Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 07 Jul, 2025 | 06:03 PM வடமராட்சி கிழக்கு பொது மைதானம் கட்டாக்காலி மாடுகளின் வசிப்பிடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். உரிய பராமரிப்பு இன்றியும் ஒரு பக்க வேலியற்றும் காணப்படும் வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான மாடுகள் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பொது மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை கடந்த பல வருடங்களாக காணப்படுகின்றது. இது குறித்து அருகில் அமைந்துள்ள பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையினருக்கு தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். வடமராட்சி வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் உடனடியாக பொது மைதானத்தின…

  2. 07 Jul, 2025 | 07:03 PM யாழ்ப்பாணம் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. அந்தவகையில் 07ஆம் திகதி திங்கட்கிழமை 52 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 47 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. புதிதாக அகலப்படும் குழியிலிருந்து ஒரு மண்டையோடு இன்றைய தினம் மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா அவர்களின் குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த புதைகுழி விவகாரமானது சர்வதேச ரீதியில…

  3. Published By: DIGITAL DESK 3 07 JUL, 2025 | 03:21 PM சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கிடைத்த தகவலுக்கமைய இலங்கை கடற்படையால் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (06) நான்கு இந்திய மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சீரற்ற வானிலையால் இந்திய மீன்பிடிக் கப்பல் காணாமல் போனதாக மும்பை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்க…

  4. Published By: DIGITAL DESK 3 07 JUL, 2025 | 04:00 PM ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பகிரங்கப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சம்பள விபரத்தை இவ்வாறு பகிரங்கப்படுத்தியமை இதுவே முதல் தடவையாகும். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாத சம்பளம் (கழிவுகள் போக) 3 இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் ஆகும். ஆரம்பத்தில் எனது சம்பளத்தை ஏற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை. பின்பு அதை சமூக சேவைகளுக்கு செலவிட நான் முடிவு செய்தேன். எனக்கு சம்பளம் அவசியமில்லை நான் ஒரு வர்த்தகர் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/…

  5. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது! விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக கடந்த வாரம் தகவல் வெளியாகியதையடுத்து இன்று வாழைத்தோட்டம் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் 50,000 ரூபா பெறுமதியுடைய மருத்துவ உபகரணங்களை நோயாளிகளுக்கு 175,000 ரூபாவுக்கு விற்றபனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பி…

  6. எரிசக்தி திட்ட ஆரம்ப செலவை திருப்பிச் செலுத்துமாறு அதானி நிறுவனம் கோரிக்கை! அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை கைவிட்ட அரசாங்கம், இப்போது அந்த நிறுவனத்தால் ஆரம்பத்தில் செலவழிக்கப்பட்ட சில மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவு நாட்டுடனான இரண்டு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டங்களிலிருந்து விலகுவதாக இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு முன்னதாகத் தெரிவித்திருந்தது. தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலையைக் குறைக்க இலங்கை முயன்றதை அடுத்து, நிறுவனம் அந்த முடிவை எடுத்தது. அதானியுடன் இந்தத் திட்டத்தை மேற்கொண்ட…

  7. 07 JUL, 2025 | 10:41 AM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்தவர் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியான கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கின்ற மக்களின் மீன்பிடி நிலங்கள், மக்களுக்குரிய காணிகள் திருகோணமலையில் இருந்து வந்த கடற்படையின் ஒரு குழுவால் மிக இரகசியமாக அளவீடு செய்யப்பட்டுள்ளது. தங்களுடைய சொந்தக்காணிகள் கடற்படையினரால் அளவீ…

  8. Published By: VISHNU 07 JUL, 2025 | 01:36 AM (செ.சுபதர்ஷனி) அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு தரமான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்கான சிறப்பு திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நோயாளர்களுக்கான விசேட உணவு வேலைத்திட்டம் தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதற்கமைய மஹரகம புற்றுநோய் மருத்துவமனையை மையமாகக் கொண்டு இந்த சிறப்புத் திட்டத்திற்கான முன்னோடித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது. அ…

  9. செம்மணி மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் ? adminJuly 7, 2025 செம்மணி மனித புதைகுழிக்கு அருகில், உள்ள பகுதிகளில் மேல் தெரியும் வகையிலும் மனித எலும்பு கூட்டு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , மனித புதைகுழிகளுக்குள் வெள்ள நீர் புகாத வகையில் மண் மேடு அமைக்கும் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுப்பட்டது. அதன் போது, புதைகுழிக்கு அருகில் உள்ள பகுதியை துப்பரவு செய்து மண் அகழ்ந்து புதைகுழிக்கு அருகில் மண் மேடு அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட வேளை அப்பகுதிகளில் மனித எலும்பு கூட்டு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , மண் அகலும் பணிகள் நிறுத்தப்பட்டு , அவ்விடத்தில் புதைகுழி அகழ்வு பணிகளை முன்ன…

  10. Published By: DIGITAL DESK 2 06 JUL, 2025 | 05:51 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களின் போது இடம்பெற்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்கு எதிர்கால திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் எதிர்கால திட்டமிடல்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு அரசியலமைப்பினால் உரித்தாக்கப்பட்டுள…

  11. வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த அதிசொகுசு கடுகதி ரயில், நாளை (7) முதல் கல்கிஸ்ஸ மற்றும் காங்கேசன்துறை இடையே தினமும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு இணையாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு தினமும் அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் யாழ்தேவி ரயில் புறப்படும் நேரமும் நாளை முதல் திருத்தப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து ரயில் புறப்படும் நேரம் காலை 6.40 மணியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒ…

  12. Published By: DIGITAL DESK 3 06 JUL, 2025 | 12:23 PM கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். அந்தவகையில், இன்று அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றுமொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை கைது செய்துள்ளனர். குறித்த கவலுக்கமைய கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் வைத்து வீட்டுக்குள் மறைந்திருந்த வேளை இனிய பாரதி புலனாய் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/2192…

  13. 06 JUL, 2025 | 09:36 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தம் பின்னடைவுகளை சந்தித்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இவ்வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. புதன்கிழமை (09) உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த விவாதம் இதற்கு முன்னரும் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட போதிலும், பயங்கரவாத தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட சூத்திரதாரிகள் குறித்து எந்த வெளிப்பாடுகளை…

  14. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் - அமைச்சர் விஜித்த ஹேரத் 06 JUL, 2025 | 09:33 AM (எம்.வை.எம்.சியாம்) பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் இயக்கம் எமதாகும். இந்த சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, பாதாள உலக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டமொன்றும் அவசியமாகும். எனவே இந்த புதிய சட்டத்தை மூன்று மாதங்களில் அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவது எமது இலக்காகும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அமைச்சர் விஜித்த ஹ…

  15. 05 JUL, 2025 | 07:45 PM புதிய சுற்று நிருபத்தில் 1756 பட்டதாரி ஆசிரியர்கள் வடக்கு மாணத்தில் உள்வாங்கப்படவுள்ளனர். அவர்களுக்கான போட்டிப் பரீட்சையின் போது மாவட்ட ரீதியில் தேவைக்கு ஏற்ப வெட்டுப் புள்ளிகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் உலக வங்கி பிரதிநிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுனர் தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. அந்த கூட்டத்தில் எங்களது அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஒரு பில்லியன் டொலர் நிதி உதவி வடக்கு - கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட…

  16. 06 JUL, 2025 | 11:05 AM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் தற்போதுள்ள சட்டத்துக்கு அமைய 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளை விரும்பியோ விரும்பாமலோ பாலியல் உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் துஷ்பிரயோகமாகவே கருதப்படும். இதற்காக 10 வருட கால சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருமான ரங்க திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் பிரஜை ஒருவர் சுதந்திரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வதற்கு போதுமான அனைத்து சட்டங்களும் உள்ளன. நான் கடந்த 20 வருடங்களாக நீதிபதியாக கடமையாற்றினேன். இந்த …

  17. சிறையில் இருக்கும் உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் ! குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள்! சிறைகளுக்குள் கொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்(5) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அழைப்பு விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை, ஜனநாயக சோசலிச குடியரசு எனும் பெயரை தாங்கி நிற்கிறது. ஆனாலும் இந்த ஜனநாயக சோசலிசம் வெளிப்படுத்தும் விழுமியங்களுக்கு மாறாக ஒடுக்கும் அரசாகவே இவ்அரசு பரிணமித்துள்ளது. இந்த அரசினது இரும்…

  18. ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! ரவிகரன் வலியுறுத்து! முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள ஏகம்பைக்குளத்தையும், பிராமணகுளத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். குறித்த குளங்கள் இரண்டும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தநிலையில், தற்போது அப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவருகின்றனர் இந்நிலையில் குறித்த பகுதியை வனவளத்திணைக்களத்தினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையிலேயே குறித்த குளங்களை விடுவிப்புச்செய்து மக்களின் விவசாய பயன்பாட்டிற்கு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒட்டுசு…

  19. வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்த நடவடிக்கை! வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்துவதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கருமபீடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த ஆகியோரின் தலைமையில் திறக்கப்பட்டது. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் கைத்தொழில் அமைச்சு ஜனாதிபதியிடம் முன்வைத்த முன்மொழிவைத் தொடர்ந்து இத் திட்டம் நிறுவப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறுமதி சேர் வரியை திரும்ப வழங்குவதே இதன் ந…

  20. பட மூலாதாரம், BBC SINHALA கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 5 ஜூலை 2025, 10:55 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துப்பாத்தி பகுதிகளில் கண்டறியப்பட்ட மனிதப் புதைக்குழியில் சிறுவர்களின் எலும்புகள், பொம்மைகள், புத்தகப் பைகள் கிடைத்துள்ள நிலையில், இவை இறுதி யுத்தக் காலத்தில் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகளுடையதா என்ற சந்தேகத்தை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் எழுப்பியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இலங்கையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 40 எலும்புக்கூடுகள் அடையாள…

  21. Published By: DIGITAL DESK 2 05 JUL, 2025 | 08:08 PM வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு பகுதியில் மகாவலி திட்டத்தின கீழ் 350 ஏக்கர் நிலம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மகாவலி திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப் பரப்பலை சீர்குலைக்கும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் கொக்கச்சான்குளம் அபகரிக்கப்பட்டு கலாபோகஸ்வேவ என்னும் பெயரில் புதிய குடியேற்றம் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள மற்றொரு கிராமமான திரிவைச்சகுளம் பகுதியில் 350 ஏக்கர் நிலம் மகாவலி வலயம் என்ற போர்வையில் உள்வாங்கப்பட்டு துப…

  22. விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் நீதியான விசாரணை தேவை July 5, 2025 9:01 am இலங்கையில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருண் சித்தார்த் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (04) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். குறிப்பாக, 1990 களில் துணுக்காய் பகுதியில் உள்ள நெற்களஞ்சிய சாலை கட்டிடத் தொகுதியில் விடுதலைப் புலிகளால் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாமில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் பவானி குளம், சிவபுரம் பகுதி…

    • 1 reply
    • 321 views
  23. நிலத்தடி நீரை உறிஞ்சும் செயற்பாடுகளோடு அமைக்கப்படும் உப்பளம் - தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளத்திற்கு பெரும் ஆபத்து! Published By: VISHNU 05 JUL, 2025 | 12:03 AM தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த உப்பளமே மீண்டும் திடீரென இயங்கு நிலைக்கு செயற்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் குறித்த உப்பளத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறிந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளரோடு உப்பளத்திற்கு சென்று நிலைம…

  24. தொழிற்கல்வியை தீர்க்கமான பாடமாக மாற்றவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். முறையான, கவர்ச்சிகரமான நிறுவன அமைப்பைக் கட்டமைப்பதற்காக நாடு தழுவிய தொழிற்கல்வி நிறுவனங்களை மையமாக வைத்து ஜூலை 4 ஆரம்பிக்கப்பட்ட "ஸ்ரம மெஹெயும" (உழைப்பு நடவடிக்கை) திட்டத்தின் ஆரம்ப விழாவில் பங்கேற்றபோது, கம்பஹா தொழில்நுட்பக்கல்லூரியில் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்: "தொழிற்கல்வியை மையமாக வைத்து பிரதி அமைச்சர் நலின் ஹேவகே அவர்களின் கருத்துப்படி…

  25. வெள்ளை ஈ தாக்கத்திலிருந்து தென்னைகளை பாதுகாக்க 2 வார வேலைத்திட்டம்! தென்னை பயிர்ச்செய்கையை பாதிக்கும் “வெள்ளை ஈ” இன் தாக்கமானது அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த இரண்டு வார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் வடக்கு மாகாண பணிப்பாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார். நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; தென்னை உற்பத்தியில் வெள்ளை ஈயானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தென்னை வளர்ப்பாளர்கள் பல்வேறு அசோகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள். வேறு மாகாணங்களில் வெள்ளை ஈயின் தாக்கம் கட்டுப்பாட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.