Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி! மித்தேனியவில் உள்ள ஒரு நிலத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தனது அறிக்கையை பொலிஸாரிடம் சமர்ப்பித்த பின்னர் இது தெரியவந்தது. அதன்படி, மித்தேனியாவிலிருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக NDDCB இன் அறிக்கை வெளிப்படுத்தியது. செப்டம்பர் 5 ஆம் திகதி, மித்தேனியாவின் தலாவாவில் உ…

  2. 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு! கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (14) காலை 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபர், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சேவைகள் அமைப்பின் தலைவராகவும் உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் எடை 5.94 கிலோ கிராம் ஆகும். விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட நபர் இந்த தங்க பிஸ்கட் கையிருப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும், சந்தேக நபர் நீண்ட காலமாக இந்தக் கடத்தலை…

  3. தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவு- இரா. சாணக்கியன் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்துக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழு வாக்களிக்க வேண்டியதில்லை என அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தீர்மானித்ததாக, பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (13) நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார். எதிர்காலத்தில் இத்தகைய தீர்மானங்கள் கட்சி மட்டத்தில் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். சாணக்கியன், ஜனாதிபதியுடனான சமீபத்திய சந்திப்பில் மாகாண சபை தேர்தல், வடகிழக்கு அபிவிருத்தி நிதியம், மற்றும் மாவட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவும், ஆனால் இது உத்தியோகபூர்வ சந்திப்பு இல்லை எனவும் தெரிவித்தார். மாகாண சபை தேர்தல…

  4. மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தல் 14 September 2025 நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெஃப்ரல் அமைப்பு (PAFFREL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கு அனுப்பிய கடிதத்தில், பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி, மாகாணசபை அமைப்பு ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்பாக மீண்டும் நிறுவப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தற்போது அது அதிகாரிகள் கையில் மட்டுமே இருப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வாக்களிக்கும் உரிமை அரசியலமை…

  5. இலங்கை தொடர்பான முக்கிய வரைவுத் தீர்மானம் 2 வாரங்களுக்குள் ஜெனிவாவில் 14 September 2025 இலங்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் வரைவுத் தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானம், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம் தொடர்பில் அடுத்த விரிவான அறிக்கை, 2027 ஆம் ஆண்டு செப்டம்பரில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ…

  6. பேருந்துகளை அலங்கரிப்பதற்கும். மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி குறித்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதியுடன் அமுலாகும் வகையில் அந்த சுற்றுநிருபம் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பேருந்துகளில் அலங்காரங்கள் மற்றும் மேலதிக பாகங்களை நிறுவுவது தொடர்பான பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறித…

  7. இலங்கையில் நடத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தமிழர் தரப்பு சர்வதேச விசாரணையை நீண்டகாலமாக கோரி வந்தது. இதன்போது, தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பேச்சாளராக இருந்த சுமந்திரன் ஒரு அப்பட்டமான பொய்யை கூறியதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்ற கருத்தை சுமந்திரன் கூறியதாக சுகாஷ் குறிப்பிட்டுள்ளார். இதுவரை சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்படவே இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரும் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார். Tamilwinஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதே...இலங்கையில் நடத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தமிழர் தரப்பு சர்வதேச விசாரணைய…

  8. 13 Sep, 2025 | 03:10 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், நோயாளிகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கதிரியக்க பிரிவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள், பதவி உயர்வுகள், இடமாற்றல் என வெளியேறியமையால், வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், நோயாளர்கள், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர், எம்.ஆர்.ஐ உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவற்றை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் எடுப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலைமைகள் காணப்படுவதால், அதற்குள் நோயின் தீவிரம் அதிகரிப்பதாக நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர். சில நோயாளிகள் தனியார் வைத்தியசாலையில் அவற்றை எடுப்பதற்காக பெருமளவு பணம் செலவு செய்கின…

  9. Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 10:35 AM இந்தியாவின் சென்னை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகவரமைப்பு (NIA) சிறப்பு நீதிமன்ற அழைப்பாணையொன்றை இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கடமைபுரியும் அதிகாரியொருவருக்கு அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்கத்தூதரகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றைத் தாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டே குறித்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. தற்போது இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வரும் குறித்த அதிகாரி, ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அதிகாரி அமீர் சுபைர் சித்திக் (Amir Zubair Siddiqui) என அடையாளம் கா…

  10. மக்களைத் தவறாக வழிநடத்தும் சுகாஸ்; சுமந்திரன் சாடல் சர்வதேச விசாரணை ஒன்று முடிவடைந்ததா? என்பது சம்பந்தமாக நான் ஒரு கேள்வி கேட்டேன். அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை என்பதால் பொய்யான அவதூறுகள் கொட்ட வேண்டிய தேவையில்லை, அது ஒரு சட்டத்தரணிக்கு அழகுமல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ‘மக்களை நான் தவறாக வழி நடத்துவதாக நீங்கள் (சுமந்திரன்) குறிப்பிட்டிருப்பதை பார்த்தபோது சாத்தான் வேதம் ஓதிய கதை நினைவுக்கு வந்தது.மக்களைத் தவறாக வழிநடத்துவது நானா?நீங்களா?’ என சுமந்திரனிடம் சுகாஷ் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,அதற்கு பதில் வழங்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவி…

    • 1 reply
    • 216 views
  11. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடிய கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத் தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தும் இந்த கெமராக்களில் பதிவு செய்யப்படும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார…

  12. வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு சனி, 13 செப்டம்பர் 2025 09:08 AM யாழ்ப்பாணம் , வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டு , தீ வைக்கப்பட்டுள்ளதுடன் , மீனவர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு மீனவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கற்கோவளம் சந்தைக்கு அண்மித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இவ்வாறு மணல் அகழப்படும் இடங்களில் ஏற்படும் பாரிய குழிகளில் மழை நீர் தேங்குவதன் ஊடாக பல்வேறு அசௌகரியங்களுக்கு அப்பகுதி மக்கள் ம…

  13. இந்திய தூதுவருக்கும் ரெலோவுக்குமிடையே சந்திப்பு! September 13, 2025 கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (11) இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச் செயலாளரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரனும் கலந்து கொண்டனர். அதன்போது செப்டம்பர் 8ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா மனித உரிமை 60 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தமிழர்களின் அபிலாசைகளான அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, நீதி, கௌரவம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை தாம் வரவேற்பதாக ரெலோ தலைவர் தெரிவித்தார். அரசியல் யாப்பை…

  14. மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணம் September 13, 2025 மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை மன்னாரை வந்தடைந்தனர். மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து இரண்டு இளைஞர்கள் நடைபயணம் ஒன்றை கடந்த புதன்கிழமை (10) ஆரம்பித்தனர். அவர்கள் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக செல்வதோடு துண்டு பிரசுரங்களை வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வந்தனர். இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (…

  15. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்! adminSeptember 13, 2025 படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது. யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் சனிக்கிழமை காலை , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் , அதனை சூழவுள்ள பகுதிகளில் விசாரணை அறிக்கை விநியோகிக்கப்பட்டது கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை , நிமலராஜன் வீட்டினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் , வீட்டினுள் கைக்குண்டு வீசியும் தாக்குதல் மேற்கொண்டன…

  16. அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அரசமாளிகையில் இருந்து இன்று வெளியேறவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அரசமாளிகையில் இருந்து தங்காலையிலுள்ள தனது கால்டன் இல்லத்தில்-மஹிந்த குடியேறவுள்ளார் எனவும், இதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்கமைய அரச மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு ஊடக சந்திப்புகள் மூலம் வலியுறுத்தப்பட்டது. எனினும், தனக்கு சட்டப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே அது தொடர்பில் பரிசீலிக்க முடியும…

  17. ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு! நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் தான் ஜெனீவா சென்று முறையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “ஆளும் கட்சியில் யாரையும் வடக்கு மக்களுக்கு தெரியாது. அமைச்சர் சந்திரசேகர் மற்றும் இளங்குமரன் ஆகியோரையும் எங்களுக்கு தெரியாது. இருந்தாலும் வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தமைக்கு காரணம் இருக்கின்றது. ஒரு காலத்தில் எங்களை போலவே நீங்களும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள். இதனாலேயே நம்மை போன்றவர்கள் என எண்ணி வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர். அத்துடன்,…

      • Like
    • 9 replies
    • 678 views
  18. 30 MAY, 2025 | 09:22 AM (நா.தனுஜா) பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், கனடாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தோற்றம் பெறுமாயின், அதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பில் கனேடிய அரசு நடவடிக்கை எடுக்குமாயின், அதனையும் 'இனப்படுகொலை' என்று வகைப்படுத்துவீர்களா? என கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து விஜயதாஸ ராஜபக்ஷவினால் ஹரி ஆனந்தசங்கரிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த அரசாங்கத்தில் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகப் பதவி வகித்த நான், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவ…

  19. Published By: Vishnu 12 Sep, 2025 | 06:25 PM (எம்.மனோசித்ரா) இந்திய அரசின் மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு முன்னணி நிறுவனமான, மத்திய கடலோரப் பொறியியல் மற்றும் மீன்வள நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர், கடந்த 8 முதல் 12 வரை இலங்கைக்கு விஜயம் செய்தனர். இந்த விஜயம், வடக்கு மாகாணத்தில் முன்மொழியப்பட்ட பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி குறித்து முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தியதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இந்த குழுவினர், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரைச் சந்தித்து, அமைச்சின் அதிகாரிகளுடனும் கலந்…

  20. 02 Sep, 2025 | 04:06 PM வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இன்று செவ்வாய்க்கிழமை (2) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடகாலம் பூர்த்தியாவதை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை தொடக்கிவைக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்குக்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு, இன்று காலை புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு, நண்பகல் 1 மணியளவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்தார். மிக நீண்டகால கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பால நிர்வாகப் பணிகளை ஆரம்பி…

  21. 2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா! அரசாங்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் 4,418,404 பாடசாலை மாணவர்களுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட இணக்கப்பாடுகளுடன் சீருடைகளைப் பரிமாறும் நிகழ்வு நேற்று (11) பத்திரமுல்ல கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது. கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, சீன தூதுவர் கிவ் ஸெங்க்ஹொங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதன் போது 2026ஆம் ஆண்டுக்கான பிள்ளைகளை வழங்குவதற்கு இணக்கத்தை தெரிவிக்கும் சான்றிதழை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ மற்றும் சீன தூதுவர் கிவ் ஸெங்ஹொ…

  22. 12 Sep, 2025 | 04:35 PM பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேச்சரப் பெருமான் தேவஸ்தானத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப் பணிக்காக இன்றையதினம் (12) அடிக்கல் நாட்டப்பட்டது. 41 அடி உயரம் கொண்ட பூசாந்திர சித்திரத் தேருக்கான புதிய தேர் இருப்பிடத்தின் கட்டுமான வேலைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்போது விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன. https://www.virakesari.lk/article/224920

  23. இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க September 12, 2025 10:13 am இரண்டு மாதங்களுக்குள் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பில் தான் குடியிருக்க தற்போது புதுப்பிக்கப்பட்டு வரும் ஒரு வீட்டை அடையாளம் கண்டுக்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விதிமுறைகளின்படி, அரசாங்க வீட்டில் வசிக்கும் எவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன் மூன்று மாத அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், அரசாங்க வ…

  24. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சீனத் தூதரின் வேண்டுகோளின் பேரில் நேற்று கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணிலின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் நடக்கும் முதல் உத்தியோகபூர்வ இராஜதந்திர சந்திப்பு இதுவாகும். பிணையில் விடுதலை இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சீனத் தூதருடன் கலந்துரையாடலை நடத்தியிருந்தார். அத்துடன், சீனத் தூதுவர் எதிர்காலத்தில் மற்றொரு உயர் மட்ட முன்னாள் அரசியல்வாதியைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரி…

  25. மல்லாவியில் கைதான இராணுவ அதிகாரியிடமிருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் சமீபத்தில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 'கமாண்டோ சாலிந்தா'வுக்கு ரி-56 தோட்டாக்களை விற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட லெப்டினன்ட் கேணலிடமிருந்து பல குற்றவியல் விஷயங்கள் வெளிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியபோது, மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் அந்த அதிகாரி கைது செய்யப்பட்டார், மேலும் அவர் ஒரு பாதாள உலகக் குழுவிற்கு 260 ரி-56 தோட்டாக்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஒன்றரை கோடிக்கு மேலும் விசாரித்ததில், கமாண்டோ சாலிந்தா தனக்கு 1…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.