ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
தாக்குதலில்... இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, நாமல் அனுதாபம் – வன்முறையை நிறுத்துமாறு... அழைப்பு! பயங்கரமான சூழ்நிலையில் இந்த பயங்கரமான நேரத்தில் இறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “பயங்கரமான சூழ்நிலையில் இந்த பயங்கரமான நேரத்தில் இறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். குறிப்பாக, அமரகீர்த்தி அத்துகோரல. எல்லா வகையிலும் அவர் ஒரு நல்ல மனிதர். வன்முறையை நிறுத்துவோம்” என பதிவிட்டுள்ளார். https://athavanne…
-
- 0 replies
- 225 views
-
-
பிரதமர் பதவியை, வழங்குவதற்கு... சரத் பொன்சேகாவுடனும், ஜனாதிபதி பேச்சு? பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், தாம் பிரதமராக நியமிக்கப்பட்டால், நாட்டை ஆளக்கூடிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெறுவதற்கு தனக்குப் பின்னால் பலம் இருப்பதாக பொன்சேகா நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனத்தில் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அடுத்த பிரதமர் யார் என்பது குறித்தும், உத்தேச இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்புகளை ஏற்பது குறித்தும் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து…
-
- 0 replies
- 190 views
-
-
பிரதமர் பதவிக்காக... மூவரின் பெயர்களை, பரிந்துரை செய்தது... மைத்திரி தரப்பு! பிரதமர் பதவிக்காக மூவரின் பெயர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 11 கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுவினால் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக இதுகுறித்த அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நாடாளுமன்றத்திலுள்ள சுயேட்சை எம்.பி.க்கள் குழுவினைச் சேர்ந்த நிமல் சிறிபால டி சில்வா, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. https://athavannews.com/2022/1281509
-
- 0 replies
- 189 views
-
-
விசேட... கட்சித் தலைவர்கள், கூட்டம் இன்று! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் காலை 9.30 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையவழியூடாக கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதுடன், மூன்று முக்கிய விடயங்கள் குறித்து அதன்போது கலந்துரையாடப்பட்டது. பிரதமரை நியமிக்குமாறும், அமைச்சரவையை உடனடியாக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும் கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்…
-
- 0 replies
- 162 views
-
-
அமைதியின்மையை... ஏற்படுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு... எதிராக சட்ட நடவடிக்கை! நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக இதுவரையில் 59 சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பல்வேறு சமூக ஊடக தளங்களில் இயங்கும் குழுக்கள்…
-
- 0 replies
- 127 views
-
-
ஊரடங்கு உத்தரவு தளர்வு – 2 மணிக்கு மீண்டும், அமுல்படுத்தப்படும்! நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், அதன்பின்னர் 13ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது. முன்னதாக நேற்று காலை வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை வரையில் அது நீடிக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்க…
-
- 0 replies
- 119 views
-
-
சட்டவாட்சியை பாதுகாக்கும் அனைத்து நிறுவனங்களும்... மோதல் சூழ்நிலைகளில், ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டு! சட்டவாட்சியை பாதுகாக்கும் அனைத்து நிறுவனங்களும் மோதல் சூழ்நிலைகளில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்ற மோதல் நிலைமைகளில் புலனாய்வுத்துறையினரின் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவாட்சியை பாதுகாக்கும் அனைத்து நிறுவனங்களும் மோதல் சூழ்நிலைகளில் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) ஆணைக்குழுவில் ஆஜரான பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆக…
-
- 0 replies
- 120 views
-
-
5 மணி நேர மின்வெட்டுக்கு... பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அனுமதி! நாடு முழுவதும் 5 மணி நேர மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது. பகலில் மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் இரவில்1மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு நீடிக்கும் என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார். அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,LP,Q,R,S,T,U,V,W இல் காலை 8.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை ஐந்து மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. M,N,O,X,Y,Z வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் 8.20 மணி வரையிலும், CC வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் 9.20 மணி வரையிலும் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்ப…
-
- 0 replies
- 153 views
-
-
ஜனாதிபதி... இன்று இரவு 9 மணிக்கு, நாட்டு மக்களுக்கு... விசேட உரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(புதன்கிழமை) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். இன்று இரவு 9 மணிக்கு இவ்வாறு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1281490
-
- 2 replies
- 386 views
-
-
-
எந்தவொரு, வன்முறையையும்... மன்னிக்கமாட்டோம் – குண்டர்களால் தாக்கப்பட்ட பாதிரியார்கள் அலரிமாளிகைக்கு அருகிலுள்ள மைனா கோ கம என்ற இடத்தில் குண்டர்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்த இரண்டு கிறிஸ்தவ பாதிரியார்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த கைகலப்பில் அவர்களுடன் பௌத்த பிக்கு ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தாங்கள் எப்போதும் சமாதானம், இன நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்திற்காக நிற்பதாகவும், எந்தவொரு வன்முறையையும் மன்னிக்கமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து இலங்கையர்களிடையே நிலையான அமைதி மற்றும் ஒற்றுமைக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் இரண்டு பாதிரியார்களும் மீண்டும் வலியுறு…
-
- 6 replies
- 813 views
-
-
அவசரமாக... ரணிலை, சந்தித்து... பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது... கொழும்பு அரசியல்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் தற்போது முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இந்த நிலையில், தற்போது ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2022/1281496
-
- 0 replies
- 284 views
-
-
ஊரடங்கு கடுமையாகிறது – துப்பாக்கிச் சூடும் நடத்தப்படக்கூடும் என, பொலிஸார் எச்சரிக்கை! நாட்டில் இன்றிரவு(புதன்கிழமை) ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மக்கள் அநாவசியமாக ஒன்றுகூட தடை விதிக்கப்படுவதோடு, தேவையேற்படின் துப்பாக்கி சூடு நடத்துமாறும் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஊரடங்கு காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் எனவும், வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூடவேண்டாம் எனவும் பொதுமக்களை பொலிஸ் எச்சரித்துள்ளது. கொள்ளை அல்லது வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டால், அந்நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத…
-
- 0 replies
- 184 views
-
-
மஹிந்தவின்... மெதமுலன இல்லமும், தீக்கிரை. மஹிந்த ராஜபக்ஷவின் பரம்பரை இல்லமான வீரக்கெட்டிய, மெதமுலன இல்லமும் தீக்கிரையாகியுள்ளது. ஆர்ப்பாட்டகாரர்கள் சிலரினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, வீரகெட்டியவில் அமைந்துள்ள டி.எ.ராஜபக்ஷ உருவச்சிலைக்கும் மக்கள் தீ வைத்துள்ளனர். https://athavannews.com/2022/1280952
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
அரசின்... பங்காளி கட்சி அந்தஸ்த்திலிருந்து, விலகிக் கொள்கிறோம் – "உலமா" கட்சியின் தலைவர், முபாறக் அப்துல் மஜீத் எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் என்பதை மீண்டும் நாட்டு மக்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) அறிவித்துக்கொள்கிறது என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மஹிந்த ராஜபக்ச நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ளவராக இருந்த போதும் தனது அருகில் கள்வர்களையும், கொள்ளையர்களையும் வைத்துக்கொண்டிருந்ததால் நாடு அதள பாதாளத்தில் விழுந்து விட்டது. கடந்த நல்லா…
-
- 6 replies
- 563 views
-
-
நாட்டில் குவிக்கப்பட்டுள்ள, இராணுவம் தொடர்பாக... அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கவலை ! நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. அத்தோடு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் அரசியல் தலைவர்கள் துரிதமாக செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை நாட்டில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்தும் கவலையடைவதாக இராஜாங்க திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அமைதியான போராட்டக்காரர்களுக்கு…
-
- 2 replies
- 382 views
-
-
அனைத்து இனத்தவரும்... ஒன்றிணைந்தாலே, இந்த போராட்டம் வெற்றியடையும் – விமலசார தேரர். இந்த சூழ்நிலையில் வடகிழக்கில் வசிக்கும்... மூவினத்தவரும், ஒற்றுமையாக இருப்போம் என வடக்கு முதன்மை சங்கநாயக்க தேரர் பூஜ்ய சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் தெரிவித்தார். நாட்டுநிலமை தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “அரசுக்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் ஒரு மாதத்திற்கும் மேலாக அகிம்சை ரீதியான போராட்டம் இடம்பெற்றுவந்தது. அதனை பொருட்படுத்தாத அரசாங்க ஆதரவாளர்கள் அவர்களை தாக்கி அவர்களது போராட்டத்தை குழப்பியமையாலேயே நாட்டில் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில்…
-
- 1 reply
- 395 views
-
-
சிங்கள மக்களுடன்... நல்லுறவை, வலுப்படுத்துவதன் மூலமே... பிரச்சினைகளை, தீர்க்க முடியும் – டக்ளஸ் தேவானந்தா. தென்னிலங்கயைில் வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களுடன் தேசிய நல்லிணக்கத்தினையும் நல்லுறவையும் வலுப்படுத்துவதன் மூலமே, பிரச்சினைகளை தீர்க்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். டக்ளஸ் தேவானந்தா பொதுமக்களுக்கு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,உங்களின் உணர்வுகளையும் அதில் இருக்கின்ற நியாயங்களையும் நாங்கள் புரிந்து கொள்ளுகின்றோம். அதற்கு மதிப்பளிக்கின்றோம்.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். மக்களுக்கு ஏற்பட்ட…
-
- 2 replies
- 386 views
-
-
ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே.... பிரதமர் பதவியை, சஜித் ஏற்பார் – லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் விவாதிக்க திட்டமிடப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று அது குறித்து விவாதிக்கப்படும் என கூறியுள்ளார். அத்தோடு, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி உடனடியாக பதவி விலக …
-
- 1 reply
- 156 views
-
-
இலங்கையில் இந்திய இராணுவம்; இந்தியா மறுப்பு இலங்கையின் தற்போதையை நிலையை கட்டுப்படுத்துவதற்காக இந்திய இராணுவம் இலங்கைக்கு வரவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை இந்திய தூதரகம் மறுத்துள்ளது. இலங்கைக்கு தனது இராணுவத்தை இந்தியா அனுப்பவில்லை என்றும் அவ்வாறு அனுப்பாது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், உள்நாட்டு அமைதியின்மைக்கு மத்தியில் இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக வெளியான தகல்களை நிராகரிப்பதாக ட்வீட் செய்துள்ளது. இவ்வாறான போலியான செய்திகள், இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை என உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. “இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்…
-
- 3 replies
- 291 views
-
-
அலரிமாளிகை சம்பவத்துடன், தொடர்புடையவர்களை... அடுத்த சில மணித்தியாலங்களில்... கைது செய்ய வேண்டும் – சாலிய பீரிஸ் அலரிமாளிகை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடுத்த சில மணித்தியாலங்களில் கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வாறான கைதுகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சிலர் வெளிநாடு செல்ல முயற்சிக்கின்றனர் என்றும் நாட்டை விட்டுத் த…
-
- 0 replies
- 218 views
-
-
பொது இடத்தில்... ஒன்று கூடினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – கோட்டா கோ கம போராட்டக்காரர்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை! பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் உரையாற்றிய பொலிஸார், நாட்டில் கடந்த 6ஆம் திகதி முதல் அவசரகாலச் சட்டமும் நேற்று முன்தினம் முதல் நாளை காலை வரை ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்தக் காலப்பகுதியில் மைதானம், கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் ஒன்றுகூடுவது சட்டவிரேதமாகும் என தெரிவித்த பொலிஸார், எனவே... பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர். https://athavannews.com/2022/128…
-
- 0 replies
- 145 views
-
-
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்யில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகமும் போராட்டகாரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் போராட்டத்தில் குண்டர்கள் புகுந்து குழப்பம் ஏற்படுத்தினர். இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்த நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இன்றைய தினமும் நாடு முழுவதும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், நடைமுறையில் இரு…
-
- 7 replies
- 738 views
-
-
சஜித் பிரதமரானால்... அவரை, ஆதரிக்கத் தயார் – சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்றத்தில் உள்ள சுயேச்சைக் குழுவும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே தாம் பிரதமர் பதவியை ஏற்பேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281393
-
- 1 reply
- 115 views
-
-
நாட்டின் பொருளாதார நிலைமை... மேலும் மோசமாகும் – மத்தியவங்கி ஆளுநர் எச்சரிக்கை. அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த நெருக்கடிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்காவிட்டால், பதவி விலகுவேன் என்றும் கூறியுள்ளார். தற்போதைய நிலைமை தொடர்ந்தால், நாளாந்தம் 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். https://atha…
-
- 0 replies
- 126 views
-