Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு Published By: Vishnu 20 Aug, 2025 | 09:21 AM யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான முறையில் உரை பை ஒன்று காணப்பட்டதை அடுத்து , கொடிகாம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த உரை பையை மீட்டு சோதனையிட்ட போது அவற்றுக்குள் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவை கோர்வைகள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து அவற்றை மீட்டு கொடிகாம பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார் அவற்றுள் 1393…

  2. சமூகத்தின் மனப்பான்மை ரீதியான மாற்றத்திற்க அரச ஊடகங்களின் பங்களிப்பைப் பெறத் திட்டம் தயாரிக்குக - ஜனாதிபதி 20 Aug, 2025 | 10:19 AM சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் உள்ள 04 திணைக்கலன்களில் உள்ள 41 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற…

  3. ஹர்த்தாலுக்கான அழைப்பின் மூலம் கேலிக்கூத்தாடும் இலங்கை தமிழரசு கட்சி! ஹர்த்தாலுக்கு ஆதரவை திரட்டுமாறு தமிழரசுக் கட்சியின் உயர்மட்டமானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும் குடைச்சலை கொடுத்து வருவதாக அறியமுடிகிறது. அதாவது ஹர்த்தாலுக்கு ஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் இவ்வாறு ஆதரவை திரட்டுமாறு உயர்மட்டமானது கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அந்த கடிதத்தில் பதில் தலைவரானத சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சகல கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சகல கௌரவ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் அன்புட…

  4. Published By: VISHNU 10 AUG, 2025 | 10:50 PM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக குடிக்கொண்டுள்ளமை அதனால் ஏற்படும் பாதிப்பை மிக வன்மையாக கண்டிக்கிறோம். இராணுவ பிரசன்னத்துக்கு பாரியதொரு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(15) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஹர்த்தாலினால் முழுமையாக முடங்க வேண்டும். எமது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அநீதிகளை கருத்திற் கொண்டு வர்த்தகர்கள் அன்றைய தினம் கடையடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். முத்தையன்கட்டு இளைஞன் கொலை வன்மையாக கண்டித்தக்கது. பொலிஸார் எவ…

  5. கிழக்கில் மக்களின் பேராதரவுடன் இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக பூரண ஹர்த்தால் இடம்பெறுவதாக சாணக்கியன் அறிவிப்பு வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னாம் முடிவுக்கு வரவேண்டும்…!; வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் இன்றைய தினம் வடக்கு மற்றும் கிழக்கில் பூரண ஹர்த்தால் மக்களின் பேராதரவுடன் இடம்பெறுகின்றது. இதனை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஏற்பாடு செய்ததுடன் இதற்கான பாரிய ஆதரவினை ஆதரவினை பலர் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகம்..! என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது..! எமது மக்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என சாணக்கியன் M.P மேலும் …

  6. முத்தையன்கட்டு சம்பவம்: கைதான 4 இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல் 20 August 2025 முல்லைத்தீவு - முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணைக்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு தொடர்பான விசாரணை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று இராணுவத்தினர் முன்னதாக கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, இராணுவ சிப்பாய் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையிலேயே, குறித்த சந்தேகநபரும் ஏற்கனவே விளக்கமறியலில்…

  7. Published By: VISHNU 18 AUG, 2025 | 02:02 AM (இராஜதுரை ஹஷான்) முத்தையன்கட்டு இளைஞன் மரணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் திங்கட்கிழமை (17) காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஹர்த்தாலுக்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் வணிக பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுமையாக முடங்க வேண்டும். அதனுடாக அரசாங்கத்துக்கு வலுவான செய்தியை எ…

  8. ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – வழமைப் போன்று இயங்கும் யாழ். நகர்! வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி இந்த முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாமுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே குறித்த இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து இர…

  9. ஹர்த்தால் வெற்றியே என்கிறார் சுமந்திரன்! adminAugust 19, 2025 யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன், வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ், நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள் த…

  10. பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள் August 18, 2025 10:33 am வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளும் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் (18) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வழமை போல் அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது. வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இன்றையதினம் வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழர…

  11. 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள தாய்லாந்து! தாய்லாந்தின் அமைச்சரவை 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான கொடிய எல்லை மோதலைத் தொடர்ந்து கம்போடிய தொழிலாளர்கள் நாடு திரும்புவதால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, வயதான மக்கள் தொகை மற்றும் சுருங்கி வரும் பணியாளர்கள் எண்ணிக்கை என்பவற்றினால் விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறைந்தது 3 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகள்…

  12. பேலியகொடை மீன் சந்தையின் ஊழியர் ஒருவர் இன்றைய (19) துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி பிரயோகத்தின் போது, துப்பாக்கி சூட்டுக்காக இலக்கு வைக்கப்பட்டவர் மாத்திரம் இன்றி, அங்கு வீதியில் சென்ற ஒருவரும் காயமடைந்தார். பேலியகொடை ஞானரதன மாவத்தை பகுதியில் இன்று காலை 9:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் T - 56 ரக துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சந்தேகநபரால் இலக்கு வைக்கப்பட்டவர் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்றையவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலைய…

  13. Published By: DIGITAL DESK 3 19 AUG, 2025 | 04:32 PM மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடையில் நேற்று திங்கட்கிழமை (18) மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பு குறித்து மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று திங்கள் கிழமை மன்னார் ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் ஆயர் அவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துர…

  14. வாகரை பனிச்சங்கேணியில் பிள்ளையானின் 50 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் 50 ஆவது பிறந்த தினம் வாகரை பனிச்சங்கேணியில் பல்வேறுபட்ட நிகழ்வுகளுடன் இன்று கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வுகளை கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வி, கலை, கலாசாரப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் இரத்தான நிகழ்வு நடைபெற்றது. பலர் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். அத்துடன் பனிச்சங்கேணி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூசையும் அ…

  15. Published By: VISHNU 19 AUG, 2025 | 03:24 AM அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில் வீரமுனையின் பெயரைக் குறிக்கும் பெயர்ப் பலகையிடுவதை சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை - கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பிரதான வீதியில் வீரமுனை ஆண்டியர் சந்தியில் இந்த பெயர்பலகையினை இடும் செயற்பாடுகளை இன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்திருந்தது. எனினும் அங்குவந்த சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்குவந்த சம்மாந்துறை பொலிஸாரும் பிரதேசசபை உறுப்பினர்களுக்…

  16. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்! முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார். உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (15) தனது 57ஆவது வயதில் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://athavannews.com/2025/1443145

  17. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை அரச - தனியார் பங்குடமை முறைமையின் கீழ் ஆரம்பிப்பதற்காக உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும் அதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடைவதற்கு இயலாமல் போயுள்ளது. அதனால், குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை அரச தனியார் பங்குடமை முறைமையின் கீழ் மீண்டும் ஆரம்பிப்பதற்காக சர்வதேச முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத…

  18. தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை? இராமநாதன் அர்ச்சுனா கேள்வி. வடக்கில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்ததுடன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்திருந்தார். குறிப்பாக தெற்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நிதி மோசடிகளுக்கான வழக்குகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆனால் வடக்கில் அவ்வாறு இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, குறிப்பிட்டுள்ளார். எனவே தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை மாத்திரமே முன்னெடுப்பதாக, மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாக இராமநாதன் அர்ச்சுனா, குறி…

  19. 19 AUG, 2025 | 01:30 PM நல்லூர் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப் பொருளில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த WASPAR & Young Water Professionals முயற்சியில் நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது நீர்வளக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (15) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (24) வரை இடம்பெறவுள்ளது. நீர்வள…

  20. Published By: DIGITAL DESK 2 17 FEB, 2025 | 05:11 PM முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்போதே இவ்விடயத்தை அறிவித்துள்ளார். இந் நிலையில் தமது அயராத தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை தமது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்துக்கான நித…

  21. தமிழகத்திலிருந்து இலங்கை ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடு நிறுத்திவைப்பு 19 August 2025 தமிழகத்தில் இருந்து இலங்கையின் ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியுள்ளது. த ஹிந்து செய்தித்தாள் இந்த செய்தியைப் பிரசுரித்துள்ளது. தாம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால், கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகக் கூறும் தன்னார்வமாகத் திரும்புபவர்களுக்கான வசதியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து தெரிவித்துள்ளது. இலங்கைக்குத் திரும்பிச் சென்ற நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு ஏதிலிகள், அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…

  22. கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு! 2025-05-15 கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மாணவி, ஏற்கனவே பாடசாலை ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்ததாக கூறி தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மாண…

  23. புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் அநுர அரசு - விமல் வீரவன்ச கருத்து! அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதுடன் இவர்களை மகிழ்விப்பதற்காக மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர கொண்டு வந்த இலங்கை மின்சாரசபை சட்டத்தை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தது. மக்கள் விடுதலை முன்னணியின் த…

  24. வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம் August 18, 2025 8:55 am வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம் வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுவிபத்திற்குள்ளாகியது. விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்ப்பட்டோர் பயணித்துள்ளனர். விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்திருந்தனர். மேலும் இலகுரக வாகனம் தடம்புரண்டு வி…

  25. 18 AUG, 2025 | 04:50 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது சட்டவிரோதமானதுடன், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இந்நாள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாளக் குழுக்களின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.