Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நரேந்திர மோடியின் இந்துத்துவா இராஜதந்திரத்தை கையிலெடுக்கிறது இலங்கை அரசாங்கம் – சித்தார்த்தன் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உள்ள பி.ஜே.பி. அரசாங்கத்தினை திருப்திப்படுத்த இந்துத்வா இராஜதந்திரத்தை இலங்கை அரசாங்கம் கையிலெடுக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனைத் தெரிவித்தார். கண்டியிலுள்ள சீதை அம்மன் ஆலயத்திலுள்ள கல்லை ராமர் கோவில் கட்டுவதற்கு கொண்டு செல்கின்றமை மற்றும் இறைச்சிக்காக மாடு அறுப்பதை தடுப்பது பற்றிய சட்ட மூலத்ம் கொண்டுவரப்பட்டமையை சுட்டிக்காட்டியே அவர் இதன…

  2. அரசாங்கம் நாசமாகிப் போனாலும் கூட சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லை – அமைச்சர் வாசு அரசாங்கம் நாசமாகிப் போனாலும் கூட ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று மக்களை நாசமாக்க இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஆகவே சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது என்பது சிறைக்கு செல்வதற்கு சமமானது எனவும் நாடாளுமன்றில் அவர் கூறினார். சர்வதேச சந்தையில் விலை உயர்வு காணப்படுகின்ற நிலையிலும், ஏனைய பல சிக்கல்கள் உள்ள நிலையிலும் நாட்டில் விலைவாசி அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். இதற்கான தீர்வு எதிர்க்கட்சியிடம் உள்ளதா என கேள்வியெழுப்பிய வாசுதேவ நாணயக்கார, கொரோனா தொற்று இல்லையெனில் வேறுவிதமாக இந்த வரவு செலவு திட்டம் உருவாகியிருக்கும் என்றும…

  3. வடமாகாண, வீதிகளில்... நடைமுறைக்கு வரவுள்ள புதிய நடமுறை! வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பளிஹக்கார விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளார். அந்த அறிவிப்பில் வன்னி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிரிவுகளிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் பொருத்தமான வாகனத் தரிப்பிடங்களை அடையாளம் கண்டு இது தொடர்பில் அறிவிக்குமாறு சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளது. பணி முடியும் வரை சாரதிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலகைகள் வைக்க வேண்டுமென்றும் இப்பணியை உரிய…

  4. நாட்டில்... மார்ச்சில், உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை! இலங்கையில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம்வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையிடம் தற்போது 2 பில்லியன் அந்நியச் செலாவணியே கையிருப்பில் உள்ளது. அதில் சுமார் 300 மில்லியன் தங்கமா இருக்கின்றது. மீதமுள்ள 1.7. பில்லியனை வைத்துக்கொண்டு நாட்டை நிர்வகிக்கமுடியாது. அடுத்த வருடம் 5 முதல் 6 பில்லியன்வரை கடன் செலுத்த …

  5. தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60ஆக உயர்வு – சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து! தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கைச்சாத்திட்டார். நாடாளுமன்றத்தில் அவர் இன்று (புதன்கிழமை) குறித்த சட்டமூலத்தில் கையெழுத்திட்டார். நவம்பர் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் இலங்கையின் தனியார் துறை ஊழியர்களின் புதிய குறைந்தபட்ச ஓய்வு வயது 60ஆக அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது 55 வயது நிரம்பியவர்கள், 57 வயது வரை பணிபுரியலாம் என்றும் 53 முதல் 54 வயது வரை உள்ளவர்கள் 58 வயது வரையும், 52 வயது நிரம்பியவர்கள் 59 வயது வரையும் பணிபுரியலாம் என்றும் சட்டமூல…

  6. அரச அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் – கைகட்டி வேடிக்கை பார்க்கும் பொலிஸார் : சாணக்கியன் கடும் கண்டனம்! மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்ச்சியாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பொலிஸார் கைகட்டி அதனை வேடிக்கை பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசனம் வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இதன்காரணமாக நேற்றைய தினம் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றா…

  7. இலங்கையில் சஜித் பிரேமதாஸ தலைமையில் போராட்டம்: ''சாபக்கேடான அரசுக்கு எதிரான பேரணி' 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SJB நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று கொழும்பில் இன்று (16) நடத்தப்பட்டது. பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த எதிர்ப்பு போராட்டம் இன்று பிற்பகல் நடத்தப்பட்டது. ''சாபக்கேடான அரசாங்கத்திற்கு எதிரான பேரணி'' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உரத் தட்டுப்பாடு, சீமெந்து தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, விவசாயிகளின் பிரச்சினைகள் என நாட்…

  8. மக்கள் பணிமனையை திறந்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்! மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கான தனது இராஜாங்க அமைச்சின் சேவையினை மக்கள் காலடிக்கே கொண்டு சேர்ப்பதற்கான இராஜாங்க அமைச்சரின் மக்கள் பணிமனை திறப்பு விழா நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது. பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனைசார் கால் நடை மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் பட்டிப்பளை பிராந்தியத்திற்கான மக்கள் பணிமனை அலுவலகமானது கடுக்காமுனையில் இராஜாங்க அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. முற்போக்குதமிழர் அமைப்பின் பிரதான இணைப்பாளரும் மண்முன…

  9. வியாழேந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு மட்டக்களப்பு வந்தாறுமூலையில் மாபெரும் இரத்ததான முகாம் (சிஹாரா லத்தீப்)இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் 43 வது பிறந்த நாளை முன்னிட்டு முற்போக்கு தமிழர் கழகமும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாவட்ட அமைப்பும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமொன்றினை இன்று ஏற்பாடு செய்திருந்தது.இராஜாங்க அமைச்சரின் ஏறாவூர் பற்று வந்தாறுமூலை பிராந்திய மக்கள்பணிமனை வளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரத்ததான முகாமில் இப்பிரதேச இளைஞர் யுவதிகள்பெருமளவில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.மாகாணத்தின் பிரதான வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் கேன்சர் ,கொரோனா தொற்று சிகிச்சை அளித்தல் மற்றும் தலசீமியா நோயாளர்களுக்…

  10. 8ஆம் திகதி காணாமல் போயிருந்து நேற்று (09) வீடு திரும்பிய 3 சிறுமிகளும் நடன நட்சத்திரங்களாக ஆவதற்கு வீட்டை விட்டு சென்றதாக காவல்துறை வெளியிட்ட தகவல்களை மேற்கோள்காட்டி The Morning பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. The Morning பத்திரிகையிடம் பேசிய போலீஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ, 3 சிறுமிகளுக்கு என்ன நடந்தது என்ற விவரங்களை தெரிவித்துள்ளார். “ நடன நட்சத்திரம் ஆகும் ஆசையில் குறிப்பிட்ட சிறுமிகள் நவம்பர் 8ஆம் தேதி அதிகாலையில் ரகசியமாக வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் கையில் இருந்த 2 மோதிரங்களை அடகு வைத்து ரூ.60 ஆயிரம் பணம் பெற்றுள்ளனர். பின்னர் அவர்கள் ஃபேஷன் பக் என்ற ஆடை விற்பனை நிலையத்திற்குச் சென்று ஜீன…

  11. கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம் சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வடக்கு ரயில் பாதையின் நீண்ட தூர ரயில்கள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி வடக்கு ரயில் பாதையில் இன்றும் நாளையும் ஆறு நீண்ட தூர ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கல்கிசை மற்றும் காங்கேசன்துறை இடையே இரண்டு கடுகதி ரயில் பயணங்களும், கல்கிசை மற்றும் காங்கேசன்துறை இடையே இரண்டு யாழ்தேவி ரயில் பயணங்களும், கொழும்பு, கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையே இரண்டு நகர்சேர் கடுகதி ரயில்களும் இயக்கப்பட உள்ளன. https://www.virakesari.lk/article/117238

  12. தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 23 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பிரதமரின் செயலாளர் செந்தில் தொண்டமான், மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிலையில் மீனவர்கள் 23 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது, அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 23 பேரையும் ஓரிரு நாட்களி…

  13. அரசானது வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை இல்லாது அழிப்பதற்கு முயற்சிகளை செய்து வருகின்றது - சிவஞானம் சிறிதரன் இலங்கை அரசானது தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் காணிகளை பறிப்பதிலும் தமிழர்களை இல்லாது அழிப்பதற்கும் தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கே.என் 23 கிராம அலுவலர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை பொலிசாருக்கு சுவீகரிக்கும் நோக்கில் நில அளவை செய்யும் பொருட்டு இன்று நில அளவை திணைக்கள அதிகாரிகள் கிராம அலுவலர் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் வருகை தந்திருந்தனர். இதற்கான எதிர்ப்பை …

  14. ரிஷாத்தின் சகோதரர் ரியாஜுக்கு 206 நாட்களின் பின் விடுதலை (எம்.எப்.எம்.பஸீர்) சி.ஐ.டி.யின் தடுப்புக் காவலில் கடந்த 206 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் சகோதரர் ரியாஜ் பதியுதீனை, நிபந்தனைகளுடன் அத்தடுப்புக் காவலில் இருந்து உயர் நீதிமன்றம் நேற்று விடுவித்து உத்தரவிட்டது. பயங்கரவாத தடை சட்டத்தின் 11 (1) அ, ஆ பிரிவுகளின் கீழ் உயர் நீதிமன்றின் நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோரை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. வின்சன்ட் ராஜ் எதிர் சி.ஐ.டி. எனும் வழக்கின் தீர்ப்பை அடியொட்டி இந்த நிபந்தனையுடன் கூடிய விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. …

  15. ஐக்கிய மக்கள் சக்கி இன்று ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்துகொள்வதற்காக கொழும்பு நோக்கி பயணித்த பலர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தம் ஐக்கிய மக்கள் சக்கி இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்துகொள்வதற்காக கொழும்பு நோக்கி பயணித்த பலர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பல பிரதேசங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் பொலிஸாரினால் மாகாண எல்லைகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியில், கலா ஓயா பாலத்திற்கு அருகில் பஸ்கள் முன்னோக்கிச் செல்வதைத் தடுக்கும் வகையில் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துள்ளனர். இதேவேளை…

  16. இலங்கையில் பொது ஒன்று கூடல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பு இலங்கையில் பொது ஒன்று கூடல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பிணிப்பாளர் அசேல குணவர்தண தெரிவித்துள்ளார்.இந்த நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இலங்கையில் இன்று 16 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை பொது ஒன்று கூடல்களுக்கு தடைவிதிப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலேச குணவர்தன குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, நவம்பர் 1 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை நடைமுறையிலிருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.மறு அறிவ…

  17. நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள திடீர் பாதுகாப்பு – எதிர்க்கட்சி கேள்வி! இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள திடீர் சோதனைச் சாவடிகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். இன்று நாடாளுமன்றத்திற்கு செல்லும் போது பல பாதுகாப்பு நிலையங்களில் சோதனை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏன் திடீரென பலத்த பா…

  18. அரச அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் – சாணக்கியன் கண்டனம்! மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்ச்சியாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பொலிஸார் கைகட்டி அதனை வேடிக்கை பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசனம் வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இதன்காரணமாக நேற்றைய தினம் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியிருந்தது. பட்டிப்பளை பிரதேச செ…

  19. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல் – அமைச்சர் அறிவிப்பு சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாட்டிற்கான எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான நிதியுதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாக இலங்கை பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அமைச்சர் கூறினார். மேலும் இலங்கைக்கு மா…

  20. தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி கொரோனா தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ‘மொனுபிரவீர்’ என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொழிநுட்ப குழு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கான இயலுமை தொடர்பில் தான் கொரோனா தொழில்நுட்ப குழுவிடம் கோரியிருந்ததாகவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் குறித்த குழு இதனைத் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1250047

  21. பயங்கரவாத ஒழிப்பு சட்ட மீளாய்வுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு! 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நேற்று(திங்கட்கிழமை) கையளிக்கப்பட்டது. அக்குழுவின் தலைவரும் பாதுகாப்புச் செயலாளருமான ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில், இந்த அறிக்கையின் முதற் பிரதி, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பின் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள உரையாடல்களைக் கவனத்திற்கொண்டு, 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) …

  22. இலங்கையில் உச்சம் தொட்டது மரக்கறியின் விலை! நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கிடைக்கும் மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்துள்ள நிலையில் நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மரக்கறிகளுக்கான சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள முதல்நிலை வார சந்தைகள் சிலவற்றில் இந்த நிலை உருவாகியுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது. ஒரு கிலோ போஞ்சி மற்றும் கறி மிளகாய் 600 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 500 ரூபாய்க்கும், ஒரு கிலோ கரட் 400 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒருகிலோ 360 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒரு கிலோ 320 ரூபாய்க்கும், உள்நாட்டு உருளைக் கிழங்கு ஒரு கிலோ 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. https:/…

  23. வவுனியாவில் ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை – சிவசக்தி குற்றச்சாட்டு! வவுனியா வடக்கு நெடுங்கேணியில் பிரதேச செயலகத்துடன் அனுராதபுரத்திலுள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆயிரம் குடும்பங்களை இணைப்பதற்கு அரசாங்க அதிபர் முன்மொழிவை ஒன்றினை எல்லை நிர்ணயக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார் . சிங்கள குடியேற்றங்களிற்கெதிராக வவுனியா வடக்கில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் இந்த மாவட்டத்தின் எல்…

  24. தாயகத்தில் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றிணைய தமிழரசுக் கட்சி முடிவு தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் அதிகளவான இராணுவத்தினரை குவித்து மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளை ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்றுவதற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த மாதம் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிரான மக்கள் போராட்டக் குழு மற்றும் தமிழ் அரசியல் கட்சிக…

  25. புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர், மாகாண சபைத் தேர்தல்! புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இதனை கூறினார். மாகாண சபைத் தேர்தலை தற்போது நடத்துவதற்கு சாத்தியமில்லை என குறிப்பிட்ட அமைச்சர், தேர்தலில் வெற்றிபெறுவது யார் என்று அப்போது பார்ப்போம் என்றும் சவால் விடுத்தார். இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியை அழித்து, நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக் கூட வெல்ல முடியாத பலவீனமான கட்சியாக மாற்றியதற்கும் நீங்கள் பொறுப்பு என்றும் அவர் சாடினார். https://athavannews.com…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.