ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க வேண்டும் - வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 03:12 PM பட்டதாரி நியமனத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் சிவசுப்பிரமணியம் லோகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (நவ.07) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், 35 வயதிற்கு மேற்பட்ட 8000 பட்டதாரிகள் பாடசாலை ஆசிரியர் பயிற்சிக்காக காத்திருக்கிறார்கள். அரசாங்க சேவையில் 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளை நிய…
-
- 0 replies
- 510 views
- 1 follower
-
-
சட்ட ரீதியாக திருமணம் செய்யாத மனைவிக்கு கடும் சித்திவதைகளை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அரச நிறுவனம் ஒன்றில் உதவிப்பணிப்பாளராக தொழில் புரியும் நபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் வசந்தா குணசேகர இன்று உத்தரவிட்டுள்ளார். சமிந்த குருப்பு நாணயக்கார என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்ப்டுள்ளார். சட்ட ரீதியாக திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர் அல்ல கம்பஹா பிரதேசத்தில் வீடொன்றில் மேல் மாடியில் இருந்து குதித்த நிலையில் காயமடைந்த 40 வயதான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண் கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றில் உயர் பதவியை வகித்து வருவதாக நீதிமன்றத்…
-
- 0 replies
- 774 views
- 1 follower
-
-
துப்பாக்கியை எடுத்துச்சென்ற சட்டத்தரணி கைது 07 NOV, 2022 | 10:04 PM அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி ஒன்றை வேனில் எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் புத்தளம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய சட்டத்தரணி தனது வேனில் சாலியவெவ கலவெவ பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோதே துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/139387
-
- 0 replies
- 512 views
- 1 follower
-
-
விலை சூத்திரத்திற்கமைவான எரிபொருள் விலை திருத்த முறைமையில் மாற்றம் இல்லை - வலு சக்தி அமைச்சு By VISHNU 07 NOV, 2022 | 08:07 PM (எம்.மனோசித்ரா) விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை திருத்தங்களை மேற்கொள்வதில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது என்று வலு சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. உலக சந்தையில் காணப்படும் விலைக்கு ஏற்பவே உள்நாட்டிலும் எரிபொருள் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மாதாந்தம் முதலாம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். எனினும் இது நியாயமான விடயமல்ல என்று எரிபொருள் நிரப்பு நிலைய உர…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
300 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் அம்பாந்தோட்டை கடலில் மீட்பு By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 09:55 AM அம்பாந்தோட்டை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சோதனை நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (நவ.06) அதிகாலை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு, கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு மீன்பிடி படகுகளும் சிறிய ரக படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, போதைப்பொருள் …
-
- 1 reply
- 213 views
- 1 follower
-
-
தமிழ், முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் பறி போகின்றன : சிறுபான்மை தலைமைகள் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் - கவிஞர் கால்தீன் By VISHNU 06 NOV, 2022 | 04:50 PM கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்களை அரசாங்கம் அபகரித்து, அம்மக்களை விவசாயம் செய்யாமல் தடை செய்து, இனவாத அதிகாரிகளால் விரட்டியடிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வந்தும் எந்தத் தீர்வும் கிடைக்க வில்லை என எழுத்தாளரும், பன்நூல் ஆசிரியருமான கவிஞர் கால்தீன் குற்றம் சாட்டுகின்றார். அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர். அ…
-
- 7 replies
- 352 views
- 1 follower
-
-
பேருந்துகள் ஒவ்வொருநாளும் சோதனைக்கு உட்படுத்தப்படும் – வடக்கு ஆளுநர் நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரத்தை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். பேருந்து விபத்து தொடர்பாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்து வினவிய போதே ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் யாழ்ப்பாணம் – கொழும்பு மற்றும் ஏனைய நெடுந்தூரங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் பரிசோதிக்கவுள்ளதாக கூறினார். A-9 பாதையில்பயணம் செய்யும் பேருந்துகளை 10 நிமிடங்கள் நிறுத்தி சாரதிகளை சோர்வு தன்மையில் இருந்து நீக்குவதற்கு முயற்சி எடுத்துள்ளதாக தெரிவித்…
-
- 1 reply
- 206 views
-
-
போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை புனரமைக்கப்பட்டது தங்காலையில் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. டி.ஏ.ராஜபக்ஷவின் 55வது நினைவு தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தங்காலையில் இடம்பெற்றது. இதன்போதே D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை புனரமைக்கப்பட்டு மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டடுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிலையின் மறுசீரமைப்பை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த D.A.ராஜபக்ஷவின் சிலை போராட்டக்காரர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டது. அரசாங்கத்…
-
- 0 replies
- 214 views
-
-
தமிழ் பிரதேசங்களை பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்க திட்டம் – செல்வம் எம்.பி. எல்லை நிர்ணயம் மூலம் தமிழ் பிரதேசங்களை பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்கும் செயற்பாடு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எல்லை நிர்ணயம் தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியாவில் பல கிராமங்களை அனுராதப…
-
- 0 replies
- 372 views
-
-
யாழ்.தேவி தடம்புரண்டது காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ்தேவி விரைவு ரயில் இன்று பிற்பகல் வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையில் 13.30 மணியளவில் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரயிலின் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக வடக்கு பாதையில் இன்று மாலை ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த தடம் புரள்வு காரணமாக அதிகளவான உறங்கலிருக்கை பெட்டிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/219918
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
இளவாலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது! By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 02:06 PM யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸாரினால் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு, சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனங்களை வழிமறித்து சோதனையிட்டனர். அதன் போது அப்பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த கோண்டாவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவரை சோதனையிட்ட போது அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டனர். அதேவேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞனை சோதனையிட்ட போதும் அ…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
மேலும் 4 அமைச்சுக்களை பொறுப்பேற்க ஜனாதிபதி தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 04 அமைச்சுப் பதவிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 44/3 பிரிவின்படி, பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியன ஜனாதிபதியின் பொறுப்பில் வைக்கப்பட உள்ளன. இந்த 04 அமைச்சுகளுக்கு மேலதிகமாக பாதுகாப்பு அமைச்…
-
- 3 replies
- 285 views
-
-
மாவீரர் துயிலுமில்லங்களில் அத்துமீறிய அரசியல் கட்சி - ஏற்பாட்டுக்குழுவினர் கண்டனம் By VISHNU 07 NOV, 2022 | 02:05 PM யுத்த காலத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்மாதம் 25-27வரை அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் திட்டமிட்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமது கட்சி அரசியலை வலிந்து துயிலுமில்லங்களுக்குள் புகுத்தும் அநாகரீகமான செயற்பாட்டை மேற்கொள்வதாக ஆலங்குள துயிலும் இல்லத்துக்கான மாவீரர் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.பண்பராசா குற்றம் சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து செயற்பாட்டை மாவீரர்களின் பெற்றோர்களும், முன்னாள் போராளிகளும், விரும்பவில்ல…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
காங்கேசன்துறை - கொழும்பு ரயிலில் மதுபோதையில் இருந்த ரயில்வே ஊழியர் கைது By NANTHINI 07 NOV, 2022 | 01:41 PM காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவ 6) இரவு பயணித்த இரவு தபால் ரயிலின் உறங்கும் பெட்டிகளுக்கு பொறுப்பாகவிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் மதுபோதையில் காணப்பட்ட நிலையில் அநுராதபுரம் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த ரயில்வே ஊழியர் மது அருந்தியிருந்தமை தொடர்பில் ரயிலின் பிரதான கட்டுப்பாட்டாளரினால் அநுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தே அநுராதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த …
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
அரசதுறை அதிகாரிகளின் இலஞ்சம், ஊழல் தொடர்பில் தெரிவிக்க தொலைபேசி எண்! 07 NOV, 2022 | 01:40 PM அரசதுறை அதிகாரிகன் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் இலஞ்சம் அல்லது ஏனைய முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்படி தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139351
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை - டக்ளஸ் By Vishnu 06 Nov, 2022 | 01:02 PM பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 05 ஆம் திகதி சனிக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பலாலி விமான நிலையம் திறக்கப்பட்டு , மூன்று வருடங்கள் கடந்தும் அது இயங்கு நிலையில் இல்லாதமை குறித்து கேட்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பலாலி விமான நிலையம் இயங்குவதற்கு தயாரான நிலையிலையே உள்…
-
- 8 replies
- 609 views
-
-
வடமாகாணக் கல்வித்துறை மோசடிகள் தொடர்பில் ஜோசப் ஸ்ராலின் எச்சரிக்கை! By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 09:54 AM வடமாகாணத்தின் நான்கு பெரிய பாடசாலைகள் உட்பட 11 பாடசாலைகள் சம்பந்தமாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை நாங்கள் முன்வைத்திருந்தோம். எனினும், இதுசம்பந்தமாக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். நேற்று (06) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திலும், வடமாகாணத்திலும் கல்வி சம்பந்தமாக இடம்பெறும் பல்வேறு ஊழல் மோசடிகள் சம்பந்தமாக இலங்கை ஆசிரியர் சங்கம் செய்த முற…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மூடி மறைப்பது கவலையளிகின்றது. – கப்ரால் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மூடி மறைப்பது கவலையளிப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தினால் நடுத்தர மக்கள் மிக மோசமான பாதிப்பை எதிர்க்கொள்வார்கள் என்றும் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். அவர்களின் கடுமையான நிபந்தனைகளுக்கு அமைய தற்போது வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தி…
-
- 0 replies
- 125 views
-
-
இலங்கையில் மீண்டும் பிரதமராக முயற்சிக்கும் மஹிந்த ராஜபக்ஷ - சாத்தியமா? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA'S MEDIA படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஸ இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. பல அரசியல்வாதிகள் வீடுகள் தீக்கிரையாயின. முதலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். அவர் எங்கே இருக்கிறார் என்பதும் மர்மமாக நீடித்தது. அதன் பிறகு நீடித்த போராட்டத்தில் ஒரு கட்டத…
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
நாடாளுமன்றத்தில் தற்போது சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளனர். அவர்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல- சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தற்போது சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளனர் என்றும் அவர்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். மேலும் குடிவரவுத் திணைக்களத்தில் இரட்டைக் குடியுரிமைக்காக ஜனாதிபதியும் கையொப்பமிடுவதால், அரச தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி அலுவலகமும் தேவையான ஆவணங்களைக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இரட்டைக்…
-
- 0 replies
- 159 views
-
-
உண்மையான அரசியல் மாற்றம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை – அனுர அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்திருந்தாலும், உண்மையான அரசியல் மாற்றம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தவறான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை முழு நாட்டுக்கும் எதிர்வினையாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாங்கள் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். மேலும் நீண்டகாலமாக கடைப்பிடிக்கும் தவறான பொருளாதார கொள்கை மற்றும் அரசியல் கலாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மிக மோசமான பொருளாதார ந…
-
- 0 replies
- 412 views
-
-
ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கிம்புலஎல குணாவின் சகா கைது By NANTHINI 06 NOV, 2022 | 04:43 PM ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் உதவியாளரும், அவருடன் தொடர்புடைய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. வத்தளை, ஹுணுப்பிட்டிய வெவெல்துவ வீதி பகுதியில் மேற்கொண்ட இந்த கைது நடவடிக்கையின்போது சந்தேக நபர்களிடமிருந்து 16 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், முதலாவது சந்தேக நபர், இந்தியாவில் தலைமறைவாகியுள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலஅல குணாவின் நெருங்கிய சகா என…
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கிடையில் குரங்கம்மை நோய் அதிகமாக பரவும் அபாயம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கிடையில் குரங்கம்மை நோய் அதிகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான செயற்பாடுகளை தவிர்ப்பதன் ஊடாக குரங்கம்மை பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களில் 95 சதவீதமானோர்…
-
- 6 replies
- 593 views
-
-
பொலிஸாரிடம் சிக்கினர் சுள்ளான் திருட்டுக் கும்பல் தலைவர் உள்ளிட்ட 6 பேர் By DIGITAL DESK 2 06 NOV, 2022 | 02:22 PM மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் பல வீடுகளை உடைத்து நீண்ட கலமாக திருட்டில் ஈடுபட்டுவந்த சுள்ளான் தீருட்டுக்கும்பல் தலைவர் உட்பட 6 பேரை இன்று ஞாயிறுறுக்கிழமை (நவ, 06) கைது செய்ததுடன் திருடப்பட்ட ரிவி, தண்ணீர் மோட்டர் 8 , சைக்கிள் 2, தங்க ஆபரணங்கள் என்பற்றை மீட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசங்களில் உள்ள வீடுகளை உடைத்து அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் தங்க ஆபரணங்கள் திருட்டுப்போயுள்ள சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவந்த கல்குடா பொலி…
-
- 1 reply
- 241 views
- 1 follower
-
-
‘பால்’ மாற்றிய தாய் கைது ‘பால்’ மாற்றிய தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனதுக்குப் பிறந்த பெண் சிசுவுக்கு பதிலாக ஆண் சிசுவை மாற்றி எடுத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய, தாயொருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் போதனை வைத்தியசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்தத் தாய், பதவியவைச் சேர்ந்த 32 வயதானவர் ஆவார். கைது செய்யப்பட்ட தாயும், கலன் பிந்துனுவைச் சேர்ந்த 42 வயதான தாயும் ஒரேநாளில் சிசுக்களைப் பிரசவித்துள்ளனர். பிரசவத்துக்குப் பின்னர் இரண்டு சிசுகளும் சூடான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தனக்குப் ப…
-
- 5 replies
- 727 views
- 1 follower
-