ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
தமிழீழ விடுதலை இயக்கம் - தமிழரசுக்கட்சிக்கு அனுப்பியுள்ள கடிதம் செப்டம்பர் 10, 2022 உள்ளுராட்சி மன்றங்களில் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடம்கொடுக்காமல் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்பாட்டுடனும்,முறையான நிர்வாக அமைப்புடனும் செயற்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) இலங்கை தமிழரசுக்கட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த கடிதத்தை தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் கோ. கருணாகரம், இலங்கை தமிழ்த் அரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இக்கடிதத்தின் பிரதி இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 379 views
-
-
மஹிந்த ராஜபக்ச தலைமையில்... புதிய கூட்டணி – நாமல் ராஜபக்ச. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிவித்தார். தெதிகமவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தை அமுல்படுத்தினால் இன்றைய நிலை வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் கூறினார். எவ்வாறாயினும், இந்த சவாலான காலகட்டத்தில் அவ்வாறானவர்களுக்கு எதிராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக …
-
- 5 replies
- 638 views
- 1 follower
-
-
கருத்துச்சுதந்திரத்தின் மீதான அரசாங்கத்தின் மட்டுப்பாடுகள் அதிகார இருப்பை தக்கவைக்க முன்படுவதை காண்பிக்கிறது - கரு By T. SARANYA 09 SEP, 2022 | 11:05 PM (நா.தனுஜா) சுதந்திர, ஜனநாயக நாடொன்றில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்குமான உரிமை என்பது இன்றியமையாததாகும். அவ்வாறிருக்கையில் அரசாங்கமொன்று அந்த உரிமையை மட்டுப்படுத்துமேயானால், அதன்மூலம் மக்களின் அபிலாஷைகளைவிடுத்து வெறுமனே அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதை மாத்திரம் இலக்காகக்கொண்டு செயற்படுகின்ற ஆட்சியாளர்களின் தன்மையே வெளிப்படுகின்றது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய ச…
-
- 6 replies
- 332 views
- 1 follower
-
-
இந்த அரசாங்கத்தில்... ஊழல் மோசடிகள், தொடர்கின்றன – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு. ஐந்து பேரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தது 62 ஆயிரத்து 220 ரூபாய் தேவைப்படுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர அறிக்கையை மேற்கோளிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். ஆனால் இன்று நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மாதாந்தம் ஊதியம் பெறுபவர்களில் 70 விகிதமானோர் 62,000க்கும் குறைவான சம்பளமே பெறுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வறுமை தொடர்பான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் போசாக்குக் குறைபாடு தொடர்பான யுனிசெப் அறிக்கையை ஏற்றுக்கொள்ள ம…
-
- 0 replies
- 141 views
-
-
இரண்டு நாள் பயணமாக... இலங்கைக்கு வந்தார், சமந்தா பவர்! சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், தனியார்துறைசார் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் தற்போதைய நெருக்கடியின் விளைவாகப் பாதிக்கப்பட்டோரை அவர் சந்திக்கவுள்ளார். மேலும் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்கா எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்தும் சமந்த…
-
- 3 replies
- 523 views
- 1 follower
-
-
சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமல்... 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற, அரசாங்கம் தீர்மானம் ! உயர் நீதிமன்ற தீர்ப்பில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை கடைப்பிடித்து, சர்வஜன வாக்கெடுப்பை தவிர்த்து அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 22வது திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணாக இருப்பதால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சில அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்குவதை நோக்கமாகக் கொ…
-
- 0 replies
- 427 views
-
-
நோர்வே தூதரகம்... கொழும்பில், மூடப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள அந்நாட்டின் தூதரக வலையமைப்பு தொடர்பில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து நோர்வே தூதரகங்களை 2023 ஜூலை இறுதிக்குள் நிரந்தரமாக மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பல நோர்வே தூதரகங்களை வலுப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுள்ளது. இதேவேளை கொழும்பில் உள்ள தூதரகத்தை மூடும் முடிவு நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நோர்வே…
-
- 0 replies
- 235 views
-
-
ரணிலின் அமைச்சரவையில்... ராஜபக்ஷ உறவினர் - போராட்டக்குழு கோபம். இலங்கையில் ராஜாங்க அமைச்சர்களாக இன்று 37 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவராவார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் செப்டம்பர் 8ஆம் தேதி காலையில் ராஜாங்க அமைச்சர்களாக 37 பேர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இவர்களில் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷவின் புதல்வர் சசீந்திர ராஜபக்ஷவும் (வயது 46) ஒருவர். இதற்கு முன்னரும் சசீந்திர ராஜபக்ஷ ராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான சசீந்திர ராஜபக்ஷ - ஊவா மாகாண சபை உறுப்பினாராகவும், பின…
-
- 1 reply
- 231 views
-
-
எமது தவறுகளை, தட்டிக் கேட்கும் உரிமை... சாணக்கியன் போன்றவர்களுக்கு, கிடையாது – நாமல்! எமது தவறுகளைத் தட்டிக்கேட்கும் உரிமை எமக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரம் இருக்கிறதே தவிர, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சாணக்கியன் போன்றவர்களுக்கு எந்தவோர் அருகதையும் கிடையாது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ தொடர்பில் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துதொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின் நாங்கள் தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகளையும் தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றும் பணிகளையும…
-
- 4 replies
- 632 views
-
-
போராட்டக்காரர்கள் பழிவாங்கப்படுகின்றனர் : சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையின் நெருக்கடியான காலப்பகுதியில் மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அதிகாரிகள் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை மிக மோசமாக சித்தரிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை, அமைதியான போராட்டக்காரர்களைப் பாதுகாக்க அதிகாரிகள் தவறியதையும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அதியுச்ச பலத்தைப் பயன்படுத்துவதையும், போராட்டங்களை கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்பியதையும், போராட்டக்காரர்களுக்கு எதிராக பழிவாங்குவதையும் வெளிப்படுத்துவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக…
-
- 1 reply
- 370 views
-
-
இராஜாங்க அமைச்சர்களுக்கு நிதி ஒதுக்கீடோ, செயலாளர்களோ கிடையாது தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு, பொதுமக்களின் பணத்தை மிகவும் சிக்கனமாகவும், அதிகபட்ச வினைத்திறனுடனும் பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய, அரச செலவினங்களை நிர்வகிப்பதற்கென விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இன்று (09) பணிப்புரை வழங்கியுள்ளார். ஜனாதிபதியால் நேற்று (8) நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் தமது கடமைகளை மேற்கொள்ளும்போது புதிய விதிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் பணி…
-
- 4 replies
- 434 views
-
-
அமெரிக்கா பறந்தார் பஸில்! முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு பயணமானார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி பயணித்த விமானத்தில் அவர் சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 10.05 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-651 இலக்க விமானத்தில் பசில் ராஜபக்ஸ துபாய்க்கு சென்றுள்ளதுடன், அங்கிருந்து மற்றுமொரு விமானத்தில் அவர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். இவருக்கு எதிரான வழக்கொன்றில் வெளிநாடு செல்வதற்கு முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரத்தில் அந்தத் தடை நீக்கப்பட்டு, எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வரையில்…
-
- 0 replies
- 283 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் தொடர் போராட்டம் By T. SARANYA 09 SEP, 2022 | 03:52 PM பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் மாபெரும் தொடர் போராட்டமும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை காலை 9 மணிக்கு மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலிருந்து ஆரம்பமாகும் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையாக நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய ஊர்தி வழிப்போராட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது. …
-
- 8 replies
- 970 views
- 1 follower
-
-
சவுதியிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள இரு தரப்பு பேச்சு - அமைச்சர் நஸீர் அஹமட்டின் விஜயத்தை அடுத்து நடவடிக்கை By T. SARANYA 09 SEP, 2022 | 02:28 PM (எம்.எப்.எம்.பஸீர்) வருடத்துக்கு 6 பில்லியன் அமரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளை சவுதி அரசிடமிருந்து அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் சவுதி அரசுடன் இரு தரப்பு பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியாக சவுதி அரேபியா சென்றிருந்த சுற்றாடல் துறை அமைச்சர் நசீர் அஹமட் இந்த பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால நிவாரணமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
IMFஇன் ஊழியர்களுடனான... ஒப்பந்தத்தை, நாடாளுமன்றில்... சமர்ப்பிக்க முடியாது: சபாநாயகர். சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தில் வரிகள் தொடர்பான சில முக்கிய விடயங்கள் உள்ளதால் அது தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விவாதத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் எனவே அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் தெரிவித்தார். அவரின் கருத்துக்கு பதில் வழ…
-
- 4 replies
- 313 views
- 1 follower
-
-
யாழ் ஐந்து சந்திப் பகுதியில் சிறுவர்களை பணிக்கு அமர்த்திய தனியார் விடுதிக்கு சீல் வைப்பு By T. SARANYA 09 SEP, 2022 | 03:26 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் தனியார் விடுதி ஒன்றினை நடத்தி, அங்கு வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்தி, யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட காரணமாக இருந்த விடுதி இன்று வெள்ளிக்கிழமை சீல் வைத்து இழுத்து மூடப்பட்டது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா இந்த உத்தரவினை பிறப்பித்தார். புத்தளம் பகுதியில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து அவர்களிடம் ஊதுபத்திகளை வழங்கி விற்பனையில் ஈடுபடுத்திய விடுதியே சீல் வைத்து மூடப்பட்டது. …
-
- 1 reply
- 204 views
- 1 follower
-
-
5 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கிய சீனா! சீனா இலங்கைக்கு 5,000 மெட்ரிக் தொன் அரிசியை வழங்கியுள்ளது. உத்தியோகபூர்வமாக இந்நாட்டுக்கு குறித்த அரிசி தொகையை கையளிக்கும் நிகழ்வு இசுருபாய கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சீன தூதுவர் Qi Zenhong ஆகியோர் கலந்துகொண்டனர். சீன மக்களின் நட்புறவின் மற்றுமொரு அடையாளமாக, இந்த உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் பத்து லட்சம் மாணவர்களுக்கு சீன அரசு அரசி நிவாரணத்தை வழங்கவுள்ளது. இந்த வேலைத்திட்டம் தெரிவு செய்யப்பட்ட 7,925 பாடசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் இலங்கையிலுள்ள மொத்த பாடசாலைகளில் 78 வீதத்தை இதில் உள்ளடங்குவதாக தெரிவிக…
-
- 0 replies
- 175 views
-
-
மறைத்து வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு பணப் பரிசில் ! மறைத்து வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு பணப் பரிசில்களை வழங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. வழங்கப்படவுள்ள பணப் பரிசில் தொகை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார். மேல் மற்றும் தென் மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களை ஒழிப்பதற்கு விசேட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். …
-
- 6 replies
- 539 views
- 1 follower
-
-
மின்சக்தி அமைச்சிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சர்! அமைச்சர் டி.வி.சானக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார். வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அவர், சிறிது நேரத்தின் பின்னர் குறித்த அமைச்சுப் பதவியை நிராகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். இதன்படி மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பதவியை டி.வி.சானக்கவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சராக இந்திக அனுருத்தவும் நேற்று பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=165456
-
- 10 replies
- 904 views
- 1 follower
-
-
இலங்கைக்கு 203 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக 203 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பொது மூலதன வளத்திலிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=165459
-
- 0 replies
- 128 views
-
-
முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து மோதிரம் திருட்டு By T. SARANYA 09 SEP, 2022 | 09:10 AM யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரது மோதிரங்களை களவாடி சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வடமராட்சி பகுதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். வைத்தியசாலைக்கு அருகில் முச்சக்கர வண்டி சாரதியை காத்திருக்குமாறு கூறி வைத்தியசாலைக்கு செல்வது போன்று சென்றுள்ளனர். சில நிமிடத்தில் முச்சக்கர வண்டிக்கு திரும்பியவர்கள், மென்பானங்களை வாங்கி வந்திருந்தனர்.…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
பணம் செலுத்தாமையினால்... கொழும்பு துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிட்டுள்ள.. மூன்று எரிபொருள் கப்பல்கள்? பணம் செலுத்தாத காரணத்தினால் தற்போது மூன்று எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையை வந்தடைந்த ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிச் வந்த கப்பல் கடந்த 23ஆம் திகதி முதல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடப்பட்டுள்ளது. மேலும் இரண்டு டீசல் கப்பல்கள் பல நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அவற்றில் உள்ள டீசலின் அளவு 76 ஆயிரம் மெட்ரிக் தொன் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பல்கள…
-
- 1 reply
- 558 views
-
-
இங்கிலாந்திற்கு சென்ற... கராத்தே அணி, இலங்கைக்கு... திருப்பியனுப்பப் பட்டமை குறித்து விசாரணை! இங்கிலாந்திற்கு சென்ற இலங்கைக்குழு திருப்பியனுப்பப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. பொதுநலவாய கராத்தே சம்பியன்ஷிப் 2022இல் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தவுடன் இலங்கையின் தேசிய கராத்தே அணி நாடு கடத்தப்பட்டது. தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருந்த இலங்கை கராத்தே அணியினரிடம் ஹீத்ரோ விமான நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து அவர்களது விசாக்கள் இரத்து செய்யப்பட்டு அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மூன்றாம் தரப்பினருக்கும் தற்போதைய கராத்தே சம்மேளனத்துக்கும் இடையே ஏற்பட்…
-
- 0 replies
- 248 views
-
-
நாட்டில்... மீண்டும், நிச்சயமற்ற நிலை ஏற்படலாம்? தற்போதைய டெண்டர் நடைமுறைக்கு அமைவாக நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாத பட்சத்தில் நாட்டில் மீண்டும் நிச்சயமற்ற நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு டெண்டர் முறையின் மூலம் நிலக்கரியை வழங்குவதற்கு இணங்கிய நிறுவனம் அதற்கு முன்வர தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1298303
-
- 0 replies
- 306 views
-
-
எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு... இரங்கல்: தேசியக் கொடியை, அரைக்கம்பத்தில் பறக்க விடவும் – ஜனாதிபதி! இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவின் அரச குடும்பத்தினருக்கும் மக்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரித்தானியப் பேரரசில் அதிக காலம் மகுடத்தை வைத்திருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96 வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று அறிவித்தது. மறைந்த ராணி எலிசபெத்தின் உடல் நாளை லண்…
-
- 0 replies
- 164 views
-