ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
வட்டி வீத அதிகரிப்பு தொடர்பில்... இலங்கை மத்திய வங்கி, வெளியிட்டுள்ள அறிவிப்பு. நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை அதிரிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நாணயக் கொள்கை நிலைப்பாட்டை கடுமையாக்குவது அவசியம் என்று கருதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 215 views
-
-
போராட்டக்காரர்கள்.. மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே. பொது இணக்கப்பாடு! காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (சனிக்கிழமை) இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பாக போராட்டத்தை வெற்றிக் கொள்ளும் இணக்கப்பாடு என்ற பெயரில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஒன்றிணைந்த பொதுமாநாட்டின்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி 4 அம்சங்களுடன் போராட்டக்காரர்கள் தரப்பில் ஒருமித்த கருத்து முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்த மாநாட்டில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா சுதந்திர கட…
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கைக்கு... பெரும், "செக்" வைத்த இந்தியா. இலங்கைக்கு மற்றுமொரு கடனை வழங்குவதில் இந்தியா தயக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதற்காக இந்தியா முன்கூட்டியே பணத்தை பெற்றுகொள்ள எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடன் வழங்க மறுப்பு சமகாலத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் கடனில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருளுக்காக 3.5 பில்லியன் டொலர் கடன் எல்லைகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்நிலையில் மேலும் இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து பரிசீல…
-
- 0 replies
- 213 views
-
-
மக்கள்... பொலிஸாரை, தாக்க நேரிடும் - முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் பாரிய குற்ற அலைகள் உருவாகியுள்ளதாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் இத்தகைய நெருக்கடியை கையாள போதுமான பொலிஸ் அதிகாரிகள் இருந்தாலும், உயரடுக்கு பாதுகாப்பு கடமைகளுக்காக பலர் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளனர். தோற்கடிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 102 views
-
-
ஒலுவில் துறைமுகத்தினை வினைத் திறனாக மாற்றுவதே எதிர்பார்ப்பு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடுமையான முயற்சிகளை வரவேற்றுள்ள ஒலுவில் பிரதேச பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கான பூரண ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று(06.07.2022) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒலுவில் துறைமுகத்தினை பலநாள் ஆழ்கடல் கலன்கள் மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகளை ச…
-
- 3 replies
- 244 views
-
-
எரிபொருள் தட்டுப்பாடு – பல புகையிரத சேவைகள் இரத்து! கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறைக்கு புறப்படவிருந்த புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத நிலைய அதிகாரிகள் மற்றும் இளநிலை ஊழியர்கள் பணிக்கு வராததையடுத்தே புகையிரத சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன. கோட்டையிலிருந்து காலை 6.35 மணிக்கு மட்டக்களப்புக்கு புறப்பட வேண்டிய உதயதேவி எக்ஸ்பிரஸ் புகையிரதமும், 6.05 மணிக்கு காங்கேசன்துறைக்குக்கு புறப்பட வேண்டிய யாழ்தேவி புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதேவேளை நேற்று இரவு 9.45 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல …
-
- 9 replies
- 854 views
-
-
இல்லை, முடியாது என்ற கதை எம்மிடம் இல்லை தமக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணிக்கோ "இல்லை, முடியாது " என்ற கதைக்கு இடமில்லை என்றும், எந்த தருணத்திலும் மக்களுக்கான தங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (06) தெரிவித்தார். நாட்டில் பாரியளவில் மருந்து தட்டுப்பாடு இருக்கும் தருவாயில் டொலர் தட்டுப்பாடே இதற்கு காரணமென பலரது கருத்தாக இருப்பினும், உண்மையான காரணம் என்னவெனில், அதற்கான தகவல் தரவுகளை களஞ்சியப்படுவதிலுள்ள சிக்கலே எனவும், தெரிந்து கொண்டே இதற்கு மேலும் மக்களுக்கு பொய்யுரைக்காமல் தற்போதுள்ள செயல்முறைகளை சரிவர செயற்திறன்மிக்கதாக நடைமுறைப்படுத்…
-
- 0 replies
- 227 views
-
-
ஜனாதிபதி மாளிகையின் முன் ஹிருணிகா போராட்டம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக உள்ள படலைக்கு முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர் https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதி-மாளிகையின்-முன்-ஹிருணிகா-போராட்டம்/175-299820 ஹிருணிகா கைது செய்யப்பட்டுள்ளார் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர சில நிமிடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது பொலிஸ் பேருந்தில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் https://www.tamilmirror…
-
- 8 replies
- 1.3k views
-
-
உங்கள் உரிமைகளை வெல்ல போராடுங்கள் - 9 ஆம் திகதி அனைவரும் ஒன்றிணையுங்கள் - சிரேஷ்ட சட்டத்தரணிகள் கோரிக்கை ( எம்.எப்.எம்.பஸீர்) தமது உரிமைகளை வெல்வதற்காக, அரசியலமைப்பூடாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பயன்படுத்தி எதிர்வரும் ஒன்பதாம் திகதி அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுமாறு சிரேஷ்ட சட்டத்தரணிகள் அழைப்பு விடுத்துள்ளனர். கொழும்பில் இன்று ( 6) பிற்பகல் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தி, ஜனாதிபதி சட்டத்தரணிகள், சிரேஷ்ட சட்டத்தரணிகள் இணைந்து இக்கோரிக்கையை முன் வைத்தனர். ' ஜூலை 9 - முற்பகல் 9.00 மணி - கொழும்பு ' எனும் தொணிப் பொருளில் இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு சட்டத்தரணிகளால் ஏற்பாடு செய்யப்ப்ட்டிருந்தது. இதன்போது ஜனாதி…
-
- 0 replies
- 148 views
-
-
மட்டு, விமான நிலையத்தில் விமானப் பயிற்சி நிலையமொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் மட்டக்களப்பு விமான நிலையத்தில் விமானப் பயிற்சி நிலையமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை 2018 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு விமான நிலையத்தை உள்ளூர் விமான சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்த போதிலும், தரையிறங்கும் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் இல்லாததால் தற்போது விமான நிலையம் வருமானம் ஈட்டவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேற்கூறிய நிலைமையைக் கருத்தில் கொண்டு விமான நிலையப்பகுதி, வேறு உற்பத்தி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மட்டக்களப்பு விமான நில…
-
- 0 replies
- 174 views
-
-
பிரதமர் பதவியில் இருந்து... விலகத் தயார் – நாடாளுமன்றில் ரணில்! தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்படும் 6 மாத வேலைத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாகவும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆட்சியை வழங்கினால் 6 மாதங்களில் நாட்டை வழமைக்கு கொண்டுவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்ததாகவும்…
-
- 10 replies
- 540 views
-
-
இலங்கைக்கு... எரிபொருளை இறக்குமதி செய்ய, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் உரையாடினேன் – ஜனாதிபதி கோட்டாபய. இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவியைக் கோரினேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவிட்டரில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள பதிவிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் உரையாடினேன். கடந்த கால சவால்களை சமாளிக்க அவரது அரசாங்கம் வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், தற்போதைய பொருளாதார சவால்களை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய கடன் ஆதரவை கோரினேன். சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாச…
-
- 5 replies
- 433 views
-
-
இலங்கை மக்களுக்கு... மூன்று வேளை, உணவு கிடைப்பதில் சிக்கல்! இலங்கையில் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக குடும்ப உறுப்பினர்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள சத்தான உணவை உண்பதற்காக இலங்கை குடும்பம் மாதம் ஒன்றுக்கு 93 ஆயிரத்து 675 முதல் ஒரு இலட்சத்து 48 ஆயிர…
-
- 2 replies
- 373 views
-
-
பிரதமராகத் தயார் – பதவியை இராஜினாமா செய்யுமாறு... ரணிலுக்கு, அனுர அழைப்பு! பிரதமர் பதவியை ஏற்க தான் தயாராகவிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்காக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2022/1289882
-
- 0 replies
- 174 views
-
-
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணை: ஜனாதிபதியின் பணிப்பை அடுத்து... நிமல் இராஜினாமா. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை முடியும் வரை தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே நிமல் சிறிபால டி சில்வா தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார். இதேவேளை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். விமான போக்குவரத்து அமைச்சு தனி…
-
- 0 replies
- 221 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: "குழந்தைக்கு பால் கூட வாங்க முடியாமல் தவிக்கிறேன்" - ஓர் தாயின் கண்ணீர் கதை ரஜினி வைத்தியநாதன் பிபிசி செய்தி, கொழும்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சுடச்சுட பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் சாப்பாடு, குழம்பு மற்றும் கீரையை பெறுவதற்காக கைகளில் குழந்தையுடன் நீண்ட வரிசைகளில் பெண்களும், மற்ற குடும்ப உறுப்பினர்களும் காத்திருக்கிறார்கள். ஏனெனில், இதுதான் அவர்களுக்கு, அந்த நாளுக்கான ஒரு வேளை உணவாக இருக்கலாம். இதுதான் இலங்கையின் தற்போதைய களநிலவரமாக உள்ளது. "பசிக்கொடுமையால் நாங்கள் இங்கு நிற்கிறோம்" என்று கூறுகிறார் நான்…
-
- 1 reply
- 270 views
- 1 follower
-
-
எரிபொருள் தட்டுபாடால் வீழ்ச்சியடைந்த மற்றுமொரு துறை ரஞ்சித் ராஜபக்ஸ தேயிலை உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைக்காமை காரணமாக, தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தோட்ட முதலாளிமார் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரொசான் ராஜதுரை தெரிவித்துள்ளார். நேற்று (5) தலவாக்கலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், தேயிலைத் தோட்டங்களிலிருந்து தேயிலைத் தொழிற்சாலைகள் வரை பறிக்கும் கொழுந்துகளைக் கொண்டு செல்வதற்கும் தேயிலைத் தூள் தயாரிப்புக்கும் தினமும் அதிகளவு பெட்ரோலும் டீசலும் தேவைப்படுகின்றது. அத்துடன் தற்போது அமுல்படுத்தப்படும் மின்துண்டிப்புக்கு மத்தி…
-
- 0 replies
- 187 views
-
-
பிரித்தாளும் கொள்கையைப் பயன்படுத்தி மக்களைத் திசைதிருப்ப ஆட்சியாளர்கள் முயற்சி - இலங்கை மருத்துவ நிபுணர்கள் அமைப்பு குற்றச்சாட்டு (நா.தனுஜா) நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சினையை ஆட்சியாளர்கள் தமக்கு சாதகமாக்கி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் 'பிரித்தாளும் உத்தியை' கையாள்கின்றனர் என்று சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மருத்துவ நிபுணர்கள் அமைப்பு, தற்போதைய நெருக்கடி நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உடனடியாகப் பதவி விலகி சர்வகட்சி இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இடமளிக்கவேண்டும் வலியுறுத்தியுள்ளது. அதுமாத்திரமன்றி ஆட்சியாளர்கள் இக்கோரிக்கைக்கு செவிசாய்க்காவிடின் எமது தாய்நாட்டின் வீழ்ச்ச…
-
- 0 replies
- 154 views
-
-
நீதியை நாடுவதற்கான சமத்துவத்தன்மையை உறுதிசெய்வது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாதது - ஜுலி சங் (நா.தனுஜா) இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு நீதியமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்யும் நோக்கில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் 15 மில்லியன் டொலர்களை வழங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், நீதியை நாடுவதிலுள்ள சமத்துவத்தன்மை பொருளாதார உறுதிப்பாட்டுக்கு மிகவும் அவசியம் என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார். இலங்கையின் சட்டக்கட்டமைப்பை சர்வதேச சட்டக்கட்டமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான கடப்பாடுகளுக்கு அமைவானதாக மேம்படுத்துவதற்கு அவசியமான உதவ…
-
- 0 replies
- 292 views
-
-
சர்வகட்சி அரசாங்கமொன்றை, அமைப்பது குறித்த கலந்துரையாடலில்... சுமந்திரன், விக்னேஸ்வரன் பங்கேற்பு. சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் பின்னர் எதிர்க்கட்சி தரப்பில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஆலோசகர்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் செயற்படவுள்ளனர். இதில் ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சுயாதீனமாக செயற்படுவ…
-
- 0 replies
- 274 views
-
-
குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில்... பொதுமகனை தாக்கிய, இராணுவ அதிகாரி – விசாரணைகள் ஆரம்பம்! குருநாகல் யக்கஹபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமகனை தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியதையடுத்து, சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இராணுவ அதிகாரி ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதுடன், பொதுமகனை தாக்கிய அதிகாரி இலங்கை இராணுவத்தின் லெப்.கேணல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக இராணுவம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார் என ஆங…
-
- 11 replies
- 598 views
-
-
முப்படையினரை... எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து, வெளியேற்ற நடவடிக்கை! எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படை உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேற்ற நேரிடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு பல தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அத்தகைய தீர்மானம் விரைவில் எடுக்கப்படலாமென்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். https://…
-
- 0 replies
- 181 views
-
-
மக்களுக்கு... மேலும் துன்பத்தை கொடுக்காமல், பதவி விலகுங்கள் – கொழும்பு பேராயர் ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேட்டுக்கொண்டார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கவும், ஒட்டுமொத்த அமைப்பு மாற்றத்தைக் கொண்டு வரவும் புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறும் கேட்டுக்கொண்டார். இந்த சூழ்நிலைக்கான பொறுப்பை ஏற்றும் மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தாமலும் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்றும் தெரிவித்தார். பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை இழந்து ராஜபக்ஷ தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதே இந்த நாட்டின் விடுதலைக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்…
-
- 0 replies
- 247 views
-
-
எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு... யாழ். மாவட்ட செயலகமே காரணம் – செஞ்சிலுவை சங்கம், குற்றச்சாட்டு! பாதுகாப்பு தரப்பினருடன் இணைத்து மாவட்ட செயலகம் தலையிட்டமையாலையே எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன என யாழ்.மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கு. கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்ட இலங்கைச் செஞ்சிலுவைச்சங்கத்தின் வருவாயை நோக்கியே குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஊடாக கிடைக்கின்ற வருமானதினை கொண்டு மக்களுக்கு நிவாரணம், மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை ஆற்றி …
-
- 0 replies
- 126 views
-
-
இலங்கை... இந்த வருட இறுதிக்குள், "3,489 மில்லியன் டொலர்" கடனை செலுத்த வேண்டும் – ரணில் இலங்கை இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனையும் 2023ல் 5,862 மில்லியன் டொலர் கடனையும் 2024ல் 4,916 மில்லியன் டொலர் கடனையும் 2025ல் 6,287 மில்லியன் டொலர் கடனையும் 2026ல் 4,030 மில்லியன் டொலர் கடனையும் 2027ல் 4,381 மில்லியன் டொலர் கடனையும் இலங்கை செலுத்த வேண்டும். அதாவது மொத்தமாக நாம் 28 பில்லியன் டொலர் கடன…
-
- 0 replies
- 221 views
-