Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதிக்கு எதிராக... கூட்டமைப்பு கொண்டு வரும், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு... ஆதரவு – ரணில் ஜனாதிபதிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. காணொளி தொழில்நுட்பம் தொடர்பான கலந்துரையாடலின் போது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். இதேநேரம், நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாம் எதிர்க்கவில்லை என தெரிவித்த அவர், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் என்ன நடக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி…

    • 3 replies
    • 306 views
  2. குறைந்த வருமானம் பெறும்... 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு, நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கே இவ்வாறு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை விசேட பண கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1279742

  3. ஜனாதிபதி தலைமையில் உப குழு: குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு, நிதி உதவி வாழ்க்கைச் செலவை நிலையான வகையில் பேணிச் செல்வதற்கு ஜனாதிபதி தலைமையில் உப குழுவை நியமிக்க அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை உள்ளடக்கிய உபகுழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதேவேளை பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் ஜூலை வரை நிதி உதவி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1279740

  4. புதிய பிரதமர் நியமனம் குறித்து... பசில் கருத்து! பிரதமர் பதவி விலகினாலும் புதிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தரப்பில் பிரதமர் ஒருவர் நியமிக்கப்படமாட்டார் என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பௌத்த நாயக்கர்களின் அறிவுறுத்தலின்படி, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி 25ஆவது நாளாக கொழும்பில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு, நாட்டின் ஸ்திரமற்ற தன்மையைக் கருத்திற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென பலராலும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். …

    • 1 reply
    • 188 views
  5. காணாமல் போனோர்... அலுவலக ஆணையாளர், இராஜினாமா !! காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். குறித்த அலுவலகத்தில் சுயாதீனமாக செயல்பட அனுமதிக்கும் வகையில் போதுமான நிதியை அரசாங்கம் வழங்கவில்லை என அவர் கூறினார். மேலும் காணாமல் போனோர் அலுவலக விவகாரங்களில் சம்பந்தப்பட்ட அமைச்சு ஒன்று தலையிட்டு வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2021 டிசம்பர் 13 ஆம் திகதி முதல் மூன்று வருடங்களுக்கு காணாமல் போனோர் அலுவலக ஆணையாளராக சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1279699

    • 1 reply
    • 192 views
  6. மஹிந்த... பதவியை இராஜினாமா செய்ய, தீர்மானம்? – நாடாளுமன்றத்தில் நாளை முக்கிய அறிவிப்பு! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி நாளையதினம் அவர் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் கலைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நாளையதினம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. https://athavannews.com/2022/1279715

  7. "மே 6´ஆம் திகதி" நாடு தழுவிய... ஹர்த்தாலுக்கு, அழைப்பு! மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் முகமாக மே 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்த தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் கே.டி. லால்காந்த, யார் போராடினாலும் மக்களுக்கு தேர்தலை வழங்குவதும் அரசியலில் ஈடுபடுவதற்கான புதிய வாய்ப்பை வழங்குவதும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த புதிய நிர்வாகத்தை வழங்குவதுமே யதார்த்தம் என தெரிவித்துள்ளார். இலங்கைக்குள் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான ஒரே தீர்வு அரசியல் ஸ்திரத்தன்மையே என அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல மக்களின் வெற்றியை எதிர்பார்த்து இந்த ஹர்த்தால் மு…

  8. ஜனாதிபதிக்கு... தவறான ஆலோசகர்கள், இருக்கின்றனர் – தயாசிறி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தவறான ஆலோசகர்களை தெரிவு செய்தமையினால் நாடு நெருக்கடி நிலைக்கு சென்றது என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்ச தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குருநாகலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர், ஜனாதிபதியின் ஆலோசகர்களாக எட்டாம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாதவர்களும் இருப்பதாக கூறினார். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும், பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீட்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். சஜித் பிரேமதாச கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவினை வழங்க தயாராக இருந்தாலும் அவர் ஆட்சிய…

  9. அரிசி வகைகளுக்கான... அதிகபட்ச சில்லறை விலையை, அறிவிக்கும்... வர்த்தமானி வெளியீடு உள்ளூர் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) நேற்று (திங்கட்கிழமை) இரவு இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, வெள்ளை – சிவப்பு நாடு அரிசி கிலோ ஒன்றின் விலை 220 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெள்ளை – சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 230 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 260 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நுகர்…

  10. இந்திய கடல் எல்லையில்... அத்துமீறி மீன்பிடித்த, திருகோணமலை மீனவர்கள் 6 பேர் கைது! இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் இந்திய எல்லைப் பகுதியில் படகு ஒன்று நிறுத்தபட்டிருப்பதைக் கண்டு படகில் வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்பதும் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் இந்திய கடற்படையினர் கைது செய்து காரைக்கால் துறைமுகத்திற்கு நேற்று மதியம் அ…

  11. 13வது திருத்தச் சட்டத்தினை... அமுல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அண்ணாமலை இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பா.ஜ. கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்குகின்றது. எரிபொருள் மருந்து மற்றும் பண உதவி போன்ற பல்வேறுபட்ட உதவிகளை இந்த அரச…

    • 8 replies
    • 655 views
  12. மீண்டும் ஒன்றிணைந்த... ஆளும் கட்சி – தேசிய அரசாங்கத்திற்கு, இணக்கம் ! ஆளும் கட்சியும் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்ற பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர். இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டதாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார். அத்தோடு உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச உள்ளிட்ட உறுப்பினர்களும் இந்த விடயம் தொடர்பில் பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் குறிப…

    • 4 replies
    • 388 views
  13. பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர், அண்ணாமலை... யாழ். நல்லூர் கோயிலுக்கு விஜயம்! யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) காலை விஜயம் செய்த பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை நல்லூர் கோயிலுக்கு விஜயம் செய்துள்ளார். அதன்படி, இன்று காலை 9 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்ற அவரை, யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்று ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்வில் யாழிற்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1279566

    • 4 replies
    • 390 views
  14. தற்போதைய நிதி நெருக்கடியை சமாளிக்க... மினி பட்ஜெட்டை, கொண்டு வருகின்றது அரசாங்கம் !! ஜூன் முதல் ஓகஸ்ட் வரைக்குமான சிறிய வரவு செலவுத்திட்டம் அல்லது இடைக்கால கணக்கறிக்கை இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விடயம் குறித்து நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022 வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிரமம் காரணமாக 2020 ஐ போன்று இடைக்கால கணக்கறிக்கை கொண்டுவர அரசாங்கம் முயற்சி செய்கின்றது. எவ்வாறாயினும், புதிய வரிவிதிப்பு முறையோ அல்லது வரிச் சீர்திருத்தங்களையோ இடைக்கா…

    • 1 reply
    • 201 views
  15. இடைக்கால அரசாங்கத்திற்கு... மொட்டு கட்சி, இணக்கம்! சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணக்கம் தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமை தாங்கியிருந்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, செயலாளர் சாகர காரியவசம் ஆகியோரும், சுயாதீன அணிகளின் சார்பில் நிமல் சிறிபாலடி சில்வா, அநுரபிரியதர்சன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் டிரான் அலஸ் ஆக…

  16. சிங்கங்கள்... இருக்கும் இடத்தில், கர்ச்சனைகள் இருக்கும் – பொன்சேகாவுடனான மோதல் குறித்து ஹரின் மே தினக் கூட்டத்தில் நேற்று இடம்பெற்ற வாய்த் தகராறு குறித்து ஹரின் பெர்னாண்டோவை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடுமையாக சாடியுள்ளார். பேரணியில் பேசுபவர்களின் பட்டியலை தான் அவரிடம் கோரிய நிலையில் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு நடந்துகொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார். சுதந்திர சதுக்கத்தில் பேரணியை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை ஹரின் பெர்னாண்டோ மேற்கொண்டதாக சரத் பொன்சேகா தெரிவித்தார். எவ்வாறாயினும், சில நபர்களின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக ஹரின் பெர்னாண்டோ, பேரணியைப் பயன்படுத்தியதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார். இதேவேளை குறித்த மோதல் த…

  17. அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவிற்கு... இந்தியா வழங்கிய, ஒரு பில்லியன் டொலரில்... இரும்பு இறக்குமதி ! அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலரில் இரும்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 250 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 750 மில்லியன் டொலர்களில் இந்தியாவில் இருந்து இரும்பு மற்றும் உருக்கை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சந்தையில் அத்தியவசிய உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்டவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது, இந்நிலையில் இரும்பு மற்றும் உருக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கேள்விகளை எ…

  18. நாட்டில் நிலவும், அரசியல் ஸ்திரமின்மை – சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 50% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் 60,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என்றும் எனினும் மார்ச் மாதம் கிட்டத்தட்ட 110,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டிற்கு தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 1000-1500க்கு இடையில் குறைந்துள்ளதுடன், மார்ச் மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வரு…

  19. பௌசர் உரிமையாளர்கள் சங்கம்.... முன்னெடுத்திருந்த, வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது. தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குள் கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்ப்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் உறுதியளித்துள்ளார். இதனை அடுத்து தனியார் பெற்றோலிய பௌசர் உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் இன்று எரிபொருளை பெற்றுக்கொள்வதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே போராட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் எரிபொருள் போக்குவ…

  20. காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகப்பகுதியில் கலகத்தடுப்பு பொலிஸார் குவிப்பு காலிமுகத்திடல் பகுதியிலுள்ள ஜனாதிபதி செயலகத்தின் பிரதான வாயில் பகுதியில் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று (02) 24 ஆவது நாளாக ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையிலேயே இன்று திங்கட்கிழமை காலையில் இருந்து குறித்த பகுதியில் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் குறித்த பகுதியில் இதுவரை எவ்வித வன்முறைகள் இடம்பெற்றதாக எவ்வித செய்திகளும் வெளியாகவில்லை. இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளம…

  21. மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வு Sayanolipavan ( துதி , சுதர்சன் ) தமிழ் தேசிய கூட்டமைப்பின் சர்வதேச மேதின நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள மீனிசை பூங்காவில் நேற்று நடைபெற்றது. மேதின நிகழ்வின் ஆரம்பத்தில் கல்லடி பாலத்திலிருந்து தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின பேரணியில் இலங்கை ஆசிரியர் சங்கம்,இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம்,இலங்கை சமுர்த்தி கணிணி உதவியாளர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களும் இணைந்திருந்தன. இதன்போது மட்டக்களப்பு அரசடியிலிருந்து ஆரம்பித்த பேரணியானது கல்லடிப்பாலம் ஊடாக மீனிசைபூங்கா வரையில் சென்றதுடன் அங்கு நிகழ்வுகள் நடைபெற்றன. இலங்கை தமிழரசு…

  22. அரசுக்கு சார்பாக இருந்து பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - சி.சந்திரகாந்தன் May 2, 2022 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாம் அரசுக்கு சார்பாக இருந்து எமது கடமைகளை நிறைவேற்றி தனி நபர் வருமானத்தை கூட்ட நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசியாவிலே சனத்தொகை குறைந்ததும் அரசாங்க அதிகாரிகள் அதிகம் கொண்ட நாடு இலங்கையாகும். நாடு தரும் நல்ல விடயங்களை அனுபவிக்கும் அதேவேளை தீயவற்றையும் அனுபவிக்கவேண்டும். உலக நாடுகளிலும் இதே பிரச்சினை வந்துள்ள போதிலும் எமது நாட்டை சற்று அதிகம் தாக்கியுள்ளது. குண்டு வெடிப்பு தொடக்கம் தற்போதுவரை அனைவரும் சம்பளம் பெற்றனர். கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக வரும் அபிவிருத்திகளை நாம்…

  23. மஹிந்த.... பதவி விலகத் தயார் – புதிய பிரதமர், டலஸ்: டிலான் பெரேரா இடைக்கால அரசாங்கம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டத்தை முன்வைத்தால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு வழங்குவதற்கு தானும் உடன்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1279532

    • 1 reply
    • 273 views
  24. நாட்டில் யார் பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை ; சுமந்திரன் எம் பி தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் யார் புதிய பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். இன்று (02) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். யார் பிரதமராக வந்தால் நாட்டில் மாற்றம் ஏற்படலாம் என நீங்கள் கருதுகிறீர்கள் என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் தற்பொழுது அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலை காணப்படுகின்றது ப…

  25. இன்று... ரணசிங்க பிரேமதாசவின், 29ஆவது நினைவு தினம் நாட்டின் இரண்டாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான அமரர் ரணசிங்க பிரேமதாசவின் 29 ஆவது நினைவு தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை ) கொழும்பு புதுக்கடை பகுதியிலுள்ள அவரது உருவச்சிலைக்கு அருகாமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஹேமா பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் நிகழ்விடத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1279381

    • 6 replies
    • 612 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.