ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143580 topics in this forum
-
4 நாட்களாக... பட்டினியாக, இருந்த பிள்ளைகளுக்கு... அரிசி திருடிய தந்தை கைது. பொரளை பிரதேசத்தில் 3 கிலோ அரிசி மற்றும் சிறுதானிய உணவுப் பொதியை திருடிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், பொரளை பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் 4 நாட்களாக பிள்ளைகள் பட்டினியால் வாடிய காரணத்தினால் இந்த பொருட்களை திருடியுள்ளார். பொரளை பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் உண்மையைக் கூறியதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திருடப்பட்ட பொருட்களின் பெறுமதியை தீர்த்து வைத்ததுடன், அறிவுறுத்தல்களை வழங்கிய பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். https://tamil.madyawediya.lk/2022/08/25/4-நாட்களாக-பட்…
-
- 1 reply
- 285 views
- 1 follower
-
-
சர்வதேச விசாரணை வலியுறுத்தி... ஆகஸ்ட் 30ஆம் திகதி, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில்... மாபெரும் போராட்டம்! சர்வதேச விசாரணை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், புதுக்குடியிருப்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள அனைவருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவர் மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் இந்த பகிரங்க அழைப்பை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் இரண்டாயிரமாவது நாட்களின் நிறைவும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமு…
-
- 0 replies
- 164 views
-
-
தாலிக்கொடி அறுப்பு ; வசமாக சிக்கிய இராணுவ வீரர் By T. SARANYA 24 AUG, 2022 | 03:29 PM (கே.பி.சதீஸ்) வவுனியாவில் தாலிக்கொடியை அறுத்து தப்பி சென்ற இராணுவ வீரர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா கனகராயங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியினை சிவில் உடையில் வந்த இராணுவ வீரர் ஒருவர் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற வேளையில், போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் விரைந்து செயற்பட்ட அப்பகுதி பொதுமக்களால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பறித்து சென…
-
- 6 replies
- 929 views
- 1 follower
-
-
மீண்டும்... எரிபொருளுக்கு தட்டுப்பாடு – நாளை முதல், பேருந்து சேவையை... 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை! முத்துராஜவெல பெற்றோலிய முனையத்திலிருந்து பெற்றோல், டீசல் விநியோகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின், தனியார் தாங்கிகள் உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் டீ.வீ சாந்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். எனவே நாளை(26) முதல் பேருந்து சேவையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1296116
-
- 1 reply
- 380 views
-
-
பண்டாரவன்னியனின்... 219ஆவது, நினைவு நாள் இன்று. வன்னி இராஜ்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின், 219வது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபை மற்றும் பண்டார வன்னியன் விழாக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் காலை 8.15மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டார வன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும் அவரது சிலை மாவட்ட செயலகத்தில் அமைவதற்கு காரணமாக இருந்தவருமான மு.சிற்றம்பலம் சார்பாக மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அத்துடன், நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினர், அரச அதிகாரிகள், சமூக செயற்பாட்டாள…
-
- 9 replies
- 533 views
- 1 follower
-
-
ஜனநாயக போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாதமே முன்னெடுக்கப்பட்டது - சாகர காரியவசம் By T. SARANYA 25 AUG, 2022 | 05:13 PM (இராஜதுரை ஹஷான்) ஜனநாயக போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாத செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் குறுகிய அரசியல் நோக்கம் காணப்பட்டுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலை…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
மலையக மண்ணில் இருந்து வறுமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் - பாரத் அருள்சாமி By VISHNU 25 AUG, 2022 | 08:02 PM (க.கிஷாந்தன்) " நாம் வாழும் மண்ணையும், நமது பெண்களையும் இரு கண்கள்போல பாதுகாக்க வேண்டும். எமது மலையக மண்ணில் இருந்து வறுமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். அதற்காகவே காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கின்றது. இதற்காக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் ஓர் அங்கமாகவே பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரஜாசக்தி செயல் திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். …
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
மீண்டுமொரு மக்கள் எழுச்சிப் போராட்டம் ஆரம்பமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை - முஜிபுர் ரஹ்மான் By T. SARANYA 25 AUG, 2022 | 05:16 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக மீண்டுமொறு மக்கள் எழுச்சி போராட்டம் ஆரம்பமாகப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. அரசாங்கத்திற்கு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தேவை கிடையாது. மாறாக நாட்டைக் கட்டியெழுப்புவதைப் போன்று போலி நாடகமே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற ஊ…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்ளுக்கு எதிராக வழக்கு By T. SARANYA 25 AUG, 2022 | 07:47 PM (எம்.வை.எம்.சியாம்) அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்பவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, கடந்த 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதற்கமைவாக…
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்க நாட்டு மக்கள் எந்த அரசாங்கத்திற்கும் அதிகாரம் வழங்கவில்லை. நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது நாட்டை காட்டிக்கொடுக்கும் ஒரு செயற்பாடாக கருதப்படும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இலங்கை கம்யூனிச கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிக உணவு பண வீக்கம் உள்ள நாடுகளின…
-
- 0 replies
- 307 views
-
-
குறிப்பிட்ட பணி ஒதுக்கீடு இல்லாமல்... அரச ஊழியர்களை பராமரிப்பதில், சிக்கல்! குறிப்பிட்ட பணி ஒதுக்கீடு இல்லாமல் அரச ஊழியர்களை பராமரிப்பதில் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன இதனைத் தெரிவித்துள்ளார். உரிய முறைக்கு புறம்பாக அரச சேவைக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் ஊடாக அரச சேவையில் மிகை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1296047
-
- 0 replies
- 188 views
-
-
WHO இலங்கைக்கு நிதியுதவி! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கான மருந்துவத் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக 04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=164916
-
- 0 replies
- 320 views
-
-
எரிசக்தி அமைச்சு விசேட அறிவிப்பு! அடுத்த இரண்டு நாட்களில் மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 40,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் கப்பல் ஒன்றே இவ்வாறு நாட்டை வந்தடைய உள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும், 92 ரக ஒக்டேன் பெற்றோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் 27 மற்றும் 29ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளது. குறித்த கப்பலில் 33,000 மெற்றிக் தொன் பெற்றோல் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாட்டை வந்தடைந்த 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கப்பலில் இருந்து தரையிறக்கும் பணிகள் இன்று (25) இடம்பெறவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=1648…
-
- 0 replies
- 323 views
-
-
சர்வதேச விசாரணை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் போராட்டம் August 25, 2022 சர்வதேச விசாரணை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், புதுக்குடியிருப்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள அனைவருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவர் மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் இந்த பகிரங்க அழைப்பை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் இரண்டாயிரமாவது நாட்களின் நிறைவும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமுமான ஒகஸ்ட் 30ஆம் திகத…
-
- 0 replies
- 168 views
-
-
புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்! அமைச்சு பதவிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு முதலிடம் ! By Shayithan.S புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைக்கால வரவு – செலவுதிட்டம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வகட்சி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது. திருத்தப்பட்ட இடைக்கால வரவு – செலவுதிட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அனைத்து அரசியல் கட்சி…
-
- 0 replies
- 184 views
-
-
மகிந்த வீழ்ச்சியை சந்தித்துள்ளார் ஆனால் அவரின் கதை இன்னமும் முடிவுக்குவரவில்லை- முன்னாள் இந்திய தூதுவர் 25 Aug, 2022 | 11:29 AM பொருளாதார நெருக்கடியில்சிக்கியுள்ள நாட்டிற்கு இந்தியாவால் எவ்வளவு பொருளாதார உதவியை வழங்க முடியும் அரகலய தனது வேகத்தை இழந்துவிட்டது ஆனால் அது முடிவிற்கு வந்துவிடவில்லை ரணில் விக்கிரமசிங்கவிற்கு உடனடி மாற்றீடு இல்லை ----------------------- இலங்கைக்கு இந்தியா பாரிய உதவிகளை வழங்குவது சாத்தியமில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான முன்னாள் இந்திய தூதுவர் அசோக் காந்தஇந்தியா எச்சரிக்கையாகயிருக்கவேண்டும்எனவும் தெரிவித்துள்ளார். நெர…
-
- 0 replies
- 243 views
-
-
முட்டைக்கான... விலையில், மாற்றம் இல்லை! முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒரு முட்டை ஐம்பது ரூபாவிற்கு விற்பனை செய்ய அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்றைய தினம்(புதன்கிழமை) தெரிவித்திருந்தது. இந்தநிலையில் இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ உள்ளிட்ட பல சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற…
-
- 2 replies
- 380 views
-
-
சீன நிறுவனத்திடமிருந்து உரமும் இல்லை, பணமும் இல்லை - நிர்க்கதியான இலங்கை.! சீன உர நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட பணத்தை மீள பெறுவது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சீனா உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளது. எனினும், நாம் திருப்பியனுப்பிய சேதன உரத்துக்கு பதிலாக சீன நிறுவனம் வேறு உரம் எதனையும் வழங்க இதுவரை முன்வரவில்லை. இது தொடர்பான நீதிமன்ற ரீதியான செயற்பாடுகள் இடம்பெற்றுவர…
-
- 1 reply
- 442 views
-
-
இன்று மாத்திரம் 3 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவு : இருவர் பலி : ஒருவர் காயம் By VISHNU 24 AUG, 2022 | 09:06 PM நாட்டின் 3 பகுதிகளில் இன்று 24 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். எல்பிட்டிய எல்பிட்டிய - உரகஸ்மன்சந்தி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பஹா கம்பஹா - மாக்கவிட்ட, குருச சந்தியில் இன்று 24 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரினால் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு ம…
-
- 2 replies
- 266 views
- 1 follower
-
-
மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுக்க நடவடிக்கை Posted on August 24, 2022 by தென்னவள் 13 0 அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தையும் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தி, மன்னார் நீதவான் முன்னிலையிலே பிரித்தெடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டளை ஆக்கப்பட்டுள்ளது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித பு…
-
- 0 replies
- 201 views
-
-
“ மக்கள் குரல் ஓய்ந்திருந்ததே தவிர ஒருகாலமும் ஒடுங்கியிருக்கவில்லை” – நெடுங்கேணியில் போராட்டம் Posted on August 24, 2022 by தென்னவள் 16 0 கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்னும் தொனிப்பொருளில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பினால் நெடுங்கேணி கந்தசாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று 24 முன்னெடுக்கப்பட்டது. நிரந்தரமான அரசியல் தீர்வை வலுயுறுத்தி இடம்பெற்று வரும் நூறு நாள் செயற்திட்டத்தில் இருபத்தி நான்கு நாளான இன்றைய போராட்டத்தில் தமது கோரிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கௌரவமான உரிமைக்கான மக்கள் குர…
-
- 0 replies
- 181 views
-
-
கடற்றொழில்சார் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொறிமுறை - டக்ளஸ் By VISHNU 24 AUG, 2022 | 08:50 PM கடற்றொழில்சார் சட்ட விரோத செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான 24 மணித்தியாலங்களும் செயற்படும் பொறிமுறை ஒன்றினை கடற்படையினருடன் இணைந்து உருவாக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன்,மண்ணெண்ணெய் விநியோகம் மீ்ண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும் மண்ணெண்ணெய் கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன், அதுதொடர்பான அறிக்கையினை தனக்கு சமர்பிக்குமாறும் கடற்றொழில் அமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். அதேவேளை கடலட்டை வள…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
நல்லூர் மஹோற்சவத்துக்கு மத்தியில்... கவனம் ஈர்க்கும், மணல் சிற்பங்கள்! வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் ஆலய முன்றலில் ஒவ்வொரு நாளும் உருவாக்கப்பட்டு வரும் மணல் சிற்பங்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் என்பவரால் உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த மணல் சிற்பங்கள் பக்தர்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளன. உள்நாட்டு பக்தர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த மணல் சிற்பங்களை பார்வையிட்டு வருகின்றனர். அரச உத்தியோகத்தரான இவர், கடந்த காலங்களில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவங்களின் போதும் மணல் சிற்பங்களை வடிவமைத்தா…
-
- 5 replies
- 817 views
-
-
"எக்ஸ்பிரஸ் பேர்ள்" கப்பலில் இருந்து... வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு, 90 கோடி ஒதுக்கீடு! தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு 90 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 293 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுப் பொருட்கள் மன்னாரில் இருந்து ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையான கடற்பரப்பில் பரவியதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, சமுத்திரபாதுகாப்பு சம்மந்தமான நடவடிக்கைகளை எடுக்கும்போது, அதற்கான சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இவ்வா…
-
- 1 reply
- 216 views
- 1 follower
-
-
By RAJEEBAN சீனா தனதுகடன் நிவாரணம் தொடர்பான நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்களை செய்யவேண்டும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கான https://asia.nikkei.com/நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை சீனா தனது கடன் நிவாரணத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாட்டை எட்டுவது இலகுவான விடயமாகயிராது எனவும் தெரிவித்துள்ளார். கடன்மறுசீரமைப்பை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளது என்பதையும் கடன்வழங்கிய அனைவரும் ஐக்கியப்படவேண்டும் தங்களிற்குள் மோதக்கூடாது என்பதையும் சீனாவிற்கு தெரிவித்துள்ளோம் என ரணில்விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனினும் ஆறு தடவை ப…
-
- 5 replies
- 270 views
-