Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து – நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் தெரிவித்தார். வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹசந்த குணதிலக்க ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வசந்த முதலிகே சிறையில் இருந்து இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியதையும் சுட்டிக்காட்டினார். நாட்டிற்கு எதிரான மனித உரிமைப் பிரேரணைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அரசாங்கமே செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். https://athavannews.com/2022/1303040

  2. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிப்பதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இத் தீர்மானமானது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ வீரர்களினால் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளதாக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது இத் தீர்மானம் குற்றம் இழைத்தவர்களை பொறுப்பு கூறவைப்பதற்குப் பதிலாக, அவர்களின் சர்வதேச குற்றங்களை வெள்ளை அடிப்ப…

  3. தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்து இலாபம் ஈட்டிய முக்கிய நபர்கள் – தகவலை வெளியிட்டார் தயாசிறி தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்தமை மூலம் சபந்தப்பட்ட நிறுவனங்களின் முகவர்களும் அரசியல்வாதிகளும் 100 மில்லியன் டொலர் சம்பாதித்துள்ளதாக சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. குறித்த தகவல் தமக்கு கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தற்போதைய எரிசக்தி அமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் எரிபொருள் இறக்குமதிக்காக புதிய நிறுவனம் பதிவு செய்யப்பட்டு அதன் ஊடாக எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப…

  4. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு "கணிசமான அளவு குறைவான" சாதகமான வாக்குகள் கிடைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி புதன்கிழமை தெரிவித்தார், 51 வது அமர்வு நடைபெற்று வரும் ஜெனீவா மன்றத்தில் சர்வதேச ஆதரவு குறைந்துள்ள நிலைமையினை புரிந்து கொண்டுள்ளார் என தெரிகிறது. “வாக்கு எண்ணிக்கை கணிசமாகக் குறையும். நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும்,” என்று தற்போது ஜெனிவாவில் உள்ள சப்ரி, இணையம் ஊடாக நடைபெற்ற ஊடக மாநாட்டில் கூறினார். இலங்கையைப் பற்றி அனைத்து உறுப்பினர்களும் எப்படி நினைக்கிறார்கள் என்பதை வாக்களிக்கும் முறையானது "நியாயமான பிரதிபலிப்பு அல்ல" என்பதைக் குறிப்பிட்ட அவர், கவுன்சிலில் வாக்கெடுப்புக்கு முன்னதாக சக்தி வாய்ந்த நாடுகளின் "கடுமையான பரப்புரை" இருக்கிறது,…

    • 2 replies
    • 342 views
  5. யாழ். மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பு! நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால், யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) நொதோர்ன் தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றது. கடந்த 2020ஆம் ஆண்டு யாழ். மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்புப் படை வாகனம் விபத்தில் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில் யாழ் வணிகர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால் குறித்த வாகனம் யாழ் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது. கையளிப்பு நிகழ…

  6. புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் அவசியம் – கோர் குழு அறிவிப்பு விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறை அவசியம் என கோர் குழு வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக 19 அம்ச தீர்மானத்தை முன்வைத்து கோர் குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. உயர் ஸ்தானிகர் அலுவலகம், மனித உரிமைகள் பேரவையின் விசேட நடைமுறைகளுடன் இலங்கை அரசாங்கத்தின் ஈடுபாட்டை வரவேற்ற குறித்த குழு, அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. உணவுப் பாதுகாப்பின்மை, எ…

    • 2 replies
    • 600 views
  7. தேவையில்லாமல் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் – ஐ.நா.வில் அலிசப்ரி சீற்றம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது நாட்டின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றம் சாட்டியுள்ளார். பொருளாதார குற்றங்களுக்கு யாரேனும் பொறுப்புக் கூறினால் அவர்கள் மீது நாட்டின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே ஐ.நா.ஆணையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றங்கள் என்ற சொல்லை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு இடமளிக்காமல் பலவந்தமாக இலங்கையை நிகழ்ச்சி நிரலில் வைத்திருப்பதாக அலி …

    • 4 replies
    • 832 views
  8. முல்லைத்தீவில் பதற்றம் : பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல். முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு எதிராக இன்று இடம்பெற்ற போராட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு ஆதரவான கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக முல்லைத்தீவில் பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும் அங்கு ஏற்பட்ட பதற்றத்தை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2022/1303075

  9. ஜெனிவா தீர்மானத்தை சமாளிப்பது கடினம் (வீடியோ) பலம் வாய்ந்த அரசுகள் செலுத்தும் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு ஜெனிவா தீர்மானத்தை சமாளிப்பது கடினம் என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். மனித உரிமைகள் பேரவையின் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=166323

    • 0 replies
    • 286 views
  10. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 15,000 ரூபா வழங்க தீர்மானம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாய் வழங்க முதலாளிமார் சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார். கண்டியில் நேற்று (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் துயரங்களைக் கடந்தே தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். மாதாந்த ஊதியத்தையும் சம்பள முற்பணத்தையும் நம்பியே…

    • 0 replies
    • 148 views
  11. வெளியானது எரிவாயு சிலிண்டர் விலை தொடர்பான விபரம் By T. SARANYA 05 OCT, 2022 | 12:35 PM (எம்.வை.எம்.சியாம்) லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக என்று இலங்கை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 271 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. விலை சூத்திரத்திற்கு அமைய குறித்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத…

  12. உணவு ஒவ்வாமையால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி 05 OCT, 2022 | 12:15 PM புத்தல பிரதேசத்தில் 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக குறித்த மாணவர்கள் சுகவீனமடைந்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், உணவு ஒவ்வாமை காரணமாக சுகவீனமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பற்றாக்குறை நிலவி வருகிறது .இதனை நிவர்த்தி செய்தற்காக பாடசாலைகளில் மாணவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesa…

  13. பொருளாதார வீழ்ச்சிக்கு அரசின் பிழையான வரி நிவாரணங்களே காரணம் - கபீர் ஹாசிம் By NANTHINI 05 OCT, 2022 | 10:19 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் முதலீடு செய்யும் 14 வேலைத்திட்டங்களுக்கு வரி நிவாரணம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், எந்த அடிப்படையில் வரி நிவாரணம் வழங்குவதென்று பாராளுமன்றத்துக்கு தெரியாது. நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம், அரசாங்கத்தின் பிழையான வரி நிவாரணங்களாகும். அத்துடன் இந்தியாவின் எஸ்.சி.எல். நிறுவனத்துக்கு 17 வருடங்களுக்கு வரி நிவாரணம் வழங்குவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கி…

  14. சுமார் 5 இலட்சம் பேருக்கு நிரந்தர ஓட்டுநர் உரிமம் இல்லை! இதுவரை சுமார் 5 இலட்சம் பேருக்கு நிரந்தர ஓட்டுநர் உரிம அட்டை வழங்க முடியவில்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் உரிய அட்டைகள் இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சுமார் 10 இலட்சம் அட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல் தொகுதியாக 5 இலட்சம் அட்டைகள் இம்மாதம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக 43 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்…

  15. மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான எண்ணத்தை மாற்றுவதற்கு கோட்டாபய முயற்சி? மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான எண்ணத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார். பலநாடுகள் புகலிடம் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, நாட்டிற்கு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் மத்தியில் தன்னை பற்றிய எதிர்மறையான அபிப்பிராயங்களை மாற்றியமைத்து தன்னைமீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான கருத்தினை மாற்றுவதற்கும் தன்னை சுற்றியிருந்தவர்கள் தவறான முடிவுகளை எடுக்குமாறு தன்னை தவறாக …

  16. ஆளும் தரப்பின் எம்.பிக்களுக்கு அவசர உத்தரவு – முக்கிய தகவல் வெளியானது! ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று(புதன்கிழமை) மாலை நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் தலைமை அமைப்பாளர் அலுவலகத்தில் இதுதொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற நிலையியற் கட்டளைத் திருத்த விவாதத்தின் போது, கோப் மற்றும் கோபா குழுவின் தலைவர்கள் பதவிகள் தமக்கே வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் திருத்தங்களைச் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளதாக ஆளும் தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் வாக்கெடுப்புகள் நடத்தப்படுமாயின் ஆளும்…

  17. இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக அவதானம் செலுத்துவதாக அறிவித்தது பிரித்தானியா! இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையின் முக்கிய இராணுவ அதிகாரிகளுக்கு பிரித்தானியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் ஜீஸ் நோர்மன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணிப்பில் வைத்திருப்பதற்கான சிறந்த பொறிமுறை பிரித்தானியாவிடம் உள்ளது. தொடர்ந்தும் இலங்கை தமது பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் என்ற விடயம…

  18. வன்முறையைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன ஆர்ப்பாட்டங்கள் என்ற போர்வையில் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதனை அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (4) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். வன்முறைச் செயல்கள் இடம்பெற்றால் மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாக பந்துல குணவர்தன தெரிவித்தார். அவ்வாறான செயல்களைத் …

  19. நாடாளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு CID இன் பணிப்பாளருக்கு அழைப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க செய்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி அவர் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவில் முன்னிலையாகவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக…

  20. நாமல் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார் – விமலவீர திஸாநாயக்க முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் தன்னைப் போலவே போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடுமையான பட்டினியால் வாடும் நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் மாத்திரமன்றி, எந்தவொரு நாட்டின் வரலாற்றிலும் ஊட்டச்சத்து குறைபாடு ஓரளவிற்கு இருந்ததாகவும் ஆனால் ஊடகங்களில் அவ்வளவாக செய்திகள் வெளியாகவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இப்போது…

    • 3 replies
    • 341 views
  21. முன்னாள் மத்திய ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சந்தித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ஜனாதிபதி மறுப்பு பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை ஜனாதிபதி ஜப்பானில் இருந்து இலங்கை திரும்பிய போது சிங்கப்பூரில் சந்தித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்த குற்றச்சாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் நிராகரித்துள்ளார். “ஜனாதிபதி ஜப்பானில் இருந்து இலங்கை திரும்பும் வழியில் சிங்கப்பூர் அமைச்சர் ஒருவரைச் சந்தித்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர் உண்மையில் மகேந்திரனைச் சந்தித்து அவருடன் மதிய உணவு உட்கொண்டதாக எங்களுக்குத் தகவல் கி…

    • 2 replies
    • 275 views
  22. IMF ஒப்பந்தத்தின் விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் – பிரதமர் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பின்னர், குறித்த உடன்படிக்கை தொடர்பான விபரங்கள் உரிய குழுக்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலின் பின்னர் ஒரு வரைவு ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியம் தொடர்பான விடயம…

    • 1 reply
    • 220 views
  23. PreviousNext அமைச்சரவை முடிவுகள் இதோ... 2022.10.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள், 01. ´உணவுக் கொள்கைக் குழுவை´ நிறுவுதல். 02. அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயதை திருத்தம் செய்தல். 03. 2022/23 பெரும்போகச் செய்கைக்குத் தேவையான மியூரேட் ஒஃப் பொடாஸ் (MOP) உரக் கொள்வனவுக்கான பெறுகை. 04. சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் 2006 ஆம் 01 ஆம் இலக்க அரசாங்க அரசிறையைப் பாதுகாத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்தம் செய்தல். 05. பாடசாலை பகலுணவு வேலைத்திட்டம். 06. 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத…

    • 0 replies
    • 469 views
  24. கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான சட்டங்கள் கஞ்சாவை ஆயுர்வேதப் பொருட்களாக சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இது தொடர்பான சட்டங்கள் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி இதனைத் தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=166289

    • 0 replies
    • 163 views
  25. LTTE மற்றும் JVPயினரே நாட்டை அழித்தனர்- மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாடு வீழ்ச்சியடைந்தமைக்கு காரணம் அதன்பின் நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளே என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வலவாஹெங்குணவெவே தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பியினரே நாட்டை சீரழித்த வன்முறை அலையை கட்டவிழ்த்துவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரஹத் மகிந்த தேரர் காலமானதன் 2282வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மிஹிந்தலை விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளை தொடர்ந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சாதாரண மக்கள் போசாக்கின்மையால் அவதியுறும் வேளையில் ஆ…

    • 4 replies
    • 404 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.