ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
இந்திய இராணுவம்... இலங்கைக்குள், பிரவேசித்துள்ளதாக... வெளியான செய்தியினை, மறுத்தது இலங்கை அரசாங்கம்! இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தியை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் இடம்பெற்ற இந்தோ – ஶ்ரீலங்கா ஒன்றிணைந்த போர் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படமே, குறித்த உண்மைக்கு புறம்பான செய்தியில் பகிரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெறும் இருதரப்பு ஒன்றிணைந்த போர் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய இராணுவத்தினர் இலங்கைய…
-
- 2 replies
- 396 views
-
-
இலங்கை நெருக்கடி: "உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்கிறோம்" - கண்ணீர் சிந்தும் மீனவர்கள் யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டீசல் கிடைக்காமை காரணமாக சில வாரங்களுக்கு முன்னர் 15 நாட்கள் தொடர்ச்சியாக தொழிலுக்குச் செல்ல முடியாமல் போய்விட்டது என்கிறார் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் றஹீம். இவர் - பலநாட்கள் கடலில் பயணித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெரிய படகு ஒன்றில் பணியாற்றுகின்றார். இப்போதும் மூன்றாயிரம் ரூபாவுக்கு மட்டுமே ஒவ்வொருவருக்கும் டீசல் வழங்கப்படுவதாகவும், அதனால் தங்கள் படகுக்குத் தேவையான டீசலை நான்கு, ஐந்து பேரை தனித்த…
-
- 6 replies
- 570 views
- 1 follower
-
-
பழிவாங்கும் படலம் ஆரம்பமா? கோ கோத்தா ஹோம் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் செயற்பாட்டாளர் கைது இன்று காலை பொலிஸார் என தங்களை அடையாளப்படுத்தியவர்களால் வீட்டிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட சிவில் உரிமை செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார தற்போது மோதரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இன்று காலை தங்களை மோதரை பொலிஸார் என தெரிவித்தவர்கள் அவரை அவரது வீட்டிலிருந்து அழைத்து சென்றனர். இதேவேளை முன்னதாக அனுருத்த பண்டாரவை கண்டுபிடிக்க உதவுமாறு கோரி இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது. தங்களை பொலிஸார…
-
- 5 replies
- 535 views
-
-
ஶ்ரீலங்கன் விமான சேவை திடீர் அறிவிப்பு..! இரண்டு விமான சேவைகளை திடீரென இடைநிறுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளது. அதன்படி, யூஎல் 201 மற்றும் யூஎல் 202 என்ற விமான இலக்கங்களின் கீழ் இயங்கும் இரண்டு விமான சேவைகளை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் இடைநிறுத்த இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க மற்றும் பஹ்ரைனுக்கு இடையில் இயக்கப்படும் விமான சேவைகளே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=159354
-
- 0 replies
- 416 views
-
-
நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் இன்று (02) மாலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=159363
-
- 1 reply
- 279 views
- 1 follower
-
-
40,000 மெட்ரிக் டொன் டீசல் கொழும்பு துறைமுகத்திற்கு இந்தியாவில் இருந்து 40,000 மெட்ரிக் டொன் டீசலுடனான கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் இந்த டீசல் தொகை இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. அதன்படி, கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், எரிபொருள் விநியோகம் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=159362
-
- 0 replies
- 287 views
-
-
இந்திய... உயர் ஸ்தானிகராலயம், வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை ! இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்லானது முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறான பொறுப்புணர்வற்ற அறிக்கைகளை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்ட தரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது. https://athavannews.com/2022/1274466
-
- 5 replies
- 1.1k views
-
-
அரசாங்கத்திற்கு... அதிகரிக்கும் நெருக்கடி – மற்றுமொரு இராஜாங்க அமைச்சரும் பதவி விலகினார்! தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது இராஜாங்க அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்யவுள்ளதாக ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் பொதுமக்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது. இந்தபின்னணியில் ரொஷான் ரணசிங்கவின் பதவி விலகல் குறித்த அறிவிப்பானது அரசாங்கத்திற்கும் மேலும் கடுமையான நெருக்கடிகளை ஏற்ப…
-
- 1 reply
- 396 views
-
-
எதிர்வரும் திங்கட் கிழமை முதல்... பாடசாலைகளுக்கு விடுமுறை? எதிர்வரும் திங்கட்கிழமை முதல், முன்கூட்டிய பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நீண்ட மின் தடை காரணமாக பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமையினால் இவ்வாறு பரிந்துரை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1274441
-
- 0 replies
- 262 views
-
-
வலிந்து, காணாமலாக்கப்பட்ட உறவுகளின்... பேரணி பிற்போடப்பட்டுள்ளது ! நாட்டின் நிலையை கருத்தில் கொண்டும் உறவுகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், எமது பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது என்றும் புதிய திகதி அனைவரும் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்துள்ளார் . இன்று ( சனிக்கிழமை ) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வந்தபோது, கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்த முற்பட்ட தாய்மார்கள், வயோதிபப் பெண்கள் மீது காவற்துறையினர் மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து நீதி கிடைக்க வேண்டியும் நாளை (ஞாய…
-
- 0 replies
- 205 views
-
-
இலங்கையில்.. முடக்கப்படுகின்றன, சமூக ஊடகங்கள்? தேவை ஏற்பட்டால் நாட்டில் சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மிரிஹானவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகங்கள் ஊடாக மேலும் வன்முறையைத் தூண்டினால் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, “சமூக ஊடகங்கள் மூலம் வன்முறைச் சம்பவத்தைச் செய்ய ஏதேனும் உ…
-
- 0 replies
- 293 views
-
-
ஜனநாயக வெளிப்பாட்டிற்கு... ஆர்ப்பாட்டங்கள், முக்கியமானது – அமெரிக்க தூதுவர் இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். மிரிஹானவில் அமைந்துள்ள ஜானாதிபதியின் இல்லத்தினை முற்றுகையிட்டு பெரும்திரளான மக்கள் நேற்று முந்தினம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இந்தநிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது. நான் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றேன். எதிர்வரும் நாட்கள் அனைத்து தரப்பினருக்கும் பொறுமையை கொண்டுவரும் என கருதுகின்றேன். துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களிற்கு மிகவும் அவசியமான பொருளாதார ஸ்திரதன்…
-
- 5 replies
- 754 views
-
-
நியூசிலாந்து பிரஜைகளுக்கு... பயண எச்சரிக்கை! இலங்கையிலுள்ள நியூசிலாந்து பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தினால் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாகவும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் நீண்ட நேர மின் விநியோகத் தடை முன்னெடுக்கப்படுவதாகவும் நியூசிலாந்து உயரஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் இலங்கையிலுள்ள நியூசிலாந்து உ…
-
- 0 replies
- 146 views
-
-
அவசரகால பிரகடனத்தை... மீளப் பெறுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து! அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய அவரகால சட்டம் நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தமது கூட்டணியின் நிலைப்பாட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும், அரசாங்கத்திற்கு எதிரான எதிர்பினையும் போராட்டங்களைய…
-
- 0 replies
- 226 views
-
-
அமைச்சு பதவிகளை துறந்து... அரசிலிருந்து வெளியேறுவதற்கு, தயாராகின்றது சு.க – ஜனாதிபதிக்கும்... கடிதம் அனுப்பி வைக்கப்படுகின்றது! இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், அமைச்சு பதவிகளை துறந்து அரசிலிருந்து வெளியேறுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இன்று(வெள்ளிக்கிழமை) கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அ…
-
- 0 replies
- 116 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக... வலுப் பெறும் போராட்டங்கள் – ஆளுங்கட்சியினரை சந்தித்தார் ஜனாதிபதி! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஆளும்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் வலுப்பெற்றுள்ள நிலையிலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் நேற்று முன்தினம் ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் என்பன குறித்தும் கலந்த…
-
- 0 replies
- 256 views
-
-
“நான் தான் நன்றாக செய்தேன்” என்று கூறிய ஜனாதிபதிக்கு... தக்க பதிலடி கொடுத்த கொடுத்த பொதுமக்கள் – இராதாகிருஷ்ணன் நான் தான் நன்றாக செய்தேன் என்று கூறிய ஜனாதிபதிக்கு மக்கள் நேற்று பதில் வழங்கியுள்ளார்கள். இதனை புரிந்துக் கொண்டு எதிர்கால நடவடிக்கைகளை ஜனாதிபதி திட்டமிட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ர உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஜனாதிபதியின் வீட்டை முற்றுக…
-
- 0 replies
- 181 views
-
-
ஞாயிற்றுக்கிழமை... ஊரடங்குச் சட்டத்தை, அமுல்படுத்த தயாராகின்றது அரசாங்கம்? எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274306
-
- 0 replies
- 118 views
-
-
தோற்றிருப்பது... நாட்டின் பொருளாதாரம் அல்ல, இந்த அரசாங்கத்தின் இனவாதமே – கி.சேயோன் இன்று தோற்றிருப்பது பொருளாதாரமோ ஏனைய விடயங்களோ அல்ல. இந்த அரசாங்கத்தின் இனவாதமே தோற்றிருக்கின்றது என்பதே இன்று நாட்டின் நிலைமை சொல்லும் உண்மையான செய்தி என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினருமான கி.சேயோன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 124வது ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இந்த நாட்டின் அரசாங்கம் பொருளாதாரக் கொள்கையில் தோல்வியடைந்து நாட்டை நிருவகிக்க முடியாமல் இருக்கின்றது. இன்று …
-
- 0 replies
- 181 views
-
-
ஜனாதிபதியின் வீட்டிற்கு அருகில்... முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, பேருந்துக்கு இராணுவமே தீ வைத்தது? நுகேகொட போராட்டமானது மத அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது எனும் அர்த்தத்தில் அரசாங்கம் கூறவில்லை எனவும், மாறாக அடிப்படைவாத சிந்தனையுள்ள அரசியல் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டதாகவே கருதப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டு மக்களுக்கு இன்று பிரச்சினைகள் உள்ளன. ஆனால், இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்படும் என்றால் நாமும் இத…
-
- 0 replies
- 165 views
-
-
பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லாவிட்டால், நாட்டின் நிலைமை இன்னமும் பாரதூரமாக மாற்றமடையும் – விமல்! அமைச்சரவையை உடனடியாக கலைத்து, இடைக்கால அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதே முக்கியமான விடயமாகும். சாதாரண நேரத்தில் எடுக்கும் தீர்மானங்கள் இப்போது நாட்டுக்கு பொறுந்தாது. எனவே, ஜனாதிபதி உடனடியாக தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு, நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்…
-
- 6 replies
- 396 views
-
-
ஜனாதிபதியின் வீட்டிற்கு அருகில்... முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, கைதானவர்களுக்கு ஆதரவாக... களமிறங்கியுள்ள 300 சட்டத்தரணிகள்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டின் முன்பாக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பாக அதிகளவான சட்டத்தரணிகள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர். சுமார் 300 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் தமது சேவைகளை இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/1274334
-
- 0 replies
- 87 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின்... இலங்கை தொடர்பான, அறிக்கை மீது 8ஆம் திகதி விவாதம் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அறிக்கையினை அண்மையில் முன்வைத்திருந்தது. இது, குறித்த நாடாளுமன்ற விவாதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கோரியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274342
-
- 0 replies
- 142 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து, நாங்கள் வெளியேற மாட்டோம் – டெலோ தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாங்கள் தொடர்ந்து இருப்போம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் எங்களுடைய பங்கு இருக்கின்றது என தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமன செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தமாக பேசுவதற்கு சுமந்திரனுக்கு அருகதை இல்லை என்பதை நான் இந்த நேரத்தில் கூறிக்கொள்கின்றேன். ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்து 10 வருடங்களுக்கு பின்பு தான் சுமந்…
-
- 0 replies
- 156 views
-
-
நுகேகொடை – மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் போது... கைதான 21 பேருக்கு பிணை நுகேகொடை – மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்கள் 21 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளர். இவர்கள் தலா 100,000 ரூபாய் சரீர பிணையில் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். கங்கொடவில நீதவான் முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைதான மேலும் 6 பேருக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கங்கொடவில நீதவான் உத்தரவிட்டுள்ளார். …
-
- 0 replies
- 101 views
-