ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை – தியாகி ருவன்பத்திரன பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய ஆய்வாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான தியாகி ருவன்பத்திரன தெரிவித்தார். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் ‘காணக்கிடைக்கவில்லை’ எனும் சான்றிதழைப் பெற்றுக்கொண்டவர்களின் குடும்ப மீள்வாழ்விற்காக ஒருமுறை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயைச் செலுத்துவதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியது. அரசாங்கத்தின் குறித்த முடிவு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உள்ளக மற்றும் சர்வதேச ரீதியில் அரசாங்கம் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக…
-
- 0 replies
- 168 views
-
-
தனியார் பஸ் சேவையை தொடர்ந்து மேற்கொள்வதா என்பதை 3 தினங்களில் அறிவிப்போம் - அகில இலங்கை பஸ் உரிமையாளர்களின் சங்கம் (எம்.ஆர்.எம்.வசீம்) தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல்ல. அதனால் மூன்று தினங்களுக்கு பஸ் சேவையில் ஈடுபட்டு, அதனால் ஏற்படும் நட்டத்தை சுமக்க முடியாதுபோனால் எமது தீர்மானத்தை எதிர்வரும் 3 தினங்களில் அரசாங்கத்துக்கு அறிவிப்போம் என அகில இலங்கை பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் செயலாளர் அன்ஜன பிரயன்ஜித் தெரிவித்தார். தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் பஸ் கட்டணம் தொடர்பாக தனது சங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை …
-
- 0 replies
- 120 views
-
-
இலங்கை விரோத போக்கு ஜெனிவாவில் தொடர்கிறது - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு (எம்.மனோசித்ரா) நாட்டில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை ஸ்திரப்படுத்துவதை முன்னெடுப்பதை இலக்காகக் கொண்டு, தொடர்ச்சியான தேசிய செயற்பாடுகளை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் , ஜெனிவாவில் இலங்கைக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இது குறித்து இலங்கையின் நிலைப்பாடு மற்றும் கொவிட்-19 தொடர்பான சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை இந்த விடயத்தில் அடைந்து கொண்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகியன குறித்து ஐ.நா. உறுப்பு நாடுகள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட செயற்பாட்டாளர்கள் உட்பட ஜெனிவாவில் உள்ள பங்குதாரர்களுக்கு விளக்கமளிப்பது ம…
-
- 0 replies
- 447 views
-
-
நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து 15ஆம் திகதி நள்ளிரவு முதல் விலகுவதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் எரிபொருள் போக்குவரத்தில் 80% தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், போக்குவரத்துக்கான கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், “டீசல் விலை அதிகரிப்பை மாத்திரம் குறித்த கட்டண அதிகரிப்பின் போது கருத்திற்கொள்வத…
-
- 0 replies
- 118 views
-
-
சமையல் எரிவாயு விநியோகத்தை இலங்கையின் பிரதான எரிவாயு விநியோக நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன சமையல் எரிவாயு விநியோகத்தை இலங்கையின் பிரதான எரிவாயு விநியோக நிறுவனங்களான லாப் மற்றும் லிட்ரோ ஆகியன நிறுத்தியுள்ளன.தமக்கான இருப்புக்கள் கிடைகாத்தமை காரணமாக விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக குறித்த இரு நிறுவங்களும் அறிவித்துள்ளன.தற்போது இலங்கை சந்தையில் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.இதேவேளை நாடளாவிய ரீதியில் குறித்த நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் எரிவாயு தட்டுப்பாடு நிலைமையினை தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இதுவரை சமையல…
-
- 0 replies
- 134 views
-
-
எதிர்வரும் புதன்கிழமை, நாட்டு மக்களுக்கு... உரையாற்றுகின்றார், ஜனாதிபதி கோட்டா! எதிர்வரும் புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றுவார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் தட்டுப்பாடு என மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கான தீர்வு குறித்து நாட்டு மக்களிடத்தில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1271876
-
- 2 replies
- 299 views
-
-
நாட்டில் தற்போது மக்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களை பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரன் நாட்டை கைப்பற்றி, அவர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என எண்ண தோன்றுவதாக சிங்கள நடிகர் கயான் விக்ரமதிலக்க தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். நான் மிகவும் யோசித்து பேசுகிறேன். இப்படி பேச வேண்டும் என்று நினைக்கவில்லை. நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. அரசியல் என்பது முற்றிலும் வெறுத்து போயுள்ளது. தற்போதைய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வர கயான் விக்ரமதிலக்க என்ற நானும் பெரும் பங்களிப்பை செய்தேன். சரள மொழியில் கூறுதென்றால் கடைக்கு போனேன்.…
-
- 0 replies
- 130 views
-
-
புலம்பெயர் இலங்கையர்களுக்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை - வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (எம்.எம்.சில்வெஸ்டர்) வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை. இலங்கையில் முதலீடு செய்வதற்கு எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அரச நிறுவனங்களில் சேவைகளைப் பெறுவதற்காக வருகின்ற தமிழ் பேசும் சமூகத்தினர் இனிவரும் காலங்களில் எந்தவித இடையூறுகளுமின்றி தமிழ் மொழி மூலமான சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என அவர் மேலும் கூறினார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக்கொள்வதற்காக பொலிஸ் பயி…
-
- 2 replies
- 339 views
-
-
இலங்கையில் வங்கிகளில் இருக்கும் பணத்தின் பெறுமதியானது மிக மோசமாக வீழ்ச்சியடைந்து விட்டது என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இதன்போது, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கணிசமானோரின் பணம் இலங்கையில் வைப்பிலிடப்பட்டிருக்கிறது அல்லது இலங்கையில் அந்த பணம் அதிகரிக்கிறது என்கிற போது, அதிகளவில் இவ்வாறான பணத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடிய இலங்கையர்களின் நிலைமை தொடர்பில் புலம்பெயர்ந்திருக்க கூடிய ஒரு தமிழராக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ஆனால் போடப்பட்ட முதலின் பெறுமத…
-
- 0 replies
- 308 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு , இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் அந்நாடு சில திருத்தங்களை செய்துள்ளது. அதற்கமைய இறக்குமதிக்கு செலுத்துவதற்கு கடும் டொலர் தட்டுப்பாடு காரணமாக, மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையில் எச்சரிக்கை அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள் , சமையல் எரிவாயு மற்றும் மருந்தக வளாகங்களில் பொருட் கொள்வனவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அது மாத்திரமின்றி உள்ளுராட்சி அதிகாரிகளின் தீர்மானங்களுக்கமைய அடிக்கடி மின் துண்டிப்பும் ஏ…
-
- 1 reply
- 255 views
-
-
நூருள் ஹுதா உமர் நாடு பாரிய பொருளாதார பிரச்சினையில் தவிக்கும் போது எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது போல் சாணக்கியன் எம். பி யின் அணியினர் மருதானை ஜும்ஆ பள்ளி முன்பு பயங்கரவாத சட்டத்தை நீக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வந்தது யார் என்பது இவர்களுக்கு தெரியுமா? 1979ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் அன்றைய ஜனாதிபதி ஜேஆர் ஆகும். இச்சட்டம் நாட்டுக்கு மோசமானது என்றால் கடந்த ர…
-
- 3 replies
- 366 views
-
-
R.Maheshwary / 2022 மார்ச் 15 , பி.ப. 05:14 - 0 - 23 ரஷ்யா மற்றும் உக்ரேன் கிய இருநாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள யுத்தம் காரணமாக, குறித்த இரண்டு நாடுகளுக்குமான தேயிலை ஏற்றுமதியை முற்றாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த இரண்டு நாடுகளுக்கும் தேயிலை ஏற்றுமதி செய்யும் போது, பெற்றுக்கொள்ளும் பணம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள், தேயிலை ஏற்றுமதியை நிராகரிப்பதாகவும் இதனால் முற்றாக தேயிலை ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதாக இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ஜயந்த கருணாரத்ன த…
-
- 0 replies
- 509 views
-
-
புதிய ஆணையாளருக்காகக் காத்திருக்கும் கல்முனை மக்கள் -கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கல்முனை மாநகரசபையின் முன்னாள் ஆணையாளர் ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக இடமாற்றம் வழங்கப்பட்டு அவ்விடத்தை நிரப்புவதற்காக திருவாளர் என்.சிவலிங்கம் அவர்கள் கடந்த 02ம் திகதி நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தனது கடமைகளை இதுவரையில் பெறுப்பேற்காமல் இருப்பது கல்முனை மக்களின் அபிவிருத்திகளை மேலும் பின்நகர்த்தும் விடயமாகவே இருக்கின்றது என கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார். அவர் உடன் வந்து தனது பதவியைப் பாரமெடுத்து கல்முனை மக்களின் ஏக்கத்தினைத் தீர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்த…
-
- 0 replies
- 245 views
-
-
இலங்கை அரசாங்கம் தனது நியாயபூர்வ தன்மையை இழந்துவிட்டது – ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசாங்கத்தை பதவி விலகச்செய்யப்போகின்றோம்- வெளிநாட்டு ஊடகத்திற்கு ஹர்சா டி சில்வா பேட்டி நாட்டின் கடன்நெருக்கடி மற்றும்அதனுடன் தொடர்புபட்ட ஏனைய பிரச்சினைகளை கையாண்ட விதம் காரணமாக அரசாங்கம்தனது நியாயபூர்வ தன்மையைஇழந்துவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா சிஎன்பிசிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதற்காக தனது கட்சி இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறப்போகின்றன நாங்கள் அரசாங்கத்தை பதவி விலகச்செய்யப்போகின்றோம் – இந்த அரசாங்கம் தனது நியாயப…
-
- 0 replies
- 317 views
-
-
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணமில்லை – ரணில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை நிராகரித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணமில்லை என்றும் தெரிவித்தார். தற்போதைய பொருளாதாரச் சூழலைத் தீர்ப்பதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஒரு பில்லியன் கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிலையில் தற்போது 600 மில்லியன் மட்டுமே கையிருப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் மொத்தக் கடன் 19 ஆயிரம் பில்லியன் என்றும் இந்தக் கடன்களைத் தீர்க்க வெளிநாட்டு நாணயத்தை நாம் கடனாகப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என கூறினா…
-
- 2 replies
- 250 views
-
-
இலங்கையில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை – புதிய விலை விபரம் இதோ! வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுணின் விலை 155,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 143,500 ரூபாயாக உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1271928
-
- 1 reply
- 186 views
-
-
நேரடி முதலீட்டிற்காக சவுதி அரசுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு பல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊதிடம் (Faisal bin Farhan Al Saud) தெரிவித்தார். சவுதி அரேபியாவின் வெளிநாட்டு அமைச்சருடன் நேற்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். விவசாயம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி, தொழிநுட்ப மேம்பாடு மற்றும் துறைமுக நகர் சார்ந்த வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். கொவிட…
-
- 0 replies
- 195 views
-
-
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம் அடுத்தவாரம் பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பிக்க அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி (எம்.ஆர்.எம்.வசீம்) பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் கூடிய வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் முதலாவது வாசிப்புக்காக கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் ச…
-
- 0 replies
- 142 views
-
-
உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் வாசஸ்தலத்தை அமைச்சர் வாசு மீள ஒப்படைப்பு (எம்.ஆர்.எம்.வசீம்) நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது கடமை நேர உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றை நீர்வழங்கல் அமைச்சின் செயலாளரிடம் பிரயந்த பீ. விக்ரமவிடம் நேற்று மீள ஒப்படைத்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் வினவியபோது, நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் அரசாங்கதுடன் இருக்கும் கட்சிகள் இணைந்து முழு நாட்டையும் ஒரே வழியின் கீழ் கொண்டுவரும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து அரசாங்கத்துக்கு ஒப்படைத்திருக்கின்றோம். என்றாலும் அரசாங்கம் அதுதொடர்பில் கண்டுகொள்ளாமல் செயற்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்கள…
-
- 0 replies
- 190 views
-
-
ஜனாதிபதியுடனான... கூட்டமைப்பின், கலந்துரையாடல் இரத்து ? உறுதிப் படுத்துவதில் சிக்கல் ! ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்போகும் விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தற்போது கலந்துரையாடி வருகின்றனர். குறித்த கலந்துரையாடல் கொழும்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றுவருகின்றது. இருப்பினும் ஒருசில காரணங்களினால் ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு ஆதவன் செய்திப்பிரிவு தொடர்புகளை மேற்கொண்டது. இருப்பினும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் பங்காளி கட்சியினர் தொலைபேச…
-
- 2 replies
- 223 views
-
-
அதானி குழுமத்தின்... வசமாகியது, மன்னார் மற்றும் பூநகரி : வெள்ளியன்று கைச்சாத்தானது முக்கிய ஒப்பந்தம் இரு பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்காக வடக்கில் மன்னார் மற்றும் பூநகரியை அரசாங்கம் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. சுமார் 500 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ள குறித்த இரு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டதாக அறிய முடிகின்றது. இந்தியாவின் தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்துடன் திருகோணமலை, சம்பூரில் சூரிய மின்சக்தி பூங்காவை அமைப்பதற்கான புரிந்துரணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நிதி அமைச்சில் அதானிய…
-
- 1 reply
- 329 views
-
-
பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரப்போவதில்லை – எதிர்க்கட்சி ராஜபக்ஷ மட்டுமல்ல முழு அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக தாம் நம்புவதால், நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பசில் ராஜபக்சவை தனிமைப்படுத்தி அரசாங்கத்தின் சொந்த பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் விரும்பவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று தெரிவித்திருந்தனர். பொருளாதார வீழ்ச்சிக்கு நிதி அமைச்சரின் நடத்தையே காரணம் என்றும் அவரை மட்டுமன்றி முழு அரசாங்கத்தையும் நாட்டுக்கு அனுப்புவதே தமது நோக்கம் என்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரி…
-
- 2 replies
- 232 views
-
-
ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்த.... #GoHomeGota ஹாஷ்டாக், அதனை தகர்க்க... #WeAreWithGota ஐ பகிரும் ஆதரவாளர்கள் ! #GoHomeGota2022 மற்றும் #GoHomeGota என்ற ஹாஷ்டாக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கையில் டுவிட்டரில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்ததுள்ளது. இதனை அடுத்து #WeAreWithGota என்ற எதிர் டுவிட்டர் ஹாஷ்டாக்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்தும் சிலர் பகிர்ந்துவருகின்றனர். நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பல அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் முக்கிய ஆதரவாளர்கள் இதனை பயன்படுத்தி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எவ்வாறாயினும் #GoHomeGota2022 மற்றும் #GoHomeGota என்ற ஹாஷ்டாக்கள் தொடர்ந்தும் இலங்கையில…
-
- 0 replies
- 307 views
-
-
இன்று, கொழும்பில்... மாபெரும் போராட்டத்தை, நடத்தவுள்ளது ஐக்கிய மக்கள் சக்தி ! ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளது. கொழும்பின் இரண்டு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் பேரணி புறப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதன்படி இந்தப் பேரணி இன்று பிற்பகல் 1:00 மணிக்கு மாளிகாவத்தை பொலிஸ் நிலையம் மற்றும் கொழும்பு பொது நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகவுள்ளது. இந்த பேரணியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இன்று கொழும்பு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2022/1271918
-
- 0 replies
- 132 views
-
-
புகையிரத கட்டணமும் அதிகரிப்பு – போக்குவரத்து அமைச்சர் எதிர்வரும் காலங்களில் புகையிரத கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். பேருந்து கட்டண அதிகரிப்புக்கு நிகராக புகையிரத கட்டணத்தை அதிகரிக்குமாறு புகையிரத திணைக்களம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது. இதேவேளை இன்று முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 17 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1271944
-
- 0 replies
- 459 views
-