ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
21வது திருத்த சட்டத்தினை... ஆதரிக்கவேண்டும் என்கின்ற நிலைப்பாடு, கூட்டமைப்பின் ஒரு சாராருக்குள்ளும் இருக்கின்றது – ஜனா 21வது திருத்த சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டுமானால் 13வது திருத்த சட்டத்திற்குள் இருக்கும் அதிகாரங்களை முழுமையாக பரவலாக்கவேண்டும் என்ற திருத்தம் 21வது திருத்த சட்டத்திற்குள் உள்வாங்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலரும் 21வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் செயற்படுவதுடன் அந்த …
-
- 0 replies
- 161 views
-
-
அவசர மற்றும் அசாதாரண நிலையின் போது... சிறுவர்களுக்கு, வழங்குவதற்கான மருந்துகள் வைத்தியசாலைகளில் உள்ளன! அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு வழங்குவதற்கான மருந்துகள் அரச வைத்தியசாலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் உப தலைவர் சிறுவர் நோய் விசேட வைத்தியர் கோசல கருணாரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிறுவர்களைக் கொண்டு செல்லுமாறும் அவர் கோரியுள்ளார். மருந்து தட்டுப்பாடு காரணமாக சிறுவர்களை அரச வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்ல பெற்றோர்கள் பின்வாங்குவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். தற…
-
- 0 replies
- 109 views
-
-
’உணவு பஞ்சம் ஏற்படாது’ பா.நிரோஸ் அதிகளவான ஹெக்டேயர்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாது என தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர, உணவுப்பஞ்சம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார். நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் நேற்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை வசமுள்ள நெல்லை விரைவாக அரிசியாக மாற்றி விநியோகிக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறினார். வழமையாக மாதமொன்றுக்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப்படும். எனினும், அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக அதி…
-
- 6 replies
- 510 views
-
-
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ்... 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை, இறக்குமதி செய்ய தீர்மானம்! இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்குத் தேவையான நிதியை இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்திற்கு ஒதுக்குவது என பிரதமர் அலுவலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரிசி தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், அரிசி விலையில் அசாதாரணமான உயர்வைக் கட்டுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்திய கடன் தொடர்பான கலந்துரையாடலில் வர்த்தக, வர்த்தக மற…
-
- 0 replies
- 211 views
-
-
நாட்டில், ஊரடங்குச் சட்டத்தை... அமுல்படுத்துவது குறித்து, அரசாங்கத்தின் அறிவிப்பு! நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அறிவித்துள்ளனர். சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முடக்கம் அல்லது ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விசாரித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் ஜனாதிபதியும் பிரதமரும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. https://athavannews.com/2022/1287315
-
- 0 replies
- 238 views
-
-
எரிபொருள் இறக்குமதி: இரண்டு நிறுவனங்கள் தெரிவு பா.நிரோஸ் எரிபொருளை ஏற்றிக்கொண்டு மூன்று கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இக் கப்பல்களுக்கான நிதியை செலுத்துவதற்கான நாணயக் கடிதம் கிடைத்த பின்னரே, இக் கப்பல்கள் எப்போது நாட்டை வந்தடையும் என்ற திகதியை அறிவிக்க முடியும் எனவும் தெரிவித்தார். இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசலை வழங்க இரண்டு புதிய சர்வதேச தனியார் நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. விமான எரிபொருள் விநியோகிக்க மற்றுமொரு தனியார் நிறுவனமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் நாட்டுக்கு வர இருக்கும் இறுதியான எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடையும் என பிரதமர் அண்மையில் …
-
- 0 replies
- 208 views
-
-
எதிர்காலத்தில்... ரயில்களை, இயக்க முடியாமல் போகலாம்? இயந்திரங்களுக்கு தேவையான எண்ணெய் பற்றாக்குறை காரணமாக எதிர்காலத்தில் ரயில்களை இயக்க முடியாமல் போகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள இயந்திரங்களுக்கு தேவையான எண்ணெய் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே போதுமானது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இயந்திர எண்ணெய் இறக்குமதிக்கான கடன் கடிதங்களை திறக்க டொலர்கள் இல்லை எனவும் ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சூழ்நிலையில், தற்போது இயக்கப்படும் ரயில்களில் ஒரு பகுதி சேவையில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இயந்திரங்களுக்கு தேவையான எண்ணெய் இந்தியா மற்றும் சீனாவில் …
-
- 0 replies
- 153 views
-
-
தினேஷின் அறிக்கைக்கு எதிர்ப்பு: மனோ கணேசன் பாராளுமன்ற தேர்தல்முறையை விகிதாரசார முறையில் இருந்து கலப்பு முறைக்கு மாற்றும் சிபாரிசை முன்வைக்கும் தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தணவின் ஒருதலைபட்ச இறுதி அறிக்கைக்கு, தெரிவுக்குழுவின் பெரும்பாலான அங்கத்தவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவில் ஏற்படாத உடன்பாடுகளையும், உண்மைக்கு புறம்பான தகவல்களையும் உள்ளடக்கி இந்த இறுதி அறிக்கையை தெரிவுக்குழு தலைவர் சமர்பித்துள்ளார். இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமானால் அங்கும் அதை நாம் எதிர்ப்போம் என்றும் தெரிவித்துள்ளா…
-
- 0 replies
- 349 views
-
-
வீட்டுத் தேவைக்காக... சமையல் எரிவாயு சிலிண்டர்கள், விற்பனை செய்யப் படாதாம்! அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதால், வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று முன்தினம் தரையிறக்கப்பட்ட எரிவாயு தகனசாலை, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படவுள்ளது. குறித்த கையிருப்புக்கள் தீர்ந்த பின்னர் இதுவரை புதிய எரிவாயு கொள்வனவுக்கான உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை. அடுத்த எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைய குறைந்தது மூன்று வாரங்கள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/12…
-
- 1 reply
- 350 views
-
-
திறந்த கணக்கு முறையின் மூலம்... அத்தியாவசியப் பொருட்களை, இறக்குமதி செய்வதற்கு... மீண்டும் அனுமதி. திறந்த கணக்கு முறையின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் திறந்த கணக்கு முறையின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள…
-
- 0 replies
- 204 views
-
-
மீண்டும் வீட்டில் இருந்து வேலை – ஒன்லைன் முறையில் கல்வி: ஆராயும் அரசாங்கம்! எரிபொருள் நெருக்கடி நிலைமை அதிகரிக்கும் நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்தல் மற்றும் ஒன்லைன் முறையில் பணிகள் என்பனவற்றை முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இதனை அமுல்படுத்துவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இன்றைய தினத்தில் அரச அதிகாரிகள் கூடி இது தொடர்பில் இறுதி முடிவெடுக்கவுள்ளனர். இதேவேளை பாடசாலைகளையும் ஒன்லைன் முறையில் நடத்திச் செல்வதற்கும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 138 views
-
-
பாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கு... இணைய முறையை, அறிமுகப்படுத்த தீர்மானம்! பாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கு இணைய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு இவ்வாறு இணைய வழியில் கற்பித்தல் செயற்பாடுகளையும் பொது சேவையையும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விடயம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1287318
-
- 0 replies
- 170 views
-
-
நாடளாவிய ரீதியில்... பாடசாலைகளுக்கு, விடுமுறை! நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுஸில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், அண்மையில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athava…
-
- 0 replies
- 151 views
-
-
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு... இன்று முதல், வெள்ளிக் கிழமைகளில்... விடுமுறை! அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 3 மாதங்களுக்கு வாராந்தம் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் சுகாதார, மின்சக்தி, எரிபொருள், பாதுகாப்பு, கல்வி மற்றும் இதர அத்தியாவசிய சேவைகள் அன்றையதினம் இயங்கும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, எதிர்வரும் 3 மாதங்களுக்கு இவ்வாறு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 111 views
-
-
"டெங்கு" நோயாளர்களின், எண்ணிக்கை... 50 வீதத்தால் அதிகரிப்பு. மேல் மாகாணத்தில் 10 வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் குடம்பி ஆய்வு பிரிவின் உதவி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நுளம்பின் முட்டை ஒரு வருடத்திற்கும் மேலாக வறண்ட சூழலில் இருக்கும் எனவும், குறித்த பகுதியில் தண்ணீர் நிரம்பும் போது நுளம்புகள் 8 முதல் 10 நாட்களுக்குள் உற்பத்தியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், அதிக அளவில் சுற்றுச்சூழலுக்கு விடப்படும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் போத்தல்கள் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்…
-
- 0 replies
- 118 views
-
-
மக்களின்.... போசாக்கு நிலை தொடர்பில், ஆய்வு! மக்களின் போசாக்கு நிலை தொடர்பில் ஆய்வு நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியினால் மக்களின் போசாக்கு நிலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்த துல்லியமான தரவுகளை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஊட்டச்சத்து அளவு படிப்படி…
-
- 0 replies
- 140 views
-
-
வெள்ளிக்கிழமை விடுமுறையை... வீட்டுத் தோட்டத்தை, சுத்தம் செய்ய... பயன்படுத்துங்கள் – GMOA வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. டெங்கு தொற்று மற்றும் நுளம்பு பெருகும் இடங்கள் அதிகரித்து வருவதால், இவ்வாறு சுற்றுச்சூழலை சுத்தம் செய்யுமாறு அந்தச் சங்கத்தின் உறுப்பினர் பிரசாத் கொலம்பகே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2020ஆம் ஆண்டில், 31,000 டெங்கு வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் ஆனால் கடந்த …
-
- 0 replies
- 169 views
-
-
புத்திஜீவிகள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் புத்திஜீவிகள் காய்தல் உவத்தலின்றி பலமான அமைப்பாகச் செயற்பட்டு புலத்திலும், புலத்திற்கு வெளியிலும் சிதறியுள்ள தமிழ்கட்சிகளையும் தமிழ் அமைப்புகளையும் தீர்வை நோக்கிய கொள்கைதளத்தில் ஒன்றிணைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். செவ்வியின் முழு விபரம்:- கேள்வி: இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவ்வாறு இருக்கின்றது? பதில்: மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் யுத்தத்தால் பல இழப்பகளைச் சந்தித்து அதற்கான நீதி …
-
- 0 replies
- 268 views
-
-
Published by Rajeeban on 2022-06-16 14:56:39 இந்தியாவின் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை பிரதமரை சந்தித்தார் என தெரிவித்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் அவர் யாரை பிரதிநிதித்துவம் செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்திற்கு புதுப்பித்தக்க வலுசக்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து இலங்கையில் உருவாகியுள்ள சர்ச்சைகளின் மத்தியில் கொழும்பிற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர் ராம் மாதவ் விஜயம் மேற்கொண்டுள்ளமை பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்திய அரசாங்கத்தில் உத்தியோபகபூர்வ பதவிகள் எதனையும் வகிக்காத ராம்மாதவ் இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். அவர…
-
- 0 replies
- 321 views
-
-
இந்தியாவின் அதானி குழுமத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதிரான உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது. பம்பலப்பிட்டி மெஜஸ்டிக்சிட்டியின் முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டியை நோக்கி நகர்ந்தவண்ணமுள்ளது. இந்தியாவின் அதானி குழுமத்துடான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்தை கைவிடக்கோரி சுமார் 75 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் கொள்ளுப்பிட்டியை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர் என பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதானி குழுமத்துடனான உடன்படிக்கைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
-
- 3 replies
- 391 views
-
-
கொழும்பில் 16 மணிநேர நீர் வெட்டு கொழும்பின் பல பகுதிகளுக்கு 16 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது. நீர் குழாய்களை திருத்தும் பணிகள் காரணமாக கொழும்பில் சனிக்கிழமை (18) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 3.00 மணி வரை 16 மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. கொழும்பு 04 இல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும். https://thinakkura…
-
- 0 replies
- 184 views
-
-
இலங்கை தொடர்பில் ஐ.நா. கவலை இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது. அதிகரித்து வரும் உணவு தட்டுப்பாடும், கடுமையான விலைவாசி உயர்வும் மக்களின் பட்டினியை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்க்கை சூழலை எவ்வாறு பாதித்து இருக்கிறது? என ஐ.நா. அங்கு ஆய்வு நடத்தியது. குறிப்பாக ஐ.நா.வின் உலக உணவு திட்டமும், இலங்கையின் தேசிய திட்டமிடல் துறையும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்தவகையில் இலங்கையில் விலைவாசி உயர்வு மற்றும் மக்களின் வாங்கும் திறன் குறைந்ததால் 80 சதவீதத…
-
- 0 replies
- 244 views
-
-
பயிர்ச் செய்கையில்... ஆர்வமுள்ள இளைஞர்களிடம், அரசுக்கு சொந்தமான... நிலங்களை ஒப்படைக்கவும் – ஜனாதிபதி! மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச செலவினத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக கொழும்பு- கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வுஎ…
-
- 24 replies
- 997 views
-
-
எரிபொருள் பெறுவதற்காக... வரிசையில் காத்திருந்த, மேலுமொருவர் உயிரிழப்பு! பாணந்துறையில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பாணந்துறை வெகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த 55 வயதான முச்சக்கர வண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1287153
-
- 0 replies
- 151 views
-
-
நிலாவரை கிணறு சம்பந்தமாக... வலி கிழக்கு, தவிசாளருக்கு.. எதிரான வழக்கு ஒத்திவைப்பு. நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தடையாக அமைந்ததன் வாயிலாக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தொடாரப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வருடம் தொடரப்பட்ட இவ் வழக்கில் வழக்கினை முன்னொண்டு செல்வதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையினைப் பெறுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) மல்லாகம் நீதவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அச்சுவேலி பொலிஸார் மேலதிக அறிக்கை…
-
- 0 replies
- 172 views
-