ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – கரன்னாகொடவின் மனு ஏப்ரலில் விசாரணைக்கு! வடமேல் மாகாண ஆளுனர் அட்மிரல் வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் பிரதிவாதியாக தன்னை பெயரிட்டமைக்கு எதிராகவே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தன்னை பிரதிவாதியாக பெயரிடும் தீர்மானம் ஆதாரமற்றது என்று சுட்டிக்காட்டும் வசந்த கரன்னாகொட அதனை இரத்து செய்யும் நீதிப் பேராணை கட்டளையொன்றை பிறப்பிக்குமாற…
-
- 0 replies
- 241 views
-
-
தமிழக மீனவர்களின் செயலை கண்டித்து யாழில் போராட்டம்! தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த மீனவர்களின் வலைகளே அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. அதனை கண்டித்து மீனவர்கள் சுப்பர்மட பகுதியில் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதிகளில் படகுகளை , வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அவ் வீதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தாம் வீதியை மறித்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட…
-
- 0 replies
- 203 views
-
-
மஹிந்தவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை – நாமல்! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வைபவம் ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், இணையத்தளங்கள் இவ்வாறான சம்பவங்களை தெரிவிப்பதாகவும் அதற்கு பதிலளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மஹிந்தவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை – நாமல்! – Athavan News
-
- 0 replies
- 214 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிட்டுபூங்கா பிரகடனம் கிட்டுபூங்கா பிரகடனம் “தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்” என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம். சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ்த் தேசமானது - தனது அடிப்படையான அரசியல் உரிமைகளான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சி…
-
- 0 replies
- 278 views
-
-
இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பொய்யாக சில விடயங்கள் இருக்கின்றன – நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் 13வது திருத்தச்சட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எமது மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யாக பிணையப்பட்டுள்ள சில விடயங்கள் இருக்கின்றன என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய பிரதமர் மோடி கூட்டுறவு சமஸ்டி வேண்டும் என தெரிவித்துள்ளார். அதேபோன்று இம்முறை நடைபெற்ற சட்ட…
-
- 3 replies
- 382 views
-
-
ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கான அறிக்கை கூட்டமைப்பால் தயார் செய்யப்படுகின்றது – சுமந்திரன் காணி அபகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கம் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தற்போதைய நிலைமைகளை தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் …
-
- 1 reply
- 194 views
-
-
யாழ் பலாலி விமான நிலையம், கொரோனா காரணமாகவே பூட்டிக்கிடக்கிறது – அதில் அரசியல் இல்லை! January 30, 2022 யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருந்தன அதே போல் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. தற்பொழுது ஏனைய சில விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன அதேபோ…
-
- 1 reply
- 208 views
-
-
கிடைக்காத விடயத்திற்கு போராட்டம் என்கிறார் சப்றி! January 30, 2022 கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் மொகமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் மொகமட் அலி சப்ரி, “சில அரசியல்வாதிகள் இங்குள்ள இளைஞர் யுவதிகளை பிழையாக வழி நடத்துகிறார்கள்.கிடைக்காது என தெரிந்து கொண்டும் அதனை பெற முயற்சிக்கிறோம் என இளைஞர்களை மக்களை தூண்டி விடுகிறார்கள் அது சாத்தியமல்லாத விடயம். எத்தனை இளைஞர் யுவதிகளை இவ்வாறான அரசியல்வாதிகளின் போராட்டத்தின் மூலம் இழந்து விட்டோம் எத்தனை இளைஞர் யுவதிகள் வடக்கி…
-
- 5 replies
- 748 views
-
-
Published by J Anojan on 2022-01-30 14:06:38 பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட (அரசியல் கைதிகள்) 27 பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள அவர், தனியார் விடுதியில் அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். 'பயங்கரவாத தடைச் சட்டம் தற்போது திருத்தப்படுகின்றது. எதிர்காலத்தில் அதனை முழுமையாக மாற்றியமைக்கும் திட்டமும் இருக்கின்றது' என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லை என…
-
- 1 reply
- 303 views
-
-
Published by T Yuwaraj on 2022-01-30 16:04:27 பதுளை – அட்டாம்பிட்டிய உமாஒயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறானா கெரண்டி எல்ல ஆற்றில்நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், நீரில் அடித்துச் சென்று காணாமல் போன ஐவரில், நான்கு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்தவாது யுவதியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஐவரில் நால்வரின் சடலங்கள் நேற்று (29) மாலை கண்டெடுக்கப்பட்ட நிலையில், சற்றுமுன்னர் யுவதி ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். அட்டாம்பிட்டிய தோட்ட பகுதியை சேர்ந்த ராஜா டேவிட் குமார் (23), சிவ சுப்ரமணியம் காஞ்சனா (21), பவாணி (22), சிந்து (18) மற்…
-
- 0 replies
- 354 views
-
-
Published by T Yuwaraj on 2022-01-30 16:52:12 (நா.தனுஜா) இலங்கையில் தற்போது இடம்பெற்றவரும் மீறல்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், தமிழர்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை முன்னிறுத்தி தம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழர்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக்கட்சிப் பாராளுமன்றக்குழுவின் ஆண்டறிக்கையில், இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மீறல்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தல், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டல் என்பன தொடர்பில் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்…
-
- 0 replies
- 195 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) தமிழீழ விடுதலை புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பிலான அடுத்த கட்டம் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை இதுவரைக்கிடைக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். கடந்த 28 ஆம் திகதி வெள்ளியன்று இது குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினரால் இந்த விடயம் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மன்றில்…
-
- 1 reply
- 283 views
-
-
Published by T Yuwaraj on 2022-01-30 13:57:48 (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டில் கொரோன வைரஸ் தொற்று மீண்டும் தலை தூக்குவதற்கு சுகாதார அமைச்சின் தவறான வழிக்காட்டதல்களே காரணம். கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வை நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு சுகாதார அமைச்சு சரியான வழிக்காட்டுத்தல்களை நடைமுறைப்படுத்த தவறியமையே இதற்கு காரணம் என மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். டெல்டா, ஒமிக்ரோன் உள்ளிட்ட ஏதேனும் வைரஸ் தொற்றுக்கள் நாட்டினுள் வருவதை தடுப்பதற்கு மிகவும் இலகுவான வழிவகைகள் இருந்தபோதிலும், சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் காரணமாக நாட்டினுள் ஒமிக்ரோன் வை…
-
- 0 replies
- 193 views
-
-
நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை ரஞ்ஜன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 30 ஜனவரி 2022, 13:01 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PIB INDIA இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஓர் உடன்படிக்கை காரணமாக, சுமார் 35 வருடங்களின் பின்னர் இலங்கையில் மீண்டும் பாரிய போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமல்படுத்தத் தலையீடு செய்யுமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இலங்கையில் உள்ள ஏழு தமிழ் கட்சிகள் கூட்டாக கடிதமொன…
-
- 1 reply
- 375 views
- 1 follower
-
-
இன்று முதல் மீள திறக்கப்படுகிறது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 90 ஆயிரம் மெட்றிக் டன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தைக் கடந்த தினத்தில் வந்தடைந்தது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் ஜகத் விஜேகுணரத்ன, துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட மசகு எண்ணெய் தற்போது இறக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்ந்து செயற்படுமாயின் மின்சார உற்பத்திக்குத் தேவையான உலை எண்ணெய் உள்…
-
- 0 replies
- 312 views
-
-
இஸ்லாம் பாடப்புத்தகங்கள் மீளப்பெறப்படுவதன் நோக்கம் என்ன? இம்ரான் எம்.பி கேள்வி கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் அச்சிட்டு விநியோகிக்கப்பட்ட இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறப்படுவதன் நோக்கம் என்ன என்பதை நீதி அமைச்சர் அலிசப்ரி உள்ளிட்ட அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். ஞானசார தேரர் தலைமையிலான ஒரேநாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கமைய இஸ்லாம் பாட நூல்கள் மீளப் பெறப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால்…
-
- 0 replies
- 200 views
-
-
சீனாவின் முகவர்களா? தமிழ் தேசிய மக்கள் முன்னணி சீனா எதிர்பார்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றனர் என– பா- உ- கோவிந்தன் கருணாகரன் தெரிவிப்பு– (கனகராசா சரவணன்;) நாங்கள் இந்தியாவின் முகவர்கள் என சித்தரிக்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணரே அப்போ நீங்கள் யாரது முகவர்கள்? நீங்கள் சீனாவின் முகவர்களா? சீனா எதிர்பார்பதைதானே நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றீர்கள். எனவே 13 ஊடக தமிழ் மக்களின் இருப்பை கூட இல்லாமல் செய்யும் இவர்களை தமிழ் மக்கள் விரட்டியக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்க செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கண்ணகி அ…
-
- 0 replies
- 234 views
-
-
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய மின்சக்தி அமைச்சு தீர்மானம் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான பிரேரணை நாளை (திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். LIOC நிறுவனத்திடம் இருந்து நேரடியாக எரிபொருளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2022/1264456
-
- 10 replies
- 552 views
- 1 follower
-
-
ஜனவரி மாதத்திற்குள் மட்டும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை! ஜனவரி மாதத்திற்குள் மட்டும் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அத்கமைய, இம்மாதம் முதலாம் திகதி முதல் 29ஆம் திகதி வரை 76 ஆயிரத்து 536 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதில் 12 ஆயிரத்து 368 பேர் ரஷ்யாவிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் போலந்து, மாலைத்தீவு மற்றும் கஸ்க்ஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிக…
-
- 0 replies
- 130 views
-
-
மாற்றத்துக்கு தயாராக வேண்டும் - சுனில் ஹந்துனெத்தி இரவில் சிந்தித்துவிட்டு காலையில் தீர்மானம் எடுக்கும் விதத்திலேயே இந்த அரசு செயற்பட்டுவருகின்றது. எனவே, அரசால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது. மாற்றத்துக்கு தயாராக வேண்டும் என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். நுவரெலியா – நானுஓயா பெரக்கும்புர பகுதியில் 30.01.2022 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " உரிய மாற்று திட்டங்கள் எதுவுமின்றியே சேதனை பசளைமூலம் விவசாயம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. அதாவத…
-
- 0 replies
- 185 views
-
-
நாம் ஆட்சியை கைப்பற்றுவதால் மாத்திரம் நாடு முன்னேறப் போவதில்லை தற்போதைய நிலையில் தமது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். நாம் நிச்சயமாக நமக்கு என்ற ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் நமது தலைவர்கள் திருந்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=156878
-
- 0 replies
- 257 views
-
-
நீதி வேண்டி யாழில் நாளை ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம் யாழ்ப்பாணம் நகரில் நாளை (திங்கட்கிழமை) ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், இது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்பையும் பெறும் நோக்கில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்படவுள்ளது. இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுதந்திர ஊடக இயக்கம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்…
-
- 0 replies
- 164 views
-
-
மக்கள் பசியின்றி வாழ்வதனை உறுதி செய்வதிலும் நாட்டின் பெருமை அடங்குகின்றது – சுமந்திரன்! நாட்டு மக்கள் பசியின்றி வாழ்வதனை உறுதி செய்வதிலும் நாட்டின் பெருமை அடங்குகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முன்னெப்போதும் இல்லாத அளவு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கடுமையாக கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு முக்கிய பொறுப்புள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள எம்.ஏ சுமந்திரன், நாடு எ…
-
- 2 replies
- 234 views
-
-
ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் – 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ரிஷாட் மற்றும் அவரது மனைவி உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகக் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதன்போதே குறித்த ஐவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீக்காயங்கள…
-
- 0 replies
- 147 views
-
-
13ஆவது திருத்தச் சட்டத்தில் துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன – அரசாங்கம் 13ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என அரசாங்கம் அறிவித்துள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு மத்தியில் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நாட்டில் நிலவும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக கவனம் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நேற்று (சனிக்கிழமை) ‘நீதிக்கான அணுகல்’ ந…
-
- 0 replies
- 153 views
-