ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
இரண்டு நாட்களுக்கு பின்னரே... பெற்றோல் வழங்கப்படும்: வரிசையில், காத்திருக்க வேண்டாம் – அரசாங்கம்! நாட்டில் இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும் என்றும் எனவே மக்கள் வரிசையில் நிற்கவேண்டாமென அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக வரும் செய்திகள் உண்மையில்லை என தெரிவித்தார். அவ்வாறு ஒருபோதும் வழங்கப்படவில்லை என்றும் இனிமேலும் வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டார். இதேநேரம், நேற்று இரவு பெற்றோல்களை ஏற்றிய கப்பலொன்று நாட்டிற்கு வந்ததாகவும், அதிலிருந்து சரக்குகளை இறக்க வேண்டும் என்பதால் உடனடியாக பெற்றோலை விநி…
-
- 0 replies
- 132 views
-
-
தமிழ் தேசிய அரசியல் சக்திகள்... அனைத்தும் ஒன்றுபட, வேண்டும் – எம்.வினோராஜ் வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு தமிழர்களின் விடுதலைக்காக பயனிப்பதே முள்ளிவாய்க்கால்போன்ற இன அழிப்பில் ஆகுதியாகியவர்களுக்கு செய்யும் கைமாறு என மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் எம்.வினோராஜ் தெரிவித்தார். வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் அன்னதான நிகழ்வொன்றும் நேற்று (புதன்கிழமை) ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் செயலாளர் சதீஷனின் ஒருங்கிணைப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் கே.வினோராஜ் மற்றும் வணக்கம் வாழ…
-
- 0 replies
- 171 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... மானிய விலையில், எரிபொருள் வழங்கப்படுவதாக... குற்றச்சாட்டு – அரசாங்கம் மறுப்பு! மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பகிரப்பட்ட பதிவுகள் தவறானவை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் தற்போதைய விலையைவிட குறைவான விலைக்கே அவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இந்த விடயம் குறித்து இன்று (வியாழக்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பொதுமக்களின் விரக்தியையும் கோபத்தையும் நான் புரிந்துகொண்டாலும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பகிரப்பட்ட பதி…
-
- 0 replies
- 107 views
-
-
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில்... இதுவரை, 883 பேர் கைது! நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 883 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இவர்களில் 364 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 412 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 805 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள…
-
- 0 replies
- 120 views
-
-
அமரகீர்த்தி அத்துகோரளவின்... வெற்றிடத்திற்கு, ஜகத் சமரவிக்ரம நியமனம் மறைந்த அமரகீர்த்தி அத்துகோரளவின் மறைவையடுத்து வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்படப்ட வன்முறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்திருந்தார். இந்நிலையில், அவரின் பதவி வெற்றிடத்திற்கே பொலன்னறுவை மாவட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2022/1282707
-
- 0 replies
- 121 views
-
-
துமிந்த திஸாநாயக்கவின்... கைத் துப்பாக்கியை, காணவில்லையென முறைப்பாடு! அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுமதி பெற்ற குறித்த கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரரால், அநுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் தீ வைக்கப்பட்டது. இதன்போதே குறித்த கைத்துப்பாக்கி காணாமல்போயுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நாடாளுமன்ற உறு…
-
- 1 reply
- 171 views
-
-
எரிவாயு தட்டுப்பாட்டினை... நிவர்த்தி செய்ய, இன்னும்... 45 நாட்கள் செல்லும் – வரிசையில் நிற்பதை, தவிர்க்குமாறு அறிவிப்பு! நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நிலைமையை சமாளிக்க இன்னும் ஒன்றரை மாதம் செலவிடப்படும் என லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு நாளைக்கு 30,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வெளியிட நிறுவனம் ஆலோசித்து வருவதாக நிறுவனத்தினர் தெரிவித்தனர். மோசமான வானிலை காரணமாக சரக்கு கப்பலில் இருந்து எரிவாயுவை இன்னும் இறக்க முடியவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, எரிவாயு விநியோகம் தாமதமாகும் என்பதால், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. https://at…
-
- 0 replies
- 102 views
-
-
நீண்ட வரிசையில்... காத்திருக்கும் மக்கள். 121 ரூபாய்க்கு, நாடாளுன்ற உறுப்பினர்களுக்கு... வழங்கப்படும் எரிபொருள்? நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கும், எரிபொருளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் தற்போதைய நிலையில், மக்களை ஒடுக்கி அரசியல்வாதிகளின் சிறப்புரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் தற்போதைய விலையை விட குறைவான விலைக்கே அவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாரஹேன்பிட்டி பொலிஸ் ந…
-
- 0 replies
- 130 views
-
-
மேலும் சில அமைச்சர்கள்... இன்று பதவிப்பிரமாணம்? – சஜித் அணியில் இருவரும் பதவிகளைப் பெற வாய்ப்பு புதிய அரசாங்கத்தின் எஞ்சிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேச்சைக் குழுவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரும் புதிய அமைச்சரவையில் இணைந்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் அரசாங்கத்தின் கூட்டாளியாக இரு…
-
- 0 replies
- 101 views
-
-
காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் – 3, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்... வாக்குமூலம் பதிவு காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதேவேளை, காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய எட்டு சந்தேக நபர்களும் இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்னாண்டோ மற்றும…
-
- 0 replies
- 128 views
-
-
எரிவாயு ஏற்றிய... மற்றுமொரு கப்பல், நாட்டை வந்தடைந்தது எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று (வியாழக்கிழமை) நாட்டை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலில் சுமார் 3500 மெற்றிக் தொன் எரிவாயு இருந்ததாக அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார். எரிவாயு கப்பலுக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். கப்பலில் உள்ள எரிவாயு இருப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு ஏற்கனவே புறப்பட்டு சென்றதாக தெரிவித்த அவர், இந்த வாயு இறக்கும் பணி எதிர்காலத்தில் நடைபெறவுள்ளதாகவும், கடல் சீற்றம் காரணமாக அது தடைபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, தலா 3,500 மெற்றிக் தொன் கொண்ட மேலும் இரண்டு எரிவாயு தாங்கிகள் அடுத்த வாரம…
-
- 0 replies
- 243 views
-
-
தொழிற்சங்க நடவடிக்கையை... ஆரம்பிக்கவுள்ளதாக, GMOA எச்சரிக்கை! எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது. சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கப் போராட்டம் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், தேசிய சுகாதார சேவைகளை (NHS) தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள…
-
- 0 replies
- 122 views
-
-
நாட்டில்... இனவாதத்திற்கு, சந்தர்ப்பம் இல்லை – ஜனாதிபதியின் தேசிய இராணுவ வீரர்கள் தின செய்தி சமாதானம் மலர்ந்த தாய்நாட்டில் கடும்போக்குவாதம் அல்லது இனவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். தேசிய இராணுவ வீரர்கள் தினத்தை நினைவுகூரும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். வரலாற்றில் பல்வேறு சவால்கள் எழுந்தபோதும் தேசப்பற்றாளர்களாக இராணுவ வீரர்கள் முன்னோடிகளாக செயற்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதுள்ள சவால்கள் தொடர்பாக கவனமாகவும் விழிப்புடனும் ஆராய்ந்து செயற்பட வேண்டிய பொறுப்பு வரலாற்றின் ஊடாக இராணுவ வீரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொர…
-
- 0 replies
- 125 views
-
-
முன் பதிவுகளை... இரத்து செய்யும், சுற்றுலாப் பயணிகள் – புதிய சிக்கலில் இலங்கை! இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்த பல வெளிநாட்டவர்கள் அதனை இரத்து செய்துள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாகவே இவ்வாறு முன்பதிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார். 35 முதல் 40 வீதமான வெளிநாட்டவர்கள் இவ்வாறு தங்களது முன்பதிவுகளை இரத்து செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நிலவும் மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பாராத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்க…
-
- 0 replies
- 131 views
-
-
அரசியலமைப்பின்... 21 ஆவது திருத்தத்தை, அமுல்படுத்துவது குறித்து அவதானம் – ரணில்! ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தனர். இந்தநிலையில் குறித்த கடிதத்திற்கு பதில் வழங்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 21வது திரு…
-
- 0 replies
- 116 views
-
-
விடுதலை புலிகளின் தாக்குதல் குறித்து... வெளியாகும் செய்திகளில், உண்மையில்லை – சபையில் பொன்சேகா சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் ஊடாக தீர்வு காண முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்தார். தனது இருப்பிற்கு மக்களின் போராட்டத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தினால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குல் மற்றும் அதனுடனான வன்முறை சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) உரையாற்றிய அவர், விடுதலை புலிகளின் தாக்குதல் குறித்து தற்போது க…
-
- 6 replies
- 492 views
- 1 follower
-
-
மஹிந்த மற்றும் நாமல்... நாடாளுமன்றுக்கு வருகை! முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் அவர் நாடாளுமன்றத்திற்கு வருவது இதுவே முதல்முறையாகும். மேலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆளும் கட்சியில் 4ஆவது முன்னணி ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. நாட்டில் கடந்த 9ஆம் திகதி ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் இருந்து பாதுகாப்பாக திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்…
-
- 8 replies
- 508 views
-
-
திருக்கோவில் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் SayanolipavanMay 18, 2022 திருக்கோவில் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கஞ்சி வழங்கி ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் நினைவுப் பேரூரை என்பன இன்று இடம்பெற்றன. திருக்கோவில் பிரதேச இளைஞர்கள் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் பிரதான வீதியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டிய பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. http://www…
-
- 0 replies
- 213 views
-
-
மட்டக்களப்பில்... தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் நிவைவேந்தல்! தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தல் நிகழ்வு இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு கல்லடி சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் உபதலைவரும் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது உயிர்நீர்த்தவர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் கூட்டுப்பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண அமெரிக்க மிசனின் குரு முதல்வர் அருட்தந…
-
- 1 reply
- 241 views
-
-
காலி முகத்திடல் போராட்டத்தின் மீது... தாக்குதல் நடத்த வந்தவர்களை, தடுக்க வேண்டாமென கூறியது யார்? – ரமேஸ் வெளியிட்ட தகவல்! காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வருபவர்களுக்கு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்தப் போராட்டம் இங்கு ஒரு மாதமாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின் மீது கல் எறியும் எண்ணம் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இல்லை. நாங்கள் எந்த…
-
- 0 replies
- 221 views
-
-
கொழும்பு-03 அலரிமாளிகைக்கு முன்பாக இருக்கும் பேரவாவிக்குள் தள்ளிவிடப்பட்ட உறுப்பினர்களில் மூவர், பிரேத ஊர்தியில் ஏறி, மறைந்துகொண்டு வீடுகளுக்குச் சென்றிருந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த “மைனா கோ கம”, காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த “ கோட்டா கோ கம” ஆகியவற்றின் மீது, மே.9 ஆம் திகதியன்று தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல்களில் பலர் பேர வாவிக்குள் தள்ளிவிடப்பட்டனர். அதில்,கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரதேச சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவரும் அடங்கியிருந்தவர்கள். அவர்களே, பிரேத ஊர்தியில் ஏறி, மறைந்திருந்து வீடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். …
-
- 1 reply
- 305 views
-
-
யாழில்... முஸ்லிம் மக்களினால், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது. ஐக்கியத்திற்கான யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு வீதியால் பயணித்தோருக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கி வைத்தார்கள். https://athavannews.com/2022/1282580
-
- 0 replies
- 327 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது மாணவர்களால் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச்சுடரேற்றி ஒருநிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இனபேதமின்றி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1282640
-
- 0 replies
- 237 views
-
-
தனது, வீடு எரிக்கப்பட்டமை தொடர்பாக.... நாடாளுமன்றத்தில்... பந்துல விசனம்! நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பாக நாடளுமன்றத்தில் மிகவும் உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமர்வில் உரையாற்றிய அவர், “என் வீடு தீப்பற்றி எரிந்தது. இந்த நாட்டிற்கு எதிராக நான் என்ன குற்றம் செய்தேன் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். என் தொண்டையில் இரத்தம் வரும் வரை 300,000 பேருக்கு மேல் எனது அறிவுத்திறனைப் பகிர்ந்துகொண்டேன். நான் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்ததில்லை. நான் உருவாக்கிய வீட்டிலேயே எப்போதும் இருக்கிறேன். ஒரு நாளிதழை ஆசியாவிலேயே சிறந்த படமாக உருவாக்கியதற்காக டாலர் பரிசு பெற்றேன். நாட்டுக்…
-
- 0 replies
- 196 views
-
-
மட்டக்களப்பில்... முள்ளிவாய்க்கால் நிவைவேந்தலை, நடத்துவதற்கு தடை – நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி! மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தலை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றிய அவர், இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்பு கோட்டா கோ கம உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தல் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருவதாகதாக தெரிவித்த அவர், ஆனால் மட்டக்களப்பில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 600 பேர் இதனா…
-
- 0 replies
- 133 views
-