ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
மின்வெட்டினை, நிறுத்துமாறு கோரி... ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக, முதியவர் தற்கொலை! மிரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, குறித்த நபர் மின்மாற்றியில் ஏறியதாகவும் பின்னர் கீழே விழுந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது அவர் போதையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2022/1274605
-
- 2 replies
- 278 views
-
-
இலங்கையில் அவசர நிலை, சமூக ஊடகங்களுக்குத் தடை: ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்குமா? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ISHARA S. KODIKARA/GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் அவசரச் சட்டம் - காவலில் ராணுவத்தினர். இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால், ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் தீவிரமாக உருவெடுத்த நிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 2ம் தேதி) அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இது தவிர, 36 மணி நேர ஊரடங்கு சட்டமும் அமலில் உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு முதல் இலங்கையில் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட…
-
- 1 reply
- 255 views
- 1 follower
-
-
இலங்கை ஊரடங்கை மீறி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் 3 ஏப்ரல் 2022, 06:42 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபடும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி. இலங்கை அரசாங்கத்தின் அவசர நிலைப் பிரகடனம், ஊரடங்கு, சமூக ஊடகங்கள் மீதான தடை போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை கொழும்பில் இன்று நடத்தியது. கொழும்பு சுதந்திர சதுகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவி…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
பெரும்பான்மை குறைவடையலாம் என்ற அச்சம் – நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைக்கின்றது அரசாங்கம்? நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியின் பெரும்பான்மை குறைவடையலாம் என்ற அச்சம் காரணமாக, அதை சமாளிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரை குறுகிய காலத்துக்கு ஒத்திவைப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் முக்கிய வேலைத்திட்டங்கள் இல்லை எனத் தெரிவித்து புதுவருடத்தை முன்னிறுத்தி இவ்வாறு ஒத்திவைக்க முடியுமென அரச உயர் மட்டத்தில் உள்ள சிலர் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் ஆளும் அரசின் பெரும்பான்மையை இல்லாமல் செய்ய நடவடிக்…
-
- 0 replies
- 150 views
-
-
பேராதனையில்... போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, கண்ணீர்ப்புகை பிரயோகம் ! பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக பல கோணங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னேடுக்கப்படுகின்றது. அந்த வகையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேராதனை – கலஹா சந்தி வரை மாணவர்கள் பேரணியாக செல்ல முற்பட்ட போது இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ப…
-
- 0 replies
- 245 views
-
-
சமூக வலைத்தள முடக்கத்தை... நீக்குமாறு, இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கை! சமூக வலைத்தள முடக்கத்தை நீக்குமாறு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. மின் துண்டிப்பு தொடர்பில் நுகர்வோருக்கு தகவல்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் உடன் அமுலாகும் வகையில் சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, செயற்பாட்டை மீள ஆரம்பிக்குமாறு தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்து கைப்பேசி சேவை வழங்குநர்களிடம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் இன்று காலை அறிவித்திருந்தா…
-
- 0 replies
- 163 views
-
-
மட்டக்களப்பு: வாகரையில் அமைக்கப்படும் இரால் பண்ணைகளால் மக்கள் பாதிப்பு April 3, 2022 மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் அமைக்கப்படும் இரால் பண்ணைகள் காரணமாக வாகரை பிரதேச மக்களின் வாழ்வாதாரம் உட்பட பலவிதான நன்மைகள் அழிக்கப்படுவதை தடுத்துநிறுத்த வலியுறுத்தி இன்று கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு முன்னேற்றக்கழகம் என்னும் அமைப்பு உட்பட மீனவ,விவசாய அமைப்புகள் இணைந்து இந்த திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது. வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி, தட்டுமுனை, புளியங்கண்டலடி, கட்டுமுறிவு,பால்சேனை,கதிரவெளி போன்ற பகுதிகளில் இன்றைய கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
-
- 0 replies
- 227 views
-
-
சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் பதவிகளை துறந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானம் (லியோ நிரோஷ தர்ஷன்) அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்புகள் போன்ற நெருக்கடிகளினால் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்புகள் இன்று நாட்டை ஆபத்தான நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது. இதன் விளைவாக அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு பொது நிகழ்வுகளில் பங்குப்பற்றுவது என்பது சவால் மிக்கதாகியுள்ளதுடன் ராஜபக்ஷ குடும்பத்தினரை இலக்கு வைத்த எதிர்ப்பு நடவடிக்கைகளும் தீவிரம் கண்டு வருகின்றன. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆட்சி குறுகிய காலத்திற்குள் இவ்வாறானதொரு பாரிய மக்கள் எதிர்ப்பை சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என தெரிவித்த ஆளு…
-
- 2 replies
- 328 views
-
-
கொழும்பு, மஹரகமவில் பதற்றம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொழும்பு மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று (03) ஒன்று திரண்டிருந்தனர். வௌ்ளைநிற ஆடையை அணிந்திருந்த அவர்கள், ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரியே அமைதியான முறையில், காரியாலயத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காரியாலயத்தில் இருந்து வெளியேறியவர்கள் சுதந்திர மாவத்தை வரையிலும் பேரணியாக சென்றனர். அங்கு வீதித்தடை போட்டப்படிருந்தது. அதனையும் மீறி செய்வதற்கு முயன்றபோதே, அங்கு பதற்றமான நிலைமையொன்று எற்பட்டுள்ளது. இதேவேளை, மஹரகமவில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பௌத்த தேரர் உள்ளிட்ட ஒரு குழுவினர், பொ…
-
- 0 replies
- 344 views
-
-
ஊரடங்கிற்கு மத்தியிலும்... எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு அண்மையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷடி சில்வா, சரத் பொன்சேகா, நளின் பண்டார, கபிர் காசிம், ஹக்கீம், முஜீப்பு ரகுமான், ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், மனுச நாணயக்கார, ரஞ்சித் மத்துமபண்டார, வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 159 views
-
-
சமூக ஊடங்களை... முடக்குவதை, ஏற்றுக் கொள்ளமாட்டேன் – நாமல் சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் ‘சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றதோடு (வி.பி.என்) கிடைப்பது தற்போது நான் பயன்படுத்துவதுபோல அவ்வாறான தடைகளை முற்றாக அர்த்தமற்றதாக்கிவிடுகின்றது“ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை “அதிகாரிகள் முற்போக்கான விதத்தில் சிந்திக்கவேண்டும், என்பதோடு முடக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும்“ எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1274563
-
- 4 replies
- 343 views
-
-
பதவி விலகினார்... தகவல் தொடர்பாடல், தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர்! தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர் ஓசத சேனாநாயக்க பதவி விலகியுள்ளார். அவர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274556
-
- 0 replies
- 127 views
-
-
சிலிண்டர்களின் விலை, 21,000 ரூபாவாக.... அதிகரிப்பு ! லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளது . தலை நகரிலும் அதை தாண்டி பல மாவட்டங்களின் பல மாதங்கள் கடந்தும் சிலிண்டரின் தட்டுப்பாடு நிலவி வருகின்றது . இந்த நிலையில் வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விளம்பர இணையத்தளங்கள் இது தொடர்பில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வெற்று எரிவாயு சிலிண்டர் 16,000 ரூபா வரையிலும், 5 கிலோ சிலிண்டர் 9,900 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1274583
-
- 4 replies
- 398 views
-
-
அரசாங்கத்திற்கான... உற்சாகமூட்டல்களே, போராட்டங்கள் – வைராக்கியத்துடன் எதிர் கொள்வோம் என்கிறார் டக்ளஸ் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை மனவைராக்கியத்துடன் எதிர்கொள்வதற்கான உற்சாகமூட்டல்களாகவே எதிர்தரப்பினரால் தூண்டி விடப்பட்டுள்ள போராட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் சகஜ நிலைக்கு திரும்பும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று(சனிக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு பல்வேறு காரணங்கள் இரு…
-
- 18 replies
- 945 views
-
-
மருந்துவ பொருட்களுக்காக... நிதியமைச்சினால், 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது! தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றுக்காக நிதியமைச்சினால் சுகாதார அமைச்சுக்கு 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 3 மாதங்களுக்கு மருந்து விநியோகத்தை முகாமைத்துவம் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 22 மில்லியன் டொலர் தேவையாக இருந்ததாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரையில் அத்தியாவசிய மற்றும் அவசர மருந்து பொருட்கள் 14 இல் 9 மருந்து ப…
-
- 0 replies
- 114 views
-
-
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு, எச்சரிக்கை விடுத்தது... அரசாங்கம்! ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை வித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1274489
-
- 0 replies
- 112 views
-
-
அரசிலிருந்து... வெளியேற தயாராகின்றது, இ.தொ.கா – முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் ஜீவன் தொண்டமான்! அமைச்சு பதவிகள் அல்ல, மக்களின் தீர்மானமே காங்கிரசுக்கு முக்கியம். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாவிட்டால் அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசின் பங்காளிக்கட்சியாக இருந்தாலும், மக்களை பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாகும். …
-
- 7 replies
- 502 views
-
-
மக்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சி.. பொது நிகழ்வுகளை, தவிர்த்துக்கொள்ளும் அமைச்சர்கள்... ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்? அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது நிகழ்வை தவிர்த்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மின்வெட்டு, சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றத்தால் நாட்டு மக்கள் கடும் கொதிப்பில் உள்ள நிலையிலேயே அவர்கள் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அரசுமீதான அதிருப்தியை மக்கள் தம்மீது காட்டக்கூடும் என்பதாலும், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டுமே அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரியவருகின்றது. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாரம…
-
- 0 replies
- 80 views
-
-
மிரிஹானவில் கைதானவர்களின், உரிமைகள் மீறப்பட்டுள்ளதா... என்பது குறித்து விசாரணை! மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆணைக்குழு கூடவுள்ளது. அரசாங்கத்தினாலோ அல்லது வேறு தரப்பினராலோ குறித்த சம்பவத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் முன்வைக்கப்பட வேண்டிய பரிந்துரைகள் தொடர்பில் அன்றைய தினம் கவனம் செலுத்தப்படவுள்ளது. https://athavannews.com/2022/127449…
-
- 0 replies
- 97 views
-
-
விமான நிலையங்களுக்கு செல்வோருக்கான... முக்கிய தகவல் வெளியானது! விமான நிலையங்களுக்கு பிரவேசிப்போர் மற்றும் விமான நிலையங்களில் இருந்து வெளியேறுவோர் பயண சீட்டு மற்றும் விமான கடவுச்சீட்டு ஆகியவற்றை ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1274514
-
- 2 replies
- 223 views
-
-
வீதி, ரயில் பாதை, பொதுப் பூங்கா, பொது மைதானம்... உள்ளிட்டவற்றில், நடமாட தடை – அதி விசேட வர்த்தமானி வெளியானது! ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொது இடங்களில் நடமாடுவதற்கு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த காலப்பகுதியில் பொது வீதி, ரயில் பாதை, பொதுப் பூங்கா, பொது மைதானம் உள்ளிட்டவற்றில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதிகளில் நடமாடுவதாயின், பாதுகாப்பு அமைச்சின் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் அல்லது அவரினால் அதிகாரமளிக்கப்பட்ட ஒருவரின் அனும…
-
- 0 replies
- 153 views
-
-
அவசரகால நிலை குறித்து, விசேட கூட்டம் ! நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது . மேலும் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமையின் பின்னணியில் உள்ள காரணம் மற்றும் அதனூடாக வெளிப்படுத்தப்படும் விடயம் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1274545
-
- 0 replies
- 135 views
-
-
அரச வைத்தியசாலைகள்.. ஸ்தம்பிக்கும் நிலை ! நாட்டில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக சுமார் இரண்டு வாரங்களுக்கு போதுமான மருந்துகளே வைத்தியசாலைகளில் இருப்பதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார் . மேலும் டொலர் நெருக்கடிக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தீர்வு காணப்படாவிடின், அரச வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துப் பொருட்களை விநியோகிக்க முடியாத நிலை உருவாகுவதோடு மருந்து விநியோகம் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும் எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார் . இதே வேளை ‘புற்றுநோய், சிறுநீரக நோய், தலசீமியா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே மருந்து தட்டுப்பாடு நி…
-
- 0 replies
- 131 views
-
-
அத்துமீறிய... இந்திய மீனவர்கள் கைது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று ( ஞாயிற்க்கிழமை) அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1274553
-
- 0 replies
- 134 views
-
-
வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும்... கிழக்கு மாகாணங்களின், பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை! வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. நாளைய தினம்(திங்கட்கிழமை) இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், குறித்த மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஏனைய மாகாணங்களின் பாடசாலை மாணவர்கள் தவணைப் பரீட்சைக்கு மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1274561
-
- 0 replies
- 105 views
-