Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் கட்சிகள் இன்றி... கோட்டா கோ கமவில், மேதினக் கூட்டம் – அலையெனத் திரண்ட மக்கள்..! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 24 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு பலரும் தமது ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று காலி முகத்திடல் போராட்டக்களத்தில் அரசியல் தலையீடுகள் இன்றி மேதினக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி, கருப்பு கொடிகளை ஏ…

  2. "ஆவா குழுவை" சேர்ந்த... 16 பேர் கைது – ஓமந்தை பொலிஸார் அதிரடி!! வவுனியா ஓமந்தை கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆவா குழுவின் பதாதைகளை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் தொடர்பான தீவிர விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1279475

  3. மற்றுமொரு... வர்த்தமானி அறிவித்தலினை, மீளப்பெற்றது... அரசாங்கம்! மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலினை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வெளியாக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு மீளப்பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் 30, 2022 முதல் பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி முன்னதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1279446

  4. ஜனாதிபதிக்கு, எதிரான போராட்டத்தினை... நாமே ஆரம்பித்து வைத்தோம் – இரா.சாணக்கியன்! தென்னிலங்கையில் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை கண்டு அஞ்சிய போது, மட்டக்களப்பிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று காலை மரண வீடு ஒன்றிற்கு சென்றிருந்த போது தாய் ஒருவரை சந்தித்து பேசினேன். அவர் …

  5. அரசாங்கத்திற்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணையில், 120 பேர் கையொப்பமிட்டுள்ளனர் – எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில்,அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரமளவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1279402

  6. டொலர் நெருக்கடியால்... விமானங்களை, மட்டுப்படுத்த தீர்மானம் நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியின் விளைவாக இலங்கைக்கு சேவையாற்றும் விமான சேவை நிறுவனங்களுக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது என தகவகள் தெரிவிக்கின்றன . இதன் விளைவாக பெரும்பாலான விமான நிறுவனங்கள் கொழும்பில் இருந்து தங்கள் விமானங்களை மட்டுப்படுத்துகின்றன என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . கடந்த 3 – 6 மாதங்களில் சரக்கு மற்றும் பயணிகள் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளது என்றும் விமானத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இலங்கை வங்கிகள் மூலம் வெளிநாட்டு நாணயத்தில் பணம் அனுப்ப முடியாமல் போனதன் விளைவுகள் இவை எனவும் சுட்டிகா…

  7. அமைச்சு பதவிகளுக்காக... நாம் பேரம் பேசவில்லை – செந்தில் தொண்டமான்! இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை எவராலும் அசைத்து விடவும் முடியாது, அழித்துவிடவும் முடியாது என காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே செந்தில் தொண்டமான் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அன்று முதல் இன்றுவரை கொள்கை அடிப்படையிலேயே காங்கிரஸ் பயணிக்கின்றது. சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட காங்கிரஸின் உயரிய தலைவர்கள் காட்டிய வழியில் இருந்து நாம் மா…

  8. 2 மாத கைக்குழந்தையுடன்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்! வவுனியாவில் இருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றுள்ளனர். இலங்கையில் இருந்து 75 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகாளாகச் சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை மேலும் 5 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர். வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி, தயாளன், லதா மற்றும் அவரது ஆறு வயது மகள் தன்ஷிகா, 2 மாத கை குழந்தை தக்சரா என ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரே ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கியுள்ளனர். தகவல் அறிந்து …

  9. நாட்டில் இன்று... விசேட, பொது விடுமுறை தினம் நாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் இதற்கான சுற்றுநிரூபம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. தொழிலாளர் தினம் நேற்றைய விடுமுறை தினத்தில் கொண்டாடப்பட்டிருந்ததால் இன்று விசேட பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1279496

  10. இலங்கையை... பொருளாதார நெருக்கடியில் இருந்து, மீட்டெடுப்பதற்கு இந்தியாவும்... போராடுகிறது – அண்ணாமலை இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது என இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொட்டகலை சி.எல்.எவ்.வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் முழு உலகமும் இந்தியாவை திருப்பி பார்க்கின்றது. இந்தியா என்பது வல்லரசு நாடாக மாறியுள்ளது. உல…

  11. பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படும் நாட்டுக்கு எரிபொருளை ஏற்றி வரும் கப்பல்களில் இருந்து தரகுப் பணம் பெறும் மோசடி காரணமாக நாட்டில் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும் என கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் குறைந்த எண்ணிக்கையிலான எரிபொருள் பௌசர்களே இருப்பதாகவும் எரிபொருள் பௌசர்கள் நாளை முதல் இயங்காது என்றும் கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது போக்குவரத்து செலவுகளை அதிகரிக்கத் தவறியமைக்கு எதிராக இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் சனிக்கிழமை (30) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளது. தனியார் எரிபொருள் பௌசர் உர…

  12. கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள் – சவப்பெட்டியும் எரித்து எதிர்ப்பு தமிழ் தேசிய மேதின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி கரடிகோக்கு சந்தியில் இருந்து ஆரம்பமான தமிழ் தேசிய மேநாள் நிகழ்வு பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியை பிற்பகல் 3.30 மணியளவில் அடைந்தது.நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், எஸ் சிறிதரன், சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். …

  13. பிரதமர் பதவி தொடர்பாக... ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை, ஏற்க தயார் – மஹிந்த பிரதமர் பதவி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இராஜினாமா செய்யுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் பிரேரணையை உடனடியாக அமுல்படுத்துமாறு பௌத்த தேரர்கள் குழு நேற்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது. இந்த நிலையிலேயே பிரதமர் இந்த அறிவிப்பை விடுத்த…

    • 3 replies
    • 421 views
  14. அலரிமாளிகைக்கு... முன்பாக, நடுவீதியில் மக்கள் போராட்டம்! அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலரிமாளிகைக்கு அருகில் வீதியோர போராட்டக் கூடாரங்களை பொலிஸார் அகற்றியதையடுத்து, அவர்கள் இவ்வாறு நடுவீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். https://athavannews.com/2022/1279368

    • 1 reply
    • 272 views
  15. இன்று... ரணசிங்க பிரேமதாசவின், 29ஆவது நினைவு தினம் நாட்டின் இரண்டாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான அமரர் ரணசிங்க பிரேமதாசவின் 29 ஆவது நினைவு தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை ) கொழும்பு புதுக்கடை பகுதியிலுள்ள அவரது உருவச்சிலைக்கு அருகாமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஹேமா பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் நிகழ்விடத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1279381

    • 6 replies
    • 612 views
  16. இலங்கை வரலாற்றில்... முதற்தடவையாக, தற்போதைய அரசாங்கம்... எமது நாட்டை, வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளது – சஜித் சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையானது மிகவும் துயரமான மற்றும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள தருணத்தில் மே தினத்தை கொண்டாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை உறுதி செய்வதற்காக 136 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட மாபெரும் போராட்டத்தின் தொடக்கத்தை நினைவுகூரும் சர்வதேச தொழிலாளர் தினம் இன்று மே தினம் என்று அழைக்கப்பட…

    • 1 reply
    • 195 views
  17. மே தின, பேரணிகளை... அண்மித்து இருக்கும், மதுபானக் கடைகளை... மூடுமாறு உத்தரவு மே தின பேரணிகளை அண்மித்த பகுதிகளில் இருக்கும் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் முதல் நள்ளிரவு வரை மதுபானக் கடைகளை மூடுமாறு அத்திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2022/1279349

  18. “மைனாகோகமவில்” ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன், 7ஆவது நாள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகமவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இதேவேளை நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வருகைதரும் மக்கள், ஆர்ப்பாட்டத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்தவண்ணமுள்ளனர். மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கமும் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் மதத் தலைவர்கள், என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1279345

  19. சர்வகட்சி அரசாங்கத்தை... அமைப்பது தொடர்பான, யோசனைகளை... முன்வைக்குமாறு அறிவிப்பு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அதனடிப்படையில், உரிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றவுடன் அனைத்துக் கட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார். https://athav…

  20. “சம்பந்தப்பட்டவர்களும், கேட்டவர்களும்... மே 03 ஆம் திகதி, Alert ஆக இருக்கவும்“ பாரிய ஊழல்கள் தொடர்பான... முக்கிய ஆவணங்கள் வெளியிடப்படுகின்றன? எதிர்வரும் 03ஆம் திகதி பாரிய ஊழல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அம்பலப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இலங்கை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமெனவும், முக்கிய சில அரசியல் பிரமுகர்களின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வருமெனவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. “சம்பந்தப்பட்டவர்களும், கேட்டவர்களும் மே 3 ஆம் திகதி விழிப்பாக இருக்கவும்.‘ என தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அநுர பதிவிட்டுள்ளார். இப்பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்…

    • 1 reply
    • 168 views
  21. ‘உங்களை புரிந்துகொள்கின்றோம், எங்களை புரிந்துகொள்ளுங்கள்’ சிங்கள மக்களிடம் தமிழர் தரப்பு! தென்னிலங்கை சிங்கள மக்களிற்கான செய்தியாக ‘உங்களை புரிந்துகொள்கின்றோம் எங்களை புரிந்துகொள்ளுங்கள்’ எனும் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒருமித்த குரலாக கொண்டு சேர்க்கும் வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்வதற்கு தமிழர் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வட, கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து யாழ். இலங்கை வேந்தன் மண்டபத்தில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பிற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அங்குரார்ப்பணம் செய்து, தற்போதைய இலங்கைத் தீவின் நெருக்கடியில் தமிழரின் வகிபாகம் தொடர்பாக ஆராய்ந்தனர். இதன்போது, வடக்கு கிழக்கு சார்ந்த சைவ ஆதீன முதல்வர்கள், கத்தோலிக்க குரு…

    • 1 reply
    • 355 views
  22. மே தினத்தை முன்னிட்டு... நாட்டின் பல பகுதிகளில், கூட்டங்கள் மற்றும் பேரணிகள் மே தினத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறவுள்ளன. பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பனவற்றின் ஏற்பாட்டில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறவுள்ளன. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நுகேகொடை ஆனந்த சமரகோன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதேபோல, ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக்கூட்டம் சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளதுடன், கடந்த 26ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் ஆரம்பித்த பேரணி இன்றுடன் நிறைவடையவுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர…

  23. பொலிஸாரின் வீதித் தடைகள் – உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்! சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு போராட்டம் நடத்தும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் வீதி தடைகளை அமைத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஷெனால் ஜயசேகர என்ற நபரால் முன்வைக்கப்பட்ட மனுவில், பொலிஸ்மா அதிபர், கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். பொதுமக்களின் போராட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பொலிஸாரினால் அமைக்கப்பட்ட முட்களுடன் கூடிய வீதித் …

  24. மருந்து பொருட்களின் விலை அதிகரிப்பு – வர்த்தமானியை, இரத்து செய்யுமாறு கோரிக்கை! அரசாங்கத்தினால் 60 வகையான மருந்து பொருட்களின் விலையை 40 சதவீதத்தினால் அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் அஜித் திலகரத்ன இந்த விடயம் குறித்து குறிப்பிட்டுள்ளார். ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை மற்றும் மருந்தக நிறுவனங்களின் ஊடாக தற்போது மருந்து பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் வெகுவாக பாதிப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1279321

  25. முழு சமூகத்தின்.... அவமான சின்னமாக, ஒருவர் மாறியுள்ளார் என்கின்ற... வேதனை தான் எங்களுக்கு உள்ளது – ஹக்கீம்! முழு சமூகத்தின் அவமான சின்னமாக ஒருவர் மாறியுள்ளார் என்கின்ற வேதனை தான் எங்களுக்கு உள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஏறாவூரில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த ஊரை சேர்ந்த ஒருவர் அமைச்சு பதவி எடுத்துள்ள விவகாரம் மிக மோசமான விமர்சனத்திற்கான விவகாரமாக மாறியுள்ளது என்பது சர்ச்சைக்குரிய விடயம் அல்ல. அது ஊரும் அங்கீகரிக்கின்ற விடயம் அல்ல. ஆனால், அவர் தாமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.