ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143582 topics in this forum
-
கீதா எம்பியை சபாநாயகர் பேய் என அழைத்தாரா? கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் அபேவர்தன தன்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தரப்பு நிராகரித்துள்ளது . ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குமாரசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க, முன் அறிவித்தல் இன்றி, சமுர்த்தி மானியம் தொடர்பில் சில கேள்விகளை தன்னிடம் கேட்டதாகவும் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தான் தயாராக இல்லை என்று கூறிய போது சபாநாயகர் தம்மிடம…
-
- 0 replies
- 187 views
-
-
மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனந்தெரியாதோரால் மீண்டும் அகற்றல் By VISHNU 17 NOV, 2022 | 04:01 PM மட்டக்களப்பு கிரான் சுற்றுவளைவு மையத்தின் அருகாமையில் இரு மருங்கிலும் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத நபர்களினால் இன்று காலை (17) அகற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர். இன்று காலை குறித்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அவை கிழித்து அகற்றப்பட்டுள்ளதுடன் அவை கட்டிய கயிறுகள் மாத்திரம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை கடந்த 15.11.2022 ஆம் திகதியன்று கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தி…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகள் கொன்றதாக கூறப்படும் 170 முஸ்லிம்கள் உடல்களை தோண்டி மத முறைப்படி அடக்கம் செய்யக் கோரிக்கை கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல்.மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக 58 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சம்மாந்துறையில் தையற்கடை நடத்தி வந்த ஹபீபுர் றஹ்மான் எனும் தமது குடும்பத்தின் மூத்த சகோதரர், குருக்கள் மடத்தில் புலிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகின்றார் நஸீலா. மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி, படுகொலை செய்து, அங்கேயே புதைக்கப்பட்ட சுமார் 170 முஸ்லிம்களின் உடல்களையும் தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீ…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
‘நான் சாயம் பூசவில்லை.. வயதை மறைக்கவில்லை – கிரியெல்ல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டத்தை கடுமையாக விமர்சித்து எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார். இன்று நாட்டில் நிலவும் எந்தவொரு பிரச்சினைக்கும் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த உரையின் போது, ஆளும் கட்சி உறுப்பினர் ஜெகத் குமார, கிரியெல்லவை தலை நரைத்தவர் என்று குறிப்பிட்டார்., இதற்கு கிரியெல்ல இவ்வாறு பதில் வழங்கினார். ‘நான் சாயம் பூசவில்லை.. வயதை மறைக்கவில்லை.. மஹிந்த என்னை விட மூத்தவர்… சாயம்…
-
- 0 replies
- 514 views
-
-
25 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவில் பொறியியல் பட்டம்பெற்ற நபர் கைது! By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 02:39 PM அமெரிக்காவில் கணினி மென்பொருள் பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், பல திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் நாரஹேன்பிட்டி கித்துல்வத்தை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். 25 கொள்ளைகள் மற்றும் 6 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான உடைமைகளை கொள்ளையடித்துள்ளமையும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து சுமார் …
-
- 9 replies
- 405 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் சுகாதார திணைக்களத்தில் கடமையற்றிவரும் போதை வியாபாரி கைது! மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் போதை பொருள் வியாபரி ஒருவரின் வீட்டை இன்று (வியாழக்கிழமை) முற்றுகையிட்ட பொலிசார் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள காரியாலயம் ஒன்றில் கடமையாற்றிவரும் 28 வயதுடையவரை 2050 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய பொலிஸ் பலனாய்வு பிரிவினர் குறித்த நபரை கண்காணிப்பில் ஈடுபட்டுவந்துள்ளனர். இந்த நிலையில் போதை பொருள் வியாபாரியின் வீட்டை மட்டு தலைமையக பொலிஸ் நிலைய சுற்றுச் சூழ…
-
- 0 replies
- 144 views
-
-
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் திடீர் மரணம் By T. SARANYA 17 NOV, 2022 | 09:47 AM வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இன்று இரவு (16) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் காய்ச்சல் காரணமாக தனது விடுதியில் இறந்துள்ளார். தனது சக ஆசிரிய மாணவர்களிடம் உணவு வாங்கி வருமாறு கூறிவிட்டு விடுதியில் படுத்திருந்துள்ளார். உணவு வாங்கிக் கொண்டு சக ஆசிரிய மாணவர்கள் அங்கு வந்த போது காய்ச்சல் காரண…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் அரசாங்கத்தில் : தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்கின்றார் மஹிந்த முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உள்ள இந்த அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் அவநம்பிக்கையை துறந்து ஒருசில விடயங்களில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதேவேளை புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தி…
-
- 4 replies
- 284 views
-
-
காணி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி மன்னாரில் காணப்படும் காணி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெல்ஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போது மன்னார் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கினார். மேலும் மடு யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது குறித்தும் இந்தபோது விசேடமாக கலந்துர…
-
- 0 replies
- 135 views
-
-
துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் – கஜேந்திரன் எம்.பி. வலியுறுத்து துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, அதன் புனிதத்தை பாதுகாக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இந்த கோரிக்கையை விடுத்தார். யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் வவுனியா மற்றும் மட்டக்களப்பில் உள்ள பல துயிலும் இல்லங்களை இராணுவம் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சுட்டிக்காட்டினார். இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள துயிலும் இல்லங்களி…
-
- 0 replies
- 113 views
-
-
கனேடியத் தமிழர் பேரவை முன்வைத்துள்ள 10 கோரிக்கைகள் குறித்து அவதானம் – நீதி அமைச்சர் கனேடியத் தமிழர் பேரவை முன்வைத்துள்ள தமிழ் மக்கள் சார்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 10 கோரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என நீதி அமைச்சர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தம்மோடு இணைந்து பணியாற்ற சர்வதேச நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அழைப்பும் விடுத்துள்ளார். குறித்த 10 கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று கனேடியத் தமிழர் பேரவையினால் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் நேற்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது. இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் நீதி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்…
-
- 0 replies
- 134 views
-
-
தமிழர் தொடர்பான ரணிலின் நடவடிக்கையில் மறைந்திருக்கும் இரகசியத் திட்டம்! பகிரங்கப்படுத்தப்பட்ட விடயம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும், அரசியல் தீர்வினைப் பெற்று தருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திடீரென கூறியிருப்பது சர்வதேசத்தின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான இரகசிய நோக்கமாக கூட இருக்கலாம் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரமேஷ் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் வெளியிட்ட கருத்தின் உண்மைத் தன்மை என்ன? 75ஆவது சுதந்திர தினத்திற்கு முன் வடக்கின் அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும், எவரும் எமது நாட்டின…
-
- 2 replies
- 434 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்த எதிர்ப்பை திசைத்திருப்ப நீதியமைச்சர் சபையில் தெரிவித்த விடயம் பொய்யானது - செல்வராஜா கஜேந்திரன் By VISHNU 16 NOV, 2022 | 10:36 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகத்திற்கு எதிராக வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து நாங்கள் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக நீதியமைச்சர் சபையில் குறிப்பிட்ட விடயம் முற்றிலும் பொய்யானது. இவரது கருத்தை முற்றாக கண்டித்து, நிராகரிக்கிறேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். தோல்வியடைந்த ஒற்றையாட்சி மு…
-
- 0 replies
- 142 views
-
-
அதிகரிக்கின்றது கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் 16 NOV, 2022 | 10:37 PM கடவுச் சீட்டு கட்டணங்கள் நாளை வியாழக்கிழமை (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கடவுச் சீட்டுக்கான சாதாரண சேவைக் கட்டணம் 5,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு நாள் சேவை கடவுச் சீட்டுக்கான கட்டணம் 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கின்றது கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் | Virakesari.lk
-
- 0 replies
- 159 views
-
-
பேச்சுவார்த்தைக்கான நாடகங்களை நடத்திக் கொண்டு காணிகளை சுவீகரிக்க முயற்சி Posted on November 16, 2022 by தென்னவள் 7 0 தென்னிலங்கையில் ரணில் – ராஜபக்ச அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கான நாடகங்களை நடத்திக் கொண்டு வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை சுவீகரிக்க முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். வடக்கு ஆளுனர் அலுவலகம் முன் நேற்று இடம்பெற்ற முற்றுகைப் போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் மக்களினுடைய விருப்பங்களை மீறி தமிழ் மக்களினுடைய காணிகளை சுவீ…
-
- 0 replies
- 125 views
-
-
யாழில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அடகு வைக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு! By DIGITAL DESK 5 16 NOV, 2022 | 04:52 PM யாழ்ப்பாண குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சுன்னாகம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு பதினைந்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் எனினும் இன்று வரை நான்குக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுன்தினம் நான்கு நாட்களுக்கென வாடகைக்கு எடுத்துச் செல…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் By T. SARANYA 16 NOV, 2022 | 03:39 PM கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றக் கோரி கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (16) மேற்கொண்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்காதே, வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களை அவமதிக்காதே, வெளியேறு வெளியேறு விடுதியை விட்டு வெளியேறு, சீரழிக்காதே சீரழிக்காதே எமது சமூகத்தை சீரழிக்காதே என பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தை மேற…
-
- 1 reply
- 493 views
- 1 follower
-
-
அரச நிறுவனங்களில் அச்சிடும் செலவைக் குறைக்க விசேட திட்டம் By T. SARANYA 16 NOV, 2022 | 10:51 AM அரச நிறுவனங்களின் அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் விடுமுறை (லீவு) விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான முன்னோடி திட்டம் உள்நாட்டு அமைச்சில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆரம்ப செயற்றிட்டம் வெற்றியடையும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அரச அலுவலகங்களுக்கு இது தொடர்பான முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் …
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு! By VISHNU 16 NOV, 2022 | 12:40 PM முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள 'கோத்தபாய கடற்படை கப்பல்' கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை இன்று (16) முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைத்துள்ள கடற்படையினர் அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த …
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
வசந்த முதலிகே விடுதலை - பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் - சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டுகோள் By RAJEEBAN 16 NOV, 2022 | 12:33 PM பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவது மற்றும் வசந்த முதலிகே கல்வேல ஸ்ரீதம்ம தேரர் விடுதலை ஆகிய விடயங்களில் இலங்கையில் உள்ள இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள் தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இது தொடர்பான கடிதங்களை தூதரகங்களிடம் கையளித்துள்ளனர். அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஒடுக்குமுறைகளை பயன்படுத்துவதை கைவிடவேண்டும் என தூதரகங்கள் வேண்டுகோள் விடுக்கவேண்டும் எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். …
-
- 0 replies
- 381 views
- 1 follower
-
-
பல்லைக்கழக மாணவர்கள் எப்போதும் நிபந்தனையின்றி மக்களுக்காகப் பாடுபடும் ஒரு குழுவினர் - பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் By T. SARANYA 16 NOV, 2022 | 11:59 AM (வத்துகாமம் நிருபர்) பல்கலைக்கழக மாணவர்கள் எப்போதும் நிபந்தனையின்றி மக்களுக்காகப் பாடுபடும் ஒரு குழுவினராகும் என்று பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அனுராதா வித்தாகே தெரிவித்தார். பேராதனைப் பல்கலைக்கழக வளவில் நேற்று (15) இடம் பெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் சங்க அமைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்ய வேண…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
ஈஸ்டர் தாக்குதல்: காத்தான்குடியைச் சேர்ந்த 16 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் ! உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 16 பேருக்கு விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இவர்களை எதிர்வரும் 29 ம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து நீதவான் உத்தரவிட்டார். ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹரானின் சகோதரி மற்றும் அவரது கணவர் உட்பட 66 பேரை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில்…
-
- 0 replies
- 138 views
-
-
சுமந்திரனின் அழைப்பு : தமிழ் தேசியக் கட்சிகள் புறக்கணிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் எவையும் பங்கேற்கவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டும் இதில் பங்கேற்ற நிலையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் இதில் பங்கேற்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளின் பேரில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கூட்டத்துக்கான அழைப்பை விடுத்திருந்தார். எனினும் இந்தக் கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் மாத்திரம…
-
- 8 replies
- 960 views
- 1 follower
-
-
வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்- தேடும் பணி தீவிரம் வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 பேர் தப்பியோடியுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையில் போதைப் பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த புனர்வாழ்வு நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தங்க வைக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களில் 5 பேர் தப்பியோடியுள்ளனர். விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட போதே குறித்த 5 பேரும் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது. தப்பியோடிய 5 பேரும் வடபகுதியைச் …
-
- 0 replies
- 147 views
-
-
தமிழ் மக்களை புறக்கணிக்க மாட்டோம் – அரசாங்கம் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து வேலைத்திட்டங்களில் இருந்தும் தமிழ் மக்களை புறக்கணிக்கும் நோக்கம் இல்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர், வடக்கு மாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் பிரச்சினை குறித்து ஆராய வடக்கு ஆளுநர் தலைமையில் செலயலணி அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதேபோன்று நாடளாவிய ரீதியிலும் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அடையாள அட்ட…
-
- 0 replies
- 386 views
-