Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அதிவேக நெடுஞ்சாலைகளின், நாளாந்த வருமானம்... 70 வீதத்தால் வீழ்ச்சி! எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளின் நாளாந்த வருமானம் 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரச்சபையின் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் நாளாந்தம் 30 மில்லியன் ரூபாய் வரை வருமானம் கிடைக்கப்பெற்று வந்த நிலையில், தற்போது அது 8 மில்லியன் ரூபாவரை குறைவடைந்துள்ளது. இலங்கையில் இரு மாதங்களுக்கு மேலாக எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கின்றது. எரிபொருளை பெறுவதற்கு பல நாட்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அதிகளவான பயணிகள் தூர இ…

  2. தமிழக அரசாங்கத்திடம் இருந்து... ஒருதொகை மனிதாபிமான, உதவிப் பொருட்கள் கையளிப்பு. இலங்கைக்கு தமிழக அரசாங்கத்திடம் இருந்து 3.4 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மனிதாபிமான உதவி பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த உதவிப் பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகரினால் இன்றைய தினம் இலங்கை அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் குறித்த உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 100 மெட்ரிக் தொன்னிற்கும் அதிகமான மருந்துகள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த பொருட்களின் மதிப்பு 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இந்…

    • 2 replies
    • 269 views
  3. தமிழ் மக்களை... பொருளாதார ரீதியாக, பலப்படுத்த நடவடிக்கை- சி.வி.விக்னேஸ்வரன்! தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக சில உதவிகளை அரசாங்கத்திடம் இருந்து பெறவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அமைச்சுப் பதவி எனக்குத் தேவையில்லை. அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டால் பெரிய பாதிப்பு எமக்கு ஏற்படும். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும்போது கூட்டுப் பொறுப்புடைமை மற்றும் கடப்பாடு போன்றன இருக்கின்றது. அதனடிப்படையில் …

    • 3 replies
    • 406 views
  4. ஜூன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கை பெற்ற அந்நியச் செலவாணி 50 வீதத்தால் வீழ்ச்சி -சி.எல்.சிசில்- 2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து இந்த நாடு பெற்ற தொகை 1.6 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. இது 51.6 வீத சரிவாகும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 478.4 மில்லியன் டொலருடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வெளிநாட்டுப் தொழிலாளர்கள் அனுப்பிய தொகை 274.3 மில்லியன் டொலராகும். வெளிநாட்டு தொழிலாளர் விசாரணைகளின்படி ஏப்ரல் மாதத்தில் 249 மில்லியன் டொலராக இருந்ததுடன் மே மாதத்தில் 304 மில்லியன் டொலராக உயர்ந்தது. ஆனால் ஜூ…

    • 0 replies
    • 332 views
  5. சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில் அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை தேசிய அரசு அல்லது சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில், அரசாங்கத்திடமிருந்து எமக்கு இதுவரை அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை. ஏனைய எதிர்கட்சிகளுக்கும் அதிகாரபூர்வ அழைப்புகள் வரவில்லை. ஆகவே அதற்குள் “பேச்சுகள் நடக்கின்றன; அமைச்சர்கள் ஆகிறார்கள்” என்பவையெல்லாம் வெறும் சுவாரசிய செய்திகளாக மட்டுமே இருக்கின்றன. ஆனால், நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும், அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது எனவும், தமிழ் முற்போக்கு கூட்டணி நம்புகிறது என கூட்டணி தலைவர் மனோ க…

    • 0 replies
    • 170 views
  6. மீண்டும் நாட்டில் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் (காணொளி) மேல் மாகாணம் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் பிரதான ஒருங்கிணைப்பு நிபுணர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னதாக கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார வழிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்படி, பாதுகாப்பு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை கடைப்பிடுத்தல், அவசியமற்ற நடமாட்டத்தை க…

  7. மேலும் 12 மாதங்களுக்கு தொடரும் எரிபொருள் நெருக்கடி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு ! 12 மாதங்களுக்கு தொடரும் எரிபொருள் நெருக்கடி தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினாலேயே எரிபொருள் அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினர். மேலும், அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாகவே அடுத்த 12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/543-6/

  8. தேசிய சபையொன்றை நிறுவ... எதிர்க்கட்சி நடவடிக்கை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேசிய சபையொன்றை நிறுவ எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை(26) முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் போன்றவற்றை ஒன்றிணைத்து இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். தேசிய சபைக்கு வரும் சிறந்த முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1292348

  9. கறுப்பு ஜூலை நினைவுநாள் காலிமுகத்திடலில் அனுஷ்டிப்பு ! தமிழ் மக்களின் படுகொலையை ஆற்றுகை மூலம் வெளிப்படுத்திய கலைஞர் ! தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை இனக்கலவரங்களின் 39 ஆவது நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு , ஜூலை 23 ஆம் திகதி நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன்போது கொழும்பிலும், ஏனைய பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும், அழிக்கப்பட்டும், வடக்கு நோக்கி அகதிகளாகவும் விரட்டியடிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு பெரும் எண்ணிக்கையானோர் படுகாயம் அடைந்தனர். 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜே.ஆர். ஜெ…

    • 10 replies
    • 660 views
  10. மொட்டு கட்சியிலிருந்து டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட 16 பேர் விலக தீர்மானம் July 24, 2022 சிறீலங்கா பொதுஜன பெறமுன முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் முன்மொழிந்த மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் உட்பட குழு மொட்டு கட்சியில் இருந்து வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பேராசிரியர் சரிதா ஹேரத் மற்றும் கலாநிதி நாலக கொடஹேவா உட்பட 16 பேர் பொதுஜன முன்னணியில் இருந்து விலகி எதிரணியில் சுயாதீன குழுவாக அமர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.ilakku.org/from-the-podujana-paru…

    • 10 replies
    • 721 views
  11. இலங்கைக்கு, உதவ வேண்டாம்... ஜப்பானை கேட்டுக்கொண்டார், ரணில் – முக்கிய தகவலை வெளியிட்ட... விக்கிலீக்ஸ். இலங்கைக்கு வழங்கும் பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2007 ஆம் ஆண்டு ஜப்பானிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என விக்கிலீக்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய விசேட தூதுவர் யசுஷி அகாஷியிடம், இதனை தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக மேற்கொண்ட 14 விஜயத்தை விட 2007 ஜூன் 5 அன்று கொழும்பு வித்தியாசமாக இருந்தது என தெரிவித்து அகாஷி வெளியிட்ட டுவீட்டை மேற்கோளிட்டே விக்கிலீக்ஸ் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மே…

  12. பிரித்தானிய பல்கலைக்கழகங்களில்... இலங்கை மாணவர்களை, இணைத்துக் கொள்வது மட்டுப் படுத்தப்பட்டது! பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களை இணைத்துக்கொள்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள பாடநெறிகளுக்கு இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பல இலங்கை மாணவர்கள் தமது பாடநெறிக் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தத் தவறியுள்ளதாகவும் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள …

  13. நாளை நடைபெறும் குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தேன் – வாசுதேவ நாணயக்கார நாளை நடைபெறவுள்ள குழுக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு அரசாங்கம் விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு நேற்று தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், நாளை பிற்பகல் 3.00 மணிக்கு நிதியமைச்சின் புதிய கட்டிட கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குழுக் கூட்டத்தில் பங்கேற்கும…

    • 0 replies
    • 232 views
  14. ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் எரிபொருள் வழங்கும் புதிய நடைமுறை இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்திற்கு ஏற்ப எரிபொருள் வழங்கும் முறையை ஆகஸ்ட் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார். அன்றைய தினம் முதல் தேசிய எரிபொருள் உரிமம் (QR) முறையின் பிரகாரம் மட்டுமே எரிபொருள் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாளை (26) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிலையங்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமைக்கு அமைய எரிபொருளை வழங்கவுள்ளன. http://tamil.adaderana.lk/news.php?nid=163765

    • 0 replies
    • 148 views
  15. லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் தொழிலாளர் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு செல்லும் சில விமானங்களை தொடர்ந்தும் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. கொழும்பில் இருந்து லண்டனுக்கான இரண்டு விமானங்களும், லண்டனிலிருந்து கொழும்புக்கான இரண்டு விமானங்களும் கடந்த மூன்று வாரங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். தினசரி ஒரு விமானம் சேவையில் இதனையடுத்து விமான நிறுவனம் வழக்கமாக கொழும்பில் இருந்து லண்டனுக்கு தினசரி ஒரு விமானத்தை மாத்திரம் இயக்குகிறது. இந்த ரத்துகளின் விளைவாக, ரத்து செய்யப்பட்ட விமான பயணிகளுக்கு பணத்தைத் திருப்பி…

  16. அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமை பேணப்படும் என்கிறார் ரணில்! July 25, 2022 அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 21ஆவது சரத்தும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமைகளை பேணும் அரசியலமைப்பின் 14 (1) (ஆ) உறுப்புரையும் தற்போதைய அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்படுகிறது.. அரசாங்க கட்டடங்களை கைப்பற்றுவதற்கும் சொத்துக்களை பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கும் ஆர்ப்…

  17. எமது நாட்டின் எரிசக்தியை முகாமைத்துவப்படுத்தும் செயற்பாட்டு ரீதியான அதிகாரத்தை வெளிநாடுகளுக்கு வழங்கி, நாட்டின் மின்விளக்கு சுவிட்சை வெளிநாடுகளிடம் ஒப்படைப்பதன் மூலம் நாட்டை இருளில் மூழ்கடிக்கும் நிலையே ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குழுவை இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய மின்சாரக் கொள்கை நாட்டின் எரிசக்தி கட்டமைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையிலான புதிய மின்சாரக் கொள்கையை உருவாக்குவதே தமது நோக்கமாகும் என்றும், ஆனால் பெரும்பால…

  18. ஜனாதிபதி மாளிகையில்... திருடிய பொருட்களை, விற்க சென்ற... மூவர் சிக்கினர் !! கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முற்பட்ட மூன்று பேர் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 28, 34 மற்றும் 37 வயதுடைய ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மாளிகையின் சுவர்களில் திரைச்சீலைகளை தொங்கவிடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த 40 பித்தளை பொருட்களை சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் குழு முற்றுகையிட்டபோது குறித்த நபர்கள் பொருட்களை திருடியுள்ளனர். சந்தேகநபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எ…

  19. பதவி விலகுகின்றார்... தம்மிக பெரேரா – மீண்டும், நாடாளுமன்றம் நுழைகின்றார்... பசில்? முன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவரது வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஷவினை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகளவான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார். எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியில் இருந்து தம்மிக்க பெரேரா விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த இறுதித…

  20. 27 ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது... 22 ஆவது திருத்த சட்டமூலம்! அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு கடந்த 2ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது. இந்த திருத்தத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய நியமனங்கள் மற்றும் அந்த நியமனங்களில் மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர் பிரதமருடன் ஜனாதிபதி கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவதாக, பிரதமர…

  21. யாழில்... பொது போக்குவரத்துக்கள், முடங்கின! இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள், மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் இன்றைய தினம் (திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் கடந்த இரண்டு தினங்களாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை. …

  22. கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் இடம்பெற்று, இன்றோடு... 21 ஆண்டுகள் ! இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் என கூறப்படும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 21 வருடங்கள் ஆகின்றன. கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 விமானப்படை கொல்லப்பட்ட அதேவேளை 14 படை வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் இரண்டு கிபிர் விமானங்கள், ஒரு மிக் ரக விமானம், இரண்டு எம்1-17 , மூன்று கே-8 விமானம் உள்ளிட்டவைகள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது நாட்டின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏ…

  23. இலங்கையிலும்... குரங்கு அம்மை வருவதற்கான, சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை! இலங்கையிலும் குரங்கு அம்மை வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் அறிகுறிகள் நன்கு வெளிப்படுவதால் நோயாளர்களை இலகுவாக அடையாளம் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனாவுடன் ஒப்பிடும்போது தொற்று விகிதம் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சர்வதேசத்திற்கான எச்சரிக்கை அறிக்கை மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளதாக …

  24. ஜனாதிபதி ரணில் தலைமையில்... நாளை கூடுகின்றது, ஆளும் கட்சி ! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஒன்று நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது அவசர சட்டத்தை சமர்ப்பித்து அமுல்படுத்துவது மற்றும் அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இடம்பெறும் ஆளும்கட்சியின் முதலாவது கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1292214

  25. நீண்ட விடுமுறைக்கு பின்னர், மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்! அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரமே பாடசாலைகள் திறக்கப்படும் எனவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் ஒன்லைன் ஊடாக கற்க முடியும் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தென் மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஜூலை 29 ஆம் திகதி வரை வாரத்தின் ஐந்து நாட்களும் இயங்கும் என தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். போக்குவரத்து சிரமம் காரணமாக அதிபர்கள், ஆசிரியர்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.