேண்டும் - வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 03:12 PM பட்டதாரி நியமனத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் சிவசுப்பிரமணியம் லோகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (நவ.07) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், 35 வயதிற்கு மேற்பட்ட 8000 பட்டதாரிகள் பாடசாலை ஆசிரியர் பயிற்சிக்காக காத்திருக்கிறார்கள். அரசாங்க சேவையில் 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளை நிய…
-
- 0 replies
- 510 views
- 1 follower
-
-
சட்ட ரீதியாக திருமணம் செய்யாத மனைவிக்கு கடும் சித்திவதைகளை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அரச நிறுவனம் ஒன்றில் உதவிப்பணிப்பாளராக தொழில் புரியும் நபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் வசந்தா குணசேகர இன்று உத்தரவிட்டுள்ளார். சமிந்த குருப்பு நாணயக்கார என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்ப்டுள்ளார். சட்ட ரீதியாக திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர் அல்ல கம்பஹா பிரதேசத்தில் வீடொன்றில் மேல் மாடியில் இருந்து குதித்த நிலையில் காயமடைந்த 40 வயதான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண் கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றில் உயர் பதவியை வகித்து வருவதாக நீதிமன்றத்…
-
- 0 replies
- 774 views
- 1 follower
-
-
யாழின் முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் பொதுவெளியில் அதிகளவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி விடயம் தொடர்பில் அண்மையில் விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தி…
-
- 6 replies
- 638 views
- 1 follower
-
-
துப்பாக்கியை எடுத்துச்சென்ற சட்டத்தரணி கைது 07 NOV, 2022 | 10:04 PM அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி ஒன்றை வேனில் எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் புத்தளம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய சட்டத்தரணி தனது வேனில் சாலியவெவ கலவெவ பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோதே துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/139387
-
- 0 replies
- 512 views
- 1 follower
-
-
விலை சூத்திரத்திற்கமைவான எரிபொருள் விலை திருத்த முறைமையில் மாற்றம் இல்லை - வலு சக்தி அமைச்சு By VISHNU 07 NOV, 2022 | 08:07 PM (எம்.மனோசித்ரா) விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை திருத்தங்களை மேற்கொள்வதில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது என்று வலு சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. உலக சந்தையில் காணப்படும் விலைக்கு ஏற்பவே உள்நாட்டிலும் எரிபொருள் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மாதாந்தம் முதலாம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். எனினும் இது நியாயமான விடயமல்ல என்று எரிபொருள் நிரப்பு நிலைய உர…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு..! 317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும் 317 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது. குறித்த கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 317 பேர் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கப்பல் தொடர்ந்து பயணிக்க முடியாதா நிலையில் பழுதடைந்ததால் கப்பலை செலுத்திய கப்பல் ஓட்டி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் படையினருக்கு தகவல் இதேவேளை கப்பலை மீட்கும் பணியில் புலம் பெயர் சமூகத்தில் உள்ள சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற…
-
- 36 replies
- 2.5k views
- 1 follower
-
-
போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை புனரமைக்கப்பட்டது தங்காலையில் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. டி.ஏ.ராஜபக்ஷவின் 55வது நினைவு தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தங்காலையில் இடம்பெற்றது. இதன்போதே D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை புனரமைக்கப்பட்டு மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டடுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிலையின் மறுசீரமைப்பை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த D.A.ராஜபக்ஷவின் சிலை போராட்டக்காரர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டது. அரசாங்கத்…
-
- 0 replies
- 214 views
-
-
தமிழ் பிரதேசங்களை பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்க திட்டம் – செல்வம் எம்.பி. எல்லை நிர்ணயம் மூலம் தமிழ் பிரதேசங்களை பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்கும் செயற்பாடு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எல்லை நிர்ணயம் தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியாவில் பல கிராமங்களை அனுராதப…
-
- 0 replies
- 372 views
-
-
அரசியல் கற்கை நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஒப் பொலிடிக்ஸ் நிறுவனம் வருடாந்தம் நடத்தும் விருது வழங்கும் நிகழ்வில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய துறைகள் சம்பந்தமாக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசியல்வாதிகள் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். இதனடிப்படையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வில் அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கையில் ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும் ஜனநாயகத்திற்கான தங்க விருது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது. வருடத்தின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி பிரேம்நாத் சீ தொ…
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
இளவாலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது! By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 02:06 PM யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸாரினால் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு, சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனங்களை வழிமறித்து சோதனையிட்டனர். அதன் போது அப்பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த கோண்டாவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவரை சோதனையிட்ட போது அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டனர். அதேவேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞனை சோதனையிட்ட போதும் அ…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
மாவீரர் துயிலுமில்லங்களில் அத்துமீறிய அரசியல் கட்சி - ஏற்பாட்டுக்குழுவினர் கண்டனம் By VISHNU 07 NOV, 2022 | 02:05 PM யுத்த காலத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்மாதம் 25-27வரை அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் திட்டமிட்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமது கட்சி அரசியலை வலிந்து துயிலுமில்லங்களுக்குள் புகுத்தும் அநாகரீகமான செயற்பாட்டை மேற்கொள்வதாக ஆலங்குள துயிலும் இல்லத்துக்கான மாவீரர் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.பண்பராசா குற்றம் சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து செயற்பாட்டை மாவீரர்களின் பெற்றோர்களும், முன்னாள் போராளிகளும், விரும்பவில்ல…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
காங்கேசன்துறை - கொழும்பு ரயிலில் மதுபோதையில் இருந்த ரயில்வே ஊழியர் கைது By NANTHINI 07 NOV, 2022 | 01:41 PM காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவ 6) இரவு பயணித்த இரவு தபால் ரயிலின் உறங்கும் பெட்டிகளுக்கு பொறுப்பாகவிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் மதுபோதையில் காணப்பட்ட நிலையில் அநுராதபுரம் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த ரயில்வே ஊழியர் மது அருந்தியிருந்தமை தொடர்பில் ரயிலின் பிரதான கட்டுப்பாட்டாளரினால் அநுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தே அநுராதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த …
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
அரசதுறை அதிகாரிகளின் இலஞ்சம், ஊழல் தொடர்பில் தெரிவிக்க தொலைபேசி எண்! 07 NOV, 2022 | 01:40 PM அரசதுறை அதிகாரிகன் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் இலஞ்சம் அல்லது ஏனைய முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்படி தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139351
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை ஏ.எச்.ஏ. ஹுஸைன் இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர். இந்த விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் உள்ளதாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண்கள் அங்கிருந்து தகவல்களை அனுப்பி வைத்துள்ளதுடன், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களால் வெளியிடப்பட்ட தகவல்களில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் ஜனாதிபதியிடம் உருக்கமாக இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். அதில் அவர்கள் தெரிவி…
-
- 11 replies
- 993 views
- 2 followers
-
-
பேருந்துகள் ஒவ்வொருநாளும் சோதனைக்கு உட்படுத்தப்படும் – வடக்கு ஆளுநர் நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரத்தை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். பேருந்து விபத்து தொடர்பாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்து வினவிய போதே ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் யாழ்ப்பாணம் – கொழும்பு மற்றும் ஏனைய நெடுந்தூரங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் பரிசோதிக்கவுள்ளதாக கூறினார். A-9 பாதையில்பயணம் செய்யும் பேருந்துகளை 10 நிமிடங்கள் நிறுத்தி சாரதிகளை சோர்வு தன்மையில் இருந்து நீக்குவதற்கு முயற்சி எடுத்துள்ளதாக தெரிவித்…
-
- 1 reply
- 206 views
-
-
வடமாகாணக் கல்வித்துறை மோசடிகள் தொடர்பில் ஜோசப் ஸ்ராலின் எச்சரிக்கை! By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 09:54 AM வடமாகாணத்தின் நான்கு பெரிய பாடசாலைகள் உட்பட 11 பாடசாலைகள் சம்பந்தமாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை நாங்கள் முன்வைத்திருந்தோம். எனினும், இதுசம்பந்தமாக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். நேற்று (06) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திலும், வடமாகாணத்திலும் கல்வி சம்பந்தமாக இடம்பெறும் பல்வேறு ஊழல் மோசடிகள் சம்பந்தமாக இலங்கை ஆசிரியர் சங்கம் செய்த முற…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மூடி மறைப்பது கவலையளிகின்றது. – கப்ரால் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மூடி மறைப்பது கவலையளிப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தினால் நடுத்தர மக்கள் மிக மோசமான பாதிப்பை எதிர்க்கொள்வார்கள் என்றும் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். அவர்களின் கடுமையான நிபந்தனைகளுக்கு அமைய தற்போது வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தி…
-
- 0 replies
- 125 views
-
-
இலங்கையில் மீண்டும் பிரதமராக முயற்சிக்கும் மஹிந்த ராஜபக்ஷ - சாத்தியமா? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA'S MEDIA படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஸ இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. பல அரசியல்வாதிகள் வீடுகள் தீக்கிரையாயின. முதலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். அவர் எங்கே இருக்கிறார் என்பதும் மர்மமாக நீடித்தது. அதன் பிறகு நீடித்த போராட்டத்தில் ஒரு கட்டத…
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
நாடாளுமன்றத்தில் தற்போது சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளனர். அவர்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல- சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தற்போது சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளனர் என்றும் அவர்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். மேலும் குடிவரவுத் திணைக்களத்தில் இரட்டைக் குடியுரிமைக்காக ஜனாதிபதியும் கையொப்பமிடுவதால், அரச தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி அலுவலகமும் தேவையான ஆவணங்களைக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இரட்டைக்…
-
- 0 replies
- 159 views
-
-
300 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் அம்பாந்தோட்டை கடலில் மீட்பு By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 09:55 AM அம்பாந்தோட்டை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சோதனை நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (நவ.06) அதிகாலை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு, கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு மீன்பிடி படகுகளும் சிறிய ரக படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, போதைப்பொருள் …
-
- 1 reply
- 213 views
- 1 follower
-
-
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பிச்சென்ற 50 கைதிகளில் 35 பேர் சரண்! கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்ற 50 கைதிகளில் 35 பேர் சரணடைந்துள்ளனர். இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்தனர். இந்தநிலையில், அவர்களில் 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், தப்பிச்சென்றுள்ள ஏனையவர்களை க…
-
- 3 replies
- 313 views
- 1 follower
-
-
உண்மையான அரசியல் மாற்றம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை – அனுர அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்திருந்தாலும், உண்மையான அரசியல் மாற்றம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தவறான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை முழு நாட்டுக்கும் எதிர்வினையாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாங்கள் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். மேலும் நீண்டகாலமாக கடைப்பிடிக்கும் தவறான பொருளாதார கொள்கை மற்றும் அரசியல் கலாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மிக மோசமான பொருளாதார ந…
-
- 0 replies
- 412 views
-
-
இலங்கையின் பொருளாதார நெருக்கடி பலரும் வாதிடுவதைப் போன்று சிம்பாப்வேயைப் போல இருக்காது. ஆனால் நிலைமை பலமுறை திவாலாகிவிட்டதாக அறிவித்த ஆர்ஜென்டினாவைப் போல் இருக்கும் என்று சிங்கள கல்வியியலாளரான கலாநிதி ரொஹான் பெத்தியகொட தெரிவித்துள்ளார். ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 48வது பட்டமளிப்பு நிகழ்வின்போது அவர் இதனை குறிப்பிட்டார். 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ஜென்டினா உலகின் 15வது பணக்கார நாடாக இருந்தது. . பணக்கார நாடுகள் சராசரியாக, ஆர்ஜென்டினியர்கள் இத்தாலியர்கள், பிரான்ஸ் மற்றும் ஐரிஷ் மக்களை விட பணக்காரர்களாக இருந்தனர். இன்று அது உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். எல்லாவற்றுக்கும் காரணம் அரசியல் சித்தாந்தத்தில் பொது அறிவு இல்லாமையே என்று ரொஹான் பெத்தியகொ…
-
- 0 replies
- 271 views
-
-
தமிழ், முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் பறி போகின்றன : சிறுபான்மை தலைமைகள் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் - கவிஞர் கால்தீன் By VISHNU 06 NOV, 2022 | 04:50 PM கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்களை அரசாங்கம் அபகரித்து, அம்மக்களை விவசாயம் செய்யாமல் தடை செய்து, இனவாத அதிகாரிகளால் விரட்டியடிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வந்தும் எந்தத் தீர்வும் கிடைக்க வில்லை என எழுத்தாளரும், பன்நூல் ஆசிரியருமான கவிஞர் கால்தீன் குற்றம் சாட்டுகின்றார். அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர். அ…
-
- 7 replies
- 352 views
- 1 follower
-
-
ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கிம்புலஎல குணாவின் சகா கைது By NANTHINI 06 NOV, 2022 | 04:43 PM ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் உதவியாளரும், அவருடன் தொடர்புடைய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. வத்தளை, ஹுணுப்பிட்டிய வெவெல்துவ வீதி பகுதியில் மேற்கொண்ட இந்த கைது நடவடிக்கையின்போது சந்தேக நபர்களிடமிருந்து 16 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், முதலாவது சந்தேக நபர், இந்தியாவில் தலைமறைவாகியுள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலஅல குணாவின் நெருங்கிய சகா என…
-
- 1 reply
- 209 views
- 1 follower
-