Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் ராஜகன்ஸக்கள் போட்டியிடமாட்டார்கள்? October 25, 2022 இலங்கைில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஸக்கள் எவரும் போட்டியிட மாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட ராஜபக்ஸக்கள் துணிவார்களா எனக் கூற முடியாது. அந்தளவுக்கு ராஜபக்ஸவினர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் அந்த கட்சியின் நாடாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ…

  2. 2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் இன்று – இலங்கை மக்களுக்கு தென்படும் நேரம் குறித்த அறிவிப்பு 2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) காணமுடியுமென ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. இது இலங்கைக்கு பகுதி சூரிய கிரகணமாக தோன்றும் என அந்த மையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் முழுமையாகக் காணக்கூடிய இதனை 22 நிமிடங்களுக்குப் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பில் மாலை 5.43 மணி முதல் 5.52 மணி வரையான காலப்பகுதியில் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் எனவும் ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. சூரிய கிரகணத்தின் அதிகபட்ச கிரகணம் மாலை 5.49 மணிக்கு ஏற்பட்டு மாலை 6.20…

  3. முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் வரலாற்றில் மல்யுத்த தேசிய போட்டியில் பதக்கம் பெற்று சாதனை! பாடசாலை தேசிய மல்யுத்தப் போட்டியில் முல்/வித்தியானந்தா கல்லூரி ,முல்/கலைமகள் வித்தியாலயம் முறையே தங்கம் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் முதல் முதலாக வரலாற்றில் மல்யுத்த தேசிய போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 2022 கல்வியமைச்சின் பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடத்தப்படும் தேசிய மட்ட மல்யுத்தப் போட்டி 22,23,24 ஆகிய 3 நாட்கள் நேற்று மாலைவரை கம்பகாவில் நடைபெற்றது. இப் போட்டியில் வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் 12 பேர் பங்குகொண்டதுடன் 5 பேர் காலிறுதிவரை முன்னேறியதுடன் கலைமகள் வித்தியாலய 7 மாணவர்கள் பங்குகொண்டனர் ஒருவர் இறுதி…

  4. வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்தின் வாழ்க்கையை சிதைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் – சிறீதரன் வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங்களில் இனம், நிலம், சமூகம் பற்றிய சிந்தனைகளை இல்லாமல் செய்து அவர்களை வெறும் கோதுகளாக்குகின்ற செயலையே அரசாங்கம் திட்டமிட்டு செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டினார். அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், போதைவஸ்து தொடர்பாக பொலீஸ், இராணுவம்,கடற்படை ஆகிய மூன்று தரப்பிடமே நாணயக்கயிறு காணப்படுகிறது. போதை வஸ்தை கொண்டுவர அனுமதிப்பவர்களும் அதனை கொண்டு வருபவர்கள், விற்பவர்களை ஊக்குவிப்பவர்கள…

  5. காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைக்கவும் - கோப் குழு காணி பணிப்புரை By VISHNU 24 OCT, 2022 | 03:42 PM காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) காணி அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேராவிற்குப் பணிப்புரை விடுத்தது. இதற்கமைய ஆறு வாரங்களுக்குள் இது தொடர்பில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்து கோப் குழுவுக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டது. 2020ஆம் ஆண்டுக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு குறித்த கணக்காய்வாளர் நாய…

  6. போதைவஸ்து பாவனைக்கு எதிராக அனைவரும் பாடுபட வேண்டும் : யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் By VISHNU 24 OCT, 2022 | 03:15 PM ( எம்.நியூட்டன்) போதைவஸ்து பாவனையில் ஈடுபடுபவர்கள் போதைவஸ்தை கடத்தலில் ஈடுபடுபவர்கள் அனைவரும் அந்த தீய செயற்பாட்டில் இருந்து விலக வேண்டுமென யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போத அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எங்கள் சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கும் பெரும் தீமையாகிய போதைவஸ்து பாவனைக்கு எதிராக அனைவரும் பாடுபட வேண்டும். அதற்கு எதிராக பாடுபடுபவர்களுக்காக நா…

  7. 8 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு ! 24 OCT, 2022 | 05:23 PM அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 08 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் நடத்திய கலந்துரையாடல்களின் பலனாக இந்த கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு முன்னதாக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் பேரில் கைதிகள் தொடர்பான தகவல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. க…

  8. யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட 19 மாணவர்களுக்கு வகுப்புத்தடை By DIGITAL DESK 5 24 OCT, 2022 | 04:10 PM யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில், புதுமுக மாணவர்களைப் பகடி வதைக்குட்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளின் போது குற்றம் நிரூபிக்கப்பட்ட கலைப்பீடத்தைச் சேர்ந்த 14 பேருக்கு ஆறு மாத கால வகுப்புத் தடை…

  9. 53 கஞ்சா செடிகளை வீட்டு தோட்டத்தில் வளர்த்த நபர் கைது By DIGITAL DESK 5 24 OCT, 2022 | 04:17 PM வீடு ஒன்றின் தோட்டத்தில் 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்னமலை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக இரகசிய தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் திங்கட்கிழமை (24) தீபாவளி தினத்தன்று தேடுதல் மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்தனர். இவ்வாறு கைதானவர் அன்னமலை பகுதியை சேர்ந்த 58 வயதான சந்தேக நபர் என்பதுடன் வீட்டின் தோட்டத்தில் உள்ள பயிர்களுடன் இணைத்து குறித்த 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார் என பொலிஸா…

  10. இந்திய இராணுவத்தால்.. கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று. யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. காங்கேசன்துறை வீதியிலுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில உயிரிழந்தவர்களுக்காக சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்திற்கும் – விடுதலைப்புலிகளுக்கும் இடையி…

  11. 2048 ல் இலங்கையை அபிவிருத்தியடைந்த அடைந்த நாடாக்குவேன் – ஜனாதிபதி ரணில் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். போராட்டம் என்ற போர்வையில் வன்முறைச் செயல்களைச் செய்து அரசியல் அதிகாரத்தைப் பெற முயன்றவர்களை ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். 2048 இளைஞர் மேடையில் அபிவிருத்தியடைந்த நாட்டுக்கான பயணம் என்ற நிகழ்ச்சித்திட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1306720

    • 7 replies
    • 743 views
  12. “வன்முறை ஒழிப்போம் போதை பொருளை தடுப்போம்” – என்ற வேலை திட்டம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது- சுமந்திரன் போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிற நிலையில் அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் போதைப் பொருள் பாவனை காரணமாக 10 இளைஞர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளதோடு 140 பேர் வரையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை கடந்த காலத்தில் “வன்முறை ஒழிப்போம் போதை பொ…

    • 2 replies
    • 487 views
  13. 18 பில். டொலர் முதலீடு: ஹம்பாந்தோட்டையில் டிஸ்னிலேண்ட்? தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலேண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார். வோல்ட் டிஸ்னி நிறுவனத்தின் அழைப்பின் பேரில், இலங்கையில் 18 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஆரம்பத் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் அடுத்த மாதம் அமெரிக்காவில் உள்ள பர்பேங்குக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் டிஸ்னிலேண்ட் பூங்கா ஒன்றை அமைப்…

    • 3 replies
    • 327 views
  14. இரட்டைக் குடியுரிமை : தேர்தல் ஆணைக்குழுவின் செய்தி -சி.எல்.சிசில்- இரட்டைக் குடியுரிமை தொடர்பான முடிவுகளை நீதிமன்றத் தீர்மானங்கள் மூலம் மட்டுமே எடுக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகச் செயற்பட முடியாது. பாராளுமன்ற உறுப்பினர் இரட்டைக் குடியுரிமை உள்ளவரா இல்லையா என்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணைக்குழு, அத்தகைய நபர்கள் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை…

    • 0 replies
    • 291 views
  15. யாழில் களையிழந்த தீபாவளி வியாபாரம் தீபாவளிப் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் யாழ்ப்பாண நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் நேற்று குறைவாகக் காணப்பட்டது. ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையின் முதல் நாளின் போது சனக்கூட்டத்தால் யாழ் நகரம் நிரம்பி வழியும் நிலையில், நேற்று மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. புடவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைகளிலும் பொதுமக்களின் வரவு குறைவாக காணப்படுகின்றது. அத்துடன் அங்காடி வியாபாரமும் எதிர்பார்த்த அளவுக்கு களைகட்டவில்லையென வியாபாரிகள் தெரிவித்தனர். https://thinakku…

  16. தற்போதைய நெருக்கடிக்கான காரணம் தனது ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்று தற்போது நாட்டில் நட்புறவான வெளிவிவகாரக் கொள்கை இல்லாமையினாலேயே தற்போதைய நெருக்கடி நிலையை மோசமாக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மக்கள் மத்தியிலும் அரசாங்கத்திலும் மிகவும் கேள்விக்குரிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=166964

    • 0 replies
    • 134 views
  17. கணவன் - மனைவிக்கிடையில் கத்தி வெட்டு : இருவரும் வைத்தியசாலையில் By VISHNU 24 OCT, 2022 | 01:30 PM யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்சினை வாய் தர்க்கமாக மாறியதில் கணவன் மனைவியை வெட்டியுள்ளார். அதே கத்தியினை பறித்த மனைவி கணவனை வெட்டியுள்ளார். இருவரும் வெட்டு காயங்களுக்குள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/138318

  18. மானிய விலையில் உரம், மண்ணெண்ணெய் கிடைக்க நடவடிக்கை எடுங்கள் - யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை தலைவர் By VISHNU 24 OCT, 2022 | 02:02 PM ( எம்.நியூட்டன்) மரக்கறி செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு மானிய விலையில் உரம் மற்றும் மண்ணெண்ணெய் கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை தலைவர் கந்தையா தியாகலிங்கம் கோரிக்கை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மீனவர்களுக்கு ஒரளவுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெயை பயன்படுத்தி ஒரளவேனும் கடற்தொழில் செய்கின்றார்கள். ஆனால் விவசாயிகளுக்கு ம…

  19. இலங்கையிலிருந்து மேலும் 4 பேர் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் By VISHNU 24 OCT, 2022 | 12:43 PM இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட நூற்றுக்கு மேற்பட்டோர் படகுமூலம் கடல் மார்க்கமாகச் சென்று இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அந்தவகையில் இன்று திங்கட்கிழமை (24) காலை திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகு மூலம் இந்தியா சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு அகதிகளாக சென்றுள்ளனர். த…

  20. மின் கட்டணம் மீண்டும் உயரும் சாத்தியம் ? By DIGITAL DESK 5 24 OCT, 2022 | 11:11 AM ( எம்.எப்.எம்.பஸீர்) மின்சார கட்டணம் மேலும் 30 சத வீதத்தால் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிய முடிகின்றது. இது குறித்து சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாகவும், இலங்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 290 கோடி டொலர் கடன் தொகை தொடர்பில் ஒரு நிபந்தனையாக இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. எதிர்வரும் டிசம்பர் மாதம் குறித்தப் கடன் தொகை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க முன்னர் இந்த மின் கட்டண அதிகரிப்பு அவசியம் என குறித்த நிபந்தனையில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இது குறித்து…

  21. நாட்டில் 96 இலட்சம் பேர் வறுமையில் : மரணிக்காமலிருக்க 4 பேர் கொண்ட குடும்பத்தின் செலவு 60 ஆயிரம் ரூபா - ஹர்ஷ By DIGITAL DESK 5 24 OCT, 2022 | 11:09 AM ( எம்.எப்.எம்.பஸீர்) ' இலங்கையின் மொத்த சனத் தொகை 220 இலட்சமாகும். அதில் 96 இலட்சம் பேர் தற்போது வறுமையின் பிடியில் உள்ளனர் என புள்ளிவிபரங்களின் ஊடாக கணிப்பிட முடிந்துள்ளது. அவ்வாறான பின்னணியில், மரணிக்காமல் வாழ ஒரு நபருக்கு தேவைப்படும் தலா வீத சக்தி வள நுகர்வு (கிலோ கலோரி) 2030 ஆகும். அதனை பெற்றுக்கொள்ள மட்டும் கொழும்பில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் 60 ஆயிரம் ரூபாவை மாதம் செலவழிக்க வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில், அரசாங்கம் எந்த பகுப…

  22. இலங்கை ஜனாதிபதி அதிகாரத்தை குறைக்கும் 22ஆவது திருத்தச் சட்டம் - முழு விவரம் யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 21 மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்தன. எதிராக ஒரு வாக்கு மட்டும் அளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றைக் குறைத்து, அவற்றினை நாடாளுமன்றம் மற்றும் அரசியல் பேரவை போன்றவற்றுக்குக் கையளிக்கும் வகையில் இந்தத் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன…

  23. நவீன நரகாசூரன் அழிந்தால்தான் இந்துகளுக்கு தீபாவளி! அருட்தந்தை மா. சக்திவேல் இலங்கையில் நவீன நரகா சூரன், சூரன்கள் அழிந்தால் தான் இந்துகளுக்கு தீபாவளி என அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். இந் நாளிலே தீமையை எதிர்த்து நன்மைக்காக யார் போராடுகின்றார்களோ அவர்கள் தீபமாக ஒளிபெறுவார்கள் என்பது இதன் பொருள். நராகா சூரணை வதைத்து கொடிய துன்பத்தில் இருந்து மீண்ட நாளை நினைத்து கொண்டடுவதுதான் தீபாவளி . தமிழர்களின் இனம், நிலம், மொழி, கலாச்சாரம், கல்வியை, பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பூர்விக நிலங்களை கையகப்படுத்தி, பறித்த நவீன நரகாசூரர்கள் இன்னும் இலங்கையில் வதம் செய்ய படவில்லை. அவர்கள் என்று ஒழிகின்றார்களோ அன்றுதா…

  24. யாழில் போதை மருந்து விநியோகிக்கும் வைத்தியர்கள் சிக்கினர்! யாழ்ப்பாணக் குடாநாட்டில் உயிர்கொல்லி போதைமருந்து பாவனை அதிகரித்துள்ள நிலையில், மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது பிரதான மருந்தகங்களிலிருந்து அதிகளவான உயிர்கொல்லி போதை மாத்திரைகளை இரண்டு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் மருத்துவர் அதிகளவு உயிர்கொல்லி போதை மாத்திரைகளைக் கொள்வனவு செய்துள்ளார். அவரது மருந்தகம், சுகாதார மருத்துவ அதிகாரியால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அரச மருத்துவமனைகளில் பணிபுரிய…

    • 1 reply
    • 485 views
  25. போதைப்பொருள் பாவனையை தடுக்க வேண்டியவர்களே, அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்! October 24, 2022 போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிற நிலையில், அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைத்த அவர், போதைப் பொருள் பாவனை தற்போது தலைவிரித்தாடுகின்றது. இதன் காரணமாக 10 இளைஞர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். 140 பேர் வரையிலானோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த காலத்தில் “வன்முறை ஒழிப்போம் போதை பொருளை தடுப்போம்” எனும் தொனிப்பொர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.