ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
அரசாங்கத்தில் இருந்து விலகிய... சுதந்திரக் கட்சியின், 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு! அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். நாடாளுமன்ற அமர்வுகள் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில், சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களும் ஜனாதிபதியை இன்று மாலை 4.30 மணிக்கு சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது https://athavannews.com/2022/1275256
-
- 0 replies
- 152 views
-
-
இலங்கையின்... அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை... கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்! சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வொஷிங்டனுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சரின் வருகை உட்பட, கலந்துரையாடல்களை நடத்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் மசாஹிரோ நோசாக்கி வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோளிட்டு வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரி பதவியேற்று 24 மணித்தியாலங்களின் பின்னர் இன்று (05) இராஜினாமா செய்திருந்தமை …
-
- 0 replies
- 112 views
-
-
இலங்கை... தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள, ரணில் யோசனை! நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பொறிமுறையொன்றை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு பலதரப்பு முகவர் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி சாத்தியமானது என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், இது தனது அரசியல் வாழ்வில் இதுவரை கண்டிராத நெருக்கடியாகும் என்றும் அரசியல் பிரச்சினையைவிட பொருளாதார நெருக்கடியே மேலோங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மக்களின் சுமையை குறைக்க அரசாங்கம் எப்படியாவது அந்நிய செலாவணியை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். …
-
- 0 replies
- 140 views
-
-
அரசாங்கத்தில் இருந்து விலகி, சுயாதீனமாக... செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானங்களை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அறிவித்துள்ளனர். அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் அரசாங்கத்தின் 11 அங்கத்துவக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர். அதன்படி, சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள்: நிமல் லன்சா, அனுர பிரியதர்ஷன யாப்பா…
-
- 0 replies
- 111 views
-
-
எதிர்க்கட்சிகளின்... ஆட்சேபனைகளுக்கு, மத்தியிலும்... நாடாளுமன்றம் ஒத்திவைப்பு ! எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் இன்றைய நாடாளுமன்ற அமர்வு முன்கூட்டியே நிறைவுக்கு வந்துள்ளது. அவைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அறிவிப்பை அடுத்து நாடாளுமன்றம் நாளை (6) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை நாளை வரை ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக அவைத்தலைவர் பிரேம்நாத் சி டோலவத்த அறிவித்தார். இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளதுடன், நாடாளுமன்ற வீதி மக்கள் பிரவேசிக்க முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275206
-
- 0 replies
- 124 views
-
-
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்போது... பொதுச் சொத்துக்களுக்கு, சேதம் விளைவிப்பதைத் தவிர்க்கவும் – பாதுகாப்புச் செயலாளர் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன பொதுமக்களை வலியுறுத்தினார். அத்தோடு, வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் தொலைக்காட்சி அறிக்கையொன்றில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அமைதியாக இருக்கும் என்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்துவதாகவும் கூறி சில போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டாலும், இரண்டு குழுக்கள் இந்த போராட்டங்களை நடத்துவதை அவதானிக்க முடிகிறது என்றும் பா…
-
- 0 replies
- 88 views
-
-
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு... பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு – குமார வெல்கம நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பேசிய அவர், கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவரும் தீர்மானத்தை எதிர்த்த முதல் நபர் தான் என்றும் கூறினார். மேலும் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியில் மூத்தவர்களை பரிசீலிக்க பரிந்துரைத போதும், மஹிந்த ராஜபக்ஷ அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் குமார வெல்கம குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தவறான முடிவை எடுத்தார் என்றும் அதுவே இன்று முழு நாடும் ந…
-
- 0 replies
- 70 views
-
-
நான்கு மாதங்களுக்கு பின்னர், பசில் நாடாளுமன்றுக்கு வருகை! முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நான்கு மாதங்களுக்கு பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்தார். நிதியமைச்சராக அவர் இருந்தபோது நாடாளுமன்றத்திற்கு வராமையால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். அத்தோடு, நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் நுழைந்ததையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்தது. இறுதியாக அவரும் தனது பதவியிலிருந்து விலக வேண்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து, பசில் நாட்டைவிட்டு வெளியேறி மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளதாக அண்மைய நாட்களில் வதந்திகள் பரவிய நிலையில், அவர் இன்று நாடாளுமன்றில் பிரசன்னமாகி அமைதியாக அமர்ந்திருந்த…
-
- 0 replies
- 73 views
-
-
வரலாற்றில் முதன்முறையாக... டொலரின் பெறுமதி, 300 ஐ தாண்டியது ! வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல தனியார் வங்கிகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. https://athavannews.com/2022/1275140
-
- 0 replies
- 72 views
-
-
நிறைவேற்று அதிகாரம் கொண்ட... ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் – சஜித் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஒருபோதும் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். மக்களின் ஆசீர்வாதத்தோடு ஆட்சிக்கு வருவோம் என்றும் மக்கள் அரசாங்கத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். https://athavannews.com/2022/1275132
-
- 0 replies
- 72 views
-
-
புதிய நிதியமைச்சர் இராஜினாமா Editorial / 2022 ஏப்ரல் 05 , பி.ப. 12:29 - 0 - 14 நேற்று (04) நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று (05) இராஜினாமா செய்துகொண்டார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/புதிய-நிதியமைச்சர்-இராஜினாமா/150-294323
-
- 9 replies
- 601 views
-
-
மட்டக்களப்பில் எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் வாகனங்களுடனும் கலன்களுடனும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 05.00 மணி தொடக்கம் காத்திருக்கின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டையடுத்து மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்கள் இல்லை. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் வாகனங்கள் உட்செல்லவிடாது கயிறுகட்டி மூடியுள்ளனர். இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் அதிகாலை 5 மணி தொடக்கம் நீண்ட வரிசையில் வாகனங்களுக்கு பெற்றோல். டீசல் பெறுவ…
-
- 0 replies
- 195 views
-
-
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேராயர் களமிறங்கினார் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்தும் இணைந்து கொண்டுள்ளார். http://www.newswire.lk/wp-content/uploads/2022/04/Cardinal-1.jpg பேராயருடன் பல அருட்த்ந்தையர்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நாட்டின் குடிமக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். http://www.newswire.lk/wp-content/uploads/2022/04/Cardinal-3.jpg இன்று (5) பொரளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளையும் இலங்கையின் தேசியக் கொடியை…
-
- 2 replies
- 322 views
-
-
பதவிகளை ஏற்க தயாராக இல்லை ; ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தீர்வு காண வேண்டும் - ரணில் (எம்.மனோசித்ரா) பதவிகளை ஏற்றுக் கொள்வதற்கு தான் தயாராக இல்லை என்று அறிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய நிலையில் , தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சு பதவிகளை ஏற்று ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையிலேயே…
-
- 2 replies
- 314 views
-
-
குற்றவாளிகள்... நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க, விமான நிலையத்தை மூட வேண்டும் – நாடாளுமன்றில் கோரிக்கை. குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் விமான நிலையத்தை மூட வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சிகளின் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார். https://athavannews.com/2022/1275086
-
- 3 replies
- 322 views
-
-
மொத்தம் 43 எம்.பி.க்கள்... அரசாங்கத்தில் இருந்து, வெளியேறியுள்ளனர் இதுவரை 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாகவும், சுதந்திரமாகச் செயற்படுவதாகவும் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர். விமல் வீரவன்ஷ, அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லன்சா ஆகிய தரப்பினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இதுவரை, அரசாங்கத்தில் இருந்து 38 உறுப்பினர்கள் வெளியேறியுள்ளனர் அது 50 ஐ தாண்டினால், அரசாங்கத்திற்கு பெரும்பாண்மை இல்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1275125
-
- 1 reply
- 194 views
-
-
புதிய அமைச்சர்களின் நியமனம் 'சங்கீதக்கதிரை' விளையாட்டு : ஒரு போதும் அரசாங்கத்துடன் இணையோம் - தமிழ் கட்சிகள் (நா.தனுஜா) நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி அமைக்கப்படவிருக்கும் இடைக்கால அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்திருக்கும் அழைப்பை தாம் நிராகரிப்பதாகவும், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் இடைக்கால அரசாங்கத்தில் தாம் இணைந்துகொள்ளப்போவதில்லை என்று வடக்கு, கிழக்கு தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 3 பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் தலைமைய…
-
- 1 reply
- 203 views
-
-
அமைச்சர்கள் பதவி விலகல் கோமாளி நாடகம் : அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துங்கள் - ஜே.வி.பி. (எம்.மனோசித்ரா) நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் , அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகக் கூடும். இதற்கு இடமளிக்காத வகையில் அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். அதற்கமைய ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர் தனது பதவி காலம் முடிவதற்கு முன்பதாக ஏதாவது காரணங்களினால் பதவியை இராஜிநாமா செய்தால் அடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கே செல்ல வேண்டும் என்ற வகையில் அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். …
-
- 0 replies
- 270 views
-
-
19 ஆவது திருத்தத்தை... மீண்டும் அமுல்படுத்துங்கள் : 20 ற்கு ஆதரவளித்த மைத்திரி கோரிக்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை நீக்கிவிட்டு 19வது திருத்தத்தை திருத்தங்களுடன் அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இனிமேல் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தத்திற்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சி ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/127510…
-
- 0 replies
- 124 views
-
-
இடைக்கால அரசாங்கத்தை... அமைப்பதற்கு, சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் – விஜயதாச கோரிக்கை நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ இன்று கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டால் முழு நாடும் எம்மை சபிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களிலும் அரசியல் இ…
-
- 0 replies
- 91 views
-
-
யாழ். பல்கலையில்... கல்வி நடவடிக்கைகள், இடைநிறுத்தம்! யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பீடாதிபதிகள் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாணவர் நலன்கருதி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்துப் பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதுடன், விடுதிகளில் தங்கி நிற்கும் மாணவர்களை விடுதிகளில் இருந்…
-
- 0 replies
- 123 views
-
-
போராட்டக்காரர்களுக்கு... ஆதரவளித்த, பொலிஸ் சீருடை அணிந்தவர்... பொலிஸ் உத்தியோகத்தரா என்பது குறித்து விசாரணை! கொட்டாவாயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு ஆதரவளித்த பொலிஸ் சீருடைக்கு நிகரான காக்கி உடையை அணிந்தவர் பொலிஸ் உத்தியோத்தரா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவளித்தமைக்கு சாட்சியமளிக்கும் பரவலான காணொளிக்கு பதிலளிக்கும்போதே பொலிஸார் இவ்வாறு தெரிவித்துள்ளனர். போராட்டத்தின்போது, காக்கி உடையில், கருப்பு ஜாக்கெட் மற்றும் வெள்ளை ஹெல்மெட் அணிந்திருந்த ஒருவர், “நாங்கள் சீருடையில் இருந்தாலும் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூட்டத்தில் உரையாற்றினார். இந்நிலையில், அவர் உண்மையான பொல…
-
- 0 replies
- 202 views
-
-
பிரதி சபாநாயகர் பதவியை... இராஜினாமா செய்தார், ரஞ்சித் சியம்பலபிட்டிய! நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலபிட்டிய அறிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு வழங்கிவரும் ஆதரவை விலக்கிக் கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று தீர்மானித்திருந்தது. இந்நிலையில் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலபிட்டிய கடிதம் ஊடக அறிவித்துள்ளார். https://athavannews.com/2022/1275063
-
- 0 replies
- 106 views
-
-
மத்திய வங்கியின்... நாணயக் கொள்கை மீளாய்வு, ஒத்திவைப்பு ! இன்று (05) அறிவிக்கப்படவிருந்த 2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நாணயக் கொள்கை மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்தோடு இன்று செவ்வாய்க்கிழமைநடைபெறவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பும் பிற்போடப்பட்டுள்ளது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த செய்திக்குறிப்பு மற்றும் செய்தியாளர் சந்திப்பின் தேதி குறித்த நேரத்தில் அறிவிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1275080
-
- 0 replies
- 113 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக... தொடரும், போராட்டங்கள் – மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை! போராட்டங்களின்போது அநாகரீகமாக நடந்துகொள்ளும் மற்றும் வன்முறையில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், தீ வைப்பு, சட்டவிரோதமாக பிரவேசித்தல் மற்றும் தவறான நடத்தை போன்ற சம்பவங்கள் பதிவாகி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களுக்கு உரிமை இருந்தாலும் அவ…
-
- 0 replies
- 101 views
-