ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
மன்னார் மாவட்டத்தில்... நெல் அறுவடை இயந்திரங்களுக்கு, டீசல் இன்மையால் விவசாயிகள் பாதிப்பு! மன்னார் மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் பல பிரதேசங்களிலும் இடம் பெற்று வரும் நேரத்தில் உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்ற வற்றிற்கான எரிபொருள் (டீசல்) தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடையை மேற்கொண்டு வருகின்ற விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதேவேளை அதி கூடிய விவசாய பிரதேசமாக காணப்படும் நானாட்டான் மற்றும் முருங்கன் பகுதிகளிலும் தற்போது அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தேவையான உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்றவற்றிற்கான எ…
-
- 0 replies
- 132 views
-
-
நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும் எரிபொருள்! நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், அட்டன் மற்றும் நுவரெலியா, கொட்டகலை ஆகிய எரிபொருள் நிலையங்களை சூழ வாகனங்கள் அணிவகுத்து நிற்பதுடன், அதிகளவு தூரம் வரை எரிபொருள் நிரப்புவதற்கு மக்கள் வரிசை நீடிப்பதையும் அவதானிக்க முடிந்தது. அத்தோடு எரிபொருளை கொள்வனவு செய்யும் போது ஒவ்வொருவருக்கும் மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு, எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வழங்கி வருவதாகவும், எரிபொருளுக்காக காத்திருக்கும்…
-
- 0 replies
- 136 views
-
-
சுண்டிக்குளத்தில் கடற்கரும்புலிகளின் படகு மீட்பு February 28, 2022 தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகளின் படகொன்று சுண்டிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சுண்டிக்குளம் பகுதியில் குறித்த படகினை மீட்டுள்ளனர். குறித்த படகினை வெட்டி சோதனையிட்ட போது , கரும்புலி தாக்குதலுக்கான வெடி மருந்துகள் நிரப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது . சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2022/173602
-
- 1 reply
- 182 views
-
-
வெளியானது புதிய சுகாதார வழிகாட்டி ; கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு இன்று (01) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்பாட்டு சுகாதார வழிகாட்டுதல்களைப் புதுப்பிக்கும் புதிய வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக இதுவரை பல பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, உணவகங்கள், வணிக வளாகங்கள், கடைகள், நிதி நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு, இறுதிச் சடங்குகள், பயிற்சி வகுப்புகள், பரீட்ச…
-
- 0 replies
- 118 views
-
-
அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் – மாவை அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். …
-
- 11 replies
- 535 views
-
-
நெருக்கடிக்கு தீர்வாக... மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை, நாட அரசாங்கம் தீர்மானம்! மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார். தற்போதைய நாணயமாற்று நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். https://athavannews.com/2022/1269261
-
- 4 replies
- 497 views
-
-
ரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வதில் இதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லை! ரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வதில் இதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லை என இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான பணத்தை பெற்றுக்கொள்வதில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் எனவும் அதன் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1269417 ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் இலங்கைக்கு பாதிப்பு; தேயிலை ஏற்றுமதியிலும் தாக்கம் ஏற்படும் – நிதி ஆய்வாளர்கள் -சி.எல்.சிசில்- அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய…
-
- 3 replies
- 349 views
-
-
கடந்த 13 ஆண்டுகளில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து மிகக் குறைந்த பணம் அனுப்பும் மதிப்பு 2022ம் ஆண்டு ஜனவரி பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, ஜனவரி 2022 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 259.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரி மாதம் பெறப்பட்ட 645.3 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இது 61.6 வீதம் குறைவாகும். 2021 டிசம்பரில் வெளிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பிய பணம் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2020 டிசம்பரில் 813 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வெளிநாட்டுப் பணம் அனுப்பிய பற்றுச்சீட்டுடன் ஒப்பிடும்போது 60 வீதம் குறைவாகும். ஒட்டுமொத்த அடிப்படையில், 202…
-
- 0 replies
- 309 views
-
-
பேக்கரி உற்பத்திக்கு... தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு! பேக்கரி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பேக்கரி உற்பத்திக்கு தேவையான கோதுமை மா, வெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் பாமொயில் போன்ற மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டொலர் தட்டுப்பாடு காரணமாகவே மூலப்பொருட்களை இறக்குமதி செய்யமுடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இன்னும் ஒரு மாத காலத்திற்கு பேக்கரி தொழிலை முன்னெடுத்துச்…
-
- 2 replies
- 308 views
-
-
ஐ.நா கூட்டத்தொடரின்... 49ஆவது அமர்வு இன்று ஆரம்பம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு இன்று(திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைக்கவுள்ளார். இந்த நிலையில், இலங்கை குறித்த உரையாடல் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு ஜெனிவாவிற்கு செல்லவுள்ளது. மேலும் இலங்கை குறித்த அறிக்கை ஏற்கனவே அர…
-
- 0 replies
- 189 views
-
-
இலங்கையுடனான... "ஒரு பில்லியன்" டொலர், ஒப்பந்தத்திற்கு... இந்திய அமைச்சரவை ஒப்புதல்! இலங்கையுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதற்கமைய கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1269552 ############# ############## ############### இந்தக் காசை வைத்து, இன்னும் ஒரு மாதம் சமாளிக்கலாம். அடுத்த மாசம்... சீனாவை பிடிக்க வேணும். - ஸ்ரீலங்கா மைண்ட் வாய்ஸ்.-
-
- 0 replies
- 241 views
-
-
கூட்டமைப்பின், நாடாளுமன்ற உறுப்பினர்கள்... முஸ்லிம் புத்திஜீவிகளுடன் சந்திப்பு! தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு சுகாதார முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எம். பி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தேசிய பட்டியல் எம். பி த. கலையரசன் ஆகியோர்.கூட்டமைப்பு சார்பாக பங்கெடுத்தனர். முஸ்லிம் புத்திஜீவிகள் சார்பாக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஏ. சர்ஜூன், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்களான ரமீஸ் அப்துல்லா மற்றும் பௌசர் ஆகியோர் பங்கெடுத்தனர். …
-
- 0 replies
- 173 views
-
-
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன? எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநரினால் அரசாங்கத்திற்கு குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை நேரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களிலிருந்து வேலைசெய்யும் பணியாளர் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தமது பணிகளை மேற்கொண்டு நேரகாலத்தோடு வீடுகளுக்குச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் மத்திய வங்கி குறி…
-
- 0 replies
- 200 views
-
-
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாட்டில் தளர்வு! வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது. சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இலங்கைக்கு வருகைதரும் பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு, பயணத்துக்கு முன்னரான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நாட்டுக்கு வருகை தருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்…
-
- 1 reply
- 251 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரும் போராட்டத்தில் அலி சப்ரிக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் ஆவேசம்! பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரும் போராட்டத்தில் நீதியமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் ஆவேசமான முறையில் சில கருத்துக்களை முன்வைத்திருந்தனர். தமிழரசு கட்சி வடகிழக்கு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் ‘‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்”என்ற கோரிக்கையினை முன்வைத்து கையெழுத்துப்போராட்டமும் கவனயீர்ப்பு போராட்டமும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்றது. வாலி…
-
- 1 reply
- 333 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டடத்துக்கு எதிராக தமிழரசுக்கட்சி தனியோட்டம் ? தமிழரசுக்கட்சி பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக ஒரு கையெழுத்து வேட்டைப் போராட்டத்தை நடத்திவருகிறது.இப்போராட்டத்திற்கு மூவினத்தவர்கள் மத்தியிலும் ஆதரவு இருக்கிறது.தமிழ் பகுதிகள் எங்கும் தமிழரசுக்கட்சியினர் பொது இடங்களில் நின்று கையெழுத்துக்களை வாங்கிவருகிறார்கள். சுமந்திரன் தென்னிலங்கையில் உள்ள பிரமுகர்களைத் தேடிச்சென்று கையெழுத்து வாங்கிவருகிறார். அவருடைய இம்முயற்சிக்கு விக்னேஸ்வரன் உட்பட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் ஆதரவைக் காட்டியுள்ளன. ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னர் பயங்கரவாதத் தடைச்ச…
-
- 0 replies
- 312 views
-
-
நாட்டின் சவால்களை ராஜபக்சக்களால் வெற்றிகொள்ள முடியும் இலங்கையின் முதலாவது பாலமான பாமன்கடை சந்தியில் நிர்மாணிக்கப்படும் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பு, ஹொரணை 120 வீதியில் நிர்மாணிக்கப்படும் புதிய பாமன்கடை பாலத்தின் நிர்மாணப் பணிகளால் வீடுகளை இழக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள புதிய வீடுகளின் சாவியை ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் கையளித்தார். பாமாங்கடையில் புதிய பாலம் கட்டுவதற்காக வீடுகள் அகற்றப்படுகின்றன. வெளியேற்றப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக நகர அபிவிருத்தி அதிகார…
-
- 0 replies
- 221 views
-
-
இவ்வாறானதொரு யுகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை ஒரு பிரதேசத்திற்கோ மாகாணத்திற்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையும் சமமாக அபிவிருத்தியடையும் இவ்வாறானதொரு யுகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (26) பிற்பகல் தெரிவித்தார். கிரம - கட்டுவன ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம் மற்றும் கிரம பேருந்து நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒஸ்திரிய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் கிரம-கடுவான நீர் வழங்கல் …
-
- 0 replies
- 224 views
-
-
மீண்டும் அதிகரிக்கப் படுகின்றது.... பேருந்து கட்டணம்! நாட்டில் எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்துகளுக்கு விசேட மானியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். அவ்வாறு மானியம் வழங்கப்படாவிட்டால் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1269388
-
- 1 reply
- 224 views
-
-
மூன்று வருடங்களாக.... இடைநிறுத்தப் பட்டிருந்த, மன்னார் மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்! மூன்று வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மன்னார் மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதவானுக்கு வழங்கப்பட்ட உத்தரவையடுத்து பொலிஸாரும் ஏனைய தரப்பினரும் மீண்டும் விசாரணைகள் மற்றும் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர். எனினும், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மன்னார் நீதவானிடம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். தற்போது 90 சதுர அடி பரப்பளவில் புதைகுழி உள்ள பகுதி பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பில்…
-
- 0 replies
- 120 views
-
-
எரிபொருள் பிரச்சினை காரணமாக.... பேருந்து சேவைகளை, 50 சதவீதத்தினால் குறைக்க வேண்டிய நிலை! எரிபொருள் பிரச்சினை காரணமாக பேருந்து சேவைகளை 50 சதவீதத்தினால் குறைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். டீசல் இல்லாவிட்டால், பெரும்பாலும் நாளை(திங்கட்கிழமை) முதல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், பேருந்து பயணங்களை 50 சதவீதமாகக் குறைத்து சேவை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். http…
-
- 0 replies
- 178 views
-
-
ஐ.நா.உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்கின்றோம் - சுமந்திரன் (ஆர்.ராம்) அதிகாரப்பகிர்வுடன் கூடிய புதிய அரசியலமைப்புக்கான தேவையை வலியுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கையில் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் உள்ளிட்ட முக்கிய பலவிடயங்களை சுட்டிக்காட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை முழுமையாக வரவேற்கின்றது என்று அதன் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் நாளையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் இலங்கை பற்றிய, ‘இலங்கையில் …
-
- 1 reply
- 162 views
-
-
ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை சந்தேகநபர் பிரிட்டனில் கைதான விவகாரம் : குற்றவாளிகளுக்கு இலங்கை தண்டிக்காவிடின் வேறு தெரிவுகள் இருப்பதைக் காண்பிக்கிறது - சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் (நா.தனுஜா) ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரிட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளமையானது, குற்றங்களைப்புரிந்தவர்கள் உலகின் எந்தவொரு மூலையிலும் பாதுகாப்பாக இருக்கமுடியாது என்பதையும் அத்தகைய குற்றங்களுக்கு இலங்கைபோன்ற நாடுகள் தண்டனை வழங்காவிட்டால், அதனைச் செய்வதற்கான வேறு தெரிவுகள் உள்ளன என்பதையும் காண்பிக்கின்றது என்று சர்வதேச மனித உரிமைசார் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. பி.பி.சி செய்திச்சேவையின் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் கொலையுடன் தொடர்புடைய சந்தே…
-
- 0 replies
- 138 views
-
-
மக்களின் சுதந்திரம், எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லை - ஜனாதிபதி நாட்டை ஆட்சி செய்யும் போது, பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இருப்பினும், அதனால் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவாறாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமென்று, அனைத்துத் தரப்பினரிடமும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். ஒரு இலட்சம் மகாவலி ரண்பிம காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு, நேற்று (26) முற்பகல், எம்பிலிபிட்டிய மகாவலி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கத…
-
- 0 replies
- 246 views
-
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துங்கள் - ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்பியது த.தே.ம. மு (ஆர்.ராம்) தமிழர்களின் தாயகத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்களுக்கான பொறுப்புக்கூறலைச செய்வதற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சல் பச்லெட் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைமைப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம் அனுப்பியுள்ளது. http://media.webdunia.com/_media/ta/img/article/2015-10/30/full/1446191799-869.jpg தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற …
-
- 0 replies
- 96 views
-