ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
40 நாடாளுமன்ற உறுப்பினர்களும்... எதிர்க்கட்சியில்! நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர். சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக இருக்க தீர்மானித்தவர்களுக்கும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1277286
-
- 0 replies
- 121 views
-
-
நாட்டின், தற்போதைய நிலைமை குறித்து... பிரதமர் நாடாளுமன்றத்தில் விசேட உரை! நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றி வருகின்றார் 20வது திருத்தத்தை நீக்கி 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதே பிரச்சினைகளுக்கு குறுகிய கால தீர்வாக இருக்கும் என அவர் கூறுகிறார். நாட்டு மக்கள் தற்போது பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதை ஒப்புக்கொள்வதாக தெரிவித்த அவர், அரசாங்கம் வேண்டுமென்றே தமது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது என்றும் கூறினார். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும் பாரபட்சமின்றி நாட்டைக் கட்டியெழுப்ப வாருங்கள் என எ…
-
- 0 replies
- 171 views
-
-
மக்களுக்கு... நிவாரணங்களை வழங்கவே, புதிய அமைச்சரவை – கனக ஹேரத் புதிய அமைச்சரவையின் நோக்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுமாகும் என புதிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் அமைந்துள்ள மக நெகும மஹமெதுர வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் ஊழியர்களிடம் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது, “எமது வரலாற்றில் முதல் முறையாக, நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில், ஒரு அரசாங்கமாக நாங்கள் பல பெரிய சவால்களை எதிர்கொள்கிறோம். அரசாங்கத்தின் முதன்மையான க…
-
- 0 replies
- 169 views
-
-
கொரோனா தடுப்பூசியின்... நான்காவது டோஸை, செலுத்துவதற்கு திட்டம். இலங்கை மக்களுக்கு எதிர்வரும் காலத்தில் கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார். இதேவேளை, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்களைத் திரட்டுதல் என்பன கட்டாயம் இல்லை எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277267
-
- 0 replies
- 123 views
-
-
19 ஐ போன்று, 21 ஐ கொண்டு வர... அரசாங்கம் திட்டம் !! அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கும் 19 ஆவது திருத்தத்தை 21 ஆவது திருத்தமாக மீண்டும் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் இணங்கியுள்ளது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நீதி, நிர்வாகம், நிறைவேற்றுத்துறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை அமைச்சரவையில் முன்வைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். சபாநாயகர் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் பொதுநிர்வாக அமைச்சர் தினேஸ் குணவர்தன, கட்சித் தலைவர்களுக்கு இது குறித்து அறிவித்தார் என மனோ கணேசன் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் பொறுப்பான அரசாங்கத்தை பொதுமக…
-
- 0 replies
- 141 views
-
-
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – அரசாங்கத்திற்கு எதிரான, நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு? நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மொழி விடைகளுக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சபை ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகள் மற்றும் பிரேரணைக்கு மாலை 4.30 மணி முதல் 4.50 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை 4.50 மணி முதல் 5.30 மணி வரை அரசு மற்றும் எதிர்கட்சி தர…
-
- 0 replies
- 103 views
-
-
பாகிஸ்தானில்... கொலை செய்யப்பட்ட, இலங்கையர் – 6 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை! பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தினால் நேற்று தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனையும் 07 சந்தேகநபர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி பிரியந்த குமார எரித்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277225
-
- 0 replies
- 88 views
-
-
எரிபொருள்... விலை அதிகரிப்புக்கு, எதிர்ப்பு – நாட்டின் பல இடங்களில் போராட்டம்! எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு எதிராக இலங்கையின் பல பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ரம்புக்கனை, ஹிங்குராங்கொட, பத்தேகம, திகனஎ கம்பளை, இரத்தினபுரி, தெல்தெனிய ஆகிய இடங்களில் தற்போது போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ரம்புக்கனை ரயில் பாதையை மக்கள் மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், அந்த வீதியூடான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன. மேலும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக ரம்புக்கனை நகரில் உள்ள பல கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட…
-
- 0 replies
- 118 views
-
-
மேலும்... 3 இராஜாங்க அமைச்சர்கள், பதவியேற்பு! நாட்டில் மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். இதன்படி, டயனா கமகே போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், சீதா அரம்பேபொல கல்வி மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராகவும் விஜித பேருகொட துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக 21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277197
-
- 0 replies
- 138 views
-
-
40,000 மெட்ரிக் தொன், டீசல் கப்பல் இலங்கைக்கு…. ! போதியளவு பெட்ரோல் கையிருப்பில்..! 40,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் இரண்டு நாட்களில் நாட்டை வந்தடையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியக் கடனுதவியின் கீழ் குறித்த எரிபொருள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் போதுமான அளவு பெட்ரோல் கையிருப்பு இருப்பதாகவும் சுமித் விஜேசிங்க கூறியுள்ளார். எரிபொருளுக்கான புதிய விலை 92 ஒக்டேன் பெட்ரோல் – புதிய விலை: ரூ. 338/- (+84) 95 ஒக்டேன் (யூரோ 4) பெட்ரோல் – புதிய விலை: ரூ. 373/- (+90) டீசல் – புதிய விலை: ரூ. 289…
-
- 0 replies
- 239 views
-
-
எரிபொருள் விலையேற்றம்: தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் – மக்கள் அவதி! எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பல பிரதேசங்களில் தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பல பேருந்துகள் சேவையில் இருந்து விலகியுள்ளதாக பேருந்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை பாடசாலை மற்றும் அலுவலகங்களுக்கும் இதர தேவைகளுக்கும் செல்லும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையினை நேற்று முன்தினம் அதிகரித்திருந்த நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையினை நேற்று அதிகரித்துள்ளமை குறிப்பிட…
-
- 0 replies
- 72 views
-
-
எரிபொருள் விலை அதிகரிப்பு: முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிப்பு எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டி வாடகை கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 80 ரூபாயாகவும் மேலதிகமாக செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 70 ரூபாயும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு விலை அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் பொதுமக்களுக்கு நியாயமான முறையிலேயே முச்சக்கர வண்டி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். https://athavannews.com/…
-
- 0 replies
- 78 views
-
-
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், எரிபொருள் விலையை... உயர்த்தியது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. இதற்கமைய, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 338 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 373 ரூபாயாகவும் லங்கா ஒட்டோ டீசலின் புதிய விலை 289 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 329 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1277217
-
- 0 replies
- 76 views
-
-
போராட்டங்களை நடத்தும், இளைஞர்கள் குறித்து... ஜனாதிபதி கருத்து! நாட்டில் போராட்டங்களை நடத்தும் இளைஞர்களில் பெரும்பாலானோர் நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த இளைஞர்கள் நாட்டுக்காக முன்வந்துள்ளமை சுபமான குறியீடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உள்ள இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யவும் போராட்டங்களை நடத்தவும் இன்று முழு சுதந்திரம் பெற்றுள்ளனர். அவர்கள் தமது போராட்டங்களை …
-
- 0 replies
- 103 views
-
-
உடல் வெப்பநிலையை பரிசோதித்தல்... கட்டாயமில்லை – அரசாங்கம் வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்களைத் திரட்டுதல் என்பனவும் கட்டாயம் இல்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்திருந்தார். எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்களைத் திரட்டுதல் என்பனவும் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/202…
-
- 0 replies
- 125 views
-
-
மின்வெட்டு, அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு! நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி, A முதல் A வரையான வலயங்களில் இன்றும் நாளையும் முற்பகல் 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1277229
-
- 0 replies
- 87 views
-
-
மூடிஸ் நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டை "Ca2" இலிருந்து "Ca" ஆகக் குறைத்துள்ளது. கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து மூடிஸ் நிறுவனம் இலங்கையின் இறையாண்மை மதிப்பீட்டை குறைத்துள்ளது. தன்னுடைய கடன்களை உரிய காலத்தில் செலுத்த முடியாது என இலங்கை அண்மையில் அறிவித்திருந்தது. இவ்வாறு கடன் தவணை தவறுவது, 'ஒரு நாடு திவாலான நிலைமை' என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். பொருளாதார வீழ்ச்சியால் இலங்கை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. விலைவாசி உயர்ந்திருக்கிறது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. நாணயத்தின் மதிப்பு கடுமையாகச் சரிந்திருக்கிறது. இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன. இறக்குமதியை நம்பியிருக்க…
-
- 1 reply
- 119 views
-
-
மீண்டும் கட்சி தாவினார், சுரேன் ராகவன்… சுதந்திர கட்சிக்கு... இரண்டாவது இழப்பு! அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான சுரேன் ராகவனும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார். 21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நிலையில் கல்வி இராஜாங்க அமைச்சராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டார். முன்னதாக சுதந்திர கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றிருந்தார். இந்நிலையில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த சுதந்திர கட்சியின் இரண்டாவது உறுப்பினரும் தற்போது மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துள்ளார். அமைச்சு பதவியை பொறுப்பேற்றமையி…
-
- 2 replies
- 720 views
-
-
இலங்கை நெருக்கடி: கொழும்பு போராட்டத்தில் தமிழில் குரல் எழுப்பிப் போராடும் ஒற்றைப் பெண் 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ரஷிகா அருள்செல்வம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்து வரும் இனம், மொழி கடந்த போராட்டத்தில் ஒரே ஒரு தமிழ்ப் பெண் மட்டும் முழக்கங்களை தமிழில் எழுப்புகிறார். பதாகைகளை தமிழில் ஏந்துகிறார். இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வை கோரியும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரியும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கொழும்பு - காலி முகத்திடல் பகுதியில் கடந்த 9ம் தேதி தன்னெழுச்சி போராட்டம் ஆரம்…
-
- 2 replies
- 302 views
- 1 follower
-
-
ஜனாதிபதி செயலக கட்டடத்தில்... ‘Go Home Gota’..! – 10ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்! காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 10ஆவது நாளாகவும் தொடர்கிறது. குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர். அத்தோடு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக போரா…
-
- 2 replies
- 320 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தை நாடாதமை, இரசாயன உரம் வழங்காதமை, தவறு – ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியத்தை முன்னதாகவே இலங்கை நாடியிருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை இயற்கை உர பாவனையை கொண்டுவரும் முயற்சியில், விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்காமை பிழையானது என்றும் அவர் ஒப்புக்கொண்டார். ஆகவே விவசாயிகளுக்கு இரசாயன உரத்தை அரசாங்கம் மீண்டும் வழங்கும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார். சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ள நிலையில் மாற்றங்களை முன்வைக்க தேவையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்…
-
- 1 reply
- 239 views
-
-
புதிய அமைச்சரவை.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று காலை பதவியேற்றுள்ளது. 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவியேற்றுள்ளது. இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீண்டும் மீன்பிடி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை. சரத் வீரசேகர, ஜோன்ஸ்டன், டலஸ், பந்துல, காமினி லொக்குகே, மஹிந்தானந்த, ரோஹித உள்ளிட்டோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனம் வழங்கடவில்லை இருப்பினும் மிகவும் சர்ச்சைக்குரிய உறுப்பினரான காஞ்சன விஜேசே…
-
- 6 replies
- 436 views
- 1 follower
-
-
அரசியலமைப்பை... திருத்துவதற்கான, முன்மொழிவை சமர்ப்பிக்க... பிரதமர் திட்டம்! நீதி, நிர்வாகம், நிறைவேற்றுத்துறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை அமைச்சரவையில் முன்வைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவருவது என்பது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என பிரதமர் எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1277167
-
- 2 replies
- 235 views
-
-
சிங்களவர்களின் போராட்டத்தில்... தமிழ் இளைஞர்கள் பங்கேற்பதால், தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் – கருணாகரம் சிங்கள இளைஞர்கள் யுவதிகள் தங்களது பிரச்சினைகளை முன்னிறுத்தி போராடும்போது அதில் தமிழ் இளைஞர்கள் பங்குபற்றுவதனால் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் என்பதை தெரிந்துகொண்டுதான்போராடவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “மஹிந்த ராஜபக்ஷ குடும்பத…
-
- 1 reply
- 245 views
-
-
மக்களின் குரலை... தொடர்ந்தும் புறக்கணிப்பது, ஆபத்தானது – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் முன்வந்து கலந்துரையாடி தீர்வுகாண வேண்டுமென அந்த ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையடி அவற்றுக்கான இணக்கமான தீர்வொன்றை எட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ள தேர்தல் ஆணைக்குழு மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. https://athavannews.com/2022/1277160
-
- 0 replies
- 157 views
-