Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரம்புக்கனை விவகாரம் – பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான, நீதிமன்ற உத்தரவு இதுவரை கிடைக்கவில்லையாம்! ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். உத்தரவு கிடைக்கப்பெற்ற பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல பொலிஸாரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் …

  2. மக்கள், விரைவில்... உணவு நெருக்கடியை, சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை! விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளுர் உணவு உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நாட்டு மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என விவசாய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் நெல் அறுவடை 45 வீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் யூரியா உரத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடைகளில் 50 கிலோ யூரியா உர மூட்டை 40 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2022/1278983

  3. ஜெனிவாவில், ‘ஐக்கிய நாடுகள்... இலங்கைக்கு, உங்கள் கவனம் தேவை’ – ஜெனிவாவில் போராட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு முன்பாகவும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘ஐக்கிய நாடுகள் இலங்கைக்கு உங்கள் கவனம் தேவை’ எனும் தொணிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘கோட்டா கோ ஹோம்’ என கோசமெழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்களுக்கு ஆதரவாக பல உலக நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278958

    • 1 reply
    • 191 views
  4. அமெரிக்க டொலரின் பெறுமதி... 360 ரூபாயாக, அதிகரிப்பு! இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலையை இன்று (வியாழக்கிழமை) 360 ரூபாயாக அதிகரித்துள்ளன. இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதத்தின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. நாளுக்கு நாள் டொலரின் பெறுமதி உயர்ந்து வருகின்றமையே கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278963

  5. சுரேன் ராகவன், சாந்தபண்டார... ஆகியோரை, இராஜாங்க அமைச்சுகளில் இருந்து நீக்கினால் மட்டுமே... நாளை, ஜனாதிபதியுடன் பேச்சு – சு.க அறிவிப்பு! சுரேன் ராகவன், சாந்தபண்டார ஆகியோரை இராஜாங்க அமைச்சுகளில் இருந்து நீக்கினால் மட்டுமே நாளை(வெள்ளிக்கிழமை) ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஈடுபடுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் குறித்த கலந்துரையாடலை பகிஷ்கரிக்கவுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278917

    • 6 replies
    • 344 views
  6. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சிகளின் இடைக்கால அரசு ஸ்தாபிக்கப்படும் - ஜனாதிபதி உறுதி (இராஜதுரை ஹஷான்) சமூக மற்றும் அரசியல்,பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் உள்ளிடக்கிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் முழுமையாக இணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் கடிதம் ஊடாக அறிவித்…

  7. தண்ணிமுறிப்பில் அபகரிப்புக்குள்ளான காணிகள் தொடர்பில் சாள்ஸ் நிர்மலநாதன் நேரில் சென்று ஆராய்வு ! கே .குமணன் குருந்தூர்மலை பிரதேசத்தை அண்டிய தண்ணிமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பூர்வீக காணிகள் மீள் குடியேற்றத்தின் பின்பு சில வருடங்களாக வனவள திணைக்களத்தின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. அத்தோடு குருந்தூர் மலையை அண்டிய சில மக்களின் காணிகளும் பயிர் செய்கைக்கு குருந்தூர் மலையில் உள்ள பௌத்த பிக்குவால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த காணிகள் தொடர்பில் ஆராயும் நோக்கோடு பாராளுமன்ற உறுப்பினர் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். பூர்விக காணிகளிலே தமது வாழ்வாதாரம் தங்கி இருப்பதாகவும் தமது பூர்வீக காணிகளை வன வள திணை…

    • 1 reply
    • 185 views
  8. யாழ். பல்கலைக்கு... அமெரிக்கத் தூதுவர், விஜயம்! யாழ்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் நேற்று (புதன்கிழமை) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்க கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜமொன்றினை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, யூ. எஸ் எயிட் அனுசரணையுடன், யாழ். பல்கலைக் கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்படும் சமாதானமும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்ற முதுமாணிக் கற்கை நெறிக்கான அனுசரணையாளர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தரும், யூ. எஸ் எயிட் நிறுவன அதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதன் போது, பல்கலைக் கழகப் பதிவாளர், நிதியாளர், …

    • 15 replies
    • 1.2k views
  9. ஐக்கிய மக்கள் சக்தியின், பேரணி... மூன்றாவது நாளாக தொடர்கிறது! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (வியாழக்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. ‘ஐக்கிய மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளிலில் ஆரம்பமாகிய இந்த பேரணி 5 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணி இன்று கலிகமுவவில் இருந்து தங்கோவிட்ட நோக்கி பயணிக்கவுள்ளது. அத்தோடு, இந்தப் பேரணி எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது. கண்டியிலிருந்து நேற்று முன்தினம் (26) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணியில் அதிகளவானவர்கள் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

  10. ஜனாதிபதிக்கு எதிராக... சுமந்திரன், தயாரித்துள்ள பிரேரணை தயார்: ஐ.தே.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தயாரித்துள்ளதுடன், அது நாடாளுமன்றம் கூடியதும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணைக்கு ஐக்கியத் தேசியக் கட்சி ஏற்கனவே தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் தற்போது ஏனைய எதிர்க்கட்சிகளிடமும் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பிரேரனையில் 113 கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டால், ஜனாதிபதியை நீக்குவதற்கான சட்டபூர்வமான தன்மை இருக்காத…

    • 8 replies
    • 523 views
  11. அரசாங்கத்திற்கு எதிராக... போராட்டங்களை முன்னெடுக்க, இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு இன்று(வியாழக்கிழமை) இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு குறித்து இரா.சாணக்கியன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், “களவாஞ்சி பொலிஸாரினால் எனக்கு எதிராகவும், நான் சார்ந்தவர்கள் என்ற அடிப்படையில், என் சார்ந்தவர்கள் யார் என தெரியவில்லை. இலங்கையில் வ…

  12. அலரி மாளிகைக்கு முன்பாக... "மைனா கோ கம"விலும், தொடரும்... போராட்டம் – மூவர் உண்ணாவிரதம்! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவையை வெளியேறுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மைனா கோ கம என இந்த ஆர்ப்பாட்டக் களத்திற்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், அங்கு மூவர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி அவர்கள் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போராட்டக்காரர்கள் அலரிமாளிகையின் முன்பாக நடைபாதையில் அமர்ந்திருப்பதைத் தடுக்க நான்கு பேருந்துகள் மற்றும் ஒரு டிரக்கை பொலிஸார் இரண்டு பக்கங்களிலும…

  13. மிகக் குறைந்த எண்ணிக்கையானோரே... காலிமுகத்திடலுக்கு வந்து, எம்மை பதவி விலகுமாறு... கோருகின்றனர் – மஹிந்த! ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யுமாறு ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு கூறமாட்டார் எனவும் உறுதியாக நம்புகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதேச சபைத் தவிசாளர்கள், மேயர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் இன்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வெளிநாட்டு உதவிகளை பெற்றேனும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்யக்கூடாது என பிரதேச சபை தவ…

  14. வருட இறுதிக்குள்... அமெரிக்க டொலர், 500 ஐ தாண்டும் – காமினி விஜேசிங்க அமெரிக்க டொலரின் மதிப்பு வருட இறுதிக்குள் 500 ஆக அதிகரரிக்கும் என முன்னாள் கணக்காய்வாளர் காமினி விஜேசிங்க எச்சரித்துள்ளார். தற்போதைய நெருக்கடியை சீர்செய்வதற்கான பாதையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய கடன் நிலை, அரசாங்கம் தனது கடமைகளில் தவறியிருப்பதையே காட்டுகிறது எனவும் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். மேலும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப புதிய வேலைத்திட்டத்தின் அவசியத்தை அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். நாடு என்பதை அரசாங்கம் இப்போது உணர்ந்து கொள்வது மிகவ…

  15. கடும் மழைக்கு மத்தியிலும்... கோட்டா கோ கமவில், தொடரும்... போராட்டம் – இன்றுடன் 20 நாட்கள் நிறைவு! ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் 20ஆவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகைத் தரும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று இரவு கடும் மழைக்கு மத்தியிலும் கோட்டா கோ கமவில் தொடர்ச்சியாக பல கோசங்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https:/…

  16. யாழ். குருநகரை சேர்ந்த இருவர்... தமிழகத்தில் தஞ்சம்! யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடல் வழியாக இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்தவர்களான ஜெயசீலன் சீலன் மற்றும் வினோத் அருள்ராஜ் ஆகிய இரு இளைஞர்களே தஞ்சமடைந்துள்ளனர். குறித்த இருவரும் நேற்றைய தினம் புதன்கிழமை குருநகர் பகுதியில் இருந்து படகொன்றின் மூலம் சென்று, இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு அருகில் கரையிறங்கிய வேளை தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக யாழ்ப்பாணம் , மன்னார் கடற்பரப்புக்கள் ஊடாக தமிழகம…

  17. அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்... ஜனாதிபதிக்கும், இடையில்... இன்று கலந்துரையாடல்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதேவேளை, அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க, நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில், கொள்கை ரீதியில் தாம் இணங்குவதாக அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி எழுத்துமூலம் அறியப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278855

  18. விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று – உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் குறித்து ஆராய்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 10 மணியளவில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பிலும் இதன்போது ஆராயப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பான யோசனையை அண்மையில் சபாநாயகரிடம் கையளித்தன என்பது …

  19. மக்கள் ஆணையுடனேயே.. நாட்டை, பொறுப்பேற்பேன் – சஜித்! மக்கள் ஆணையுடனேயே நாட்டை பொறுப்பேற்பேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டியிலிருந்து கொழும்பிற்கான பேரணி இன்று(புதன்கிழமை) இரண்டாவது நாளாக மாவனெல்லையில் ஆரம்பமானது. இதன் போது மாவனெல்லை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பஷில் ராஜபக்ஷவுடன் இணைந்த கொள்ளை கூட்டத்திலுள்ள 70 பேருடன் எனக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கோ எவ்வித இரகசிய ஒப்பந்தமும் கிடையாது. அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்பாட்டை மறை…

  20. ரம்புக்கனையில்... உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்று, இரங்கல் தெரிவித்தார் செந்தில் தொண்டமான்! ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சமிந்த லக்ஷானின் வீட்டுக்கு நேரில் சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், அன்னாரது குடும்பத்துக்கு இ.தொ.கா சார்பிலும் மலையக மக்கள் சார்பிலும் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு இ.தொ.கா சார்பாகத் தமது கடுமையான கண்டனத்தையும் வெளிப்படுத்தினார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றும் பக்கபலமாக இருக்கும் என்றும் உறுதியளித்தார். இதன்போ…

  21. ஆயிரத்திற்கும்... மேற்பட்ட, தொழிற்சங்கங்கள்... இன்று, வேலை நிறுத்தப் போராட்டம்! அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் (UTUMO) அறிவித்துள்ளன. ‘வாக்கெடுப்புக்கு தலைவணங்கும் – அரசாங்கம் வீட்டுக்குச் செல்கிறது’ என்ற தொனிப்பொருளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. கல்வி, போக்குவ…

  22. முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில்... சிங்கள மக்களும், கலந்துகொள்ள வேண்டும் – செல்வம் நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள முஸ்லீம் மக்களும் கலந்துகொள்ளவேண்டுமென வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இவர் இன்று (புதன்கிழமை ) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல் நிலைமைக்கு காரணமான ஆட்சியாளர்களை வீட்டுக்கு செல் என காலிமுகத்திடல் தொடக்கம் நாடு பூராகவும் போராட்டம் இடம்பெறுகின்றது. இந்த போராட்டங்கள் ஜனநாய…

    • 2 replies
    • 304 views
  23. ரம்புக்கனை துப்பாக்கி பிரயோகம் – அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும், கைது செய்யுமாறு உத்தரவு! ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல பொலிஸாரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேகாலை நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று(புதன்கிழமை) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில் அவர்களது காயங்கள் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டது என உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக கைது செய்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள…

    • 2 replies
    • 331 views
  24. அமெரிக்க தூதுவர், யாழ். பொதுநூலகத்திற்கு விஜயம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட தூதுவரை யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் வரவேற்றார். இதன்போது மாநகர சபை ஆணையாளர் இ.த. ஜெயசீலன் ஆகியோரும் கலந்து கொண்டார். வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கத் தூதுவர் பல்வேறு தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278823

    • 7 replies
    • 720 views
  25. அரசாங்கத்திற்கு... எதிர்ப்புத் தெரிவித்து, நாளை... பொது வேலைநிறுத்தம்! அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம்(வியாழக்கிழமை) ´ பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த நாட்டு மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் தன்னிச்சையான பயணத்தை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது. எனவே இந்த நாட்டின் உழைக்கும் மக்களாகிய நாங்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கத்திடம் கூறுகின்றோம். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.