Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 350 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு... எரிபொருள் வழங்கப்படவில்லை! நாட்டில் உள்ள 350 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு, இந்த மாதத்திற்கு வழங்க வேண்டிய எரிபொருளை வழங்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த டி சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வீதிகளை இடைமறித்து முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் காரணமாக, எரிபொருளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொத்த களஞ்சிய…

  2. ஒரு கிலோகிராம் பருப்பின் விலை... ஆயிரம் ரூபாயாக, அதிகரிக்கும் அபாயம்? எதிர்வரும் மே மாதத்துக்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1277827

  3. கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில்... 60 பேர்கொண்ட குழு, வத்திக்கான் நோக்கி பயணம்! கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை குறித்த குழுவினர் வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளனர். இந்தக் குழுவில், கொழும்பு ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ மற்றும் ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் இந்தக் குழுவில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என பாப்பரசர் விடுத்த அழைப்புக்கு அமையவே குறித்த குழுவினர் வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளனர். …

    • 6 replies
    • 416 views
  4. நீர்வேலியை சேர்ந்த ஐவர் உள்ளிட்ட.. 18 பேர், நேற்று தமிழகத்திற்கு அகதிகளாக தஞ்சம்! மன்னார் கடற்பகுதி ஊடாக தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு நேற்று (வியாழக்கிழமை) 18 பேர் அகதிகளாக சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று மன்னார் பேசாலை பகுதியில் இருந்து கடல் வழியாக இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள சேராங்கோட்டை எனும் பகுதியை சென்றடைந்துள்ளனர். அதேவேளை மன்னாரை சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் நேற்று இரவு தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் , உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான தட்டுப்…

  5. க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சைகளுக்கான... திகதிகள் குறித்த, அறிவிப்பு வெளியானது! இந்த வருடம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23 முதல் ஜூன் 01 வரையிலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17 முதல் நவம்பர் 12 வரையிலும் நடைபெறவுள்ளது. https://athavannews.com/2022/1277891

  6. அமைச்சர்கள் மூவரே.... போராட்டக்காரர்கள் மீது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு... உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு! கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள அமைச்சர்களே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக நடவடிக்கையில் 3 ஆயுதங்களின் ஊடாக 90 ரவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போராட்டத்திற்கு முந்தைய நாள் இடம்பெற்ற சிரேஷ்ட பொலிஸ்மா அ…

  7. மஹிந்த தலைமையில்... அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும், முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் அதனை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் முன்மொழிந்தார். அந்த முன்மொழிவிற்கு அனைத்து உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி ஏகமனதாக ஆதரவளித்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் யூ.கே.சுமித் முன்மொழிவை உறுதிசெய்தார். …

  8. இலங்கையில்... மீண்டும், கட்டாயமாக்கப்பட்டது முகக்கவசம்! பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த நிலையில், குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக…

  9. இந்தியாவில் இருந்து... இலங்கைக்கு மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இறக்குமதி. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்திய கடன் வசதியின் கீழ் குறித்த டீசல் சரக்கு நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில், இந்திய கடன் வசதியின் கீழ் கிட்டத்தட்ட 400,000 மெட்ரிக் டன் பல்வேறு எரிபொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. https://athavannews.com/2022/1277815

  10. போராட்டத்துக்கு சென்ற பொலிஸ் சார்ஜன் பணி நீக்கம் ( எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி, எந்தவித கட்சிகளின் பங்களிப்பும் இன்றி போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடலை அண்மித்து ' கோட்டா கோ கம ' என பெயரிடப்பட்டுள்ள போராட்ட களத்துக்கு சென்றதாக கூறி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குட்டிகல பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையாற்றும் பொலிஸ் சார்ஜன் டப்ளியூ.எம். அமரதாச (30158) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ இதனை உறுதி செய்தார். கடந்த ஏபரல் 14 ஆம் திகதி முதல் அமுலாகும் வண்ணம் அவர் இவ்வாரறு பணி நீக்கம் செய…

  11. அரவிந்தகுமாருக்கு எதிராக போராட்டம் மக்களை வதைக்கும் அரசுக்கு எதிராகவும், அவ்வாறானதொரு அரசுக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிராகவும் அட்டனில் இன்று (21) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மக்களை காட்டிக்கொடுத்த துரோகி என விமர்சித்து, இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் உருவபொம்மையை போராட்டக்காரர்கள் நடுவீதியில் வைத்து தீயிட்டு கொளுத்தி, எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், மக்கள் கோரிக்கையை ஏற்று பதவி விலக மறுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. அட்டன் ஸ்டிரதன் தோட்ட பகுதியைச் சேர்ந்த, பெருந்தோட்ட மக்கள் இன்று தொழிலுக்கு செ…

  12. "இது ராஜபக்ஷக்களின் நாடல்ல" - அரசுக்கு எதிராக இலங்கை முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் உள்ள நாளிதழ்களிலும் செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். "இலங்கை ராஜபக்ஷக்களின் நாடல்ல. ஒரு குடும்பத்துக்கு நாட்டை பொறுப்பாக்கி விட்டு எம்மால் உறங்கிக்கொண்டிருக்க முடியாது. நாட்டின் நிதியதிகாரத்தை தகுதியற்ற தரப்பினருக்கு ஒப்படைத்ததன் விளைவை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதுடன், முழு நாடும் அதன் விளைவை எதிர்கொண்டுள்ளது" என அரச நிதி தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா சபையில் தெரிவித்துள்ளதாக…

  13. விகாரைகளுக்கு... வந்துவிட வேண்டாம் என, புதிய அமைச்சர்களுக்கு.... தேரர் எச்சரிக்கை! புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது. எனவே, ஆசிர்வாதம் பெறுவதற்கு எவரும் விகாரைகளுக்கு வந்துவிடவேண்டாம் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகி அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் யோசனை முன்வைத்தார்கள். அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, புதிய அமைச்சரவையை நாம் ஏற்கமாட்டோம். ஆசிர்வாதம் பெறுவதற்கு விகாரைகளுக்கு வந்துவிடவேண்டாம். 20 ஆவது திருத்தச்சட்டம…

    • 2 replies
    • 281 views
  14. நிறைவேற்று ஜனாதிபதி அதிகார, முறைமையை... நீக்குவதற்கான யோசனைக்கு, நாமல் வரவேற்பு! சஜித் பிரேமதாசவினால் சபையில் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை நீக்குவதற்கான யோசனையை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது குறித்து ஜனாதிபதியும் கலந்துரையாடி வருவதாகவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன்னைய அரசாங்கங்களும் ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குவதாக தெரிவித்திருந்தாலும் அது நடைமுறைக்கு வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1277776

  15. நிறைவேற்று அதிகார.... ஜனாதிபதி முறைமையை, இல்லாதொழிக்கும் யோசனை... சபாநாயகரிடம் கையளிப்பு! நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த யோசனையை கையளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றியபோது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இந்த விடயத்தினைத் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1277771

  16. ஏப்ரல் 25ஆம் திகதி வரை... எரிவாயு சிலிண்டர்கள், விநியோகிக்கப்படாது – லிட்ரோ நிறுவனம் உள்நாட்டு பற்றாக்குறையால் எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25ஆம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எரிவாயு சரக்கு கப்பல்கள் இன்னும் கரைக்கு வந்தடையாததால், விநியோக வலையமைப்பை சீராக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் நிறுவனம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தங்களுக்கு எரிவாயு விநியோகச் சங்கிலியில் சிக்கல் உள்ளதாகவும் இருப்பினும் நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு பற்றாக்குறை ஓரிரு மாதங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அந்த அதிகாரி கூறினார். முன்னதாக, ஏப்ரல…

  17. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான... ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை, இணையத்தில் வெளியிடவேண்டும் – சஜித் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை இணையத்தில் வெளியிடவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “3 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாத் தாக்குதலில் நாம் எமது உறவுகளை இழந்தோம். இந்த பயங்கரவாத் தாக்குதலால் நாடு என்ற ரீதியில் நாம் பல பாதிப்புக்களை எதிர்கொண்டோம். இந்த நேரத்தில், கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் நாம் ஒன்றைக் கூறிக்கொள்கிறோம். ஈஸ்டர் தாக்கு…

  18. ஈஸ்டர் தாக்குதல் – மட்டக்களப்பில் பெருமளவான, மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி! மட்டக்களப்பு சீயோன் தேவலாயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல் சீயோன் தேவாலயத்திலும் காந்திபூங்கா மற்றும் கல்லடி பாலத்துக்கருகிலுள்ள நினைவு தூபிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9.05 மணிக்கு இடம்பெற்ற நினைவேந்தல்களில் உயிரிழந்தவர்களின் உறவுகள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்ட மலர் தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர். கடந்த 2019 ம் ஏப்பில் 21 ஆம் திகதி பயங்கரவாதிகளால் தேவாலயத்தின் மீது நடாத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 93 பேர் படுகாயமடைந்தனர். இந்த தற்கொலை குண்டு தா…

  19. நிதி இல்லாத... இராஜாங்க அமைச்சுகளை, வைத்து என்ன செய்ய முடியும் -இரா.துரைரெட்ணம் பொருள் கொள்வனவிற்கே நாட்டில் நிதி இல்லாத நிலையில் அதிகாரமற்ற இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் வழங்கப்பட்ட புதிய அமைச்சரவை விடயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, அரசாங்கத்திற்குச் சார்பாகச் செயற்பட்ட இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் குறைந்த, இராஜா…

  20. கறுப்பு உடையில்... எதிர்க்கட்சியினர் – ஈஸ்டர் தாக்குதலில், கொல்லப்பட்டவர்களுக்கு... நாடாளுமன்றில் மௌன அஞ்சலி ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், கொலை செய்யப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு, இன்றைய தினம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடையுடன் நாடாளுமன்றத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277768

  21. ரம்புக்கன விவகாரம் – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்... பலருக்கும், விசாரணைக்கு வருமாறு அழைப்பு! ரம்புக்கன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் நாளைய தினம்(வெள்ளிக்கிழமை) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய பொலிஸ் மா அதிபருக்கு மேலதிகமாக, கேகாலை மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர், ரம்புக்கன மற்றும் கேகாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று முந்தினம் காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்…

    • 2 replies
    • 312 views
  22. ரம்புக்கனை சம்பவம் – 18 வயது சிறுவன்... ICU இல் சிகிச்சை: வன்மையாகக் கண்டிப்பதாக, GMOA தெரிவிப்பு. ரம்புக்கனையில் பொலிஸாரின் மிருகத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 18 வயதுடைய சிறுவன் வயிற்று குழியில் காயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ குறிப்பிட்டார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், உயிருள்ள வெடிமருந்துகளால் காயங்களுடன் 15 பேர் கேகாலை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக…

  23. பிரச்சினைகளுக்கு... தீர்வு வழங்காவிட்டால், "பௌத்த சங்க சாசனத்தை" அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின்... மகாநாயக்க தேரர்கள், எச்சரிக்கை! பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவதாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்குமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களிடமும் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடிதம் ஒன்றின் மூலம் அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறுகோரி, கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதிக்…

  24. புதிய அமைச்சரவை நியமனம் – ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில்... முறுகல்? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கக் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்களிடையே பல வாரங்களாக கடுமையான அரசியல் ஸ்திரமின்மை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் பலர் தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்து 11 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியுடன் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அண்மைய அமைச்சரவை நியமனங்கள் மற்றும் அரச அமைச்சு நியமனங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் தெரிவினால் மாத்திரமே இடம்பெற…

  25. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்... தற்போதைய எண்ணிக்கை 116 – பெரும்பான்மையை, இழக்க வாய்ப்பு? நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைவடைந்துள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில்லை என அரசாங்கத்திற்கு ஆதரவளித்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அறிவித்தனர். அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ்.தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக பைசல் காசிம் நேற்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தார். இதன்படி, அரசாங்கத்திற்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைவடைந்துள்ளது. இந்த நில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.