ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
இலங்கையில் வாழ்ந்தால்... பட்டினியால், இறந்து விடுவோம் – தமிழகம் சென்றுள்ள மக்கள் தெரிவிப்பு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் காக்கைதீவு பிரதேசங்களை சேர்ந்த 5 குடும்பங்களை சேர்ந்த 09 மாத குழந்தை உள்ளிட்ட 15 பேர் இன்றைய தினம் (திங்கட்கிழமை ) தனுஷ்கோடியை அண்மித்த கோதண்டராமர் கோவில் கடற்கரை பகுதியை சென்றடைந்துள்ளனர். அது தொடர்பில் தகவல் அறிந்த ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு பொலிஸார் இவர்களை மீட்டு மண்டபம் கடலோர பாதுகாப்பு பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் போது , தாம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) படகில் ஏறியதாகவும் , இன்று அதிகாலை 3 மணியளவில் அப்பகுதியில் இறக்கி விடப்பட்டதாகவும் தெரிவித்…
-
- 0 replies
- 96 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக.... வாக்களிக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு! தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். விரிவான கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த முடிவு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். https://athavannews.com/2022/1278351
-
- 0 replies
- 96 views
-
-
அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை – 113க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை, பெற்றுள்ளதாக எதிர்க் கட்சி அறிவிப்பு! அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமது கட்சி 113க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, அரசாங்கத்திலிருந்து வெளியேறியவர்கள் தமக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதால், பிரேரணைக்கு தேவையான எண்ணிக்கை தங்களிடம் உள்ளதாக தெரிவித்தார். இடைக்கால அரசாங்கத்தில் இருந்து விலகி இருப்பதே தங்களின் முந்தைய நிலைப்பாடாக இருந்தது என்றும் ஆனால் தாங்கள் இடைக்கால அரசாங்கத்தில் பதவிகளை ஏற்காவிட்டால், நம்பிக்கையில்லா பிரேரண…
-
- 0 replies
- 97 views
-
-
அட்டைகள்... எவ்வாறு மனிதனிலிருந்து, இரத்தத்தினை உறுஞ்சுமோ... அதுபோன்று நாட்டு மக்களின் இரத்தத்தினை அரசாங்கம் உறிஞ்சுகின்றது – சாணக்கியன்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டில் அட்டைகள் எவ்வாறு மனிதனிலிருந்து இரத்தத்தினை உறுஞ்சுமோ அதுபோன்று நாட்டு மக்களை உறிஞ்சும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு “முகத்தூர் முழக்கம்”மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் நடாத்தியது. 30 இளைஞர் கழகங்கள் பங்குகொண்ட இந்த சுற்றுப்போட்டியி…
-
- 0 replies
- 119 views
-
-
இடைக்கால அரசாங்கத்தை... அமைக்க தயார் – ஜனாதிபதி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலம் மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார். இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278341
-
- 0 replies
- 165 views
-
-
அமெரிக்க தூதுவர்... நல்லூர் கந்தசுவாமி, ஆலயத்தில் வழிபாடு! யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அமெரிக்க தூதர் ஜூலி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த வாழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அமெரிக்க தூதுவர் நேற்று முதல் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். https://athavannews.com/2022/1278419
-
- 0 replies
- 214 views
-
-
இலங்கை நெருக்கடி: போராட்டக் களவத்தில் மருத்துவ உதவி செய்யும் தமிழ் இளைஞர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டப்பகுதியில் மருத்துவ சேவை செய்து, கவனம் ஈர்க்கிறார் ஒரு தமிழ் இளைஞர். இலங்கையில் பொருட்களுக்கான தட்டுப்பாடு, விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் சிறிது சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் தற்போது தொடர் போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது. தலைநகர் கொழும்பு காலி முகத்திடல் பகு…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
இடைக்கால அரசாங்கத்தை அமைக்க எழுத்து மூலம் ஜனாதிபதி உறுதி - அஸ்கிரிய பீடம் (எம்.மனோசித்ரா) நாட்டில் நிலவும் நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். மகா சங்கத்தினரிடம் எழுத்து மூலம் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக மெதகம ஸ்ரீ தம்மானந்த தேரர் தெரிவித்ததார். நாட்டில் நிலவுகின்ற நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் துரிதமாக அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நான்கு மகா சங்கத்தினரால் அண்மையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அத்தோடு தற்போது செயற்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்களும் முன்வைக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பி…
-
- 0 replies
- 166 views
-
-
யாழ்.வந்த அமெரிக்க தூதுவர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பு : April 25, 2022 யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் சிவில் சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். நேற்று மாலை பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு சென்ற அமெரிக்க தூதர், கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். சந்திப்பு தொடர்பாக கருத்து தெர…
-
- 5 replies
- 322 views
- 1 follower
-
-
அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில்... இன்று கூடுகிறது, புதிய அமைச்சரவை! நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் புதிய அமைச்சரவை இன்று முதல் முறையாக கூடவுள்ளது. அதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. கடுமையான அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்திருந்த நிலையில், கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையிலேயே புதிய அமைச்சர்களுடனான அமைச்சரவை முதல் முறையாக இன்று கூடவுள்ளது. இதேநேரம், அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 19ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்ச…
-
- 0 replies
- 291 views
-
-
தடைகளை மீறி... காலிமுகத்திடலை வந்தடைந்த, பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி – 17ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்! கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 17ஆவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு பல தரப்பினராலும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதேனும் சட்ட ரீதியிலான சிக்கல்கள் ஏற்பட்டாலோ அல்லது ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கப்பட்டாலோ…
-
- 0 replies
- 183 views
-
-
கேலிக்கூத்தான... வீதித் தடைகள் மூலம், போராட்டங்களை... தடுக்க முடியாது: நிரந்தர வீதித் தடைகளை அகற்றவும் – சஜித் நிரந்தர வீதித் தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கம், தற்போது அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக மக்களுக்கு எதிராக அழுத்தங்களையும் ஒடுக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், கொழும்பு கோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வீதிகளை மறித்து நிரந்தர வீதித் தடைகளை இட்டுள்ளமை அதன் ஒரு செயற்பாடு என சுட்டிக்காட்டியுள்ளார். லோட்டஸ் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளமையினால் வாகனங்கள் கொ…
-
- 0 replies
- 143 views
-
-
எதிர்வரும் மூன்று நாட்களுக்கு... மின்வெட்டு அமுல்படுத்தப்படும், நேரம் குறித்த அறிவிப்பு நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, குறித்த மூன்று நாட்களிலும் A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் ஒரு மணித்…
-
- 0 replies
- 388 views
-
-
ஆசிரியர்கள், அதிபர்கள் போராட்டம் : பரீட்சைகளை ஒத்திவைத்தது வடமாகாண கல்வித் திணைக்களம் சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த ஆசிரியர்கள், அதிபர்கள் தீர்மானித்துள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலமைக்கு தீர்வாக மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நாளை சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் 2021 ஆம் ஆண்டு தரம் 6,7 மற்றும் 8 ஆகிய மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளை நடைபெறவிரு…
-
- 0 replies
- 436 views
-
-
மஹிந்தவின் வீட்டின் முன் பதற்றம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ள பேரணி விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு முன்பாக சென்றுவிட்டது. அங்கு போடப்பட்டிருக்கும் தடுப்புப் பேரணியை, பேரணிகாரர்கள் உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றமையால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரின் இல்லத்துக்குள் போராட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த முதலாவது தடையை போராட்டக்காரர்கள் அகற்றியுள்ளனர். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மஹிந்தவின்-வீட்டின்-முன்-பதற்…
-
- 9 replies
- 816 views
- 1 follower
-
-
ரம்புக்கனையில் சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்சானின் மனைவி பிரியங்கனி தெரிவித்திருப்பது என்ன எனக்கு பொலிஸார் படையினர் மீது எந்த வெறுப்பும் இல்லைஆனால் அவர்கள் எனது கணவரை கொலை செய்த அரசாங்கத்தின் கருவிகள். அவர்கள் அவரை சுட்டுக்கொன்று ஐந்து நாட்களாகிவிட்டன.இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. நான் நீதி நிலை நாட்டப்படவேண்டும் என எதிர்பார்க்கின்றேன். தனது குழந்தைகள் குறித்து சமிந்த பெரும் கனவுடன் இருந்தார் நான் எப்படி தனியாக அதனை நிறைவேற்றப் போகின்றேன் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் பெறுவதற்காகவே சென்றார்-அவர் ஆர்ப்பாட்டங்களில் க…
-
- 0 replies
- 338 views
-
-
கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து தடை - பொலிஸாரின் அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸாரினால் வீதித்தடைகளை பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஏனைய இடங்களில் பணிபுரிபவர்கள் வாகனங்களை சோதனையிட்ட பின்னரே வீதிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், லேக் ஹவுஸ் முன்றலில் உள்ள நெலும் மாவத்தை பகுதி போக்குவரத்துக்காக முற்றாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்போது கலதாரி ஹோட்டலுக்கு அருகாமையில் பொலிஸார் வீதித் தடைகளை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப…
-
- 0 replies
- 226 views
-
-
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும், உத்திகளை... மறுபரிசீலனை செய்யுங்கள்: ரணில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரைவான நிதி முயற்சிக்கு இலங்கை தகுதிபெறாததாலும், இந்திய கடன் வரி அடுத்த மாதம் முடிவடைவதாலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தனது உத்திகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் சில இலங்கை வங்கியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், பொருளாதாரம் மேலும் சீரழிந்து போவது குறித்து எச்சரித்தார். மேலும் தெரிவித்த அவர், “உர விநியோகமும் ஆபத்தை எதிர்கொள்கிறது. சுமார் 30 சதவீத உரம் ரஷ்யாவிலிருந்து வருகிறது. அடுத்த அறுவடைக் காலத்திலும் இலங்கை ஒரு பிரச்சினையை சந்தி…
-
- 0 replies
- 170 views
-
-
கோட்டை... புகையிரத நிலையத்திற்கு, வந்த மாணவர்கள்: நான்கு பக்கமும்... தடைகள் அமைத்த, பொலிஸார் ! காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை நோக்கி செல்லும் பல வீதிகள் பொலிஸாரால் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278254
-
- 1 reply
- 469 views
-
-
காலிமுகத்திடலை... சுற்றியுள்ள பகுதியில், ஆணிகளுடனான வீதித்தடை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி இன்று ( (ஞாயிற்றுக்கிழமை ) ஜனாதிபதி செயலகத்தை சென்றடையவுள்ளது என ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாட்டார்கள் தெரிவித்துள்ளனர் . இதேவேளை காலிமுகத்திடலை சுற்றியுள்ள பகுதியில் ஆணிகளுடனான வீதித்தடை அமைக்கப்பட்டுள்ளது . மேலும் ஆணிகளுடனான வீதித்தடைகளால் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1278257
-
- 0 replies
- 144 views
-
-
பொலிஸாருக்கும்... பொது மக்களுக்குமிடையில், முரண்பாடு. கொழும்பு காலி முகத்திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் பல்வேறு பேரணிகள் கொழும்பு காலி முகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கொழும்பு லோட்டஸ் வீதிக்கருகில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1278248
-
- 0 replies
- 128 views
-
-
“ஒன்றிணைந்த இளமை அட்டனில் தொடக்கம்” என்ற, அமைப்பால்... அட்டனில் போராட்டம் அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ( (ஞாயிற்றுக்கிழமை ) இளைஞர், யுவதிகள் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “ஒன்றிணைந்த இளமை அட்டனில் தொடக்கம்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் அட்டன் பகுதியில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் உள்ள பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டகாரர்கள் அட்டன் எம்.ஆர். நகரத்தில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்து, மணிக்கூட்டு கோபுரத்தின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அடுத்…
-
- 0 replies
- 175 views
-
-
பொலிஸாருக்கு.... பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், விடுத்துள்ள பணிப்புரை! பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமையாக முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் அம்பியூலன்ஸ், பாடசாலை வாகனங்கள், அலுவலக போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்க கூடாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுத்தாமல் முன்னெடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்…
-
- 0 replies
- 159 views
-
-
எரிபொருளுக்காக... இனிமேல் நீண்ட வரிசையில், காத்திருக்க தேவையில்லை – எரிசக்தி அமைச்சு எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை படிப்படியாக முடிவுக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்களில் எரிபொருள் ஏற்றிய அதிகமான கப்பல்கள் வரவுள்ளதால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக குறையும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டும் அடுத்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1278227
-
- 0 replies
- 169 views
-
-
அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று யாழ் விஜயம் (லியோ நிரோஷ தர்ஷன்) ஆமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். இரு நாட்கள் வரையறுக்கப்பட்டுள்ள இந்த விஜயத்தின் போது அங்கு பல சந்திப்புகளை முன்னெடுக்க உள்ளதுடன் நல்லூர் கந்த சுவாமி கோவிலுக்கும் விஜயம் செய்து சிறப்பு வழிப்பாடுகளில் ஈடுப்பட உள்ளார். இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் பின்னர் இங்கு இராஜதந்திர பணிகளை பொறுப்பேற்ற தூதுவர் ஜுலி சங் கொழும்பில் பல்வேறு சந்திப்புகளில் கலந்துக் கொண்டிருந்தார். இலங்கையில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் அவரது முதலாவது வெளி மாகாணத்திற்கான விஜயமாக வட மாகாணம் அமைந்துள்ளது. வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகரா…
-
- 4 replies
- 517 views
-