ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142628 topics in this forum
-
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் தொடர்சியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள 07 ஏக்கர் காணி கடந்த 07ஆம் திகதி விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த காணி தற்காலிகமாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திடம் பொறுப்பில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், இதே போன்று நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முட்கொம்பன் பகுதியில் இர…
-
- 0 replies
- 165 views
-
-
16 Sep, 2025 | 11:43 AM அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் எனது வாழ் நாளில் அதிகளவான நேரத்தை மக்களுக்காக செலவிட்டேன். காலம் சென்றாலும் மக்கள் அன்பு குறையாது. அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். மக்களும் குழந்தைகளும் என்னை சூழ்ந்திருந்திருக்கிறார்கள். மக்களின் மனதில் நான் இடம் பிடித்திருக்கிறேன். மக்கள் மனதில் இடம் பிடிக்காத ஒருவர் தலைவன் ஆக முடியாது. நான் அரச வாசஸ்தலத்திலிருந்து வெளியேறி, அம்பாந்தோட்டையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு …
-
- 1 reply
- 211 views
- 2 followers
-
-
15 Sep, 2025 | 05:43 PM பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதென்று பருத்தித்துறை நகரசபையும், பருத்தித்துறை நகர வர்த்தகர்களும் இன்று திங்கட்கிழமை (15) தீர்மானித்துள்ளனர். பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நகரசபை தவிசாளர் வின்சன்டீபோல் டக்ளஸ் போல் தலைமையில் நகர வர்தகர்களுடன் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து உணவகங்களில் பொலித்தீன் பயன்படுத்துவதில்லையென்றும், அதற்கு பதிலாக வாழையிலையை பயன்படுத்துவதெனவும், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பொலித்தீன் பயன்பாட்டை முற்றுமுழுதாக நிறுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை உணவகங்களில் உணவுப்…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணி அடுத்தவாரம் ஆரம்பம் - 29 இலட்சம் ரூபா ஒதுக்கீடு Sunday, September 14, 2025 செய்திகள் மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 29 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி நீதவான் விடுத்த உத்தரவிற்கமைய குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான விசாரணை மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என காணாமல் போனோர் தொடர்ப…
-
- 0 replies
- 124 views
-
-
இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்ட தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழரசு கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (14) இடம்பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விளக்கம் கோரி எழுதிய கடிதங்கள் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக இதன்போது பேசப்பட்டது. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்கள் சம்மந்தமாக கட்சியின் உடைய தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக வி…
-
-
- 28 replies
- 1.6k views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 15 Sep, 2025 | 01:58 PM இலங்கையில் இணையவழி பாலியல் தொழில் வேகமாக அதிகரித்து வருவது குறித்து பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். சைபர் மோசடி, சுரண்டல்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் இதில் ஈடுபடுவது குறித்து கவலைகள் அதிகரித்துள்ளன. சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டுப் பெண்களும் இந்தச் செயல்களில் ஈடுபடுவது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான பாலியல் சேவைகளுக்கான விளம்பரங்கள் பகிரப்படுகின்றன. இதில் நேரடி வீடியோ சேவைகள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்தச் சேவைகளுக்கான கட்டணங்கள், சேவையின் வகையைப் பொறுத்து மாறுபடுகின்றன…
-
- 0 replies
- 180 views
-
-
15 Sep, 2025 | 03:38 PM மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 2 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (15) சித்தாண்டியில் பண்ணையாளர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது மேய்ச்சல் தரை காணியை வர்த்தமானிப்படுத்துமாறு கோரியும் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களை அகற்றுமாறு கோரியும் சித்தாண்டி முச்சந்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி, போராட்டம் நடக்கும் இடம் வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பண்ணையாளர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. மயிலத்தம…
-
- 0 replies
- 96 views
-
-
15 Sep, 2025 | 03:07 PM கடந்த 2008 முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக குறிப்பிடப்பட்ட சந்தேக நபர்களின் பெயர் பட்டியலில் இருந்து முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் பெயர் நீதிபதியால் நீக்கப்பட்டதை இரத்து செய்யுமாறு கோரி பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (15) அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மனு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்ந…
-
- 0 replies
- 131 views
-
-
15 Sep, 2025 | 03:48 PM அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது உணர்வு பூர்வமான சந்திப்பு ஒன்று அங்கே நடந்தது. அரசியல் கைதிகளை சந்தித்துவிட்டு கனத்த இதயத்துடனும் கண்களில் கண்ணீருடனும் அரசியல் கைதிகளின் உறவுகளும் நாங்களும் வெளியே வந்தோம் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளை போகம்பரை சிறையில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், குறுகிய நேரத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் மகளை தந்தையான ஆனந்தசுதாகரன் தொட்டு உணவூட்டிய அந்த நிகழ்ச்சி சம்பவம் மனதை ரணமாக…
-
- 2 replies
- 165 views
-
-
15 Sep, 2025 | 03:41 PM இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ தெரிவித்தார். பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 18 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவானத்தை பெறுவது என்ற அரசாங்கத்தின் இலக்கை கோடிட்டுக் காட்டியுள்ளார். முந்தைய பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல பிராந்தியங்களில் ஏற்றுமதித்துறை நிலையான வளர்ச்சியைக் காணும் நிலையில், நாடு இப்போது நிலையான மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என அதன்போது அவர் குறிப்பிட்டு…
-
- 0 replies
- 86 views
-
-
15 Sep, 2025 | 05:46 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் போது அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் ஒன்று திரண்டதை குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவிய போது நான் மக்களை அழைத்துவருவதில்லை என அவர் கூறினார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார். ஊடகவியலாளர் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செப்டெம்பர் 11 ஆம் திகதி கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் போது அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் ஒன்று திரண்டதை கண்டோம். உங்களைப் பார்க்க யாரும் வரவில்லையா? மைத்திரிபால சிறிசேன : இல்லை, இல்லை. நான் மக்களை அழ…
-
- 0 replies
- 75 views
-
-
மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையின் போது, ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 52 லிட்டர் இரசாயனங்கள் அடங்கிய 14 கேன்களையும், போதைப்பொருள் உற்பத்தி செயல்முறையின் ஒரு பகுதியாக நம்பப்படும் பல்வேறு உபகரணங்களையும் அதிகாரிகள் இதன்போது கண்டுபிடித்தனர். இ…
-
-
- 17 replies
- 911 views
- 2 followers
-
-
திலீபனின் 38வது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு 15 Sep, 2025 | 12:08 PM ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த “தியாக தீபம்” என அழைக்கப்படும் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில், அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாயின. இந்த நினைவேந்தலின்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. திலீபன் முன்வைத்த கோரிக்கைகளான 1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத் தீவின் வடக்கு, கிழ…
-
-
- 23 replies
- 1.6k views
- 3 followers
-
-
15 Sep, 2025 | 11:03 AM கடந்த ஆட்சியின்போது, அதிகாரத்திலிருந்த குழுக்களால் ஜனாதிபதி நிதியம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அதனை இந்த அரசாங்கத்தினால் சரியான திசைக்கு கொண்டுவர முடிந்தது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில், கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபாய…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கு புதைகுழிகளுக்கு நீதிகோரி கையெழுத்து போராட்டம்! செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (15) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள மனித புதை குழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்குமான சர்வதேச நீதிக்கோரிய கையெழுத்துப் போராட்டம் மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்த கையெழுத்து போராட்டத்தில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் யாழ் மருதனார்மடம் வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டன…
-
- 0 replies
- 124 views
-
-
இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த விஜித ஹேரத்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுதொடர்பாக இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது இதேவேளை உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கத்தை அடைவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் விஜிதஹேரத் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் கலந்துகொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஜெனீவா பயணம் நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சு அறிக்கையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளது அனைத்து இலங்கையர்களின் பொருளாதார, சமூக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உட்பட அனைத்து மனித …
-
- 0 replies
- 128 views
-
-
யானை தந்தங்களுடன் இராணுவ சிப்பாய் கைது! ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் மொரகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் ஹல்மில்லவெவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஆவார். மொரகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, மொரகொட ஹல்மில்லேவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த ஜோடி தந்தங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களுடன் சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1447160
-
- 0 replies
- 118 views
-
-
Published By: Digital Desk 3 14 Sep, 2025 | 05:11 PM மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார். மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை சம்பவ தினமான கடந்த 2019 செப்டம்பர் 4 நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட நிலையில், நிதி நிறுவனத்திற்கு சென்ற பெண்ணை குறித்த நிதி முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ப…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
Published By: Vishnu 14 Sep, 2025 | 07:12 PM இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் இன்று (14) இடம்பெற்ற கார் விபத்தில் காயமடைந்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர் மட்டக்களப்பிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், அவரது பயண வாகனம் களுவாஞ்சிகுடி பகுதியில் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி காவல்து…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
14 Sep, 2025 | 11:27 AM சீனோர் நிறுவனத்தினுடைய (Cey-Nor foundation Ltd) யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையினது தொழிற்பாடுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. பைபர் (Fiber) மூலப்பொருளைக் கொண்டு அனைத்து வகையான பொருட்களையும் உற்பத்தி மற்றும் பரும்படியாக்கம் செய்து சந்தைப்படுத்தும் செயன்முறையை மேற்கொள்ளும் முகமாக இத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகி முன்னோட்டமாக படகு, மீன் விற்கும் தாங்கி, மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டி என்பன உற்பத்தியாக்கப்பட்டுள்ளன. குறித்த நிறுவனம் கடல்தொழில் சார் பொருட்களை உற்பத்தி மற்றும் பரும்படியாக்கும் நோக்கத்துடனேயே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் தற்போ…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
14 Sep, 2025 | 05:03 PM மழைகாலத்தில் சீரான வெள்ளநீரோட்டத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகால்கால்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றது என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தவிசாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக் குட்பட்ட வடிகால்களினை தூர்வாருவதற்கு இடையூறாக வடிகால்களுக்குமேல் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களையும் வீதிகளில் போக்குவரத்து மற்றும் வெள்ள நீராட்டத்திற்கு இடையூறாக காணப்படுகின்ற நிலக்கற்கள், கட்டுமாணங்கள், பூச்செடிகள் என்பவற்றையும் நாளைய தினம் திங்கட்க…
-
-
- 6 replies
- 518 views
- 2 followers
-
-
14 Sep, 2025 | 12:24 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்களாக இலக்கம் 5 மற்றும் இலக்கம் 12 பிரிவுகளில் இயங்கி வந்த குழந்தை மருத்துவ விடுதி தற்போது இல.39 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் விடுதிகள் மற்றும் சில விசேட சிகிச்சை பிரிவுகளுக்கான இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது. மேலும் சில கட்டட தொகுதிகள் அமைக்கப்பட்டு விடுதிகள் திறக்கப்பட வேண்டும். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/225045
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி! மித்தேனியவில் உள்ள ஒரு நிலத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தனது அறிக்கையை பொலிஸாரிடம் சமர்ப்பித்த பின்னர் இது தெரியவந்தது. அதன்படி, மித்தேனியாவிலிருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக NDDCB இன் அறிக்கை வெளிப்படுத்தியது. செப்டம்பர் 5 ஆம் திகதி, மித்தேனியாவின் தலாவாவில் உ…
-
- 0 replies
- 165 views
-
-
210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு! கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (14) காலை 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபர், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சேவைகள் அமைப்பின் தலைவராகவும் உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் எடை 5.94 கிலோ கிராம் ஆகும். விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட நபர் இந்த தங்க பிஸ்கட் கையிருப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும், சந்தேக நபர் நீண்ட காலமாக இந்தக் கடத்தலை…
-
- 0 replies
- 123 views
-
-
மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தல் 14 September 2025 நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெஃப்ரல் அமைப்பு (PAFFREL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கு அனுப்பிய கடிதத்தில், பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி, மாகாணசபை அமைப்பு ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்பாக மீண்டும் நிறுவப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தற்போது அது அதிகாரிகள் கையில் மட்டுமே இருப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வாக்களிக்கும் உரிமை அரசியலமை…
-
- 0 replies
- 104 views
-