ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142678 topics in this forum
-
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்! யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் தலைலையில் இணைத்தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான வேதனாயகனின் பங்கேற்புடன் இன்று( 17) காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலாகவே இன்றையதினமும் குறித்த கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதினிதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். மேலும், வீதி அவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு, போக்குவரத்து, மின்சாரம், வீடமை…
-
- 0 replies
- 93 views
-
-
Published By: VISHNU 17 JUL, 2025 | 02:52 AM யாழ்ப்பாணம் செம்மணி படுகொலை தொடர்பில் அரசின் கவனம் திரும்பியிருக்கின்றது. தோண்ட தோண்ட வெளிவரும் பச்சிளம் பாலகர்களின் மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகளும், அதிகமான உடல்கள் இருப்பதாகவும், புதைக்கப்பட்டிருப்பதாகவும், தோண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வடமாகணத்திலே தமிழர்களின் ஆதரவைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறிப்பாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அரசாங்கம் இருக்கின்றது. இந்த நிலையில் செம்மணி புதைகுழி விடயம் கவனம் செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது இது வரவேற்கத்தக்கது இதற்கு நிச்சயமாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இவற்றைப்போல் கிழக்கிலும் இன்றும் கண்டுகொள்ளப்படாத படுகொலைகள், தோண்டப்பட வேண்டிய பல புதைகுழிகள் உள்ள…
-
- 2 replies
- 146 views
- 1 follower
-
-
17 JUL, 2025 | 08:43 AM நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்ததாக அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே கப்பல் வழியாக போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு இருவழி கட்டணமாக 28 ஆயிரத்து முந்நூறு ரூபாவும், காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் செல்வதற்கு ஒருவழி கட்டணமாக 12 ஆயிரத்து முந்நூறு ரூபாவும், நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வருவதற்கு ஒருவழி கட்டணமாக 16 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படுகிறது. இதேவேளை நல்லூர்…
-
- 0 replies
- 99 views
- 1 follower
-
-
Published By: VISHNU 16 JUL, 2025 | 08:13 PM (நா.தனுஜா) நாம் ஒரு சிறுமிக்காக துன்பப்படவில்லை என்றால், எம்மால் ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால், நாம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறோம்? கடந்தகாலம் எம்மைத் துரத்துவதாக இதனைக் கருதமுடியாது. மாறாக நிகழ்காலத்தில் உண்மையை வெளிப்படுத்துமாறு கோரப்படுவதாகவே இதனைக் கருதவேண்டும் என சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் சுட்டிக்காட்டியுள்ளார். செம்மணி மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் சிறுவர்களின் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 - 5 வயதுடைய சிறுமியினுடையதாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் செவ்வாய்க்கிழமை (15) யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். செம்…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
16 JUL, 2025 | 04:40 PM கனடா நாட்டுக்கு செல்வதற்காக முகவர் ஒருவரிடம் பெரும் தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 34 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முகவர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தினை வழங்கியுள்ளார். இரண்டு வருட காலமாக கனடா அனுப்பாது முகவர் தொடர்ந்து ஏமாற்றி வந்தமையால், பணத்தை மீள தருமாறு முகவருடன் தர்க்கப்பட்டு வந்துள்ளார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தனது பணத்தை மீள தருமாறு முகவருடன் தர்க்கம் புரிந்த நிலையிலும் பணத்தை முகவர் கொடுக்க மறுத்தமையால்…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
16 JUL, 2025 | 04:36 PM போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என அந்நாட்டுத் தூதுவர் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கான கனடா தூதுவருக்கும், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன், ஸ்ரீபவானந்தராஜா மற்றும் க.இளங்குமரன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் புதன்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைவரம், காணி பிரச்சினை, வடக்கை இலக்காகக் கொண்டு அமையவுள்ள முதலீட்டு வலயங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல்…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 16 JUL, 2025 | 04:33 PM சூரிய சக்தியைப் பயன்படுத்தும் எதிர்காலத்திற்காக பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயல்படும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் 7 ஆவது மாநாட்டில் தெரிவித்துள்ளார். சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு கொழும்பு ஐசிடி ரத்னதீப ஹோட்டலில் இன்று புதன்கிழமை (16) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் ஆரம்பமானது. "பன்முகத்தன்மையும் வாய்ப்புகளும் நிறைந்த பிராந்தியத்தின் ஊடாக சூரிய சக்தி ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லுதல்" எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இணைத் தலைமைத்துவத்தை இலங்கை வகித்தது. இதன்…
-
- 0 replies
- 72 views
- 1 follower
-
-
மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காக 53,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு! உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 76 பில்லியன் ரூபா நிதியை எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் பயன்படுத்த வேண்டுமென பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் உள்ளூராட்சி அமைப்புகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கடந்த பாதீட்டில் இருந்து 23 பில்லியன் ரூபாவும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்திப் பணிகளுக்காக 53 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார். https://athavannews.com/2025/1439452
-
- 0 replies
- 93 views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிபேபிக்கு மரண தண்டனை! அலிபேபி என்றழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வெலிகெபொல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கொடித்துவக்கு ஆராச்சிலக் வசந்தா என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெலிகெபொல ஹட்டங்கல பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக எஸ். ராகலவினால் குறித்த உத்தரவு இன்று (16) பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1439445
-
- 0 replies
- 136 views
-
-
"ஜூலை 25 கறுப்பு ஜூலை நினைவேந்தலும் விடுதலைக்கான போராட்டமும் ; விடுதலைக்கான திறவு கோல்களை கனதியாக்குவோம் வாரீர் " - குரலற்றவர்கள் குரல் அமைப்பு அழைப்பு 16 JUL, 2025 | 03:37 PM கறுப்பு ஜூலை 'பொது நினைவேந்தலும்- விடுதலைக்கான போராட்டமும்'' குரலற்றவர்களின் குரல்' அமைப்பினால் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பபாளர் மு.கோமகன் யாழ் . ஊடக அமையத்தில் புதன்கிழமை (16) நடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், இதுவரை காலமும் இலங்கையின் கொடூர சிறைக்கூடங்களுக்குள் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நீதி நியாயத்தை கோருகின்ற 'பொது ந…
-
- 0 replies
- 70 views
- 1 follower
-
-
16 JUL, 2025 | 03:45 PM வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் வடக்கு மாகாணத்தின் 4 செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர் மற்றும் பதில் ஆணையாளர் ஆகியோருக்கான நியமனங்கள் ஆளுநர் செயலகத்தில் வைத்து புதன்கிழமை (16) வழங்கி வைக்கப்பட்டன. பருத்தித்துறை பிரதேச செயலராகக் கடமையாற்றிய எஸ்.சத்தியசீலன் வடக்கு மாகாண சபைக்கு புதிதாக உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக கடமையாற்றிய மு.நந்தகோபாலன், மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பிரதேச செய…
-
- 0 replies
- 63 views
- 1 follower
-
-
16 JUL, 2025 | 11:08 AM யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பாலசுந்தரம் ஜெயகரன் இன்றைய தினம் (16) காலை 9 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள். மேலதிக அரசாங்க அதிபராக (காணி) கடமையேற்ற ஜெயகரன், முன்னர் உடுவில் பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220107
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
16 JUL, 2025 | 09:29 AM திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் M. H. யூசுப் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம், திங்கட்கிழமை (14) கந்தளாய் பகுதியில் வைத்து, மேற்கொள்ளப்பட்டதோடு, குறித்த, கொலை மிரட்டலையும் தாக்குதல் முயற்சியையும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலே மேற்கொண்டதாகவும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். குறித்த ஊடகவியலாளர், அன்றைய தினம் இரவு 11 மணியளவில், தனது பகுதி நேர தொழிலான, சிசிரிவி கமரா பொருத்தும் பணியில், கந்தளாய் நகரில் ஈடுபட்டிருந்த போதே, இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இந்த நேரத்தில், இருவர் அவரிடம் வந்து முதலில் தீ…
-
- 0 replies
- 99 views
- 1 follower
-
-
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் அந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குருநாகலில் ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர், இந்த குற்றவாளிகள் மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளில் இருப்பதாகவும், அவர்களைக் கைது செய்ய சர்வதேச பொலிஸ் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார். பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மலேசியாவில் இருப்பதாக சமூக ஊடகங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மூலம் சமீபத்தில் தகவல் பரப்பப்பட்டதாகவும், இந்த தகவல் துல்லியமானது …
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
விஜேவீர படுகொலை: தொரதெனிய கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஸ்தாப தலைவர் ரோஹண விஜேவீரவின் கொலையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக தொரதெனியவுக்கு தொடர்பு இருப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா கூறிய குற்றச்சாட்டுகள் காரணமாக தொரதெனிய ஒரு வழக்கைத் தாக்கல் செய்து, தனது பெயரைப் பயன்படுத்துவதைத் தடுக்க தடை உத்தரவைக் கோரினார். நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து தடை உத்தரவு விண்ணப்பத்தை நிராகரித்தது. அந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை (15) வழங்கப்பட்டது, வழக்கின் தீர்ப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு பின்வரும் கருத்துக்களை இந்திரானந்த தெரிவித்தார். "ரோஹண விஜேவீர கொலை தொடர்பாக தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள…
-
- 0 replies
- 102 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட 281 நபர்களின் அறிக்கை வெளியானது - செம்மணிக்கு ஓர் திருப்புமுனையாகலாம்! யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 281 பேர் குறித்து விபரங்களுடன் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது வெளிப்பட்டுள்ளது. இந்த அறிக்கை செம்மணியில் மனித எலும்புக்கூடுகளை இனங்காணுவதற்கு ஒரு திருப்பு முனையாக அமையலாம் என்று நம்பப்படுகின்றது. வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நால்வர் கொண்ட குழுவினால் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 95 வீதத்துக்கும் அதிகமானோர், 1996 - 97 ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ்.பிரதேசத்தில் இருந்து சீருடைத் தரப்பினரால…
-
- 1 reply
- 112 views
- 1 follower
-
-
35 கிலோ கிராம் தங்கத்துடன் ஒருவர் கைது! சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியானது 01.1 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் கிரேண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நேற்று காலை 8:40 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரிடம் 195 தங்க பிஸ்கட்களும் 13 கிலோகிராம் தங்க நகைகளும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை ம…
-
- 0 replies
- 164 views
-
-
அனுராதபுர வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார். குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய சந்தேகநபரின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்கு அனுமதி வேண்டும் என சந்தேகநபரால் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.சி.…
-
- 2 replies
- 192 views
- 1 follower
-
-
செவிலியர் சேவையில் ஆர்வமுள்ளவர்களுக்கு சூப்பர் செய்தி! செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 2,650 மாணவர்களையும், செவிலியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் ஆட்சேர்ப்பு செய்ய இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "உண்மையில், எங்களுக்கு செவிலியர் பற்றாக்குறை உள்ளது. வடக்கில் மட்டும், 33 பிராந்திய வைத்தியசாலைகளில் செவிலிய…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
15 JUL, 2025 | 06:12 PM தற்போது வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறலையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில், முதல்வன் திரைப்பட பாணியில் அந்தப் பொறுப்புக்களை ஒரு மாதகாலத்திற்கு வடபகுதி மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். மன்னார் - முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது. இந்நிலையில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ…
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
15 ஜூலை, 2025 நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கும் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பிக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் 9,191 குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் அவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார். https://thinakkural.lk/article/318947
-
- 1 reply
- 95 views
- 1 follower
-
-
விமல் வீரவன்சவைக் கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்! விமல் வீரவன்சவை கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் செயலாளர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” செம்மணி மனித புதைகுழியிலே குழந்தைகளின் எலும்புக்கூடுகள், பெண்களின் ஆடைகளுடன் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் அனைத்தும் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் நாங்கள் சர்வதேச நீதி வேண்டிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் புற்றுக்குள் இருந்து கொண்டு பாம்பு வந்தது போல ஜேவிபி கட்சியின…
-
- 0 replies
- 132 views
-
-
இலங்கைக்கான தனது பிரீமியம் சலுகையை விரிவுபடுத்தும் எமிரேட்ஸ்! உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், ஜூலை 18 முதல் துபாய் மற்றும் கொழும்பு இடையே இயங்கும் EK650/651 விமானங்களில் அதன் மறுசீரமைக்கப்பட்ட நான்கு வகுப்பு போயிங் 777 விமானங்களை பயன்படுத்தவுள்ளது. இதன் மூலம், இலங்கையில் பிரீமியம் எகானமி இருக்கைகளைக் கொண்ட இரண்டாவது தினசரி விமானமாக எமிரேட்ஸ் மாறும். தற்போது, எமிரேட்ஸின் விரிவான வலையமைப்பில் 40க்கும் மேற்பட்ட இடங்கள் பிரீமியம் எகானமியை வழங்குகின்றன. பிரீமியம் எகானமியை வழங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலிருந்து வரும் பயணிகள் மற்றும் கொழும்புக்கான பயணங்களைத் திட்டமிடுபவர்கள் தங்கள் முழு பயணத்தையும் முன்பதிவு செய்து, உயர்ந்த பயண அனுபவத்தையும் அனுபவிக்கல…
-
- 0 replies
- 101 views
-
-
15 JUL, 2025 | 05:08 PM சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வுக்கூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) என்பவற்றுக்கு இடையே இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையின் (NIRDC) வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த 15 மில்லியன் டொலர் முதலீட்டு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமெரிக்காவின் STEMedical சார்பில் அதன் ஸ்தாபகர் பேராசிரியர் ஹான்ஸ் கீர்ஸ்டெட் (Prof. Hans Keirstead) மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIBTEC) தலைவர் பேராசிரியர் சமித ஹெட்டிகே மற்றும் பிரதம நிறைவேற்ற…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம். இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்கள் ஜனாதிபதி செயலகம் அருகில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள தங்களுடைய பூர்வீக காணிகளை இழந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச மக்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் குறித்த ஆர்ப்பாட்டம் பங்கேற்றிருந்தார். இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ‘மூதாதையர் நிலங்களை இலங்கை அரசு திருப்பித் தர வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/202…
-
- 2 replies
- 115 views
- 1 follower
-