ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
யாழ் . நகரப் பகுதிகளில்... ஆங்காங்கே, சுவரொட்டிகள் யாழ் நகரப் பகுதியில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து அரசை பதவி விலகுமாறு கோரி தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினால் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது . “தடுமாறும் அரசே பதவி விலகு மக்கள் வயிற்றில் அடிக்காதே” எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளது. யாழ் . பிரதான வீதிகள் மற்றும் யாழ் . மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. https://athavannews.com/2022/1278001
-
- 0 replies
- 206 views
-
-
இன்று, நாளை.... மின் துண்டிப்பு, குறித்த அறிவிப்பு! நாட்டில் இன்றும் நாளையும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று சனிக்கிழமை 3 மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிப்படவுள்ளது. A முதல் W வரையான வலயங்களில் இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. அத்துடன் நாளைய தினம் 3 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, காலை 9 மணிமுதல் மாலை…
-
- 0 replies
- 117 views
-
-
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பிற்கு... அனுமதி வழங்கவில்லை என்கிறது, அரசாங்கம்! சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1277969
-
- 1 reply
- 229 views
-
-
"என் குழந்தை இந்தியாவில் பிறக்க வேண்டும்" - அகதியாக தஞ்சம் கோரி வந்த இலங்கை கர்ப்பிணி கண்ணீர் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழ் 5 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்தியாவில் அகதியாக தஞ்சம் கோரி சமீபத்தில் தனுஷ்கோடி வழியாக மண்டபம் அகதிகள் முகாமுக்கு வந்த இலங்கை தமிழர்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக கடந்த புதன்கிழமை வரை 42 இலங்கை தமிழர்கள் தனுஷ…
-
- 3 replies
- 430 views
- 1 follower
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து, நீக்கப்பட்டார்.... நஸீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், “கட்சியின் நாக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இது சம்பந்தமாக அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர்கள் அனுப்பியிருந்த விளக்கம் பற்றி ஆராயப்பட்டது. மூவர் அனுப்பிய விளக்கம் தொடர்பில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் விசாரணை இடம்பெறும். அதுவரை கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுவர். …
-
- 2 replies
- 319 views
-
-
எனது இராஜினாமா கடிதத்தினை... ஜனாதிபதி, ஏற்றுக்கொள்ளவில்லை – நாலக்க கொடஹேவா தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றை ஏற்படுத்த இடைக்கால அரசொன்றை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1277980
-
- 0 replies
- 133 views
-
-
இலங்கை 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் இருந்து ஒரு முஸ்லிம் உறுப்பினர் அஸீஸ் நிஸாருத்தீன் விலகல் 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NISARDEEN படக்குறிப்பு, நிஸாருத்தீன் இலங்கையில் 'ஒரே நாடு. ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் இருந்த முஸ்லிம் உறுப்பினர்களில் ஒருவரான அஸீஸ் நிஸாருத்தீன் தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். ரம்புக்கண பிரதேசத்தில் போலீஸ் அராஜகமாக நடந்து கொண்டமைக்கு எதிர்ப்பினை வெளியிடும் வகையிலும், நாட்டில் எழுச்சி பெற்றுள்ள மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.. …
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
இலங்கைக்கான.... கடன் நாணயப் பரிமாற்ற, கால எல்லையினை... நீடித்தது இந்தியா! இலங்கைக்கான 400 மில்லியன் டொலர் கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லை, இந்திய மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும் தாராளமானதுமான ஆதரவு தொடர்வதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணயப் பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியினால் தற்போதைய நாணயம் சார் ஆதரவாக, இந்த காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பங்களாதேஷும் 450 மில்லியன் டொலர் பரிமா…
-
- 4 replies
- 276 views
-
-
” கோட்டா கோ ஹோம்” எனக் கூறுவதை.... உடனடியாக, நிறுத்திக்கொள்ளுங்கள்” – போராட்டக் காரர்களுக்கு கீதா குமாரசிங்க எச்சரிக்கை. “கோட்டா கோ ஹோம்“ எனக் கூறுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள் என போராட்டக்காரர்களுக்கு இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் 1971 இல் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர் வீடு செல்லவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். அதன்பின்னர் ஜேஆரை எதிர்த்தனர். அவரும் வீடு செல்லவில்லை. எனவே, கோட்டா கோ ஹோம் என்ற பிரச்சாரத்தை உடன் நிறுத்துங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார். காலம் வரும்போது ஜனாதிபதி நிச்சயம் செல்வார். அவர் வீடு செல்ல வேண்டுமா என்பதை தேர்தல் தீர்மானிக்க…
-
- 11 replies
- 980 views
- 1 follower
-
-
ரம்புக்கனை சம்பவம் – கேகாலை நீதிவான் நீதிமன்றில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது! ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட விசேட பொலிஸ் குழுவினர் இன்று(வெள்ளிக்கிழமை) கேகாலை நீதிவான் நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர். அதில் நான்கு ரி-56 துப்பாக்கிகளை பொலிஸார் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இதன்போது, 35 தோட்டாக்களையும் பொலிஸார் பயன்படுத்தியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் திகதி ரம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தைக் கலைப்பதற்காக, பொலிஸார் முயற்சித்தபோது, பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டது. இதன்போது மேற்கொள்ள துப்பாக்கிப்…
-
- 0 replies
- 133 views
-
-
13 ஆம் திருத்தச் சட்டத்தினை... விட்டுக்கொடுக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஈ.பி.டி.பி. உறுதியாக இருப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று( வியாழக்கிழமை) இடம்பெற்ற அரசாங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக பரவலாகப் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. இதுதொடர்பாக, அமரர் அ. அமிர்தலிங்கமும், மலை…
-
- 0 replies
- 152 views
-
-
மிருசுவிலில்... புகையிரதம் – சிறிய ரக லொறி விபத்தில், மூவர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் – சிறிய ரக லொறி வாகன விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் என்பவரும் , அவரது இரு பிள்ளைகளுமே உயிரிழந்துள்ளனர். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) பயணித்த புகையிரதத்துடன் , கொடிகாமம் மிருசுவில் வைத்திய சாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையில் சிறிய ரக லொறி மோதி விபத்துக்கு உள்ளானது. சிறிய ரக லொறியில் பயணித்த மூவரும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை வந்துகொண்டிருந்த குளிரூட்…
-
- 9 replies
- 653 views
- 1 follower
-
-
இந்த அரசாங்கம், ஒரு கொலைகார... அரசாங்கமாகும் – சஜித் பகிரங்க குற்றச்சாட்டு! புதிய பொருளாதாரப் பாதையை காண்பிக்க ஏன் அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்ற ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது? கடன் தொடர்பான பல்தரப்பு கலந்துரையாடல் ஏன் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை? இந்தியா, சீனா, ஜப்பானுடன் அரசாங்கம் பேச்சு நடத்தியுள்ளதா? பணவீக்கத்தை குறைக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? உற்பத்திக் கைத்…
-
- 2 replies
- 238 views
-
-
மக்கள் எழுச்சிக்கு எதிரான... அடக்குமுறையை, கண்டிக்கிறோம் – யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் மக்கள் எழுச்சிக்கு எதிரான ஆயுதரீதியான அடக்குமுறையை கண்டிக்கிறோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ரம்புக்கணையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், ”எமது நாட்டின் ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மை மற்றும் ஊழல் ஆட்சி முறைமை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் நாடு தழுவிய முழுமையான அரசியல் மாற்றத்தைக்கோரி இன, மத பேதமின்றி ஜனநாயக வழியில் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆ…
-
- 0 replies
- 139 views
-
-
வரியை... அதிகரிப்பதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் – நிதியமைச்சர், அலி சப்ரி! தற்போதைய வரி வருமானம் போதுமானதாக இல்லாததால் வரியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்புடன், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1277867
-
- 0 replies
- 181 views
-
-
நாட்டிலுள்ள... சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு, நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்! நாட்டிலுள்ள சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் கீழ், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறும் நோக்கில், அத்தகைய தொழில்முயற்சியாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முதல் மூன்று தொழில்முனைவோருக்கு நேற்று(வியாழக்கிழமை) நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் மற்றும் சுற்றுலா அபிவிர…
-
- 0 replies
- 115 views
-
-
“கோட்டா கே கம“வில்... உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, தெரிபெஹே சிறிதம்ம தேரர்... வைத்தியசாலையில் அனுமதி காலி முகத்திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தெரிபெஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞருக்கு நீதி கோரி கடந்த 20ஆம் திகதி முதல் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் உடனடியாக வௌியேற வேண்டும் எனவும் அவர்கள் வௌியேறும் வரையில், போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிபெஹே சிறிதம்ம தேரர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையிலேயே அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதி…
-
- 0 replies
- 100 views
-
-
ரம்புக்கனையில்... பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தினால் உயிரிழந்த, சமிந்த லக்ஷனின்... இறுதிக் கிரியைகள், இன்று! ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தினால் உயிரிழந்த சமிந்த லக்ஷனின் இறுதிக் கிரியைகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெவலேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரிவடுன்னையில் இடம்பெறவுள்ளன. இறுதிக்கிரியைகள் முடியும் வரை அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினருக்கும் உதவுமாறு பாதுகாப்பு செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, பொது பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 12 (1) இன் படி, கேகாலை மாவட்டத்தையும் உள்ளடக்கிய பொது ஒழுங்கை பராமரிக்க ஆயுதப்படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தெவலேகம, ரொக்கன மற்றும் …
-
- 0 replies
- 163 views
-
-
14ஆவது நாளாகவும்... தொடரும், மக்கள் எழுச்சிப் போராட்டம்! காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) 14ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதர…
-
- 5 replies
- 419 views
-
-
கதிரைகளை மாற்றுவதன் மூலம், இந்த நாட்டின் நிலையினை... சீர்படுத்தமுடியாது – தி.சரவணபவன் பிராந்தியங்களுக்கான அதிகாரங்களை வழங்குவதன்மூலம் மட்டுமே இந்த நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். ரம்புக்கண துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு நினைவுதினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.அதற்கான நீதி விசாரணைகூட முன்னெடுக்கப்படவில்லை.இது த…
-
- 0 replies
- 115 views
-
-
சுவைத் சுமார் 70 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இவ்வாறு பற்றாக்குறையாக காணப்படும் மருந்து பொருட்களை தனியார் துறையினர் பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1277884 தியசாலைகளில் சுமார் 70 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு!வைத்தியசாலைகளில் சுமார் 70 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு!மார் 70 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு!வைத்தியசாலைகள…
-
- 0 replies
- 135 views
-
-
இலங்கையில்... மலேரியா நோய் மீண்டும் பரவுவதற்கான, சாத்தியக்கூறுகள் இருப்பதாக எச்சரிக்கை! இலங்கையில் மலேரியா நோய் மீண்டும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல நாடுகளில் பரவியுள்ள பெரும் தொற்றுநோயான மலேரியாவை இலங்கையால் கட்டுப்படுத்த முடிந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வெளிநாடுகளில் இருந்து வந்த நோயாளிகளைத் தவிர வேறு எந்த மலேரியா நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், மலேரியாவை பரப்பும் நுளம்புகள் இலங்கையில் இன்னும் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் 25ஆம் திகதி உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விசேட வேலைத்…
-
- 0 replies
- 94 views
-
-
அத்தியாவசியப் பொருட்களை... விநியோகிப்பதற்கு, இராணுவத்தினருக்கு... ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை! நாடளாவிய ரீதியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோ கிப்பதற்கு இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1277862
-
- 0 replies
- 100 views
-
-
கடந்த 3 தினங்களாக.. சுற்றுலா பயணிகளின் வருகையில், வீழ்ச்சி! கடந்த 3 தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் நாளொன்றிற்கு சுமார் 4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக ஆயிரத்து 300 சுற்றுலா பயணிகளே வருகை தந்துள்ளனர். இதன்காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில், வீதி போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1277860
-
- 0 replies
- 113 views
-
-
இலங்கையின்... மாதாந்திர பணவீக்கம், 20 சதவீதத்தை கடந்தது! தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கமைய, இலங்கையின் மாதாந்திர பணவீக்கம் முதல் முறையாக 20 சதவீதத்தை கடந்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் கணக்கிட்டுள்ள மாதாந்திர பணவீக்க வீதங்களின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 21.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதன்படி, இலங்கையில் பெப்ரவரியில் 17.5% ஆக இருந்த பணவீக்க வீதம் மார்ச் மாதத்தில் 4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. https://athavannews.com/2022/1277857
-
- 0 replies
- 113 views
-