ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
இலங்கையில் சீன இராணுவத்தின் அதிக பிரசன்னம் - தமிழ்நாடு கவலை By Rajeeban 17 Oct, 2022 | 10:51 AM - கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர் - இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழ்நாடு கரிசனை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மாநில புலனாய்வு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அயல்நாட்டில் சீனாவின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை…
-
- 4 replies
- 348 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் By T. Saranya 17 Oct, 2022 | 10:56 AM வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (17) ஐ.நா அலுவலகத்தின் முன்பு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பு அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 151 views
-
-
உயர் பாதுகாப்பு வலயத்துக்காக யாழில் 1,614.11 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க முயற்சி : விவசாயத்தில் ஈடுபடும் இராணுவம் யாழ்.குடாநாட்டில் 1,614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு வலயத்துக்காக சுவீகரிக்கும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் சில இடங்களை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்து கடந்த மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இம்மாதம் ஜனாதிபதி ரணில் இரத்து செய்திருந்தார். இந்நிலையில் யாழில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சு வெளியிட்ட அறிவித்தலை சுட்டிக்காட்டி, தமிழ்த் தேசியக்…
-
- 0 replies
- 174 views
-
-
மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை அடகு பிடித்து, போதைப்பொருள் விற்பனை – யாழில் மூவர் கைது மோட்டார் சைக்கிள்கள், கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை அடகாக எடுத்துக்கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில் போதை வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கிராம் 270 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். போதைப்பொருள் வாங்குவதற்காக சந்தேக நபர்களிடம் அடகாக ஒப்படைக்கப்பட்ட 07 கையடக் தொலைபேசிகள் மற்றும் சுமார் 08 இலட்ச ரூபாய் பெறுமதி…
-
- 0 replies
- 115 views
-
-
அரசாங்கத்தின் சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் SLPP இல் சுயாதீனமாக புதிய அமைப்பை உருவாக்கவுள்ளதாக தகவல். அரசாங்கத்தின் சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சுயாதீனமாக ஒரு புதிய அமைப்பை உருவாக்கவுள்ளதாக உயர்மட்ட வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க போன்ற சில அமைச்சரவை அமைச்சர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்த டயனா கமகே மற்றும் அரவிந்த் குமார போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய உருவாக்கத்துடன் இணைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடா…
-
- 0 replies
- 131 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல் By DIGITAL DESK 5 16 OCT, 2022 | 07:17 PM (எம்.மனோசித்ரா) நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழு, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கெஞ்சி ஒகாமுராவை சந்தித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகின்றது. உத்தேச விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுக் குழுவின் ஒப்புதலை பெறுவதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் அண்மைக்கால…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
ராஜபக்ஷவிடம் கறுப்புப் பணம் உள்ளது என்றவர்கள் இன்று அக்காவுக்கு பணம் கொடுத்துள்ளனர் - நாமல் By NANTHINI 16 OCT, 2022 | 06:39 PM (க.கிஷாந்தன்) பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும். எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான கூட்டங்களும் இடம்பெறுகின்றன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஒக் 16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாமல் இவ்வாறு கூறினார். …
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
கஜூமாவத்த தீ விபத்து : 214 பேருக்கு புதிய வீடுகள் வழங்குவதில் சிக்கல் -நகர அபிவிருத்தி அதிகார சபை By DIGITAL DESK 5 16 OCT, 2022 | 09:39 PM (இராஜதுரை ஹஷான்) தீ விபத்துக்கு உள்ளான கஜூமாவத்த பகுதியின் குடியிருப்பாளர்களில் 214 பேர் புதிய குடியிருப்பை பெற்றுக்கொள்ள அடிப்படை குறைந்தப்பட்ச தகைமைகளை கூட கொண்டிருக்கவில்லை ஆகவே நகர அபிவிருத்தி மானிய கொள்கையின் பிரகாரம் அவர்களுக்கு புதிய வீடுகள் வழங்குவது சிக்கலானது.என நகர அபிவிருத்தி அபிவிருத்தி அதிகாரசபை வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதும் அரசியல…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
அரசாங்கத்தின் உள்ளக ரீதியிலான பொறிமுறைகள் எதனையும் ஏற்கோம் - வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் By Nanthini 16 Oct, 2022 | 11:00 AM (நா.தனுஜா) போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசாங்கமும் எமக்கான தீர்வைப் பெற்றுத்தரவில்லை. அதேபோன்று கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட எந்தவொரு ஆணைக்குழுக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வை பெற்றுத்தரும் நோக்கில் அவர்களை மனிதாபிமானத்துடன் அணுகவில்லை. எனவே, உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் உள்ளக ரீதியில் ஸ்தாபிக்கப்படக்கூடி…
-
- 0 replies
- 332 views
-
-
மகிந்தவின் வருகையால் நாவலப்பிட்டியில் பதற்றம்! ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாவலப்பிட்டியவுக்கு வருகை தந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கூட்டம் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஆரம்பமாகி, மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற தருவாயிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளரான சசங்க சம்பத் சஞ்சீவ தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்த பொலிஸார் போராட்டத்துக்கு அனுமதி பெறப்பட…
-
- 5 replies
- 817 views
-
-
நாமலுக்கு பொதுஜன பெரமுனவில் முக்கிய பதவி! பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு பெரமுனவின் பொதுச்செயலாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டின் போது பதவி மறுசீரமைப்பு தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவிக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மேலும் கட்சியின் முக்கிய பதவி மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் உறுப்பினர்கள் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீ…
-
- 0 replies
- 477 views
-
-
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மஹிந்தவிற்கு இயலுமை காணப்பட்டதை போன்று, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் இயலுமை ஜனாதிபதியிடம் உள்ளது – நாமல். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு இயலுமை காணப்பட்டதை போன்று, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதனடிப்படையிலேயே காலிமுகத்திடல் போராட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் நாமல் தெரிவித்தார். இதேவேளை மனித உரிமைகள்…
-
- 4 replies
- 274 views
-
-
“சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழில் கலந்துரையாடல் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டத்திற்கான மக்கள் கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. “சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத் தலைவர் கரு ஜயசூரிய, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அர…
-
- 4 replies
- 389 views
-
-
உள்ளக விசாரணை: சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்துகின்றது இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வெளி விசாரணையைத் தடுப்பதற்கு, இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில், சர்வதேச சமூகத்தில் தனது இடத்தைப் பாதுகாப்பதற்காக முன்னைய சந்தர்ப்பங்களைப் போலல்லாமல், உண்மையைக் கண்டறிய உள்நாட்டு பொறிமுறை உதவும் என அரசாங்கம் நம்புவதாக அவர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அண்மையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற கடுமையான புதிய தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்…
-
- 0 replies
- 140 views
-
-
போராட்டத்தை அடுத்து மட்டக்களப்பில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் நடத்திய விசாரணை இடைநிறுத்தம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தலைமையில் நேற்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து, மட்டக்களப்பில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் நடத்திய பிராந்திய விசாரணை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் அதிகாரிகளினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் பிரதேச செயலக அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவதை நிறுத்துமாறு அவர்கள் கோரியிருந்தனர். காணாமல் போனவர்களுக்கு இழப்பீடாக பணம் தேவையில்லை, அவர்கள் எங்கிருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியவே உறவினர்கள் விரும்…
-
- 0 replies
- 124 views
-
-
50 மில்லியன் டொலரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் இலங்கை அரசாங்கம் !! இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் கடனுதவியின் கீழ் மருத்துவத்துறைக்கு என ஒதுக்கப்பட்ட 110 மில்லியன் டொலர்களில் 50 மில்லியனை இலங்கை பயன்படுத்தவில்லை என அறிய முடிகின்றது. சுகாதாரத்துறைக்கு இதுவரை வழங்கப்பட்ட ஒதுக்கீட்டில் சுமார் 60 மில்லியன் டொலர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சின் கீழ் இல்லாத சில நிறுவங்களுக்கு டெண்டர்களை விடுப்பதில் உள்ள சிக்கலான செயல்முறை குறித்து இந்திய உயர் ஸ்தானிகரிடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஒது…
-
- 0 replies
- 182 views
-
-
பெரும்பான்மை காட்டுவதில் சந்தேகம்: இந்த வாரம் வாக்கெடுப்பிற்கு வருகின்றது 22 ஆவது திருத்தம் ! மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இருந்தாலும் இந்த வாரம் 22வது திருத்தச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஆட்சேபனையை கருத்திற்கொள்ளாமல் முன்மொழியப்பட்ட 22வது திருத்தத்தை முன்னெடுத்துச் சென்று வாக்கெடுப்புக்குச் செல்ல அமைச்சரவை கடந்த வாரம் அனுமதி வழங்கியதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இதன்படி, 22ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை விவாதத்துக்கும், 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வாக்கெடுப்புக்கும் எடுத்துக் …
-
- 0 replies
- 224 views
-
-
-
யாழில் பிரபல போதைப்பொருள் வியாபாரி கைது செந்தூரன் பிரதீபன் கோப்பாய் - ஊரெழு முருகன் கோயில் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த 25 வயதுடைய ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிரபல போதைப்பொருள் வியாபாரி என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெரகெதிர தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யழல-பரபல-பதபபரள-வயபர-கத/71-305819
-
- 0 replies
- 285 views
-
-
உலகளாவிய பட்டினி சுட்டெண்ணில் இலங்கைக்கு 64 ஆவது இடம் உலகளாவிய பட்டினி சுட்டெண் 2022 இல் இலங்கை 121 நாடுகளில் 64 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 13.6 புள்ளிகளை இலங்கை பெற்றுள்ளது. 2021 இல், இலங்கை 116 நாடுகளில் 65 ஆவது இடத்தில் இருந்தது, 2020 இல் நாடு 64 ஆவது இடத்தில் இருந்தது. Global Hunger Index (GHI) என்பது உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய அளவில் பசியை விரிவாக அளவிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு கருவியாகும். ஆசியாவில், இந்தியா 107 ஆவது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் (99), வங்கதேசம் (84), நேபாளம் (81) மற்றும் ஆப்கானிஸ்தான் 109 ஆவது இடத்தில் உள்ளது. 2022 GHI இன் படி, மத்தி…
-
- 0 replies
- 180 views
-
-
இலங்கைக்கு தேவையான நீண்ட கால தீர்வு குறித்து IMF வின் கருத்து இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியம் பல தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாக ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கையின் நீண்டகால நிதிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பலதரப்பு கடன் வழங்குனர்களின் கொள்கைகள் முக்கியமானதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=166655
-
- 0 replies
- 224 views
-
-
சிவாஜிலிங்கம் விடுத்துள்ள கோரிக்கை! அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், போதைவஸ்து பாவனை மற்றும் திருட்டு சம்பவங்கள் என்பன தற்போது அதிகரித்து காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும். விழிப்புக்குழுக்களை உருவாக்கி செயற்பட வேண்டும். பொலிஸ் மற்றும் படையினர் அதிகமாக இருந்தும் போதைப்…
-
- 0 replies
- 615 views
-
-
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ் சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணி By DIGITAL DESK 5 15 OCT, 2022 | 02:33 PM (எம்.நியூட்டன்) சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் நகரில் இன்று சனிக்கிழமை ஆரம்பமான பேரணி சுன்னாகம் பெருந்து தரிப்பு நிலையம் வழியாக வாழ்வகத்தை சென்றடைந்தது. வாழ்வகம் மற்றும் லயன்ஸ் கழகம் ஆகிய இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை நடாத்தியது. வெள்ளைப் பிரம்பின் முக்கியத்துவம், விழிப்புலனற்றவர்கள் வீதியில் நடமாடுவதற்கு இருக்கின்ற இடையூறுகள், அவர்களை ஏன் முன்னுர…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
முகமாலையில் இடம்பெற்ற விபத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் 25 பேர் காயம் By T. SARANYA 15 OCT, 2022 | 01:52 PM முகமாலையில் இடம்பெற்ற விபத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் 25 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் பயணித்துக்கொண்டிருந்தபேருந்தின் மீது டிப்பர் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/137707
-
- 2 replies
- 232 views
- 1 follower
-
-
யாழில் அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு முன்னெடுப்பு இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழில் நடைபெற்றது. யாழிற்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) யாழ்.பொதுசன நூலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், பொதுசன நூலக பிரதம நூலகர் மற்றும் இந்திய துணை தூதரக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1305076
-
- 7 replies
- 796 views
- 1 follower
-