ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளின்... புலனாய்வுப் பிரிவின், முன்னாள் உறுப்பினருக்கு... ஆயுள் தண்டனை ! தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சுமார் 2 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளை வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு நிமலனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2007 மே 28 ஆம் திகதி இரத்மலானையில் விசேட அதிரடிப்படையினர் சென்ற ட்ரக் மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தியமை குறித்தும் விசாரணை இடம்பெறுகின்றது. மேலும் 2009 பெப்ரவரி 7 இல் குருநாக…
-
- 0 replies
- 315 views
-
-
கடுமையான பொருளாதார தடைகளை எதிர்நோக்கியுள்ள ரஷ்யாவிடம், கடனுதவி கோரியது இலங்கை அரசாங்கம்! ரஷ்யாவிடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் கடனாக கோரியுள்ளது. எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காகவே இவ்வாறு கடனுதவி கோரப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையில் போர் இடம்பெற்று வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இவ்வாறு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ள ரஷ்யாவிடமே இலங்கை அரசாங்கம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1270066
-
- 22 replies
- 1.1k views
-
-
நாடாளுமன்றத்திற்குள்... அமெரிக்கர்கள், வருவதற்கு உதவிய.. எம்.பி.க்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – ஜே.வி.பி. அமெரிக்க பிரஜை ஒருவருக்கு நாடாளுமன்றதில் சிறப்புரிமைகளை வழங்குவதற்கு பங்களித்த அனைவரும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்தார். 20 வது திருத்தம், அமெரிக்காவிற்கு பங்குகளை விற்றமை திருகோணமலை எண்ணெய் தொட்டியை இந்தியாவிற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தில் உள்ள அனைவரும் ஆதரவளித்ததாக அவர் கூறினார். நாட்டைப் பாதுகாப்பதற்கும், அரச சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் முன்னர், இவற்றுக்கு எல்லாம் ஆதரவளித…
-
- 0 replies
- 156 views
-
-
தமிழ் மக்களின் நலன் தொடர்பாக... வழங்கிய உறுதிமொழிகளை, நிறைவேற்ற வேண்டும் – இந்தியா வலியுறுத்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கைக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா. ஆணையாளரின் இலங்கை தொடர்பான சமீபத்திய அறிக்கை குறித்த கலந்துரையாடலின் போதே இந்தியத் தூதுவர் இந்திரமணி பாண்டே, இதனை வலியுறுத்தினார். தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த தனது உறுதிப்பாட்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் …
-
- 0 replies
- 165 views
-
-
Published by J Anojan on 2022-03-02 16:29:48 இலங்கையில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியானது நாட்டின் சுற்றுலாத் துறையை கடுமையாகப் பாதித்துள்ளது. தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் திட்டமிட்டபடி போக்குவரத்தினை முன்னெடுக்க எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள பல சுற்றுலாப் பயணிகள் தங்கள் முன் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் நீண்ட தூர பயணங்களுக்கு போதுமான எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாததால், தங்கள் பயணத் திட்டங்களை இரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதேவேளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் தென் மாகாணத்தில் உள்ள சிறிய உணவகங்க…
-
- 2 replies
- 254 views
-
-
ஜனாதிபதியினால் அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு – கம்பன்பில, விமல் வீரவன்சவின் அமைச்சுப் பதவிகள் பறிப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, கீழ்வரும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே பொறுப்பேற்றுள்ளதுடன், மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி பொறுப்பேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராக…
-
- 11 replies
- 641 views
-
-
முழுமையாக... முடங்கும் ஆபத்தில், தனியார் பேருந்து போக்குவரத்து? எச்சரிக்கை தகவல் வெளியானது! டீசல் இல்லையேல் இன்று(வியாழக்கிழமை) அல்லது நாளை 90 வீதமான பேருந்துகள் போக்குவரத்திலிருந்து விலகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அங்ஞன பிரியஞ்சித் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். நாட்டில் தற்போதுவரை எரிபொருள் முறையாக கிடைக்காதமையினால் 70 வீதமான தனியார் பேருந்துகள் போக்குவரத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பேருந்துகளுக்கு எரிபொருள் முறையாக கிடைக்காத பட்சத்தில் 90 வீதமான பேருந்துகள் போக்குவரத்திலிருந்து விலகவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்…
-
- 3 replies
- 399 views
- 1 follower
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழ் மணி நேரங்களுக்கு முன்னர் தெற்காசிய நாடுகளில் சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடுகளில் இலங்கை முன்னணி வகித்து வருகின்ற போதிலும், கடந்த சில வருடங்களாகவே இலங்கையின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை காண முடிகின்றது. இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல், கோவிட் வைரஸ் பரவல் உள்ளிட்ட காரணிகளினால், சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டு, நாடு பொருளாதார ரீதியில் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. இந்த நிலையில், யுக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல், இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வக…
-
- 3 replies
- 667 views
-
-
பங்காளி கட்சிகளுக்கு பிரதமர் அழைப்பு Published by J Anojan on 2022-03-04 12:59:36 சிறிது நேரத்தில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு வருகை தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பஷல் ராஜபக்ஷவின் திறமையின்மை குறித்து உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் பகிரங்கமாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து இந்த சந்திப்பு உடனடியாக திட்டமிடப்பட்டுள்ளது. விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர், அரசியலமைப்பின் ஊடாக அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர்களது அமை…
-
- 0 replies
- 190 views
-
-
Published by T. Saranya on 2022-03-04 15:19:56 நிலைபேறான அபிவிருத்தியை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களையும் முதலீடுகளையும் உலக வங்கி போன்ற அமைப்புக்களிடம் இருந்து வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இலங்கையின் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஆழ்கடல் மீன்பிடி மற்றும் நீர்வேளாண்மை துறைகளில் மேற்கொள்ளக்கூடிய நிலையான அபிவிருத்தி முகாமை தொடர்பாக உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. கொழும்பு, ஷங்கரில்லா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த…
-
- 0 replies
- 152 views
-
-
Published by T. Saranya on 2022-03-04 16:40:08 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைப்பெற்று வருகின்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவிருக்கின்றது. இலங்கை நேரப்படி இரவு 9.00 மணியளவில் இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமாகும். ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைாயர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பான அறிக்கையை உதஜ்தியோகப்பூர்வமாக வெளியிடுவதன் மூலம் அதன் சாராம்சம் ஒன்றை பேரவையில் முன்வைப்பார். அதனை தொடர்ந்து இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறும். மிச்சேல் பச்லேட் இலங்கை தொடர்பான அறிக்கையை முன்வைத்ததன் பின்னர் பதிலளிக்கவேண்டிய நாடு என்ற வகையில் இலங்கை தூதுக்குழுவின் தலைவர் ஜீ.எல்.பீ…
-
- 0 replies
- 249 views
-
-
மின் தடை நேரத்தில்... மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் தாக்குதல்! மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த நபர் ஒருவர் உறுப்பினரின் தந்தையை தாக்க முற்பட்டதுடன் , வீட்டின் வேலிகளை சேதப்படுத்தி சென்றுள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் உறுப்பினரான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ என்பவரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பில் உள்ள அவரது வீட்டினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வேளை மதுபோதையில் நுழைந்த நபர் ஒருவர் , நாடாளுமன்றில் ஆளும் கட்சியை சேர்ந்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை கூறி , அவரின் ஆதரவாளர் தான் என கூறி அட்டகாசத்தில் ஈடுப…
-
- 0 replies
- 180 views
-
-
கொரோனாவினால்... உயிரிழப்பவர்களின் சடலங்களை, அனைத்து மயானங்களிலும் அடக்கம் செய்வதற்கு அனுமதி! கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அனைத்து மயானங்களிலும் அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை(சனிக்கிழமை) சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் மாத்திரமே அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1270389
-
- 0 replies
- 158 views
-
-
நிலையான வைப்பு வசதி வீதம், நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றினை அதிகரிப்பதற்கு தீர்மானம்! நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இதுகுறித்த தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய நிலையான வைப்புத்தொகை வசதி 6 தசம் 5 சதவீதமாகவும், நிலையான கடன் வசதி 7 தசம் 5 சதவீதமாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளில் தொடரும் தடைகளை கவனத்தில் கொண்டு நேற்றைய தினம் நடைபெற்ற மத்திய வங்கியின் நாணய சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1270305
-
- 0 replies
- 168 views
-
-
கோட்டா... ஜனாதிபதியாக இருக்கும் வரை, அமைச்சு பதவியினை ஏற்க மாட்டேன் – விமல்! கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரை தாம் எந்தவொரு அமைச்சு பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1270340 ############# ############ ############ விமல்.... மானஸ்தன். ரோசம் உள்ளவன். 🤣
-
- 0 replies
- 206 views
-
-
யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் வீதி விபத்தில் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார். கரவெட்டியை சேர்ந்த, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மூத்த விரிவுரையாளரான கனகசபை பாஸ்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார். கல்வியியற் கல்லூரியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெறவிருந்த நிகழ்வுக்காக கரவெட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்த வேளை , கோப்பாய் கிருஷ்ணன் கோவிலடி சந்தி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உழவு இயந்திர போட்டியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். போதிய வெளிச்சமின்றி உழவு இயந்திர பெட்டி நிறுத்தி…
-
- 0 replies
- 294 views
-
-
மற்றுமொரு டீசல் தாங்கிய கப்பல், இன்று நாட்டிற்கு வருகின்றது! 28,300 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பலொன்று, இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நேற்றைய தினம் 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த டீசலை, இன்றைய தினத்துக்குள் முத்துராஜவளை களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்த முடியும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என அந்த அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2022/1270326
-
- 0 replies
- 132 views
-
-
நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்? எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகம் செய்யும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிக்கான நாணய கடிதங்களை திறப்பதற்கு வங்கிகள் அனுமதி வழங்காமையால் இவ்வாறு எரிவாயு விநியோக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/1270090
-
- 4 replies
- 370 views
- 1 follower
-
-
இலங்கைக்கு ஆலோசனை வழங்கியது... சர்வதேச நாணய நிதியம்! நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும், கடனை குறைத்துக்கொள்வதற்காகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறையொன்றை உடனடியாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான கருத்து பரிமாற்றத்தைத் தொடர்ந்தே சர்வதேச நாணய நிதியம் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கையுடன் Article IV கீழ், கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாகவும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1270077
-
- 2 replies
- 702 views
-
-
”ஐநாவின் சர்வதேச உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது இலங்கையின் பொறுப்பாகும்” - இரா. சம்பந்தன் இலங்கை ஐக்கிய நாடுகளின் சர்வதேச உடன்படிக்கைகளை ஏற்று கொண்டுள்ளது. அத்தகைய உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது இலங்கையின் பொறுப்பாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். சம்பந்தனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அவரின் அறிக்கை வருமாறு, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வறிக்கைக்கான இலங்கை அரசின் பதில் அறிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் இ…
-
- 2 replies
- 266 views
-
-
ஜெனிவா மனித உரிமைப்பேரவை இம்முறையாவது தீர்வு வழங்குமா? – காணாமல் போனவர்களின் உறவுகள் இம்முறை இடம்பெறும் ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்விலாவது எமக்கான நீதி கிடைப்பதற்கு வழிபிறக்க வேண்டும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தால் இன்றையதினம் (03) வவுனியா பழையபேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், எமது உறவுகள் க…
-
- 0 replies
- 450 views
-
-
வரலாறு தெரியாதவர்களை வைத்து கையொழுத்து வேட்டை நடக்கின்றது இந்த தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனையை தீர்க்க கூடிய தகுதி தத்துவம் எல்லாம் உள்ள ஒரே ஒரு கட்சி தமிழ்விடுதலை கூட்டணி மாத்திரம் தான் ஒழிய வேறு எந்த கட்சியாலும் முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள விடுதி ஒன்றில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நாட்டிலே வாழுகின்ற தமிழ் மக்கள் நாளுக்கு நாள் வேறு வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி செல்லுகின்றனரே தவிர உண்மையில் நாட்டிலே எந்த பிரச்சனை இருந்து அதற்கு என்ன தீர்வு காண ஆரம்பித்தோமே அதை எல்லாம் படிப்படியாக மறந்து இப்ப புது பு…
-
- 0 replies
- 256 views
-
-
(ஆர்.யசி) இலங்கை விமானப்படை வசமுள்ள விமானங்களில் அதிகமானவை ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டவை என்பதனால் எமது விமானங்களுக்கு தேவைப்படும் உதிரிப்பாகங்களை தற்பொழுது பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், ரஷ்யா மற்றும் உக்ரேன் மோதலின் காரணமாக இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் இலங்கை விமானப்படை தளபதி எயார்மார்ஷல் சுதர்ஷன பதிரன தெரிவித்தார். இலங்கை விமானப்படையின் 71 ஆவது ஆண்டு பூர்த்தியை அடுத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ரஷ்யா மற்றும் உக்ரேன் மோதலின் காரணமாக இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக இலங்கை விமானப்படை வசமுள…
-
- 8 replies
- 609 views
-
-
யாழ். ஒருங்கிணைப்பு குழுவின் புதிய இணைப்பாளராக கீதநாத் காசிலிங்கம்! யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கான பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்ப டவுள்ளார் என்றும் இன்று அவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது என்றும் நம்பகரமாக அறியமுடிகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளராக கீதநாத் காசிலிங்கம், வடக்கு, கிழக்குக்கான விசேட மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளராகவும் செயற்படுகின்றார். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்படுகின்றார். இந்தநிலையில் யாழ்ப்…
-
- 0 replies
- 364 views
-
-
கொழும்பின், சில பகுதிகளில்... 14 மணித்தியால நீர்வெட்டு! கொழும்பின் சில பகுதிகளில் 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 7, 8, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே எதிர்வரும் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 2, 3 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியினுள் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீர் வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை…
-
- 0 replies
- 307 views
-