ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142853 topics in this forum
-
தடைசெய்யப்பட்ட மீன்பிடித்தொழிலை விரைவில் நாம் முடிவிற்கு கொண்டுவருவோம் - முல்லைத்தீவில் டக்ளஸ் உறுதி 13 Oct, 2022 | 09:54 AM கே .குமணன் கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புதன்கிழமை (12) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அவரின் கீழ்உள்ள கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். அமைச்சரின் இந்த பயணத்திற்காக முல்லைத்தீவு கடற்கரை வீதிகளில் அதிகளவு பொலிசார் போடப்பட்டுள்ளதுடன் வீதித்தடையினையும் ஏற்படுத்தி பொலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 06.10.22 ஆம் திகதி முல்லைத்தீவு மீனவர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட தொடர்போராட்டம் முடிவிற்கு கொ…
-
- 0 replies
- 140 views
-
-
ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்: இலங்கை வாக்களிப்பை தவிர்த்தது! ஐ.நா.பொதுச் சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியுள்ளது. உக்ரைனில் புகுந்து கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷியப் படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐ.நா.பொதுச் சபையில் நேற்று ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. …
-
- 0 replies
- 142 views
-
-
வடமாகாணக் கல்விப் பணிப்பாளரின் செயற்பாடு தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பான விசாரணை கோரி இலங்கை ஆசிரியர் சங்கம், கல்வியமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து கல்வியமைச்சின் செயலாளருக்கு, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்துடன் இணைந்து, வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் பாடசாலை மாணவர்களுக்கான வினாத்தாள்களை பெறுவதுடன் அதனை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கும் அனுமதித்து வருகின்றார். தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு அனு…
-
- 0 replies
- 153 views
-
-
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான, இந்திய மருந்துகள் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு! காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதில் உறுதியாக உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காம்பியாவில் கடந்த ஜூலை மாதம் முதல் சிறுநீரக கோளாறு காரணமாக 66 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மற்றும் சளிக்கான திரவ மருந்திற்கும் அந்த மரணத்திற்கும் தொடர்பு இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,…
-
- 4 replies
- 819 views
- 1 follower
-
-
போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் சட்டங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முயல்கின்றன என்று கூறிய அவர், போரின் போது மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ததைப் போலவே பெற்றோர்கள் பழிவாங்கும் நோக்கில் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த செயற்பாட்டை மக்கள் நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.madawa…
-
- 6 replies
- 779 views
-
-
மக்களது குறைகளை தீர்ப்பதற்காகவே நான் நாடாளுமன்றத்தில் உள்ளேன் – டக்லஸ் பொது மக்களது குறை நிறைகளை தீர்ப்பதற்காகவே நான் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக கடற் தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். திருகோணமலை கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் மகாவித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான மண்ணெண்ணை பிரச்சினையானது நாடு தளுவிய ரீரியில் காணப்படுகிறது அதனை தீர்ப்பதற்காக தனியார் துறையிடம் தாம் கதைத்து வருவதாகவும் அது தொடர்பில் விரைவில் முடிவுகள் எட்டப்படும் என தெரிவித்தார். மேலும் திருகோணமலையினை பிரதிநிதித்துவப்படுத்தி ந…
-
- 1 reply
- 226 views
-
-
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் கோப்பாய் பொலிஸாரினால் கைது! 13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 13 வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகியுள்ளார் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய்…
-
- 7 replies
- 672 views
-
-
பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை இம்மாத இறுதியில் ஆரம்பம் யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி, பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான போக்குவரத்தினை எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். குறித்த விமான சேவை தொடர்பில் இந்திய விமான நிறுவனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில், விமான போக்குவரத்தை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும்…
-
- 12 replies
- 806 views
-
-
போதைப்பொருள் பாவனையால் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்துவதை கைவிட்டு சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுங்கள் - இளையோர் இயக்கம் By VISHNU 12 OCT, 2022 | 08:28 PM போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு, சரியான மருத்துவத்தை பெற்றுக்கொடுத்து உளவள ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போதைப்பொருள் பொருள் பாவனையான…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணை By VISHNU 12 OCT, 2022 | 05:21 PM வ.சக்திவேல் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் இன்று (12)புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் வைத்து காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விசாரணையில் கொழும்பிலிருந்தும், மட்டக்களப்பைச் சேர்ந்த அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர். இதன்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் கடிதம் மூலம் அழைப்பு விடு…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
மகிந்தவை சந்தித்தார் எரிக்சொல்ஹெய்ம் By RAJEEBAN 12 OCT, 2022 | 03:29 PM நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கான விசேட விஜயத்தின் போது எரிக்சொல்ஹெய்ம் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் காலநிலை ஆலோசகராக எரிக்சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு மகிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எரிக்சொல்ஹெய்முடனான பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழவிடுதலைப்புலிகளிற்கும் இடையிலான மோதல் காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளிற்கு எரிக்…
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
ரணில் அமைச்சரவை இலங்கையை 'குறைந்த வருமானம் கொண்ட நாடாக' அறிவிக்க ஒப்புதல் அளித்தது ஏன்? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையை மத்திய வருமானம் பெறும் நாடுகளிலிருந்து, குறைந்த வருமானம் பெறும் நாடாக தரமிறக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். சர்வதேச தரப்படுத்தலுக்கு அமைய, இலங்கை மத்திய வருமானம் பெறும் நாடாக காணப்பட்டது. இந்த நிலையில், மத்திய வருமானத்தை பெற்ற…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சி: 4 சந்தேக நபர்களுக்கும் பிணை ! எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆ…
-
- 0 replies
- 195 views
-
-
அழகு நிலையங்களை பாதுகாக்க நடவடிக்கை – கீதா குமாரசிங்க அழகு நிலையங்களை நடத்துவதற்கு அத்தியாவசியமான பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இதனை சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று புதன்கிழமை தெரிவித்தார். அழகுசாதனப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் சுமார் 100% அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அந்தத் துறையில் பணியாற்றிய சுமார் நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1304394
-
- 0 replies
- 147 views
-
-
உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் குறிப்பிட்டுள்ளது போன்று அடுத்த வருடம் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் அது இலங்கைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாடாக இலங்கை பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அபோன்சு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நெருக்கடி உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் பல பல நெருக்கடிகளை இலங்கையும் சந்திக்க நேரிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படலாம். உணவு பிரச்சினை ஏற்படலாம். ஏற்கனவே மிக பெரிய அ…
-
- 6 replies
- 278 views
-
-
காலம் தாழ்த்தினால் பாரிய மக்கள் எழுச்சிப் போராட்டம் தோற்றம் பெறுவதைத் தடுக்க முடியாது - ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை By DIGITAL DESK 5 12 OCT, 2022 | 09:31 AM (எம்.மனோசித்ரா) தேர்தல்களைக் காலம் தாழ்த்தி நாட்டை மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருந்தால் , கடந்த மாதங்களை விட பாரிய மக்கள் எழுச்சி போராட்டங்கள் தோற்றம் பெறுவதை எவராலும் தடுக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர்…
-
- 0 replies
- 133 views
-
-
தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை என்ன செய்யவேண்டும்? உலக வங்கியின் அதிகாரி கருத்து By RAJEEBAN 12 OCT, 2022 | 11:19 AM இலங்கை அரசாங்கம் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்குஆட்சி முறையை மேம்படுத்தவேண்டும்,மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என உலக வங்கியின் தென்னாசியாவிற்கான தலைமை பொருளாதார நிபுணர் ஹன்ஸ் டிம்மெர் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உண்மையான அடிப்படை மற்றும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சீர்திருத்தங்கள் அவசியம் என ஹன்ஸ் டிம்மெர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் கடந்த காலங்களில் கடினமான சூழ்நிலைகளில் பல தவறுகள் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் தெ…
-
- 0 replies
- 131 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கூறிவிட்டு நஷ்ட ஈடு பற்றி பேசுங்கள் -சுரேஷ் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூறிய பின்னர் நஷ்ட ஈடு பற்றி கதையுங்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டை 2 இலட்ச ரூபாயாக அதிகரிப்பது என்பது உறவுகளை ஏமாற்றும் செயல். முன்னர் ஒரு இலட்ச ரூபாயினை நஷ்ட ஈடாக வழங்கினார்கள். தற்போதைய நாட்டின் பணவீக்கம் காரணமாக ஒரு இலட்ச ரூபாய் என்பது 2…
-
- 0 replies
- 194 views
-
-
இலங்கையில் தற்போது 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுகின்றனர் – பேராதனை பல்கலைக்கழகம். இலங்கையில் தற்போது 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 30 இலட்சம் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தனர் என்றும் ஆனால் அந்த தொகை தற்போது 96 இலட்சமாக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைச் சமூகத்தில் வாழும் சுமார் 42 வீதமான மக்கள் தற்போது வறுமையில் வாடுவது ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் 26 வீத…
-
- 0 replies
- 369 views
-
-
தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்துடன் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை உடன்படிக்கை யாழ்.பல்கலைக்கழகச் சட்டத்துறையும் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக் கிளையும் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.பல்கலைக்கழக சபையில் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது இதன் முதலாவது உடன்படிக்கையின் பிரகாரம் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் அனுசரணையுடன் ‘ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை’ வரை என்னும் தலைப்பில் தெரிவு செய்யப்பட்ட முப்பது சட்டத்துறை மாணவர்களுக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேவேளை இரண்டாவது உடன்படிக்கையானது ‘அவள் தலைமையில்’ என்னும் தலைப்பிலான வலுவூட்டல் செயற்திட்டம் ஒன்றை வ…
-
- 0 replies
- 132 views
-
-
பிணைமுறி மோசடி: அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டோர் விடுதலை பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து கொழும்பு நிரந்தர தீர்ப்பாயம் விடுதித்துள்ளது. பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது என கொழும்பு நிரந்தர தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த பிணை முறி மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகளை மூவரடங்கிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதன்படி அர்ஜூன் அலோசியஸ், அர்ஜுன மகேந்திரன், ஜெப்ரி அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோருக்கு எதிரான பத்து குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. இதனால் …
-
- 0 replies
- 256 views
-
-
80 தொன் கொள்ளளவுடைய இழுவைக் கப்பலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம் By T. SARANYA 11 OCT, 2022 | 04:51 PM (எம்.மனோசித்ரா) இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 80 தொன் கொள்ளவு கொண்ட இழுவைக் கப்பலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் தற்போது சிறந்த நிலையில் தொழிற்படும் 7 இழுவைக் கப்பல்கள் இருப்பதுடன், எதிர்காலத் தொழிற்பாடுகளுக்காக 80 தொன் கொள்ளளவு கொண்ட மேலுமொரு இழுவைக் கப்பல் கொள்வனவு செய்யப்பட வேண்டுமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமனுக்கோரல் செயன்முறையைக் கடைப்பிடித்து இழுவைக் கப்பலை கொள்வனவு செய்வதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், கப்…
-
- 2 replies
- 395 views
- 1 follower
-
-
பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடளித்த ஊடகவியலாளரை அலுவலகத்துக்குள் முடக்கி அச்சுறுத்தல் : பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு By VISHNU 11 OCT, 2022 | 10:31 PM ( எம்.எப்.எம்.பஸீர்) காலி முகத்திடலில் சட்டத்தரணிகள், மற்றும் தொழிற் சார் நிபுணர்கள் நடாத்திய ஆரப்பாட்டத்துக்கு இடையூறு விளைவித்து அடக்குமுறையை பிரயோகித்ததமை தொடர்பில் இரு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்க கோட்டை பொலிஸார் மறுத்துள்ள நிலையில் அது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர் நளின் தில்ருக் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளை…
-
- 1 reply
- 224 views
- 1 follower
-
-
ஐ.நா.வுக்கு கணக்கு காட்ட இனவழிப்பு அரசின் மற்றுமொரு திட்டம் - ஈழத்தமிழர் உறவினர் அமைப்பு கண்டனம் By VISHNU 11 OCT, 2022 | 10:51 PM (எம்.நியூட்டன்) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களை சந்திக்கும் திட்டம் ஒன்றுடன் இனவழிப்பு அரசின் ஆணைக்குழுக்கள் எதிா்வரும் 21 ஆம் திகதி கிழக்கு மாகாணமான மட்டக்களப்பிற்கு செல்லவிருப்பதன் நோக்கம் சா்வதேச சமூகத்திற்கு மீண்டும் ஒருமுறை கணக்கு காட்டி ஏமாற்றுவதற்கான மற்றொரு முயற்சி என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இதனை அம்பலப்படுத்தும் வகையில் ஈழத்தமிழ் மக்கள் இதனை முழுமையாகப் புறக்கணித்து இதில் எமக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும். என வலிந்து காணாம…
-
- 1 reply
- 464 views
- 1 follower
-
-
சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு ! 11 OCT, 2022 | 07:36 PM லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,300 ரூபாவாக விற்பைனை செய்யப்படவுள்ளது. இதேவேளை, 5 கிலோகிராம் லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 கிலோகிரம் நிறையுடைய லாப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,120 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என லாப் நிறுவனம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/137467
-
- 0 replies
- 341 views
- 1 follower
-