ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
முகமாலையில் 316 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு November 3, 2021 கிளிநொச்சி – முகமாலை பகுதியில், கண்ணிவெடி அகற்றப்பட்ட 316 ஏக்கர் காணி, இன்று (03) உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூட்டுறவுச் சங்கங்களின் இரண்டு தேங்காய் எண்ணெய் ஆலைகள், ஒரு தும்புத் தொழிற்சாலை, வெதுப்பகம் மற்றும் சேதனப் பசளை உற்பத்தி மையம் ஆகியனவும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டடவாக்க இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, குறித்த காணிகளை கையளித்துள்ளனர். யுத்த காலத்…
-
- 1 reply
- 238 views
-
-
வடமாகாண பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை! வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை அவர் இன்று வழங்கியுள்ளார். நாளை (வியாழக்கிழமை) இந்துக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்ற நிலையில், பொது விடுமுறை நாளாகும். அதனால் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளைமறுதினம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதனால் பதில் நாளாக வரும் நவம்பர் 13ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறும் என்று மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். https://athavannews.com/2021/1248157
-
- 0 replies
- 153 views
-
-
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் சமையல் எரிவாயு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தலைநகர் கொழும்பில் மக்கள் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. (படப்பிடிப்பு ஜே.சுஜீவ குமார்) கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் மக்கள் | Virakesari.lk சமையல் எரிவாயுவிற்கு மீண்டும் தட்டுப்பாடு ? (எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்…
-
- 16 replies
- 864 views
- 1 follower
-
-
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர். புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் வியாபாரம் களைகட்டியது. அட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், பொகவந்தலாவை, புசல்லாவை, நுவரெலியா, கம்பளை மற்றும் இதர மலையக நகர பகுதிகளில் இன்று இந்நிலைமையே காணப்பட்டது. சில பகுதிகளில் மழைக்கு மத்தியிலும் வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தது. பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளதால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே தாம் பண்டிகையை கொண்டாடுவதாக மக்கள் வெளியிடும் கருத்துகள…
-
- 1 reply
- 316 views
-
-
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை காரணமாக அதிருப்தியடைந்த நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நாட்டுக்குத் திரும்பியதன் பின்னர், தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்க தயாராகி வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே ஓரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் தம்மை கலந்தாலோசிக்காமல் செயலணியை நியமித்ததில் அதிருப்தி அடைவதாகவும் அண்மையில் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கியிருந்த செவ்வியில் அமைச…
-
- 1 reply
- 230 views
-
-
(இராஜதரை ஹஷான்) தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் விலை நிலையாக பேணும் வரைக்கும் மட்டுப்படுத்தாத அளவிற்கு அரிசி இறக்குமதி செய்யப்படும். டொலர் உள்நாட்டில் அச்சிடப்பிடவில்லை. ஆகவே இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடைந்துள்ளன என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நுகர்வோர் லங்கா சதொச விற்பனை நிலையத்தில் அரிசி,சீனி ஆகிய பொருட்களை மாத்திரம் பெற முடியாது.தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களுடன் மாத்திரம் அரிசி,சீனி விற்பனை செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார். வர்த்தகத்துறை அமைச்சில் புதன்கிழமை (3) இடம…
-
- 0 replies
- 297 views
-
-
கிராமத்தை நோக்கிய பொலிஸ் சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்! கிராமத்தை நோக்கிய பொலிஸ் சேவை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று( செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்டது. கிராமத்துக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமித்து பொதுமக்களுக்கான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் இருவரும் அந்தக் கிராம சேவையாளர் பிரிவில் வாரத்தில் மூன்று நாள்கள் சேவையில் ஈடுபடவேண்டும். கிராமத்தில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிதல் பிணக்குகளைத் தீர்த்துவைத்தல் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை அந்தக் கிர…
-
- 1 reply
- 206 views
-
-
பிரபாகரனின் அரசியல், அவரது இராணுவ புத்திசாலித்தனத்துடன் ஒத்துப் போகவில்லை. November 3, 2021 ‘தமிழர்களின் போராட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும்’. இலங்கை செய்திருந்தது போர்க் குற்றமாகத்தகுதி பெறக்கூடும்! ————— இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போர் 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்அழிக்கப் பட்டதன் மூலம் முடிவுக்கு வந்தது. தசாப்தத்திற்கு மேலாகியும், ராஜபக்ச குடும்பம் தலைமையிலான இலங்கை அரசாங்கம், போரின் இறுதி நாட்களில் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன், போராடிக் கொண்டிருக்கிறது. பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவரது இறுதி நாட்கள்…
-
- 5 replies
- 409 views
-
-
வடமாகாண ஆளுநரை சந்தித்த இந்தியத் துணை தூதுவர் November 3, 2021 இந்தியத் துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அதன் போது , இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி , திட்டங்கள் , ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடினார்கள். குறிப்பாக கல்வி , சுற்றுலாத்துறை தகவல் தொழிநுட்பம் , விவசாய உற்பத்திகள், சுகாதாரம் மற்றும் வீட்டுத்துறை தொடர்பில் கலந்துரையாடினார். https://globaltamilnews.net/2021/168105
-
- 0 replies
- 162 views
-
-
தமிழர்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் உணரப்பட்டு இருக்கின்றது – ஹக்கீம் தமிழ்தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் (செவ்வாய்க்கிழமை) தமிழ் பேசும் கட்சிகளின் கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”இன்றைய சந்திப்பு ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் என்னிடமும் மனோ கணேசனிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. …
-
- 2 replies
- 173 views
-
-
எனக்கு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவே... ஞானசாரரை நியமித்தேன் – ஜனாதிபதி ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை அமைந்தமை தனக்கு ஆலோசனைகளை வழங்கட்டுவதற்காக மட்டுமே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் குறித்த செயலணிக்கு ஞானசாரதேரரை நியமித்தமை நாட்டுக்கு நீதியை வழங்குவதற்காக அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது குறித்த செயலணி தொடர்பாக அதிருப்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தன்னால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு கட்சித்தலைவர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் தனது நண்பர் ஒருவரை நியமிப்பதற்கும் அனுமதி கோரவேண்டிய நிலை ஏற்படும் என கூறிய…
-
- 12 replies
- 749 views
-
-
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி! மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அவலநிலையை எதிர்காலத்தில் அமையும் தனது அரசாங்கத்தின் கீழ் மீளவும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார். விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் உலகில் எந்த நாடும் 100 சதவீதம் இயற்கை விவசாயத்தை பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார். கு…
-
- 0 replies
- 150 views
-
-
கீரிமலையில் கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை முறியடிப்பு! யாழ். கீரிமலை பகுதியில் கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் முறியடிக்கப்பட்டது. காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை நகுலேஷ்வரம், ஜே/226 கிராம சேவகர் பிரிவில் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் ஒன்று நில அளவை திணைக்களத்தினால் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் அங்கு ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு செல்வதாக கூறிவிட்டு நில அளவைத் திணைக்களம் அவ்விடத்தில் இருந்து சென்றது. https:/…
-
- 0 replies
- 182 views
-
-
மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் போராட்டம்! இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்தப் போராட்டம் இன்று மதியம் 12 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டில் உள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களும் கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் நாட்டு மக்களுக்கு மின்சாரம் இருக்கின்ற நிலையில்தான், தாங்கள் கொழும்புக்கு வருவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் இணைப்பாளர் ர…
-
- 0 replies
- 136 views
-
-
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி தலைவரை மகாநாயக்கர்கள் பரிந்துரைக்க வேண்டும் – பொன்சேகா ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணிக்கு மகாநாயக்க தேரரால் பரிந்துரைக்கப்பட்ட பிக்கு ஒருவரை நியமித்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், குறித்த செயலணிக்கு தலைமை தாங்கும் நபர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். எனவே இவ்வாறான நியமனங்கள் தொடர்பாக அரசாங்கம் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த நியமனமானது தமது சித்தாந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் …
-
- 0 replies
- 130 views
-
-
சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு, ஞானசாரருக்கு அல்ல – ஐக்கிய தேசியக் கட்சி ‘ஒரு நாடு ஒரே சட்டம் தொடர்பான சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளது. நேற்று சிறிகொத்தவில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் பேசிய அவர், ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கருத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதி செயலணிக்கு இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். முஸ்லீம் சமூகத்தையும் நீதித்துறையையும் பகைத்துக்கொண்டது மட்டுமல்லாமல் ஒரு தமிழரை கூட குறித்த செயலணியில் நியமிக்காமல் அந்த சமூகத்தை ஜனாதிபதி அவமதித்துள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் உண்மையான தலைவர் அனைத்து ச…
-
- 0 replies
- 113 views
-
-
இலங்கைக்கு அண்மையில் நீடிக்கும் குறைந்த அழுத்தப் பிரதேசம் – 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி! இலங்கைக்கு அண்மையாகக் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுவதால், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பெய்யுமென அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்க…
-
- 11 replies
- 592 views
- 1 follower
-
-
அதிகார பகிர்வே தேசிய இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வு – விக்னேஸ்வரன் இணைந்த வடக்கு கிழக்கில் உயர்ந்தபட்ச சமஷ்டி அதிகார கட்டமைப்பு ஒன்றின் கீழ் ஏற்படுத்தப்படும் அதிகார பகிர்வே தேசிய இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று நடைபெற்ற தமிழ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட வரைபு ஆவணத்திலேயே விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனவே சமஷ்டி கட்டமைப்பின் கீழ் இத்தகைய ஒரு நிலையான தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா அனைத்துவிதமான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். குறுகிய அரசியல் இலாபம், தூர நோக்கற்ற சிந்தனை மற்றும் கடும் பௌத்த …
-
- 0 replies
- 105 views
-
-
வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையில் முதலமைச்சராக இருக்க விரும்புகின்றேன் என்று நான் கூறியிருந்தேன். அப்போது அதை நான் விளையாட்டாகவே கூறியிருந்தேன். ஆனால் இப்போது சிந்தித்துப் பார்த்தால் அது ஒரு நல்ல திட்டம். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நான் நிச்சயமாக அதனை விரும்புவேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- வடக்கும், கிழக்கும் இணைந்த மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் எனது விருப்பத்தை நீங்கள் பார்க்கலாம். நான் இப்படி கூறியவுடன், சாணக்கியன் எவ்வாறு இப்படிக் கூற முடியும் என்று எ…
-
- 7 replies
- 457 views
-
-
கீரிமலையில் கடற்படையினர் காணி சுவீகரிப்பு – நாளை எதிர்ப்பு போராட்டம்! யாழ்.கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 0.6474 ஹெக்டயர் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்று நாளை அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளது. கீரிமலை – நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் நாளை (புதன்கிழமை) காலை .8.30 மணிக்கு குறித்த காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலே அளவீட்டு பணிகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் காணி அளவீட்டை தடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2…
-
- 1 reply
- 330 views
-
-
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். இதன்போது, இரு நாடுகளின் தலைவர்களும் நட்பு ரீதியிலான கலந்துரையாடலில் ஈடுப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவை க்ளஸ்கோ நகரில் சந்தித்தமை மகிழ்ச்சியளிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சந்திப்பு! - உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 0 replies
- 238 views
-
-
(இராஜதுரை ஹஷான்) புறக்கணிக்கப்பட்ட சேதன பசளையை மீண்டும் பெற்றுக் கொள்ளுமாறு சீனா இராஜதந்திர மட்டத்தில் அழுத்தம் பிரயோகிக்கிறது. இலங்கையின் காலநிலைக்கும், மண்வளத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சீன நாட்டு உரம் நாட்டுக்குள் வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஜனாதிபதியின் தவறான தீர்மானத்தினால் ஏற்படபோகும் அழிவிற்கு முழு அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் நாடு தற்போது பெரும் அழிவை நோ…
-
- 0 replies
- 228 views
-
-
உடைப்பெடுக்கவுள்ள நொச்சிக்குளம்! வவுனியாவில் கடும் மழை பெய்துவரும் நிலையில் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவால் மேற்கொள்ளப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் சில நாள்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன், தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி வருகின்றது. மழை காரணமாக வவுனியா, ஓமந்தை நொச்சிக்குளத்தின் நீர் வரத்து அதிகரித்த நிலையில் குளத்தில் காணப்பட்ட உமை காரணமாக குளத்தின் கட்டு கீழ் இறங்கி உடைப்பெடுக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு மற்றும் இராணுவத்தினர், நகரசபையின் தீயணைப்புப்…
-
- 0 replies
- 222 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) ‘முஜாஹித்தீன் for அல்லாஹ் ‘ (mujahideen for allah) எனும் பெயரிலான வட்ஸ் அப் குழுமம் ஒன்றின் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவன் ஸஹ்ரான் ஹாஷிமின் போதனைகளுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் 702 இலங்கை தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்திய தேசிய உளவுத்துறை அந்நாட்டில் கைது செய்த ஐ.எஸ்.ஐ எஸ் சந்தேக நபரின் தொலைபேசியிலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களுக்கு அமைய, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக அளித்த தகவல் பரிமாற்றத்தை மையப்படுத்தி, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரம…
-
- 1 reply
- 278 views
-
-
தமிழ்த் பேசும் மக்களின் தலைவர்கள் 2ம் திகதி யாழில் சந்திப்பு! 13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் 2ம் திகதி நவம்பர் மாதம் காலை பத்து மணி தொடக்கம் யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் ஏற்கனவே தீர்மானிக்க பட்டதன் பிரகாரம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின்( புளட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…
-
- 3 replies
- 344 views
- 1 follower
-