Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 24 Sep, 2022 | 09:27 PM தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான இந்த நிகழ்வில் ந…

  2. குருந்தூர்மலை பிரதேசம், தமிழர்களுடையதல்ல. – கொழும்பில் ஆர்ப்பாட்டம். முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தமது சுயலாப அரசியலுக்காக பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2022/1301320

    • 6 replies
    • 795 views
  3. கோட்டாவின் மனைவியிடம் தொலைபேசியில் மிரட்டி கப்பம் கோரியவர் கைது By T YUWARAJ 26 SEP, 2022 | 09:25 PM (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் அழைத்து,மிரட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபரை சி.ஐ.டி. எனும் குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது. கொலன்னாவை பகுதியில் அழகு கலை நிலையம் ஒன்றில் சேவையாற்றும் இளைஞர் ஒருவரையே சி.ஐ.டி.யினர் இவ்வாறு கைது செய்துள்ளனர். சந்தேக நபரை கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் சி.ஐ.டி.யினர் ஆஜர் செய்ததையடுத்து அவரை பொலிஸ் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலர் சு…

  4. பிறந்து 7 நாட்களேயான கைக்குழந்தையை 50,000 ரூபாவுக்கு விற்பனை செய்த இருவர் கைது By T YUWARAJ 26 SEP, 2022 | 09:54 PM பிறந்து ஏழு நாட்களேயான கைக்குழந்தை ஒன்றை 50,000 ரூபாவுக்கு விற்பனைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை குழந்தையின் தந்தையால், விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குழந்தையின் தாய் மேற்கொண்ட முறைப்பாட்டுகமைய, சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குழந்தையை விற்பனை உதவியதாக கூறப்படும் தாதி ஒருவரின் கணவரும், அதனை விலைக்கு வாங்கிய பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக…

  5. தனியார் வங்கியில்... கொள்ளை : இரு சந்தேக நபர்கள், ஆயுதங்களுடன் கைது. தனியார் வங்கியொன்றில் 5 மில்லியன் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள வங்கியில் இடம்பெற்ற இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். https://athavannews.com/2022/1301382

  6. இரு பேருந்துகள் மோதி, விபத்து – 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி! ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் பாடசாலை பேருந்து ஒன்றும் இன்று (திங்கட்கிழமை) மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறையில் இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஹொரண குருகொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்குச் சென்ற பேருந்து, இலிபா பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத் தொழிற்சாலையின் பேருந்து, பாடசாலையருகே நிறுத்தப்பட்டிருந்த பாடசாலைப் பேருந்தின் பி…

  7. திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு By VISHNU 26 SEP, 2022 | 01:28 PM K.B.சதீஸ் தியாகி திலீபனின் 35 வது நினைவு தினம் வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று (26) அனுஸ்டிக்கபட்டது. அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அமைந்துள்ள கொட்டகையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தியாகி திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினர் கலந்து கொண்டனர். திலீபனின் நினைவு த…

    • 0 replies
    • 187 views
  8. இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி எப்போது கிடைக்கும் - கடன் வழங்கிய நாடுகளுடனான சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது என்ன? By RAJEEBAN 26 SEP, 2022 | 12:14 PM இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைப்பதற்கு மூன்று நான்கு மாதங்களாகலாம் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு நிதி வழங்கிய நாடுகளுடனான சந்திப்பின்போது இலங்கை அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு நிதி உதவி வழங்கிய நாடுகளிடமிருந்து நிதி தொடர்பான உத்தரவாதங்கள் இன்னமும் கிடைக்காததால் சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று குழு இலங்கைக்கு நிதி உதவியை வழங்குவதற்கான அனுமதியை வழங்க முடியாத நிலையில் உள்ளது இதன்…

  9. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் திலீபனின் 35 ஆவது நினேவந்தல் எழுச்சிபூர்வமாக அனுஷ்டிப்பு By VISHNU 26 SEP, 2022 | 01:55 PM தியாகதீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று திங்கட்கிழமை (26) எழுச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கணவதிப்பிள்ளை குககுமரராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டு தியாகதீபம் திலீபனின் உயிர்நீத்த காலை 10.48 மணிக்கு அவரின் திரு உருவ படத்திற்கு மாவீரர் ஒருவரின் தாயார் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்…

    • 0 replies
    • 165 views
  10. இலங்கையை விட்டு ஒரு மணித்தியாலத்திற்கு 32 பேர் வெளிநாடு செல்வதாக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். இது நாடு துரிதமாக வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதற்கான அறிகுறி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அத்துடன் பல்கலைக்கழக கல்விக்கான அவசியமான வளங்கள் இலங்கையில் இல்லாததன் காரணமாக மக்கள் தமது சொத்துக்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://tamilwin.com/article/sri-lankans-going-abroad-paper-news-1664164441

  11. நீர் வெறுப்பு நோயினால் 2 வயது குழந்தை உயிரிழப்பு By T. SARANYA 26 SEP, 2022 | 10:34 AM வாரியபொல கனத்தேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை நீர் வெறுப்பு நோயினால் (Rabies) உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 3 ஆம் திகதி வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் குழந்தையை கடித்துள்ளது. இந்நிலையில், அந்த நாய் விசர் நாயாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அடுத்து, தடுப்பூசி போடுவதற்காக குழந்தையின் பெற்றோர் வாரியபொல வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். எவ்வாறாயினும், வாரியபொல வைத்தியசாலையில் விசர் நாய்க்கடிக்கான தடுப்பூசி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் குழந்தையை நிக்…

  12. மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகள் நிர்வகிக்கப்படுகின்றமை தவறானது - முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய By VISHNU 25 SEP, 2022 | 09:49 PM (எம்.மனோசித்ரா) மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகளை நிர்வகித்துச் செல்வது மக்களின் அடிப்படை உரிமை மீறல் என்பதோடு , அது பாரிய தவறுமாகும். இன்று அனைத்து மாகாணசபைகளையும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுனர்கள் தனித்து நிர்வகித்துக் கொண்டிருக்கின்றனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , மாகாண ஆளுனர்கள…

  13. மாகாணசபை இயங்காத சூழலில், வடக்கிலுள்ள படையினருக்கு அரசகாணிகள் தாரைவார்ப்பு! *22 ஆயிரம் குடும்பங்கள் வசிக்க காணியில்லை *40 ஏக்கர் பாதுகாப்புத் தரப்பிடம் கையளிப்பு வடக்கு மாகாண சபை­யின் ஆயுள் காலம் முடி­வ­டைந்த பின்­னர் பாது­காப் ­புத் தரப்­பி­ன­ருக்கு 40 ஏக்­கர் அரச காணி­கள் இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாகக் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தி னூடாக கேட்­கப்­பட்ட கேள்­விக்கு, வடக்கு மாகாண காணித் திணைக்­க­ளம் வழங் ­கிய பதிலிருந்தே இந்த விட­யங்­கள் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. வடக்கு மாகா­ணத்­தில் 22 ஆயி­ரம் குடும்­பங்­கள…

  14. ”இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் அரசியல், சமூக, பொருளாதார சீர்திருத்தத்திற்கான வாய்ப்பாகும்” உள்நாட்டிலும் வெளியிலும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தத்திற்கான வாய்ப்பாகும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வில் அமைச்சர் அலி சப்ரி இதனைக் குறிப்பிட்டுள்ளார் அமைச்சரின் முழுமையான உரை வருமாறு, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் உலகத் தலைவர்களை ஒன்று கூடுகின்ற ஒரு அவையான ஐக்கிய நாடுகள் சபையின் 77வது அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகின்றேன். தற்போதை…

  15. ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை, மேற் பார்வையிட... பதில் அமைச்சர்கள் நியமனம்! ஜனாதிபதி நாட்டில் இல்லாத காலப்பகுதியில், அவருக்கு கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைக்கான பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட…

  16. தேசிய பாதுகாப்பை... உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு, ஜனாதிபதிக்கு உள்ளது-நாமல். தேசிய பாதுகாப்பு என்பது நாட்டு மக்களின் பாதுகாப்பாகும். அதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்குக் காணப்படுகிறது எனவேதான் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என நாடடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதேவேளை கலவரத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எவரேனும் முயற்சிப்பார்களாயின் அந்த முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்காது எனவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1301171

  17. யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு - பொலிஸார் அதிர்ச்சி By T YUWARAJ 25 SEP, 2022 | 11:37 PM யாழ்.மாவட்டத்தில் உயிர்கொல்லியான ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்ய சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என பொலிஸார் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. யாழ்.மாவட்டத்தில் அதிகளவில் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் ஹெரோயின் உள்ளிட்ட அபாயகரமான போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பலர் அதற்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர். குறிப்ப…

  18. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மனுக்கள்- ரணில் மீது.. நடவடிக்கை எடுக்காதிருக்க, உச்ச நீதிமன்றம் தீர்மானம். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை என உச்ச நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1301224

  19. மஹிந்த தலைமையில் மீண்டும் எமது அரசாங்கத்தை உருவாக்குவோம் - மஹிந்தானந்த சவால் By VISHNU 25 SEP, 2022 | 10:01 PM (எம்.வை.எம்.சியாம்) பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு டிசம்பர் மாதமளவில் தீர்வுகள் வழங்க முடியும் மேலும் நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வந்து கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மீண்டும் எமது அரசாங்கத்தை உருவாக்குவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி உறுப்பினர்களை தெளிவுப்படுத்தும் நிகழ்வொன்…

  20. சுமந்திரனால், முன்னெடுக்கப்படும் போராட்டம்... ஒரு போலிப்போராட்டம். – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள். சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒரு போலிப்போராட்டம் என வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்துகருத்து தெரிவித்த அவர்கள். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “எமது தொடர்ச்சியான போராட்டம் இன்று 2044வது நாளை எட்டியுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை சிங்களவர்கள் ஒருபோதும் அகற்ற மாட்டார்கள். PTA என்ற பெயரை தேசிய பாதுகாப்பு சட்டம் என்று மாற்றுவது பற்றி ஒரு பேச்சு உள்ளது. இது சர…

  21. சேலை அவசியமா? இன்று, வெளியாகின்றது... சுற்றறிக்கை. அரசாங்க ஊழியர்களுக்கு பொருத்தமான உடையில் சேவைக்கு சமூகமளிப்பதற்கு அனுமதி வழங்கும் சுற்று நிருபம் இன்று திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது. 2019 வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் ஆண் ஊழியர்கள் பணிநேரத்தில் காற்சட்டை மற்றும் மேற் சட்டை அல்லது தேசிய உடையை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெண் ஊழியர்கள் சேலை, ஒசாரி என அழைக்கப்படும் கண்டியன் புடவை அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான உடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுற்று நிருபம் வெளியான பின்னர் பரிந்துரைக்கப்படும் ஆடைகளுக்கு மேலதிகமாக தங்களுக்கு விருப்பமான பொருத்தமான ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்படும் என பொது நிர்வாக அமைச்ச…

  22. மத ஸ்தலங்களில்... மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுவது குறித்து, கலந்துரையாடல். மத ஸ்தலங்களில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுவது தொடர்பாக மின்சார சபைக்கும் புத்தசாசன அமைச்சுக்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. புதிய மின் கட்டண திருத்தத்துடன் மத ஸ்தலங்களில் அதிகளவிலான மின்சார கட்டணம் அதிகரிப்பதாக புத்தசாசன அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சில சமய ஸ்தலங்கள் நிரம்பி வழியும் சந்தர்ப்பங்களிலும் அதிகளவான பிக்குகள் இருக்கும் சந்தர்ப்பங்களிலும் மின்சார பாவனை ஒப்பீட்டளவில் அதிகரிப்பது உள்…

  23. சுற்றுலா பயணிகள் வருகை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை ! இலங்கை;- நாட்டில் மீண்டும் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையலாம் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த வருட இறுதி வரை சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்பட மாட்டாது. “சுற்றுலாவில் முக்கிய விஷயம் நாட்டில் அமைதியான சூழலை உருவாக்குவது. மீண்டும் போராட்டங்களை நடத்தி உலகுக்குக் காட்டினால் நாட்டில் அமைதி இல்லை. நாட்டில் பரபரப்பு அலை வ…

  24. வெளிநாட்டு, வேலைக்கு செல்பவர்களுக்கும்... ஓய்வூதியம். – அமைச்சர் அறிவிப்பு. வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். 18 தொடக்கம் 59 வயதுக்குட்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ‘மனுசம்’ எனும் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். மனுசவி ஓய்வூதியத் திட்டத்தில் பிரவேசிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபடுவது கட்டாயம் என்றும் அமைச்சர் கூறினார். https://athavannews.com/2022/1301147

    • 3 replies
    • 294 views
  25. இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக சிறார்களுக்கான ஐ.நா அமைப்பான யுனிசெப் அண்மையில் வெளியிட்ட தகவல், தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறார்கள் வாழும் நாடுகள் பட்டியலில், இலங்கை எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.