Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, காணிக்கான ஆவணங்களை காட்டி முக்கியஸ்தர்கள் பேசிய போது பௌத்த பிக்குகள் உள்ளடங்கலான குழுவொன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள தனியார் ஒருவரின் காணியொன்றினுள் அடாத்தாக விகாரையொன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் தொடங்கியமைக்கு - அப்பகுதி முஸ்லிம் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றிலேயே இவ்வாறு பௌத்த விகாரை கட்டுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. தீகவாபி ரஜமகா விகாரையின் …

    • 4 replies
    • 441 views
  2. சமையல்... எரிவாயு, தட்டுப்பாடு... மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும்! நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை தரையிறக்குவதற்கான நடவடிக்கை இன்றும்(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக நாட்டை வந்தடைந்த 2 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பலில் இருந்து, சமையல் எரிவாயுவினை தரையிறக்கும் நடவடிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாளாந்தம் 900 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவினை நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சமையல் எரி…

  3. Published by T Yuwaraj on 2022-03-10 16:30:55 யாழ். திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 09 பெண்களின் விளக்கமறியலை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் யாழ்.நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள விநாயகர் ஆலயம் ஒன்றில் கடந்த 1ஆம் திகதி காலை இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மத்தியில் ஊடுருவிய திருட்டு கும்பல் ஒன்று நான்கு பெண் பக்தர்களின் சங்கிலிகளை அறுத்து களவாடியுள்ளது. சங்கிலிகளை பறிகொடுத்த பெண் பக்தர்கள் அது தொடர்பில் ஆலய இளைஞர்களிடம் தெரிவித்ததை அடுத்து துரிதமாக செயற்பட்ட இளைஞர்கள் ஆலயத்திற்கு வந்திருந்த சந்தேகத்திற்கு இ…

  4. Published by T Yuwaraj on 2022-03-10 16:47:32 தற்பொழுது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் டோக்கன் முறையில் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு டோக்கன் பெற்றவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் வழங்கப்படுவதன் காரணமாக வாடகை வாகன சாரதிகள் நாளாந்தம் பல மணிநேரம் எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் நிற்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் தமது நாளாந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர். …

  5. அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு – பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல்! அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காகித பற்றாக்குறை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சக திணைக்களத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் காகிதங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்பட்டது. பின்னர் துறைமுகத்தில் சிக்கியிருந்த காகிதம் தாங்கிய 8 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தன. எவ்வா…

  6. இலங்கை மின்சார சபையின்... GT-7 இன், ஒற்றை மின் உற்பத்தி அலகு மூடப்பட்டது! களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்திலுள்ள இலங்கை மின்சார சபையின் GT-7 இன் ஒற்றை மின் உற்பத்தி அலகு மூடப்பட்டுள்ளது. டீசல் இல்லாத காரணத்தினால் இன்று(வியாழக்கிழமை) காலை திடீரென மூடப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார். GT-7 ஆலையின் செயல்பாடுகள் காலை 7:21 மணிக்கு திடீரென நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார். அனல்மின் நிலையம் நிறுத்தப்பட்டதால், தேசிய மின்வாரியத்திற்கு 115 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1271268

  7. இலங்கையில்... மீண்டும், பாரியளவில் அதிகரிக்கப்படுகின்றது பால் மாவின் விலை? இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான நிலையில் உள்ளூர் சந்தையில் பால் மாவின் விலையை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் …

  8. எரிபொருள், எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி வர்த்தகத்திலும் வீழ்ச்சி! நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி வர்த்தகம் 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்க தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன சாரதிகள் தோட்டங்களுக்கு சென்று காய்கறிகளை கொள்வனவு செய்யவோ அல்லது சந்தைக்கு கொண்டு வரவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், சந்தைக்கு காய்கறிகள் வாங்க வரும் தொழில் முனைவோர் எண்ணிக்கை குறைவடைந்து…

  9. டொலர் இல்லை : துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும்... 2,500 கொள்கலன்கள் ! டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2,500 கொள்கலன்கள், தொடர்ந்தும் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது. டொலர் இன்மையால் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சீனி, கோதுமை மா, கடலை, பருப்பு உள்ளிட்ட பல உணவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இவ்வாறு கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. கடந்த காலத்தில் இடைக்கிடையே டொலர் கிடைக்கப்பெற்ற போதிலும், தற்போது வங்கிகளிடமிருந்து டொலர் கிடைக்கப் பெறுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் டொலருக்கான ரூபா…

    • 1 reply
    • 249 views
  10. ரஷ்யா, வடகொரியா, சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதராக களமிறங்கின ! உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவும் பெலரஸும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு சாதகமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இலங்கை மனித உரிமைகள், நல்லிணக்க நடவடிக்கைகளில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நேற்று பேசிய ரஷ்யா, அதிகமாக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளது. இதேவேளை உறுப்பு நாடுகளை நோக்கி மேற்குலகின் அரசியல் உத்திகளை நடைமுறைப்படுத்த ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பொறிமுறையாக ஐ.நா. மாறுவதாக பெலரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனை …

    • 28 replies
    • 1.3k views
  11. விமல்... இன்று நாடாளுமன்றத்தில், விசேட அறிவிப்பு ஒன்றினை... வெளியிடவுள்ளதாக தகவல்! நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்றைய தினம்(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அவர், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைத்தொழில் மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவிகளில் இருந்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டிருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1271157

    • 5 replies
    • 402 views
  12. இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையமும் இராணுவமயம்! March 9, 2022 இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு புதிய தலைவராக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ.டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நிறுவனத்தின் தலைவரான நாலக்க பெரேரா, அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2022/173930

    • 1 reply
    • 305 views
  13. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு... 13 பில்லியனுக்கும், அதிகமான... தொகையை செலுத்தத் தவறியுள்ள முக்கிய 7 நிறுவனங்கள்! ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் எரிபொருளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளன. நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப்) அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களம், இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகியனவும் பணம் செலுத்த தவறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக மின்சார சபை 73 பில்லியன் ரூபாயினையும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 56 பில்லியன்…

  14. தமிழர்களுக்கு... அமெரிக்கா, முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் – அமெரிக்க தூதுவர் உறுதி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உறுதியளித்துள்ளார். அத்தோடு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பரில் கொண்டுவரும் விரிவான அறிக்கையை அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஆகியோருடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கலந்துரையாடியிருந்தார். …

  15. மாத இறுதி வரை... அனைத்து வீதி விளக்குகளையும், அணையுங்கள் – பசில் விடுத்த கோரிக்கை! இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். லும் உள்ளுராட்சி தலைவர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் மின்சாரத்தை சேமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார். அத்தோடு மின்சார பாவனையை குறைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து அறிவிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1270814

    • 10 replies
    • 625 views
  16. நாடாளுமன்றத்திலும்... மட்டுப் படுத்தப்பட்டது, மின்பாவனை! நாடாளுமன்றத்திலும் மின்சார பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வினை இன்று(புதன்கிழமை) ஆரம்பித்து வைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கு அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1271119

  17. தமிழகத்திலிருந்து... இலங்கைக்கு, அதி சொகுசு... உல்லாச கப்பல் சேவை தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது இதுவே இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கான முதலாவது உல்லாச கப்பல் சேவை என அச்சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார். அதன் முதலாவது பயணம் சென்னையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் குறித்த கப்பலில் தங்கும் அறை வசதி உள்ளடங்கலாக பயணிகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் பயணிக்க விரும்பும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகள…

  18. “உங்களை சுட வந்ததாக தெரிவித்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து விட்டீர்களா?” என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம், பொது மகன் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இலங்கையின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அண்மையில் முல்லைத்தீவில் பயங்கரவாதத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை இடம்பெற்ற போது நடு வீதியில் வைத்து அங்கு வந்த இளைஞரொருவர் இவ்வாறு சுமந்திரனிடம் கேள்வியெழுப்பி தடுமாற வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிடிக்கவில்லை என இதன்போது சுமந்திரன் தெரிவித்துள்ளமை க…

  19. (எம்.மனோசித்ரா) இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31 அங்கத்துவ நாடுகள் சாதகமாகவே நோக்கியுள்ளன. அதற்கமைய இலங்கை மனித உரிமைகளையும் , அடிப்படை உரிமைகளையும் மதிக்கும் நாடு என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் உணர்ந்து கொள்ளும் என்று நம்புவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் பொறுப்புகூறல் , நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல்ஸ் பச்லெட்டின் அறிக்கை மீதான விவாதத்தில் அமெரிக்கா…

    • 2 replies
    • 357 views
  20. மன்னாரை சேர்ந்த தேசிய உதைப்பந்தாட்ட வீரர் மாலைதீவில் உயிரிழப்பு. February 27, 2022 இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே மேற்படி உயிரிழந்துள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார். இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இ…

  21. “இந்தியாவை மீறி... ஏனைய நாடுகள், இலங்கைக்கு... அழுத்தங்களை பிரயோகிக்காது” தமிழர்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இந்தியாவை மீறி ஏனைய நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஐ.நா.வில் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியமை மன ஆறுதலை தருவதாக கூறினார். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மட்டுமே இந்தியாவினால் வலியுறுத்த முடியும் என்றும் அதனை மீறி அவர்களால் இலங்கை இறையாண்மைக்குள் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என்றும் சரவணபவன் தெரிவித்தார். ஏற்கனவே இருக்கும் காணி…

    • 6 replies
    • 499 views
  22. Published on 2022-03-08 13:31:44 (எம்.எப்.எம்.பஸீர்) மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனையில் மகாவலியின் இடது கரையில் மாடுகளுக்கான மேய்ச்சல் தரையாக ஒதுக்கப்பட்டிருந்த காணிகளில் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் சிலர் குடியேறியுள்ளமையை சட்ட மா அதிபர் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றில் ஒப்புக்கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன் எனும் ஜனா ஆகியோர் தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனு (ரிட் மனு) நேற்று திங்கட்கிழமை 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது. மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளா…

  23. (எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் டீசல், பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடுகளுடன் தற்போது மீண்டும் சமையல் எரிவாயுவிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டொலர் நெருக்கடியின் காரணமாக சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்களை விடுவித்துக் கொள்ள முடியாமையினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பேக்கரி, சிற்றுண்டிசாலைகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் துறைசார் சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 3000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் பாவனைக்கு தேவையானளவு டீசல் …

  24. கருக்கலைப்பு.... தொடர்பான சட்டம் குறித்து, ஆராயத் தயார்... என்கின்றார் நீதி அமைச்சர் கருக்கலைப்பு தொடர்பாக அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பிரேரணை சமர்ப்பித்தால், அது தொடர்பாக ஆராய்ந்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளத் தயார் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளும் தரப்பு உறுப்பினர் சாந்த பண்டார இடையீட்டு கேள்வி ஒன்றை முன்வைத்தார். பலாத்காரமாக துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் பெண்ணின் கருவறையில் உருவாகும் கருவை இல்லாமலாக்குவது தொடர்பாக சட்டரீதியில் பிரச்சினை இருந்து வருகின்றது என கூறினார். இது மிகவும் கவலைக்குரிய பிரச்சினை என்றும் இந்நிலைக்கு ஆளாகும் பெண், ப…

  25. திருகோணமலையில்... காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், நடை பவனி! சர்வதேச மகளிர் தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) திருகோணமலையில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் நடை பவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான குறித்த நடை பவனியானது கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டதுடன், ஆளுனர் செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த குறித்த சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா, கடந்த 5 வருட காலமாக தம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு இன்னமும் விடிவு கிடைக்காத நிலையில் தாம் தமது பிள்ளைகளை வீதியில் இறங்கி தேடிவருவத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.