ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
மாத்தறை துப்பாக்கி பிரயோகம்: பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல் ! மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 15 வயது சிறுவன் மீதான துப்பாக்கி பிரயோகம் குறித்து மாத்தறை பிரதான நீதவான் முன்னிலையில் இன்று விசாரணை இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக அவர் மீதான குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஏற்றுக்கொண்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1307755
-
- 0 replies
- 363 views
-
-
ஜனாதிபதி பொதுஜன பெரமுன கட்சியின் அழுத்தங்களால் சரியாகச் பயணிக்க முடியாத நிலையில் உள்ளார்-மைத்ரிபால சிறிசேன எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை மகளிர் சங்கம் மற்றும் இலங்கை இளைஞர் சங்கம் ஆகியவற்றின் பொதுச் சபைக் கூட்டங்களின் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் பொதுஜன பெரமுன கட்சியின் அழுத்தங்களுக்கு ஜனாதிபதி உள்ளாகி சரியாகச் பயணிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1307769
-
- 0 replies
- 352 views
-
-
வடக்கு அபிவிருத்தி தொடர்பில் வடக்கு ஆளுநர் ஜப்பான் தூதரகம் இணைந்து கலந்துரையாடல் 29 Oct, 2022 | 09:31 AM வட மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாங்கெடுப்புகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடோக்கி மிசுகோஷி இணைந்து கொழும்பில் நேற்று (28) கலந்துரையாடலை ஏற்பாடு செய்தனர். குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி, மாற்றுக் கொள்கைக்கான மையம் (CPA ) - கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க இந்தியாவில் உள்ள இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட,வடக்கு ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் தன்யா ரத்னாவல், கொரிய தூதுவர் ச…
-
- 3 replies
- 773 views
- 1 follower
-
-
யாழில்.இயங்கும் வன்முறை கும்பலான ஆவா குழுவின் தலைவன் கைது! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா குழுவின் தலைவன் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வினோதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தவணை ஒன்றுக்காக சென்று திரும்பிய நிலையிலேயே விநோதன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் , கைது செய்யப்பட்ட வினோதனிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அவரிடமிருந்து வாள் ஒன்றினையும் மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராய் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மீது , தீபாவளி தினமான கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுத…
-
- 12 replies
- 1.1k views
-
-
அமெரிக்க துணைத் தூதர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக அமெரிக்க துணை தூதர் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண சபை அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தரப்புக்கள் தனியாகவும் அகில இலங்கை தமிழ் க…
-
- 23 replies
- 926 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதிக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு By T. SARANYA 29 OCT, 2022 | 03:35 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபா பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை இன்று சனிக்கிழமை வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபாவின் விண்ணப்ப…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
9 மாதங்களில் 1,400 வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவு By DIGITAL DESK 5 29 OCT, 2022 | 03:58 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாகன கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,406 வாகன கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இலங்கை முழுவதும் வாகன கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 2022 ஆ…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
பாடசாலைக்கு முன்பு கழிவுகளை வீசியவருக்கு எதிராக நடவடிக்கை By T. SARANYA 29 OCT, 2022 | 12:48 PM யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றிற்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் முறையிடப்பட்டுள்ளது. பாடசாலை முன்பாக இன்றைய தினம் பம்பஸ் உள்ளிட்ட கழிவுகள் வீசப்பட்டிருந்தன. அதனால் பாடசாலைக்கு அருகில் வசிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர். அது தொடர்பில் மாநகர சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் அவற்றை அகற்றும் போது, அதனுள் மோட்டார் சைக்கிள் காப்புறுதி அட்டை ஒன்று மீட்கப்பட்டது. அதன் அடிப்படையில் கழிவுகளை அவரே வீசி இருக்கலாம் என சந்தேகிப…
-
- 0 replies
- 585 views
- 1 follower
-
-
நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் துவிச்சக்கர வண்டியில் வேலைக்கு சமூகமளிக்கும் திட்டம் By T. SARANYA 29 OCT, 2022 | 12:10 PM நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சைக்கிளில் வேலைக்குச் சமூகமளிக்கும் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31 திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஒரு நாள் சைக்கிள் வேலை திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்பாடு செய்கிறது இதன்படி, , நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சைக்கிள்களைப் பயன்படுத்தி வேலைக்குச் சமூகமளிக்க வேண்டும். இந்நிலையில், சைக்கிள் வாங்குவதற்கான நிதி மற்றும்…
-
- 0 replies
- 450 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் இந்த ஆண்டுடன் விழித்துக் கொள்ளவில்லையென்றால் ,தமிழ்த் தேசியம் முழுமையாக பறிபோகும் என நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவது தொடர்பாகவும்,அதன் ஊடக இனப் பிரச்சினைக்கு தீர்வு தருவதாகவும்,அதற்கு ஒரு வருட காலம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.அந்த அறிவிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அன்று ரணில் பிரதமராக இருந்த காலத்தில்,அரசியல் அமைப்புச் சபை உருவாக்கப்பட்டு,திருத்தம் ஒன்று ம…
-
- 12 replies
- 1k views
- 1 follower
-
-
மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் தமிழ் தரப்பினருக்கு டக்ளஸ் விடுக்கும் அழைப்பு! மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த தமிழ் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில், தமிழ் தரப்புகள் ஒன்றிணைய வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைக்க மேற்கொண்டு வரும் அரசியல் சூழலை த…
-
- 4 replies
- 226 views
- 1 follower
-
-
முப்படையினருக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு By T. SARANYA 29 OCT, 2022 | 11:08 AM (எம்.மனோசித்ரா) சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய நவம்பர் 15 ஆம் திகதி முதல் , டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலத்தையே பொது மன்னிப்பு காலமாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை கடந்த 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சேவையிலிருந்து சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சேவையிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகிக் கொள்ள முடியும் என்றும் மேலும் ஏதேனும் செலுத்…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
பகிடிவதையால் மாணவன் உயிரிழப்பு : சக மாணவருக்கு மரணதண்டனை – நீதிமன்றம் உத்தரவு 1997 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவராக இருந்த செல்வநாயகம் வரபிரகாஷை கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எவ்வாறாயினும், பிரதான சந்தேகநபரான பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரனின் இருப்பிடம் தெரியாததால், அவரை கைது செய்ய பிடியாணை உத்தரவை பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட செல்வநாயகம் வரபிரகாஷ் அப்போது முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர், என்றும் அவர் மீது மனிதாபிமானமற்ற முறையில் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதால் அவர் மரணித்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை…
-
- 2 replies
- 304 views
- 1 follower
-
-
அச்சுவேலியில் சித்த விஷேட சிகிச்சை கட்டண பிரிவு- மருந்து விற்பனை நிலையம் திறந்து வைப்பு! அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சித்த வைத்திய சாலையில், சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலின் உருவாக்கப்பட்ட இவை, இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த சிகிச்சை நிலையத்தில் நோயாளர்கள் கட்டணம் செலுத்தி தங்களுடைய சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் ஆயுர்வேத மருந்துகளையும் வாங்கிச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ். எம். சமன் பந…
-
- 1 reply
- 400 views
- 1 follower
-
-
யாழ். மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல்- போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம்! பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது. நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதிகரித்து வரும் பாடசாலை மாணவர்களின் இடை விலகலை தவிர்ப்பதற்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வூட்டு முகமாக குறித்த செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த செயற்றிட்டமானது வடக்கு கிழக்கு மல…
-
- 0 replies
- 533 views
-
-
போதைப்பொருள் கடத்தல் : 12 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை! வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரொஷான் பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நெருக்கமாக செயற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது தெரிவித்தார். https://athavannews.com/2022/1307…
-
- 0 replies
- 155 views
-
-
இந்தியப் பெருங்கடல் உலக இராணுவ சக்திகளின் விளையாட்டு மைதானமாக இருக்கக்கூடாது – அரசாங்கம் இந்தியப் பெருங்கடல் உலக இராணுவ சக்திகளின் மோதலுக்குரிய பகுதியாகவோ அல்லது விளையாட்டு மைதானமாகவோ இருக்கக் கூடாது என இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் முழுவதும் உள்ள கடல்சார் இராஜதந்திரத்தை மற்ற பெருங்கடல்களுடன் இணைவதற்கு மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதேவேளை இலங்கை எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் பங்கேற்காது என்றும், பசுபிக் பிராந்தியத்தி…
-
- 0 replies
- 115 views
-
-
பொலிஸ் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் 15 சிறுவன் காயம் By RAJEEBAN 28 OCT, 2022 | 08:56 PM மாத்தறை, திஹகொட பகுதியில் நபர் ஒருவர் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி இயங்கியதில் அப்பகுதியில் நின்ற 15 வயதுடைய சிறுவன் மீது துப்பாக்கி சன்னம் பட்டு காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போது மூன்று பேர் தப்பியோடிய நிலையில் மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போதே நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிச…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
இலங்கை மனித உரிமைகள் ஆணையாளருடன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை By T. SARANYA 28 OCT, 2022 | 04:25 PM (நா.தனுஜா) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் ரோஹினி மாரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் குழு, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் குறித்தும் அது மனித உரிமை ஆணைக்குழுவின்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்தும் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் பயோலா பம்பலொனி உள்ளடங்கலாக இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் குழு நேற்று முன்தின…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவன்சா நோய் குறித்து எச்சரிக்கை ! By T. SARANYA 28 OCT, 2022 | 02:55 PM (எம்.ஆர்.எம்.வசீம்) சிறுவர்கள் மத்தியில் இன்புலுவன்சா நோய் அதிகளவில் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் நோய் அறிகுறி உள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். காய்ச்சல், இருமல், வாந்தி மற்றும் தடிமல் இன்புளுவன்சா நாேயின் பிரதான அறிகுறிகளாகும். மழையுடனான காலநிலை மற்றும் குளிர் காரணமாக இந்த நோய் பரவுவதற்கு பிரதான காரணமாகும். அதனால் இவ்வாறான நோய் அறிகுறிகள் உள்ள சிறுவர்களை பாடச…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
ஆசிய கிளியர் சங்கத்தின் ஊடாக இலங்கையுடன் வர்த்தகம் செய்வதை தவிர்க்குமாறு பங்களாதேஷ் வங்கி அறிவுறுத்து பங்களாதேஷின் மத்திய வங்கியான பங்களாதேஷ் வங்கி, ஆசிய கிளியர் சங்கத்தின் ஊடாக இலங்கையுடன் வர்த்தகம் செய்வதை தவிர்க்குமாறு அந்தநாட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2022 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் ஆசிய கிளியரிங் யூனியன் பொறிமுறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்தது. இதனையடுத்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரர்களும் வர்த்தகம் மற்றும் எந்தவொரு வியாபாரத்தையும் அந்த பொறிமுறையின் ஊடாக மேற்கொள்ள வேண்டாம் என்று பங்களாதேஷ் வங்கியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிய க…
-
- 0 replies
- 495 views
-
-
கோட்டாவுக்காக ஆஜராவதில்லை - உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார் சட்ட மா அதிபர் By T. SARANYA 28 OCT, 2022 | 10:15 AM (எம்.எப்.எம்.பஸீர்) காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை இழிவளவாக்கி கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காமை ஊடாக அரசு அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் இனிமேல் ஆஜராக போவதில்லை என சட்டமாதிபர் உயர் நீதிமன்றுக்கு நேற்று (27) அறிவித்தார். சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போது சட்டமாதிபர் சார்பில்…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
பாடசாலை மாணவர்கள் உட்பட 342 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் By NANTHINI 27 OCT, 2022 | 05:38 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் எச்.ஐ.வி. நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு முதலிரு காலாண்டுகளுக்குள் 148 எயிட்ஸ் நோயாளர்களே இனங்காணப்பட்ட நிலையில், இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 342 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வருடத்த…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
யாழ். செம்மணி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைக்க உதவி கோரல்! யாழ்ப்பாணம் செம்மணி மயானத்தில் மின்னுலை அமைக்க பொதுமக்களின் பங்களிப்பைக் கோர மயான பரிபாலனசபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக செம்மணி மயான பரிபாலனசபையின் தலைவர் லயன் சி. இலட்சுமிகாந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்திக் குறிப்பில், 2010ஆம் ஆண்டில் செம்மணி மயான பரிபாலனசபையின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு பொது மக்கள்,தொழில்முனைவோர்,மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் 60 இலட்சம் ரூபா செலவில் மயானம் புனரமைக்கப்பட்டது. இதுவரை விறகையே எரிபொருளாகக் கொண்டு இம்மயானம் இயங்கி வருகின்றது.தற்போது சூ…
-
- 0 replies
- 207 views
-
-
இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகளையும் அரச நியமனங்களில் உள்வாங்க தீர்மானம்! அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் பயின்ற பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது குறித்து இன்று (வியாழக்கிழமை) பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த காலப் பகுதியில், இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று பட்டதாரிகளானவர்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர். …
-
- 0 replies
- 210 views
-