ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142867 topics in this forum
-
டி.ஏ.ராஜபக்சவின்... உருவச்சிலை, உடைக்கப்பட்டது! தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த D.A.ராஜபக்ஷவின் சிலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இன்று(செவ்வாய்கிழமை) சேதமாக்கப்பட்டுள்ளது. டி.ஏ. ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தந்தை என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1281202
-
- 8 replies
- 661 views
-
-
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், தேசபந்து தென்னகோன் மீது... தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், இருவர் கைது! மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுபிட்டிய பொலிஸாரினால் இன்று(செவ்வாய்கிழமை) குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இன்று மாலை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது, கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற…
-
- 0 replies
- 199 views
-
-
வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை... நிறுத்துங்கள் – ஜனாதிபதி கோட்டா, பகிரங்க கோரிக்கை. மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பலவேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் வன்முறைகளில் ஈடுபடாமல் பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார். https://athavannews.com/2022/1281198
-
- 4 replies
- 442 views
-
-
மஹிந்த ராஜபக்ச... நாட்டை விட்டு, வெளியேற மாட்டார் – நாமல் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற மாட்டார் என்று அவரது மகன் நாமல் ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். தாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் உள்ளன என தெரிவித்த அவர், எனினும் நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என தெரிவித்துள்ளார். மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும், தனக்குப் பின்வருபவரைத் தெரிவு செய்வதில் தீவிரப் பங்கு வகிக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் “எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவர் குடும்பத்துடன் தொடர்புகொள்கிறார்” என்றும் நாமல் கூறி…
-
- 1 reply
- 322 views
-
-
அமைதியான போராட்டம் மீதான... தாக்குதல்களுக்கு, ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கடும் கண்டனம் இலங்கையில் மேலும் வன்முறைகள் இடம்பெறாத வகையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் கோரியுள்ளார். நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் குறைகளை தீர்க்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கொழும்பில் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை அடுத்து ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் கவலை அடைவதாகவும் அவர் கூறினார். ஆகவே இடம்பெற்ற அனைத்து தாக்குதல்கள் குறித்தும் சுதந்திரமாகன, முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை…
-
- 0 replies
- 128 views
-
-
முழுமையான விசாரணைகளை, நடத்துமாறு... சட்டமா அதிபர் பணிப்பு ! கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணையை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆலோசனை வழங்கியுள்ளார். சம்பந்தப்பட்ட விடயங்களின் தீவிர தன்மையைக் கருத்திற்கொண்டு, அரசியலமைப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறும் வகையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்துதியுள்ளார். அதன்படி இந்த வன்முறை சம்பவங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் மற்றும் அதன் பின்னனியில் இருந்தவர்கள் குறித்து கண்டறிந்து அவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார். …
-
- 0 replies
- 278 views
-
-
கட்சி சாராத... பிரதமர் தலைமையில், 15 பேர் அடங்கிய... சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க, ஜனாதிபதி இணக்கம் – ஓமல்பே சோபித தேரர் கட்சி சாராத பிரதமர் ஒருவரின் தலைமையில் 15 பேரடங்கிய சர்வகட்சி அமைச்சரவையை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். சர்வ மதத் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281148
-
- 0 replies
- 147 views
-
-
ஜனாதிபதி கோட்டாவின் கீழ், இடைக்கால அரசு – ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கின்றது... ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் அமையும் இடைக்கால அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது என்றும் அவர் கூறியுள்ளார். இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார். இதேநேரம் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க பதவிகளை ஏற்குமாறு ஜனாத…
-
- 1 reply
- 201 views
-
-
திருகோணமலை, கடற்படை தளத்தில்... மஹிந்த, உள்ளிட்ட குடும்பத்தினர் ? முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திருகோணமலை கடற்படை தளத்தில் இருந்து அவர்கள் கப்பல் மூலம் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அடுத்து குறித்த பகுதியை மக்கள் தற்போது முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1281102
-
- 9 replies
- 718 views
- 1 follower
-
-
கோட்டா கோ கம... ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் – CID விசாரணை காலி முகத்திடலில் உள்ள கோட்டா கோ கம போராட்ட தளத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான டி.ஐ.ஜி.க்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. நேற்றைய மோதல்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 231 பேர் காயமடைந்துள்ளனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொ…
-
- 0 replies
- 144 views
-
-
இலங்கையின்... மோசமான நிலைமை குறித்து, உலக வங்கி கவலை! இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது. மேலும் பொறுப்புக்கூறல் இருந்தாலே நெருக்கடி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என உலக வங்கி அறிவித்துள்ளது https://athavannews.com/2022/1281089
-
- 0 replies
- 188 views
-
-
தேர்தலுக்குச் செல்வது.... சாத்தியமற்றது, அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்குங்கள் – மைத்திரி நாடு தற்போது எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தம்மோடு கைகோர்க்குமாறு ஜே.வி.பிக்கு சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இந்த அழைப்பை விடுத்தார். இந்தத் தருணத்தில் தேர்தலுக்குச் செல்வது சாத்தியமற்றது என்பதால், இடைக்காலத்தை அமைக்க ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர், ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு …
-
- 0 replies
- 104 views
-
-
4 மாதத்தில்... ஒரு இலட்சம் பேர், நாட்டைவிட்டு வெளியேற்றம்! இலங்கையைவிட்டு இந்த வருடத்தில் இதுவரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியுள்ளதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதோடு, எதிர்வரும் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் வளர்ச்சியடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் செயலாளர் எம்.எப்.எம்.அர்ஷாத் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் 2021 வருடாந்த அறிக்கையின் பிரகாரம், கடந்த வருடம் வேலைக்காக வெளிநாடுச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 795ஆக பதிவாகியுள்ளதாகவும் இது முந்தைய ஆண்டை வ…
-
- 0 replies
- 147 views
-
-
இலங்கை கலவரம்: பிரதேச சபை தலைவர் ஏ.வி. சரத் குமார மரணம்; இதுவரை 7 மரணங்கள் http://www.thinakaran.lk/sites/default/files/styles/node-detail/public/news/2022/05/10/Sri-Lanka-Riot-At-Least-7-Persion-Killed.jpg?itok=XB88lNCJ - அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு சேதம் - கோட்டா கோ கம, மைனா கோ கம தாக்குதல் விசாரணைகள் CID யிடம் இமதூவ பிரதேச சபையின் தவிசாளர் A.V. சரத் குமார, அவரது இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தை தொடர்ந்து பிரதேச சபைத் தலைவர் ஏ.வி. சரத் குமார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 174 views
-
-
யோஷித நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் – முக்கிய பிரமுகர்கள் ஜெட் விமானம் மூலம் வெளிநாட்டுக்கு May 10, 2022 முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ நேற்று (9) அதிகாலை நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன. யோஷிதவும் அவரது மனைவியும் சிங்கப்பூர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவா்களது தனிப்பட்ட வாகனத்தில் விமான நிலையத்துக்கு சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.. அதேவேளைஅரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை படைத்தளம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ,அவர்கள் அங்கிருந்து ஜெட் விமானம் ஒன்றின் மூலம் வெளிநாட…
-
- 4 replies
- 543 views
-
-
நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம் May 10, 2022 வன்முறைச் சம்பவங்களை தூண்டி நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தப்படலாமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளாா். நீதிக்காகவும், ஜனநாயக ஆட்சிக்காகவும் அமைதியான முறையில் அற்புதமான போராட்டத்தை நடத்தி வரும் அனைவரிடம் தான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன் எனத் தொிவித்த அவா் வன்முறைச் சம்பவங்களை தூண்டி நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ள அவா் நிறுவனத் திறமைகளை பயன்படுத்த வேண்டுமெனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://globaltamilnews.net/2022/176450
-
- 1 reply
- 265 views
-
-
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மீதான விவாதம் குறித்த திகதி நாளை தீர்மானிக்கப்படும் - சுமந்திரன் (நா.தனுஜா) அவசரகாலச்சட்டப்பிரகடனத்திற்குப் பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இதுகுறித்து ஆராய்வதற்கு இவ்வாரமே பாராளுமன்றம் கூடவேண்டும் என்று தாம் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி நாளைய தினம் நடைபெறவுள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மே…
-
- 0 replies
- 307 views
-
-
கலவரபூமியான கொழும்பும் அதன் இன்றைய நிலையும் ! அதிகாலை அலரிமாளிகையில் இருந்து வெளியேறிய மஹிந்த கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமாக மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மே மாதம் 9 ஆம் திகதி காலை ஒரு மாதம் நிறைவடையும் வரை அமைதியாகவும் சாத்வீகமாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வந்தது. இந்நிலையில், நேற்றையதினம் அலரிமாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாப்போம் என்ற தோரணையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் ஒன்றுகூடி கூட்டமொன்றை ஏற்பாடு செய்ததுடன் ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொண்டனர். இதன் பின்னர் அலரிமாளிகைக…
-
- 3 replies
- 418 views
- 1 follower
-
-
தமிழ் இளைஞர்கள்... மிகவும், நிதானத்தோடு... செயற்பட வேண்டும் – சிறிதரன் இத்தனை நிலைக்கு காரணமான ஜனாதிபதியே முதலில் பதவி விலகியிருக்க வேண்டும் எனவும் சமகால நிலை தொடர்பில் தமிழ் இளைஞர்கள் அமைதி காக்கவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் சமகால நிலை தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நாடு மிக மோசமான நிலையை எட்டியிருக்கின்றது. வன்முறை உச்சத்தை தொட்டிருக்கின்றது. ராஜபக்சக்களின் குண்டர்கள் நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் இடங்களிற்குள் புகுந்து அவர்களை தாக்கியிருக்கின்றார்கள். அதனால் கோபம…
-
- 1 reply
- 298 views
-
-
பொலிஸ்மா அதிபர் மற்றும்.. இராணுவ தளபதிக்கு அழைப்பு! -மனித உரிமைகள் ஆணைக்குழு.- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணத் தவறியதற்கான காரணத்தை விளக்குமாறு கோரியே மனித உரிமைகள் ஆணைக்குழு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவை எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1281047
-
- 0 replies
- 149 views
-
-
சிகிச்சைக்காக... வெளிநாடு செல்ல, தயாராகின்றார் மஹிந்த? முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனும் இந்த தகவலினை இதுவரையில் உறுதிப்படுத்த முடியவில்லை. https://athavannews.com/2022/1280968
-
- 0 replies
- 193 views
-
-
கண்ணீர் புகைத் தாக்குதலை மேற்கொண்ட... பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு கொழும்பில் அலரிமாளிகைக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த கண்ணீர் புகைத் தாக்குதலை மேற்கொண்ட உப பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளார். கண்ணீர்ப்புகைத் தாக்குதலின்போது ஏற்பட்ட வெடிப்பின் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1281046
-
- 0 replies
- 301 views
-
-
இராணுவப் பாதுகாப்புடன்... அலரி மாளிகையை விட்டு, வெளியேறினார் மஹிந்த …! முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராணுவப் பாதுகாப்புடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை அலரிமாளிகையை விட்டு வெளியேறியுள்ளார். அலரிமாளிகையை நேற்று முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். சுமார் 3 தடவைகள் கண்ணீர்ப்புகை தாக்குதலை நடத்திய பொலிஸார் இறுதியாக வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தையும் மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை பலத்த இராணுவ பாதுகாப்போடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையை விட்டு வெளியேறினார். இதே வேளை அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப…
-
- 1 reply
- 279 views
-
-
வன்முறை சம்பவங்களில்... குறைந்தது, 7 பேர் உயிரிழப்பு…! 5 பேர் ஆபத்தான நிலையில், அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 231 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 218 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 5 பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1281035
-
- 0 replies
- 137 views
-
-
நான் அரசியலில் இருந்து... ஒரு ரூபாய்கூட, சம்பாதிக்கவில்லை... சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன – நாடாளுமன்ற உறுப்பினர் தான் அரசியலில் இருந்து ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை என்றும், பிரத்தியேக வகுப்புகளை நடத்திச் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தீயிட்டு எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார். மேலும் தான் வாழும் வரை அரசியலுக்கு திரும்ப மாட்டேன் என்றும் தனது முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281039
-
- 0 replies
- 149 views
-