ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142874 topics in this forum
-
மின்வெட்டு காரணமாக... கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளிலும் பாதிப்பு! நாளாந்த வர்த்தக காலத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாத்திரம் பங்குச் சந்தை நாளாந்த வர்த்தகத்திற்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1274106
-
- 0 replies
- 103 views
-
-
தந்தை செல்வாவின்... 124 ஆவது ஜனன தினம், யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு! இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது ஜனன தினம் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில், தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தின் தலைவரும் தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயருமான சுப்பிரமணியும் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர…
-
- 0 replies
- 112 views
-
-
இலங்கையில் எரிபொருள் பாவனை... கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 30 – 35 சதவீதம் அதிகரிப்பு! இலங்கையில் எரிபொருள் பாவனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 30 – 35 சதவீதம் அதிகரித்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார் 2021 ஜனவரிக்குள் 139,000 மெட்ரிக்தொன் எரிபொருள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், 2022 ஜனவரியில் எரிபொருளின் பயன்பாடு 198,000 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வழக்கத்திற்கு மாறான பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுமித் விஜேசிங்க, அவ்வாறு அதிகரிப்பதற்கான காரணத்தை ஆராய வேண்டும் எனவும் கு…
-
- 0 replies
- 106 views
-
-
உணவுகளை... நுகர்வோரின், எண்ணிக்கை 50 சதவீதத்தினால் வீழ்ச்சி! உணவு பொருட்களுக்கான விலை அதிகரித்தமையை அடுத்து உணவுகளை நுகர்வோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மின்சார துண்டிப்பும் இந்த விடயத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1274089
-
- 0 replies
- 224 views
-
-
பருப்பு, சீனி என்பவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தகவல்! அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 600 கொள்கலன்கள் தொடர்ந்தும் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, சீனி, மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுகளே இவ்வாறு தேங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பருப்பு மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1274093
-
- 0 replies
- 111 views
-
-
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த... ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மேலும் இருவர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகரவிற்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இரத்தினபுரி – காஹவத்தை பகுதியில் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டத்தின் போது, துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.…
-
- 0 replies
- 123 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான், தவிசாளராக ரமேஷ்வரன் தேசிய சபையில் ஏகமனதாக தெரிவு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமானும், தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் இன்று முற்பகல் கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட உயிரிழந்த கட்சி செயற்பாட்டாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், பிரமுகர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் காங்கிரஸின் முக்கிய பதவிகளுக்கான தேர்வுகள் இடம்பெற்றன. இதன்போது தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப…
-
- 0 replies
- 115 views
-
-
இந்தியாவினால் மீனவர்களுக்கு என வழங்கிய பொதிகளை அரசியல் கட்சி தமக்குள்ள பகிர்ந்ததாக குற்றச்சாட்டு March 31, 2022 இந்திய அரசாங்கத்தால் மீனவர்களுக்கு என வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் மீனவர்கள் பலருக்கு வழங்கப்படாமல் , அரசியல் கட்சி ஒன்றின் பிரதிநிதிகள் , உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கே பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளத்தினர் இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்திய அரசினால், யாழ்.மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு என தலா 5ஆயிரம் ரூபாய் பெறுமதியான 600 உலர் உணவு பொதிகள் இந்திய உயர்ஸ்தானிகரின் பங்குபற…
-
- 1 reply
- 174 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: தமிழர்கள் வருகை தொடருமா? மன்னாரிலிருந்து கள ஆய்வு முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 30 மார்ச் 2022, 03:51 GMT புதுப்பிக்கப்பட்டது 30 மார்ச் 2022, 05:54 GMT இலங்கையில் பொருளாதார நெருக்கடி முற்றியிருக்கும் நிலையில், மன்னாரில் இருந்து பல தமிழர்கள் படகின் மூலம் தமிழ்நாட்டிற்கு வர ஆரம்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பகுதியில் என்ன நடக்கிறது? இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, நாட்டின் பல தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே விளிம்பு நிலையில் இருப்பவர்கள் இந்தச் சூழ…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
உள்நாட்டு போரின் இறுதியில் இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட ரகசிய ஆவணங்களில் பிரிட்டன் மாற்றங்களை செய்தது – நேஸ்பி பிரபு இலங்கையின் உள்நாட்டுபோரின்போது என்ன நடைபெற்றது என்பது குறித்த தெளிவாக அறிந்துகொள்வதற்கு இலங்கையின் உள்நாட்டு போரின்போது இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகத்திலிருந்து பிரிட்டனிற்கு அனுப்பப்பட்ட இரகசிய பரிhற்றங்களில் உள்ள திருத்தங்களை மாற்றவேண்டும் என மைக்கல் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ளார். 2007 முதல் 2009 வரையான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரிட்டனிற்கு அனுப்பிய இரகசிய ஆவணங்கள் குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் அரசாங்கம் இரக…
-
- 0 replies
- 379 views
-
-
பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் டொலர்கள் பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் டொலர்கள் செலாவணி பரிமாற்றத்தை இலங்கை கோரியுள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஏ.கே. அப்துல் மொமன் இதனை உறுதிப்படுத்தினார். பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோமன் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பங்களாதேஷிடம் இருந்து இலங்கை 250 மில்லியன் அ. டொலரினை செலாவணி பரிமாற்ற அடிப்படையில் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் டொலர்கள் (adaderana.lk)
-
- 3 replies
- 358 views
- 1 follower
-
-
அதிகரிக்கும் நெருக்கடிகள் – நாட்டை முழுமையாக, முடக்கத் தயாராகின்றது அரசாங்கம்? சில நாட்களேனும் நாட்டை முழுமையாக முடக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி கொழும்பினை தலைமையகமாக கொண்ட தமிழ் ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன், மின் வெட்டினை வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட…
-
- 0 replies
- 336 views
-
-
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வு கிடைக்கும் வரை புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலிட வரமாட்டார்கள்- சுமந்திரன் March 30, 2022 இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள். புலம்பெயர் அமைப்புகளையும், தனியார்களையும் தடை செய்துவிட்டு அவர்களை வருமாறு அரசாங்கம் அழைப்பதில் அர்த்தமில்லை. ஆகையால் அவர்கள் வருவார்கள் என்று திடீரென பகல் கன காண வேண்டிய அவசியம் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று மாலை மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இ…
-
- 12 replies
- 617 views
-
-
மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாதவர்களின்... வீடுகளுக்கான மின்சாரத்தை, துண்டிக்க நடவடிக்கை! பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, மின்கட்டணத்தை செலுத்தாத வீடுகளின் பட்டியலை சேகரித்து அந்த நபர்களின் மின்சார இணைப்புகளை துண்டிக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல வீடுகளில் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2022/1274004
-
- 4 replies
- 245 views
-
-
மின்வெட்டு நீடிப்பதால்... தொலைத் தொடர்பு கோபுரங்கள், செயற்படுவதில் சிக்கல்? மின்சாரம் துண்டிக்கப்படும் காலங்களில், தொலைத்தொடர்பு கோபுரங்களை இயங்க வைப்பதற்கு தேவையான டீசலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். குறித்த கோபுரங்களை செயற்படுத்துவதற்காக நேற்று(செவ்வாய்கிழமை) மூவாயிரம் லீட்டர் டீசல் மின்பிறப்பாக்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு நீடிப்பதால் தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயற்படுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு தேவையான எரிபொருளை அனைத்து சந்தர்ப்பங்களிலும் விநியோகிப்பதற்…
-
- 0 replies
- 149 views
-
-
கொழும்பு தேசிய வைத்தியசாலையின்... அனைத்து ஆய்வக சேவைகளையும், மட்டுப்படுத்த ஆலோசனை! கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனைத்து ஆய்வக சேவைகளையும் மட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மருந்து தட்டுப்பாடு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியால், சம்பந்தப்பட்ட பிரதானிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1273965
-
- 0 replies
- 131 views
-
-
மருந்து தட்டுப்பாடு காரணமாக... சத்திரசிகிச்சைகளை மட்டுப்படுத்தியது, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை! மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மயக்க மருந்துக்குப் பிறகு மீண்டும் சுயநினைவு பெற பயன்படுத்தப்படும் நியோஸ்டிக்மைன் என்ற மருந்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சத்திரசிகிச்சைகள் மாத்திரமே இடம்பெற்று வருகின்றன. மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான கடனுதவி கடிதங்களை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படாமையே மருந்து தட்டுப்பாடு பிரச்சினைக்கு காரணம் என அரச மருந்தாளர் சங்கம் சுட்டிக்…
-
- 0 replies
- 152 views
-
-
சில வைத்தியசாலைகளில்.... இதயம், சிறுநீரகம், புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு? நாடளாவிய ரீதியிலுள்ள பல வைத்தியசாலைகளில் இதயம், சிறுநீரகம் மற்றும் புற்று நோயாளர்களுக்காகப் பயன்படுத்தப்படும் அதிகளவான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அதிகளவான ஏனைய மருந்துகள் தீர்ந்துவிடும் எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சத்திரசிகிச்சையை ஒத்திவைக்க எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார். மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தட்ட…
-
- 0 replies
- 150 views
-
-
மின்சாரம், எரிபொருள், எரிவாயுவுக்கு... மேலதிகமாக நீருக்கும் தட்டுப்பாடு? மின்சாரம், எரிபொருள், எரிவாயுவுக்கு மேலதிகமாக நீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியாத் பந்துவிக்ரம இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் தற்போது மணல் மூட்டைகளை இட்டு நிரப்பி நீரை சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வறட்சியான காலநிலை காரணமாக நீரை விநியோகிப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வருடாந்தம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள…
-
- 0 replies
- 142 views
-
-
நாடாளுமன்றத்தின் தேவைக்கு அமைய, நாடாளுமன்றத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்... கலைக்க முடியும்? நாடாளுமன்றத்தின் தேவைக்கு அமைய, நாடாளுமன்றத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலைக்க முடியும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் அவசியம் என சபாநாயகருக்கு கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமானால் மாத்திரமே இரண்டரை வருடங்கள் தேவைப்படும். எனினும், நாடாளுமன்றத்தின் தேவைக்கு அமைய, நாடாளுமன்றத்த…
-
- 0 replies
- 106 views
-
-
நெருக்கடியான சூழ்நிலையில்... அரசிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை, என்கிறார் சமல் ராஜபக்ஷ! தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தன்னால் இன்னும் கிராமத்துக்குச் செல்ல முடிகின்ற போதிலும் மக்கள் வரிசையில் நிற்பதைக் கண்டு வருத்தமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை எனவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே மிகவும் அவசியமானது எனவும் கூறியுள்ளார். அரசாங்கத்திடம் நிதியைக் கடுமையாகக் கையளிப்பதை …
-
- 0 replies
- 120 views
-
-
மீண்டுமொரு தேசிய அரசு எதற்கு? கேள்வி எழுப்பினார் ஜனாதிபதி! மீண்டுமொரு தேசிய அரசு எதற்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த நல்லாட்சி அரசாங்கம் காரணமாகவே நாடு இந்தளவு நெருக்கடியை சந்தித்துள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மீண்டுமொரு தேசிய அரசு எதற்கு என ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மைப் பலத்துடன் உள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினை கவிழ்க்கச் சதி செய்வோர் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அவர்களின…
-
- 0 replies
- 104 views
-
-
மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது... எரிவாயுவின் விலை – உறுதிப்படுத்தினார் இராஜாங்க அமைச்சர்! எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் 4ஆம், 5ஆம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டு மக்களின் அசௌகரியங்கள் குறையும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1273918
-
- 0 replies
- 323 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக... ஒரே நாளில், 150 போராட்டங்கள்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக ஒரே நாளில் – ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 07ஆம் திகதி தேர்தல் தொகுதிகள்வாரியாக குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்தபோராட்டங்களில் பங்கேற்று, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர். https://athavannews.com/2022/1273915
-
- 0 replies
- 164 views
-
-
டீசல், கையிருப்பில் இல்லை... எனவே, வரிசையில் நிற்க வேண்டாம் என அறிவிப்பு! டீசலினை பெற்றுக்கொள்வதற்காக இன்றும்(புதன்கிழமை) நாளையும் வரிசைகளில் நிற்க வேண்டாமென பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். 37,500 மெட்ரிக் தொன் டீசலை கொண்டுவந்த கப்பலிலிருந்து திட்டமிட்டபடி டீசலை இறக்க முடியாமல்போன காரணத்தினால் டீசலை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு தடங்கலின்றி தொடர்ச்சியாக டீசல் விநியோகிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், பெட்ரோல் விநியோகம் வ…
-
- 0 replies
- 161 views
-