ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
21வது திருத்தத்திற்கு... முழுமையான, ஆதரவு – மைத்திரி தானும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த வரைவில் உள்ள அனைத்து திருத்தங்களுக்கும் உடன்படுவதாகவும் மேலும் பல முன்மொழிவுகளும் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1284364
-
- 0 replies
- 182 views
-
-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், முன்னிலையாகுமாறு... மஹிந்த, நாமலுக்கு அழைப்பு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் அமைதியின்மை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே முன்னாள் பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேலதிகமாக நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரையும் எதிர்வரும் புதன்கிழமை முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாக அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 354 views
-
-
யாழில்... எரிவாயு சிலிண்ட,ர் விநியோகிக்கப்படவுள்ள முறை! எரிவாயு சிலிண்டர் விநியோக பொறிமுறை தொடர்பான நடைமுறைகள் பற்றி யாழ்ப்பாண மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது கேள்விக்கு குறைவான சிலிண்டர்களே எமக்கு கிடைக்கப்பெறுவதனால் கிடைக்கப்பெறும் சிலிண்டர்களை சீரான முறையில் மற்றும் நியாயமான விலையில் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக பின்வரும் பொறிமுறை ஊடாக எரிவாயு சிலிண்டர்களை எதிர்வரும் காலங்களில் பகிர்ந்தளிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1. பொதுமக்களுக்கான வீட்டுப்பாவனை மக்களுக்கு விநியோகிக்கும் முறை: கிராம அலுவலர் பிரிவுகளுக்…
-
- 0 replies
- 107 views
-
-
அரசியல் தலையீடுகள் இல்லாமல்... பார்த்துக் கொள்வதாக, மத்தியவங்கி ஆளுநரிடம் ஜனாதிபதி உறுதியளிப்பு மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல ஒத்துழைப்பையும் அரசாங்கம் வழங்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். மத்திய வங்கி ஆளுனர் மற்றும் நிதிச் சபையின் உறுப்பினர் சஞ்சீவ ஜயவர்தன உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி மாளிகையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். குறுகிய காலத்திற்குள நிதி நெருக்கடிகளை சமாளிப்பதற்கும், நாட்டை சுமுகமான நிலைமைக்கு இட்டுச் செல்வதற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள…
-
- 0 replies
- 98 views
-
-
இரட்டை குடியுரிமை உடையவர்கள்... உயர் பதவிகளை, வகிக்க... தடை விதிக்க வேண்டும் – வாசுதேவ இரட்டை குடியுரிமை உடைய நபர் அரசியலில் அல்லது அரச உயர்பதவி வகிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இரட்டை குடியுரிமையுடைய இருவர் இதுவரையில் அரசியல் மற்றும் அரச உயர் பதவியில் செல்வாக்கு செலுத்தியுள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு 21ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற ஆளும்கட்சியின் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வாசுதேவ நாணயக்கார கேட்டுக்கொண்டார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படும் போது முறையான ஒழுங்கு முறைமை பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 79 views
-
-
ஜனாதிபதி... பாதுகாப்பு அமைச்சினை வகிக்க முடியுமா, முடியாதா ? அரசியல் கட்சிகள் மாற்று கருத்து! அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை வகிக்க முடியுமா, முடியாதா என்பது குறித்து அரசியல் கட்சிகள் மாற்று கருத்துக்களை முன்வைத்துள்ளன. 19 ஆவது திருத்தத்தை 21 ஆவது திருத்தமாக நடைமுறைப்படுத்துவதை முதற்கட்டமாகவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதை இரண்டாம் கட்டமாகவும் செயற்படுத்த கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தற்போது 19ஆவது திருத்தத்தின் முக்கிய விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூல வரைபில் உள்வாங்கப்படவில்லை என்பதனால் அதில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து விர…
-
- 0 replies
- 73 views
-
-
”ஈ.பி.டி.பி. ஐ விமர்சிக்கும் அருகதை யாருக்கும் கிடையாது”: டக்ளஸ் ஆட்சியை தீர்மானிக்கும் அதிகாரங்களை மக்கள் எமக்கு வழங்கியிருந்தால், கணிசமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கான சந்தர்ப்பங்களையும் மக்கள் வழங்கிய அதிகாரத்தினையும் வீணடிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸத்தர்கள், அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான இன்றைய கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் தொடர்ந்தும் கர…
-
- 6 replies
- 496 views
-
-
ஒரு போதும்... பதவி, விலகப் போவதில்லை – ஜனாதிபதி தாம் ஒருபோதும் பதவி விலகப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து தன்னால் மாத்திரம் இலங்கையைக் காப்பாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் திறன் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உண்டு எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அதன்காரணமாகவே அவரைப் புதிய பிரதமராக நியமித்துள்ளதுடன் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுப் பொறுப்புக்களையும் அவரிடம…
-
- 2 replies
- 385 views
-
-
வவுனியா, முல்லைத்தீவினைச் சேர்ந்த... 7 வீர, வீராங்கனைகள்... இந்தியாவிற்கு பயணம் ஸ்ரீலங்கா மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஊடாக இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டிக்கான தெரிவுப்போட்டியில் பங்கேற்பற்காக வவுனியா மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 7 வீர வீராங்கனைகள் இந்தியாவிற்கு சென்றுள்ளனர். நேற்று ஆரம்பமான போட்டிகள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் வெற்றி பெறும் வீர வீராங்கனைகள் உலக மிக்ஸ் பொக்சிங் சங்கத்தினூடாக 3 மாத பயிற்சியை பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர். https://athavannews.com/2022/1284287
-
- 7 replies
- 442 views
- 1 follower
-
-
யாழில் வீடொன்றில் இருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் மீட்பு யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். 76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்துள்ளார். மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவ…
-
- 10 replies
- 565 views
-
-
போராட்டக்காரர்கள் மீது, கொழும்பில்... கண்ணீர் புகை – நீர்த்தாரை பிரயோகம் கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள உலக வர்த்தக மையத்தினை அண்மித்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். காலிமுகத்திடல் போராட்டத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இதன்காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1284270
-
- 0 replies
- 286 views
-
-
21 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு? அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்படுவது மற்றும் ஜனாதிபதி அதிகாரங்களில் ஒரு பகுதியை பிரதமருக்கு பகிர்வது தொடர்பிலேயே இவ்வாறு முரண்பாடு உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும், ஏற்பாட்டை பஸில் ராஜபக்ஷவிற்கு மிகவும் நெருக்கமான…
-
- 0 replies
- 219 views
-
-
மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது... பேருந்து கட்டணம்? வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூன் மாதம் மேற்கொள்ளப்படவுள்ளது. அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது அண்மையில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும் அது போதுமானதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேருந்துக் கட்டண உயர்வினால் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதன்காரணமாக பேருந்து தொழில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இத்தொழிலுக்கு டீசல் மானியம் வழங்கினால், பழைய கட்டணத்திலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும் …
-
- 0 replies
- 230 views
-
-
வடக்கு மக்களுக்கு இந்தியாவிடம் இருந்து உதவிகள்! இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகள் போன்றவற்றை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இவற்றை காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக எடுத்து வருவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். தொலைபேசி ஊடாக நேற்று இடம்பெற்ற, இரண்டு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர், கடற்றொழில் அமைச்சரின் குறித்த முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண …
-
- 9 replies
- 508 views
-
-
‘தற்போதுள்ள அரசாங்கம் புதிய அரசாங்கம் இல்லை’ - எம்.ஏ.சுமந்திரன் வி.நிதர்ஷன் “தற்போதுள்ள அரசாங்கம் புதிய அரசாங்கம் இல்லை” எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், “பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்” என்றார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டை மோசமான பொருளாதார நெருக்கடி தாக்கியிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதை நிகழ்த்தியவர்கள், அதற்குப் பொறுப்பானவர்கள் அரசாங்கத்தில் தற்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். “இதற்கு முக்கிய காரணமாக கூறப்படும் ஜனாதிபதி…
-
- 2 replies
- 321 views
-
-
50 ஆவது நாளில் காலிமுகத்திடல் போராட்டம் காலிமுகத்திடல் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலை மையமாக கொண்டு பாரிய போராட்டமொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். சாதாரண தர மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்துமாறு போராட்டக்காரர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு ஒன்று பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எந்தவொரு அரச நிறுவனத்திற்கோ அல்லது உத்தியோகபூர்வ இல்லத்திற்கோ நுழைந்து ச…
-
- 2 replies
- 274 views
-
-
தேசபந்து தென்னகோனின்... தொலைபேசி இதுவரை, கைப்பற்றப்படவில்லை: சாட்சியங்கள் அனைத்தையும் அழிக்க கால அவகாசம்? சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கி 5 நாட்கள் கடந்தும் தேசபந்து தென்னகோனின் தொலைபேசியை இதுவரை சி.ஐ.டியினர் கைப்பற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவரது தொலைபேசியைக் கைப்பற்றி பகுப்பாய்வை மேற்கொள்ள சட்டமா அதிபர் கடந்த 23 ஆம் திகதி சி.ஐ.டியினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால் ஐந்து நாட்களாகியும் அவரிடம் இருந்து தொலைபேசியை பெற்றுக்கொள்ள சி.ஐ.டி. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஈஸ்டர் தாக்குதலில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன செய்தது போல் சாட்சியங்களை அழிக்க நேரம் கொடுக்கப்படுகின்றது என குற்றச்சாட்…
-
- 0 replies
- 280 views
-
-
ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் குழுவை வழிநடத்துகிறாரா பிரசாந்தன்? May 27, 2022 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டக்களப்பு பொலீஸ் தலைமயகத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தது. குறித்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்ட பொலீஸ் அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அவதூறு பரப்பி அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஊடகவியலாளர்கள் மீதும் அவர்களது குடும்பங்கள் குறித்தும் அவதூறு பரப்பி அச்சுற…
-
- 0 replies
- 388 views
-
-
75% கட்டுமான தொழிலாளர்கள்... வேலை இழக்கும், அபாயம் ! நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சுமார் 75% கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் பெருமளவிலான கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1284255
-
- 0 replies
- 184 views
-
-
நிறைவேற்று அதிகார... ஜனாதிபதி முறைமை நீக்கம் – சர்வஜன வாக்கெடுப்பு... அவசியம், என சட்டமா அதிபர் அறிவிப்பு. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரும் அரசியலமைப்பின் 21 ஆம் திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு ஊடாக மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ள வேண்டும் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் நாடாளுமன்றிற்கு தனிநபர் பிரேரணையாக சமர்பிப்பித்தனர். இந்நிலையில் அவர்கள் சமர்ப்பித்த 21 மற்றும் 22ஆம் திருத்தங்கள் தொடர்பான உத்தேச சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே அதனை நிறைவேற்ற …
-
- 0 replies
- 168 views
-
-
மருத்துவப் பொருட்களை... இலங்கைக்கு, நிவாரணமாக... வழங்கியது இந்தியா ! 25 டன்களுக்கும் அதிகமான எடையுள்ள மருத்துவப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு நிவாரணமாக வழங்கியுள்ளது. இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் குறித்த மருத்துவப் பொருட்கள் கையளித்தார். குறித்த மருத்துவப் பொருட்களின் பெறுமதி சுமார் 260 மில்லியன் இலங்கை ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1284235
-
- 0 replies
- 119 views
-
-
மக்களால் தெரிவு செய்யப்பட்ட... ஜனாதிபதியின் அதிகாரத்தில், மக்களால் புறக்கணிக்கப்பட்ட... பிரதமர் – ஜே.வி.பி. குற்றச்சாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை, மக்களால் புறக்கணிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க வகிப்பது மக்களாணைக்கு முற்றிலும் விரோதமானது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. 9ஆவது நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை வரையறை செய்து பொதுத் தேர்தலை விரைவாக நடத்தி மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதமரிடம் அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவா…
-
- 0 replies
- 165 views
-
-
21ஆவது திருத்தம், முறையாக நிறைவேற்றப்படாவிடின்... அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் – மஹிந்த அமரவீர அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் முறையாக நிறைவேற்றப்படாவிடின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஆகவே மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து சகல கட்சிகளும் 21ஆவது திருத்தத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதேவேளை அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணவே அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார். எனவே புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பொறுப்பெற்றமை சுதந்திர கட்சிக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.…
-
- 0 replies
- 121 views
-
-
பிரதி பொலிஸ் மா அதிபர்கள்... சிலருக்கு, இடமாற்றம் ! சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.எஸ்.தமிந்த தென் மாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தென்மாகாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இதேவேளை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.கே.டப்ள்யூ. கே. சில்வா கிழக்கு மாகாணத்தில் இருந்து குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுற்கு மாற்றப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொ…
-
- 0 replies
- 366 views
-
-
பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் பஷில் என்பதை மக்கள் நன்கு அறிவர் - அனுர பிரியதர்ஷன யாப்பா (இராஜதுரை ஹஷான்) சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளமைக்கு முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தவறான பொருளாதார முகாமைத்துவம் பிரதான காரணம் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இரட்டை குடியுரிமையாளருக்கு 21 ஆவது திருத்தத்தில் தடை விதிக்கப்படாவிடின் சமூக கட்டமைப்பில் மீண்டும் அமைதியற்ற தன்மை தோற்றம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடிக்கு 74 வருடகால…
-
- 0 replies
- 115 views
-