Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மணல் கடத்தலை தடுக்க சென்ற பொலிஸார் மீது வாகனத்தை மோதிய கடத்தல்காரர்கள்! வடமராட்சி கிழக்கில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரிமீது டிப்பர் வாகனத்தால் மோதிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதன் போது படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வடமராட்சி வல்லிபுர குறிச்சி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கிழக்கிலிருந்து சட்டத்துக்குப் புறம்பமாக மணல் அகழ்வில் ஈடுபட்டோர் டிப்பர் வாகனத்தில் மணலை ஏற்றிப் பயணிப்பதாக உள்ளூர் மக்களால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனை அறிந்து பருத்தித்துறை ப…

  2. எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் பேசும் மக்களே! மற்றும் மறை மாவட்ட குருமார்களே! 45 Views கடந்த 01/04/2021 அன்றையநாள் ஈழத்தமிழினத்தின் நெஞ்சங்களில் இடியாய் இறங்கிய துயரநாள் என்று மறைந்த முன்னாள் மன்னார் ஆயருக்கு “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்” தனது அஞ்சலியை செலுத்தியுள்ளது. ஆயரின் மறைவு குறித்து “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்” வெளியிட்டுள்ள அஞ்சலி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை, “எமது தாயகத்தில் சிங்கள இனவாத அட்டூழியங்களுக்கு எதிராகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களமயமாக்கலுக்கெதிராகவும் இறுதி வரை அறப்போர் புரிந்து வந்த மாமனிதர்…

  3. நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்; மாகாண சபை முறைமையையே எதிர்க்கிறேன் : அமைச்சர் சரத் வீரசேகர (சி.எல்.சிசில்) நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன். ஆனால், மாகாண சபை முறைமையை எதிர்க்கின்றேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். யாழ்.,வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் புதிதாகஅமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை நேற்று திறந்து வைத்த பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதேஅவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- வடக்கில் இரண்டு பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்காக நான் வந்துள்ளேன். மல்லாவி மற்றும் மருதங்கேணிப் பகுதிகளில் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக இரண்டு பொலிஸ் நிலையங்களைத் திறந்து வைத்துள்ள…

    • 1 reply
    • 493 views
  4. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம் இலங்கை வரலாற்றில் அண்மைக்காலமாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 202.04 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 197.62 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம் – Athavan News

  5. ஜேர்மனியில் இருந்து 31 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர் ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 புகலிட கோரிக்கையாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த 31 புகலிட கோரிக்கையாளர்களும் Dusseldorf சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் இன்று நாட்டை வந்தடைவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து Dusseldorf விமான நிலையத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்த நாட்டின…

  6. வடக்கு மீனவர்களுடன் ஆலோசிக்காது முடிவுகளை எடுப்பது ஏற்புடையதல்ல- சுரேஷ் சுட்டிக்காட்டு! இலங்கையின் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்கள் வடக்கு மீனவர்களின் கருத்துக்களையும் கேட்டே எடுக்கப்பட வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பாக அனுமதி அட்டைகளை வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும், அவ்வாறான எந்தவொரு திட்டமிடலும் இடம்ப…

    • 0 replies
    • 265 views
  7. மட்டு.பண்ணையாளர்களின் மற்றுமொரு மேய்ச்சல் தரை இராணுவத்தினரால் அபகரிப்பு மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மற்றுமொரு மேய்ச்சல் தரை, இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கந்தர்மல்லிச்சேனை பகுதியிலுள்ள மேய்ச்சல் தரை காணிகளே இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பாக மக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை தெரிவித்து வந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) கள விஜயமொன்றினை ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.ச…

    • 0 replies
    • 353 views
  8. எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் அறிவிப்பு மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயரின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிடமுடியாத ஒரு பேரிழப்பாகும்.2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கபட்ட பின்னர் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நேரத்தில் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவர்.இந்நிலையில் இராயப்பு யோசப் ஆண்டகை தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு சிவில் சமூக அ…

    • 2 replies
    • 330 views
  9. உலகெங்கும் தமிழர்களின் கலை வடிவங்களைக் காவிச்சென்றார் மரியசேவியர் அடிகளார்- யாழ். தமிழ் சங்கம் 44 Views திருமறைக் கலாமன்றம் எனும் அமைப்பைத் தாபித்து அதன் மூலம் உலகின் பல பாகங்களுக்கும் தமிழர்களின் கலைவடிவங்களை காவிச் சென்றவர் கலைத்தூது மரியசேவியர் அடிகளார் என அவரது மறைவையொட்டி யாழ்ப்பாண தமிழ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தனது நிர்வாகத் திறத்தினாலும் கலையாற்றலினாலும் திருமறைக் கலாமன்றம் எனும் காத்திரமான தனித்துவமான ஒரு கலை அமைப்பை நிறுவி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்த அமைப்பை தளராது முன்னோக்கி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற தனித்துவம் ஈழத்தின் கலையுலக மரபில் அவருக…

  10. வாகரையில் விவசாயத்திற்கென வாங்கும் காணிகள் கைமாறி விற்பனை செய்யப்படுகின்றன! - எஸ்.வியாழேந்திரன்! By கிருசாயிதன் April 3, 2021 வாகரைப் பிரதேசத்திலுள்ள காணிகளை பண்ணை மற்றும் விவசாயம் செய்யப் போகின்றோம் என்று பெற்று அவற்றை கைமாறி விற்பனை செய்யும் வரலாறு வாகரையில் இடம்பெற்று வருகின்றது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கக்கரி செய்கை விவசாயிகள் சந்திப்பும், உதவி வழங்கும் நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை மாங்கேணியில் இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வறுமையின் வாழும் மக்களை கொண்ட பிரதேசமாக வாகரைப் பிரதேசம் காணப்படுகின்றது. ஆனால் தற்போ…

  11. மட்டு. பண்ணையாளர்களின் மற்றுமொரு மேய்ச்சல் தரை இராணுவத்தினரால் அபகரிப்பு மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மற்றுமொரு மேய்ச்சல் தரை, இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கந்தர்மல்லிச்சேனை பகுதியிலுள்ள மேய்ச்சல் தரை காணிகளே இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பாக மக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை தெரிவித்து வந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) கள விஜயமொன்றினை ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மட்டக…

  12. ஜெனீவா அறிக்கைக்கு எதிராக நாங்கள் ஒன்றிணைய வேண்டும் – அமைச்சர் பீரிஸ் ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிராக படைவீரர்களை காப்பாற்ற மற்றும் நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக ஒரு நாடாக இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும் என அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது. பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து கருத்து தெரிவிக்கும்போதே கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இவ்வாறு அழைப்பு விடுத்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேரத்திற்குள், இலங்கையைப் பற்றி அறிய 13 புதிய நியமனங்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஜி. எல். பீரிஸ் குறிப்பிட்டார். இந்த அறிக்கைகளில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வியெழுப்பிய எதிர்க்கட…

    • 4 replies
    • 502 views
  13. யாழ். பல்கலையின் வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான வர்த்தமானி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்தை, பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. இந்த வர்த்தமானி இந்த மாதம் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்த அவர், வவுனியா வளாகம் தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக உள்ளதாகத் தெரிவித்தார். அதனை, பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியடுவதற்கான பணிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் கல்வி அமைச்சும் தற்போது இறுதிப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்தார். htt…

  14. இலங்கைக்குள் 3000 முதல் 4000 வரையிலான சீனர்களே உள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் சீனா அன்பளிப்பாக வழங்கிய 6 இலட்சம் சினோர்பாம் கோவிட் தடுப்பூசிகளில் ஒன்று அல்லது இரண்டு வீதமான தடுப்பூசிகள் இவர்களுக்கு செலுத்தப்படவுள்ளன. சுமார் 3 இலட்சம் குப்பிகள் அவர்களுக்கு போதுமானதாக அமையும். ஏனையவை இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் என்று இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. இதனை தவிர்த்து சீனாவின் கோவிட் தடுப்பூசிகள் முழுமையாக இலங்கையில் உள்ள சீன மக்களுக்கு மாத்திரமே செலுத்தப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று சீனத் தூதரகம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/community/01/272213?ref=home-latest

  15. ஐநா தீர்மானம் சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார் - கருணா அம்மான் ஐநா தீர்மானம் நிறைவேற்றத்தினூடான சில தகவல்ளை அரசாங்கத்திற்கு தந்திருக்கின்றார்கள். இது சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார். எனவே சிறந்த முறையில் இந்த மாற்றங்களை உருவாக்கி மீண்டும் இந்த ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இன்றைய தினம் செங்கலடியில் இடம்பெற்ற தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர்…

    • 142 replies
    • 8.6k views
  16. (இராஜதுரை ஹஷான்) மாகாண சபை தேர்தல் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை கோருவதும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதும் பயனற்றது. அது குறித்து நாட்டு மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உருவாக்கத்திற்கு இந்தியா முன்னின்று செயற்பட்டது. காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்தி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்களை முழுமையாக செயற்படுத்துமாறு இந்தியா அண்மையில் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது. மாகாண சபை தேர்தல் குற…

    • 1 reply
    • 440 views
  17. சுதந்திரபுரத்தில் அமைந்துள்ள தனது காணியினை மக்களுக்கு வழங்க ஆனந்தசங்கரி நடவடிக்கை! தந்திரபுரத்தில் அமைந்துள்ள தனது காணியினை அரசாங்கத்திடன் கையளிக்கும் பத்திரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஒப்பிமிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் வீ.ஆனந்தசங்கரிக்கு 15 ஏக்கர் மத்தியவகுப்பு காணியாக இருந்தது. குறித்த காணியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேறி வசித்த வந்த நிலயைில் அக்காணியை தமக்கே பகிர்ந்து வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த காணியை மக்களிற்கு பகிர்ந்தளிக்குமாறு ஆனந்தசங்கரி எழுத்த…

  18. (எம்.எப்.எம்.பஸீர்) கட்டாரிலிருந்து 'வன் உம்மா ' ( ஒரே சமூகம்) எனும் பெயரில் வட்ஸ் அப் சமூக வலைத் தள குழு ஒன்றினை அமைத்து அதனூடாக அடிப்படைவாத கருத்துக்களை பகிர்ந்ததாக கூறப்படும் மேலும் இருவரை ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காத்தாண்குடிக்கு சென்ற சிறப்பு ரி.ஐ.டி. குழுவினர் அவர்களைக் கைது செய்தனர். 28,29 வயதுகளை உடைய குறித்த இரு சந்தேக நபர்களும் தற்போது கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இன்று கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் கட்டாரிலிருந்து…

  19. அரசிடம் நல்லபெயர் பெறுவதற்காக மக்களை வீதியில் விட்ட அதிகாரிகள் – சரவணபவன் அரசை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது என்ற நினைப்புடன் அரசை திருப்திப்படுத்தி மக்களைப் பட்டினிபோட்டு நடுத்தெருவில் விடும் வகையில் வடக்கு அதிகாரிகள் சிலர் செயற்படுகின்றனர் என இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிகரித்ததையடுத்து யாழ். நகர் மத்திய பகுதி மற்றும் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் என்பன முடக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதி மக்களுக்கு அரச உதவிகள் எவையும் கிடைக்கவில்லை. அது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேல…

    • 0 replies
    • 653 views
  20. ஜோசப் ஆண்டகை பெயரில் புதிய சதுக்கம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கருத்து 20 Views தமிழர்தாயகத்தில் ஒரு புனிதமான சதுக்கம் உருவாக்கி பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பெயரிடப்பட வேண்டும் என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியாவில் கடந்த 1505 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்களால் உயிரிழந்த பேராயர் இராயப்பு ஜோசப்பிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்…

  21. பிள்ளையான் என்னை பார்த்து பயப்படுகின்றாரா , நாமலிடன் கேள்விகேட்ட சாணக்கியன் பிள்ளையான் என்னை பார்த்து பயப்படுகின்றாரா என்று அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வியெழுப்பினார். பிரதமரின் அலுவலகத்தின் ஆலோசனைக்கமைவாக கிராமிய பொருளாதார மேம்பாட்டு தேசிய வேலைத்திட்டதின் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். கூட்டத்தின் ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…

  22. இந்திய அரசின் உயர்கல்வி புலமைப்பரிசில் வாய்ப்புக்கள் http://www.samakalam.com/wp-content/uploads/2021/04/eduadvice-education-in-india-png-547_410.pngஇந்தியாவில் பட்டப் படிப்பு, பட்டப்பின் படிப்பு மற்றும் ஆராய்ச்சி / கலாநிதி கற்கை நெறிகளுக்கான புலமைப் பரிசில்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: இந்தியாவில் பட்டப் படிப்பு, பட்டப்பின்படிப்பு மற்றும் ஆராய்ச்சி/கலாநிதி கற்கை நெறிகளுக்கான புலமைப் பரிசில்கள் கலாசார உறவுகளுக்கான இந்தியக் கவுன்சிலின் (ICCR) 2021-2022 கல்வி ஆண்டுக்கா…

  23. மக்களை நீங்கள் கொல்லவில்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்கள்

  24. தமிழர்களின் குரலாக இருந்தவர் மறைந்த மன்னார் ஆயர்’ – தமிழ் சிவில் சமூக அமையம் 19 Views மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை விடுதலை இறையியல் தத்துவார்த்தத்தை தனது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார் என தமிழ் சிவில் சமூக அமையம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிவில் சமூக அமையத்தின் தோற்றுனர்களில் ஒருவரும் அதன் முதல் அமைப்பாளருமான மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி. இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவை ஒட்டி தமிழ் சிவில் சமூக அமையம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,“23 வருடங்கள் கத்தோலிக்க திருச்சபையின் மன்னார் மறை ஆயராகவும் பல தசாப்த காலங்களாக தமிழ் சிவில் சமூக செயற்பா…

  25. (இராஜதுரை ஹஷான்) மாகாண சபை தேர்தல், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட விடயங்களில் இந்தியா தலையிடுவது இலங்கையின் இறையான்மையை பலவீனப்படுத்தும். புதிய அரசியலமைப்பினை நடைமுறைப்படுத்தும் வரை மாகாண சபை தேர்தலை தொடர்ந்து பிற்போடுவது சாதகமாக அமையும். மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என நாட்டு மக்கள் எவரும் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. தேர்தலுக்கு செலவிடும் 500 கோடி நிதியை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளியுங்கள் என பௌத்த மத தலைவர்கள் ஜனாதிபதிக்கு வலியுறுத்தியுள்ளார்கள். உம்மாரே கஸ்சப தேரர், அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர், பெங்கமுவே ஆனந்த தேரர் ஆகிய 12 தேரர்கள் ஒன்றினைந்து மாகாண சபை தேர்தல் தொடர்…

    • 1 reply
    • 355 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.