ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
தமிழ் நாட்டில் இருந்து... அனுப்பி வைக்கப்பட்டுள்ள, நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல்... நாளை இலங்கையினை வந்தடையும் என தகவல் தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை(22) இலங்கையினை வந்தடையவுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. குறித்த கப்பலில் 9 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, 50 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 25 மெற்றிக் தொன் மருந்து பொருட்கள் அதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிவாரணப் பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த முதல் தொகு…
-
- 0 replies
- 129 views
-
-
இலங்கைக்கு... 07 வழிகளில் உதவிகளை வழங்குமாறு, இந்தியாவிடம்... ஜீவன் தொண்டமான் கோரிக்கை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளனர். பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்கும் இந்தியாவிற்கு நன்றிகளை தெரிவிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன், பொருளாதார நெருக்கடியை நிவர்த்திப்பதற்கு இலங்கைக்கு 07 வழிகளில் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்து கடிதமொன்றையும் இந்திய நிதியமைச்சரிடம் இவர்கள் கையளித்துள்ளனர். இவற்றில் உணவு, மருந்துகள், எரிபொருள்,…
-
- 0 replies
- 118 views
-
-
நாமல் ராஜபக்ஷவிடம்... சுமார் 4 மணிநேரங்கள், வாக்குமூலம் பதிவு! குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் சுமார் 4 மணிநேரங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. காலி முகத்திடல் மற்றும் அலரிமளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகவே வாக்குமூலம் வழங்க அவர் நேற்று அழைக்கப்பட்டார். அந்தவகையில் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் நாமல் ராஜபக்ஷ சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினார். https://athavannews.com/2022/1283161
-
- 0 replies
- 124 views
-
-
சந்தைக்கு இன்று மேலும் 80 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை சந்தைக்கு இன்றைய தினம் மேலும் 80 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நேற்று 45 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் நாட்களில் தினமும் தலா 80 ஆயிரம் சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாளாந்தம் 60 சதவீதமான எரிவாயு கொள்கலன்களை கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களுக்கு விநியோகிக்குமாறு கோப் குழுவினால் லிட்ரோ நிற…
-
- 0 replies
- 109 views
-
-
வன்முறைச் சம்பங்கள் தொடர்பில்... இதுவரையில், 31 முறைப்பாடுகள் பதிவு நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பங்கள் தொடர்பில் இதுவரையில் 31 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு 669 உதவிக்குறிப்புகள் ( tip ) கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 73 வீடியோக்களும், 484 படங்களும் தங்களுக்கு பொதுமக்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஆதாரங்களை அனுப்பி வைத்து…
-
- 0 replies
- 94 views
-
-
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை... நிறுத்த வேண்டியிருக்கும் – காஞ்சன விஜேசேகர எச்சரிக்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளினை ஏற்றிச்செல்லும் கொள்களன்களை சில குழுக்கள் அச்சுறுத்தி வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பயணிக்கும் லொறிகளை மடக்கிப் பிடித்து, அங்குள்ள எரிபொருள் நிலையங்களில் தரையிறக்குமாறும், அவ்வாறு இல்லையென்றால் லொறிகளுக்கு தீ வைப்பதாக சில குழுக்கள் அச்சுறுத்தி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுமானால் போக்குவரத்து ஊழியர்களின் நலன் கருதி எரிபொருள் வி…
-
- 0 replies
- 260 views
-
-
எங்களிடம் டொலர்கள்இல்லை – ரூபாய்கள் இல்லை-சர்வதேச ஊடகத்திற்கு பிரதமர் பேட்டி நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையின் வரலாற்றில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லை ஆர்ப்பாட்டக்காரர்களின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடியும்- ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம் உள்ளது- சர்வதேச ஊடகத்திற்கு பிரதமர் பேட்டி நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு முன்னைய நிர்வாகமே காரணம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் ஸ்கைநியுசிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் தலைநகர் கொழும்பில் ஆ…
-
- 0 replies
- 188 views
-
-
பிரதமரின் ஸ்கை நியுசிற்கான பேட்டி முழுமையாக – தமிழில் தினக்குரல் நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையின் வரலாற்றில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லை ஆர்ப்பாட்டக்காரர்களின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடியும்- ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம் உள்ளது- 1 கேள்வி பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் -நீங்கள்முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலையில் பிரதமராக பதவி ஏற்பதற்கு விரும்பியிரூப்பீர்கள் என நான் நிச்சயமாக நம்புகின்றேன்-மிக மோசமான சூழ்நிலைகள் இதற்கு யார் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும்? பதில்- முன்னைய நிர்வாகம் பொரு…
-
- 0 replies
- 185 views
-
-
கொடிகாமம் துயிலுமில்ல காணி இராணுவ முகாமுக்காக அளவீடு – மக்கள் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டது! கொடிகாமம் மத்தியில் தனியாருக்கு சொந்தமான துயிலுமில்ல காணி இராணுவ முகாமுக்கு காணி அளவிடப்பட்ட நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மக்களின் எதிர்ப்பையடுத்து அளவீடு கைவிடப்பட்டது. 15து கஜபாகு படைப் பிரிவிற்க்கே காணி அளவீடுசெய்யப்பட்டுள்ளது. 10 .5 பரப்பு தனியாருக்குச் சொந்தமான துயிலுமில்ல காணியே இவ்வாறு அளவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வருகை தந்திருந்தமை குறிப்…
-
- 1 reply
- 250 views
-
-
விசாரணைகளில் இருந்து தப்பியோடமாட்டோம் – நாமல் கோட்டா கோ கம மீது மே 9 ம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இருந்து நாங்கள் தப்பியோடப்போவதில்லை என நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிஐடியினர் பெயர் வெளியிட்ட அனைவரும் சரணடைந்துள்ளனர் அல்லது வாக்குமூலம் வழங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி அரசியல் பேதமின்றி வன்முறைகள் படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இல்லாவிட்டால் சமூகம் குழப்பத்தில் சிக்கும் …
-
- 4 replies
- 425 views
-
-
அரசியலில் இருந்து விலக விருப்பம் - அழுத நடிகை! தான் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான கீதா குமாரசிங்க அறிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தனியாக வாழ்ந்து வந்த தமது வீட்டுக்கு கடந்த வன்முறையின்போது பாரிய சேதம் விளைவிக்கப்பட்டு்ள்ளதாக தெரிவித்தார். சுவிட்ஸர்லாந்தின் குடியுரிமையை ரத்துச்செய்ய அரசியலுக்காக இலங்கை வந்த தமக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க குறிப்பிட்டார். கீதா …
-
- 6 replies
- 784 views
-
-
ரணிலால் ஏற்படவுள்ள மாற்றம் - அமெரிக்கா வெளியிட்ட தகவல்! இலங்கையின் அண்மைய அரசியல் மாற்றங்களுடன் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிகள் குறைவடைந்து பத்திரங்களின் பெறுமதி உயரும் என அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜே.பி.மோர்கன் தெரிவித்துள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை தற்போதைய குறைந்த மதிப்பை விட பத்திரங்களின் மதிப்பு உயர வழிவகுக்கும் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இது சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் மற்றும் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களை நியமிக்கும் செயல்முறையை எளிதாக்கும் என்று வங்கி கணித்துள்ளது. இந்த ஸ்திரத்தன்மை சர்வதேச நாணய நிதியத்தின் விவாதங்கள் மற்றும் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களை நியமனம் செய்யும் செயல்முறையை முன்னோக்கி …
-
- 3 replies
- 454 views
-
-
இலங்கை தொடர்பில் தென்கொரியா எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு! இலங்கை தொடர்பில் தென்கொரியா அந்நாட்டு பிரஜைகளுக்கு விசேட பயண ஆலோசனைகள் சிலவற்றை வழங்கியுள்ளது. அதன்படி, அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் ரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் தென் கொரிய மக்களுக்கு அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=161393
-
- 1 reply
- 290 views
-
-
மட்டக்களப்பில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றவர்கள் மீது விசாரணை மட்டக்களப்பில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் வரை சென்ற இருவரின் வீடுகளுக்குச் சென்ற புலானாய்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். May 15, 2022 பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை இனப்படுகொலைக்கு நீதி கோரி சென்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்குபற்றிய இருவர் மீதே இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மட்டகளப்பு கிரான் பிரதேசத்தின் எத்தலை மேட்டுக்காடு பகுதியில் வசித்துவரும் செல்வநாயகம் நேசன். மற்றும் தங்க ரூபன் ஆகிய இருவரையும் அவர்களது வீடுகளுக்கு தேடிச் சென்ற சந்திவெளி காவல்துறைப் புலனாய்வு அதிகாரிகள் விச…
-
- 0 replies
- 301 views
-
-
ஹரீன் – மனுஷ கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கம்! கட்சியின் தீர்மானத்தை மீறி நடந்துகொண்டமைக்காக ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. மேலும் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்போது ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும் மனுஷ நாணயக்கார தொழிலாளர் மற்றும் வெளிநாட்ட…
-
- 0 replies
- 185 views
-
-
இலங்கையில் நடைபெற்றது, இனப் படுகொலை: வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்! இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என வலி.மேற்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பிரதேச சபையின் அமர்வு நேற்று )வெள்ளிக்கிழமை) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றபோதே பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபை அமர்வின்போது உறுப்பினர் திருமதி ச.சுபாஜினி மேற்படி பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார். வன்னியில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தாமும் ஒரு சாட்சியாளர் என அவர் எடுத்துரைத்தார். அங்கு இடம்பெற்ற வேதனைகளையும் வலிகளையும் உணர்ந்தவர் என்ற அடிப்படையில் அது இனப்படுகொலையே என அவர் கூறினார். இதன்போது, உறுப்பினர்…
-
- 0 replies
- 244 views
-
-
ரணிலுக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில்... மோதல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன – மைத்திரி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் தோன்ற ஆரம்பித்துள்ளன என்பது தெளிவாகின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கு மாத்திரம் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 158 views
-
-
காலி முகத்திடல் நோக்கி... கிளிநொச்சியில் இருந்து, துவிச்சக்கர வண்டியில் பயணம்! கோட்டா கோம் ஆர்ப்பாட்ட களத்தை நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை குடும்பஸ்தர் ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துள்ளார். இன்று காலை விசுவமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணத்திற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கினர். கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற 32 வயதுடைய குடும்பத்தரே இவ்வாறு பயணத்தை ஆரம்பித்தார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், பொருளாதார நெருக்கடி தொடர்பில் கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்…
-
- 0 replies
- 205 views
-
-
கனேடிய நாடாளுமன்றத்தில்... நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில், இலங்கை அரசாங்கம் அதிருப்தி. இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தமை வருத்தமளிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கங்களை முற்று முழுதாக நிராகரிப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கை தொடர்பிலான கனேடிய அரசாங்கத்தின் அதிக…
-
- 16 replies
- 1k views
-
-
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... சிற்றுண்டிச்சாலையில் இருந்து, உணவு வழங்குவதை... இடைநிறுத்த நடவடிக்கை -சபாநாயகர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 53 உறுப்பினர்களினால் எழுத்துமூலமான கோரிக்கைக்கு அமைய சிற்றுண்டிச்சாலையில் இருந்து உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு வழங்குவதை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த தீர்மானம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பாக எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார். இதேவேளை, கோப், கோபா உள்ளிட்ட குழுக்களின் அதிகார…
-
- 0 replies
- 131 views
-
-
ரணில் விக்கிரமசிங்க... ராஜபக்ஷ குடும்பத்தால், கைதியாக்கப்பட்டுள்ளார் – சாணக்கியன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு அரசியல் கைதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “நான் ஏன் ரணில் விக்கிரமசிங்கவை இவ்வாறு தாக்குகின்றேன் என தமிழ் பேசும் மக்கள் இன்று பார்த்து கொண்டிருப்பார்கள். ஆனால் நான் தாக்குவதற்கான காரணம் 2019 வரை இருந்த ரணில் விக்கிரமசிங்க வேறு தற்போது அவர் ராஜபக்ஷ குடும்பத்தை காப்பற்றுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவராக காணப்படுகின்றார் அவரால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது. அவர…
-
- 0 replies
- 134 views
-
-
அமரகீர்த்தி அத்துகோரலவின், கொலையுடன் தொடர்புடைய... பிரதான சந்தேக நபர் கைது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான பேருந்தின் சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1282960
-
- 0 replies
- 327 views
-
-
உடன் அமுலுக்கு வரும் வகையில்.... கேன்கள், கொள்கலன்கள், போத்தல்களில்... பெற்றோல் வழங்கப் படாது! உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலுள்ள வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளுக்கு மாத்திரமே பெற்றோல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா ஐஓசி நிறுவனத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களில் கேன்கள், கொள்கலன்கள் அல்லது போத்தல்களில் பெற்றோல் வழங்கப்படாது எனவும் லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1282968
-
- 1 reply
- 199 views
-
-
450 கிராம் பாண் ஒன்றின் விலை... 30 ரூபாவால் அதிகரிப்பு. கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இன்று நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரீமா நிறுவனத்தினால் வெளியிடப்படடுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கயை கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை 40 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 193 views
-
-
மஹிந்த... விமானத்தில், நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என தெரிவிப்பு நாடாளுமன்ற அமர்வுகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரின் அலுவலகம் இன்று (வியாழக்கிழமை) நிராகரித்துள்ளது. இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் ஒருங்கிணைப்பு செயலாளர் கீதாநாத் காசிலிங்கம், மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் இருப்பதாகவும், சமூக வலைதளங்களில் கூறப்படுவது போல் ஹெலிகொப்டரில் அவர் நாடாளுமன்றுக்கு வரவில்லை என்றும் சாலை வழியாகவே அவர் நாடாளுமன்றத்துக்கு வந்ததாகவும் கூறினார். மேலும் சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படம் பழையது என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://athava…
-
- 0 replies
- 139 views
-