ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142409 topics in this forum
-
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு கோட்டை நீதவானால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்று தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 9 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிடியாணை | Virakesari.lk
-
- 0 replies
- 101 views
-
-
03 Dec, 2025 | 03:14 PM மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (03) முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி மன்னார் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மிருக வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாகவும் இன்று புதன் கிழமை முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள…
-
- 0 replies
- 96 views
-
-
03 Dec, 2025 | 03:43 PM இலங்கையில் டித்வா புயலால் ஏற்பட்ட மாபெரும் அழிவைத் தொடர்ந்து, இலங்கை அரசின் அவசர உதவி கோரிக்கைக்கு இணங்க பாகிஸ்தான் அரசு மனிதாபிமான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் முகம்மது ஷஹ்பாஸ் ஷரீப்பின் சிறப்பு உத்தரவின் பேரில், இன்று அதிகாலை பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு தேடல் மற்றும் மீட்பு குழு இலங்கைக்காக அனுப்பப்பட்டது. பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் மூலமாக, 47 பேர் கொண்ட சிறப்பு அணி மற்றும் 6.5 தொன் அவசியமான மீட்பு உபகரணங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில், கூட்டாட்சி அமைச்சர் டாக்டர் தரிக் பசல் சௌத்ரி, பாகிஸ்தான் தேசிய பே…
-
- 0 replies
- 76 views
-
-
03 Dec, 2025 | 05:00 PM 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி மணிக்கு இலங்கை வானிலை தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா முக்கிய விழிப்பூட்டும் முன்னறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நாளை 04.12.2025 அன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு , மத்திய மாகாணங்களில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்வரும் 05.12.2025 அன்று கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. அன்றைய தினம்( 05.12.2025) வடக்கு, மத்திய மற்றும் வட …
-
- 0 replies
- 67 views
-
-
03 Dec, 2025 | 04:38 PM இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐக்கிய இராச்சியம் 890,000 அமெரிக்க டொலர்கள் (£675,000 பவுண்ட்கள் ) மதிப்பிலான அவசர மனிதாபிமான நிவாரணத்தை வழங்கியுள்ளது. இந்த உதவிகளை, செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. முகவரமைப்புக்கள், உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளுடன் ஏற்கனவே செயற்பட்டுவரும் மனிதாபிமான அமைப்புகளின் பங்காளர்கள் மூலம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக கூடாரம், குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் வாழ்க்கையை பாதுகாக்க அவசியமான உதவிகள் இதன் மூலம் வழங்கப்படவுள்ளன. வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடனான சந்திப்பின் போது, இலங்கைக்கான உதவியை மேலும் வலுப்படுத்துவதில் ஐக்கிய இராச்சியத்தின் அர்ப்பணிப்பை, இலங்கைக்கான இடைக்கால ப…
-
- 0 replies
- 40 views
-
-
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம். இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 இன்று (டிசம்பர் 3) யாழ்ப்பாணத்தில் சிறப்பாகவும், அமைதியான சூழலிலும், யாழ் மாவட்ட சதுரங்கச் சங்கத் தலைவர் எந்திரி ந. நந்தரூபன் தலைமையில் ஆரம்பமாகியது. இப்போட்டி வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு குறித்த போட்டிற்கு ஆதவன் தொலைக்காட்சி , ஆதவன் வானொலி, தமிழ் எப்.எம் மற்றும் ஒருவன் ஆகியன ஊடக அனுசரணை வழங்குகின்றமை சிறப்பம்சமாகும். இன்றைய தொடக்க நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட சீரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ளு. அறிவழகன், கௌரவ விருந்தினராக இந்திய துணைத் தூதரக…
-
- 0 replies
- 61 views
-
-
22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு! 22 மாவட்டங்களை “தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்” என்று அறிவித்து ஒரு அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புப் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பகுதி II இன் பிரிவு 9 இன் விதிகளின்படி, நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் விளைவுகளால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் “தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்” என்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வர்த்தமானியை பதிவாளர் ஜெனரல் சசிதேவி ஜலதீபன் வெளியிட்டுள்ளார். https://athavannews.com/2025/1454913
-
- 0 replies
- 152 views
-
-
இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்! இலங்கை முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பெருமளவிலான சேதங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில் அவர், மனித உயிரிழப்புகள் மற்றும் பரவலான சேதங்களுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த கடினமான காலகட்டத்தில் ரஷ்யா இலங்கையுடன் துணை நிற்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு தனது அனுதாபங்களையும் ஆதரவையும் தெரிவிக்குமாறு ஜனாதிபதி திசாநாயக்கவை புட்டின் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் – என்றும் குறிப்பிட்ட…
-
- 1 reply
- 182 views
-
-
02 Dec, 2025 | 06:18 PM வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ்நோயாளிகளாகஇனம்காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியாமாவட்ட பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புவேலைத்திட்டத்தின் பொறுப்புவைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார். எயிட்ஸ் நோய் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (2) ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..... உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம்1 ம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கபட்டு வருகின்றது. இம்முறை சவால்களை சமாளித்து புதிய வழிகளில் போராடுதல் எனும் தொணிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது. இலங்கையில் இதுவரை 7168 பேர் எயிட்ஸ் நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 198 views
-
-
யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்! பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் விளக்கம் அண்மைய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் அதிகரித்து வருகின்றது.இதனால். ஏற்கனவே இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் இவ்வாறு யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:- எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வாரம் இருவர் உயிரிழந்தனர், கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரியின் பிரிவிலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. கடந்த வருடமும் நவம்பர், டிசெம்பர் மாதங்களில் எலிக்கா…
-
- 0 replies
- 148 views
-
-
யாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன் தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்! சீரற்ற காலநிலை காரணமாக தேங்கியிருந்த வெள்ளத்தில் இருந்து பெருமளவு கால்நடைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்படுகின்றன. வடமராட்சி கிழக்கு புன்னையடிப் பகுதியில் பெருமளவான கால்நடைகள் வீதிகளில் இறந்து கிடப்பதை அவதானிக்க முடிகின்றது. இறந்து கிடக்கும் கால்நடைகளை அகற்றும் பணிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்!
-
- 0 replies
- 156 views
-
-
02 Dec, 2025 | 12:34 PM சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 15 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தெதுறு ஓயாவை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் மாத்திரம் சுமார் 10 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளன. இதன்காரணமாக, முட்டை உற்பத்தி நூறில் நாற்பது வீதம் குறைவடைந்துள்ளதாகவும் முட்டையின் விலை உயர்ந்துள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் பல இலட்சம் கோழிகள் உயிரிழப்பு! | Virakesari.lk
-
- 0 replies
- 134 views
-
-
02 Dec, 2025 | 03:51 PM மன்னார், நானாட்டான், முருங்கன், விதயானகுளம் மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தால் நவம்பர் 29 ஆம் திகதி முதல் டிசம்பர் 01 ஆம் திகதி வரை கூட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த கூட்டு மீட்பு நடவடிக்கையின் மூலம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 58 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூட்டு நடவடிக்கை! | Virakesari.lk
-
- 0 replies
- 110 views
-
-
29 Nov, 2025 | 01:03 AM நள்ளிரவு 12 மணியின் பின்னரான 4 மணித்தியாலங்களுக்குள் களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயரும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி கங்கைக்கு அருகில் உள்ள கொலன்னாவை, கொழும்பு, அவிசாவளை, ஹோமாகம மற்றும் கடுவலை ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் தீவிரமடையக்கூடும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதேவேளை, மகாவலி கங்கை, அட்டுளு கங்கை, மகா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் தெதுரு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டங்களும் அதிகரித்துள்ளதாகவும் குறித்த ஆறுகளின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. எச்சரிக்கை ! களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயரும்…
-
- 2 replies
- 187 views
-
-
நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் மண் மற்றும் கற்பாறை சரிந்ததில் 65குடும்பங்களை சேர்ந்த 250பேர் பாதிப்பு; 08 பேர் சடலங்கலாக மீட்பு மேலும் 05 பேர் மாயம் Published By: Vishnu 02 Dec, 2025 | 06:41 PM குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27ம் திகதி மண்சரிவு மற்றும் பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் குறித்த தோட்டத்தை சேர்ந்த 65குடும்பங்களை சேர்ந்த 250பர் பாதிக்கபட்டு தற்காலிகமாக உடஹேன்தென்ன கிறேஹெட் இல 01 தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர் லயன் குடியிருப்பை சேர்ந்த 13வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளது கற்பறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த பகுதியில் இருந்து இதுவரையிலும் 08பேர் …
-
- 0 replies
- 85 views
-
-
இளங்குமரன் எம்.பி.யைக் கண்டித்து; கறுப்புப் பட்டியுடன் கிராம அலுவலர்கள் கிளிநொச்சி உமையாள்புரம் கிராமஅலுவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கறுப்புப் பட்டிகளுடன் பணியில் ஈடுபடப்போவதாக கிராம அலுவலர்கள் அறிவித்துள்ளனர். கிளிநொச்சி பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் வெள்ளப் பேரிடர் உதவி வழங்கலின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தன்னைத் தாக்கினார் என்று கிராம அலுவலர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் அவர் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். இதையடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனைக் கண்டித்து ஒரு வாரத்துக்குக் கறுப்புப் பட்டியுடன் பணியில் ஈடுபடப்போவதாக கிளிநொச்சி மாவட்ட கிராம அலுவலர்கள் தெரிவித்துள…
-
- 0 replies
- 126 views
-
-
யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தங்கியுள்ளனர்! adminDecember 2, 2025 யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 ஆயிரத்து 312குடும்பங்களை சேர்ந்த 51ஆயிரத்து 879 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 1710 குடும்பங்களைச் சேர்ந்த 5ஆயிரத்து 443 பேர் 59 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டன. சீரான காலநிலை காரணமாக சில பாதுகாப்ப…
-
- 0 replies
- 85 views
-
-
Published By: Digital Desk 3 02 Dec, 2025 | 09:54 AM அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் இருப்பது, தற்போதைய வீதி மறுசீரமைப்பு பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர், இந்த நிவாரணக் குழுக்கள் வழங்கும் மதிப்புமிக்க சேவைகளுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகள். எனினும், தற்போது வீதி மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் மாவட்டங்களுக்குள் வாகனங்கள் அதிக அளவில் வருவது, மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இடையூறாக உள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவும், வீடியோக்களை பதிவு செய்யவும் நிறுத்தி வைக்கப்படும் சில மோட்டார் சைக்கிள் ச…
-
- 0 replies
- 87 views
- 1 follower
-
-
இலங்கையின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் உதவத்தயார் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அறிவிப்பு Published By: Vishnu 02 Dec, 2025 | 03:58 AM (நா.தனுஜா) மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பில் கவலையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் மீட்சிக்கும் மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்ற…
-
- 0 replies
- 74 views
- 1 follower
-
-
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிக்க விரைவான பொறிமுறை Published By: Digital Desk 3 29 Nov, 2025 | 11:20 PM தற்போது நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்குவதில் வெளிநாடுகள், அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதுடன், மக்களுக்கு நிவாரணங்களை எளிதாகவும் விரைவாகவும் வழங்குவதற்கான விரைவான பொறிமுறையை நிறுவும் நோக்கில் சனிக்கிழமை (29) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. சுங்கம் மூலம் பொருள் நன்கொடைகளை விடுவிக்கும் போது பல்வேறு வரி செலுத்துதல்கள், தர ஆய்வுகள் மற்றும் அனுமதிகளைப் பெறுதல் ஆகியவற்றை விரைவுப…
-
-
- 4 replies
- 237 views
- 1 follower
-
-
01 Dec, 2025 | 04:03 PM மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர் திங்கட்கிழமை (01) காலை ஒரு தொகுதி உலர் உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் விசேட வானூர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தரைவழிப்பாதை துண்டிக்கப்பட்ட நிலையில் குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்ததோடு,மருத்துவ தேவைகளையும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முயற்சியினால் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமை…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது – மீட்பு பணிக்காக விரைந்த பெல் 212 உலங்குவானூர்தி வெள்ளி, 28 நவம்பர் 2025 06:39 AM புத்தளம் மாவட்டத்தின் ராஜாங்கனை பகுதியில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பேருந்து ஒன்று திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியதில், பயணிகள் உயிர் ஆபத்துக்குள்ளாகியதையடுத்து உடனடி மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பயணிகளை பாதுகாப்பாக மீட்க இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக உலங்குவானூர்தி அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டது இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து செயல்பட்டு, பேருந்தில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினார்கள். நாட்டின் பல பகுதியில் வெள்ளநிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், மக்கள் த…
-
-
- 2 replies
- 328 views
-
-
பேரிடர் மரணங்கள் 193 ஆக உயர்வு; 228 பேர் மாயம் நாட்டை உலுக்கிய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் பலியானவர்களில் எண்ணிக்கை தற்போது 193 ஆக அதிகரித்துள்ளதாகவும் தற்போது 228 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழழை (30) காலை 11.30 மணிக்கு பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்ட அறிக்கையில், 266,114 குடும்பங்களைச் சேர்ந்த 968,304 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிக எண்ணிக்கையிலான பேரிடர் இறப்புகள் பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அதாவது 71 இறப்புகள். இதே நேரத்தில், கண்டி மாவட்டத்தில் 52 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்த…
-
- 2 replies
- 185 views
- 1 follower
-
-
01 Dec, 2025 | 04:44 PM மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். 01.12.2025 திங்கட் கிழமை நண்பகல் 12.45 மணி வரையான நிலைவரப்படி, டிட்வா புயலின் அமுக்க நிறைவுச் செயற்பாட்டின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வட மாகாணத்தின் மேற்கு பகுதிகள் குறிப்பாக மன்னார் தீவு, மாந்தை மேற்கின் சில பகுதிகள், நானாட்டானின் சில பகுதிகள், கிளிநொச்சியின் மேற்கு …
-
- 0 replies
- 215 views
-
-
அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புவது தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், கணனி புலனாய்வுப் பிரிவு, சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்…
-
- 0 replies
- 100 views
-